"பெண் கல்வி" குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த 3630 கி.மீ., சாகச பைக் பயணம் செய்த பாச தந்தை

பெண் கல்வி குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த ஓடிசாவில் இருந்து ராஜஸ்தானில் படிக்கும் தன் மகளை பார்க்க சுமார் 3630 கி.மீ. பைக்கிலேயே பயணம் செய்துள்ளார் ஒரு பாச தந்தை

பெண் கல்வி குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த ஓடிசாவில் இருந்து ராஜஸ்தானில் படிக்கும் தன் மகளை பார்க்க சுமார் 3630 கி.மீ. பைக்கிலேயே பயணம் செய்துள்ளார் ஒரு பாச தந்தை அவர் குறித்த செய்தியை கீழே பார்ப்போம்.

ஓடிசா மாநிலத்தை சேர்ந்தவர் ஷாஜல் ஷீத் இவருக்கு இரண்டு மகள்கள் இருக்கின்றனர். இவரது இரண்டாவது மகள் நேகா ஷீத் ராஜஸ்தானில் உள்ள ஒரு மணிப்பால் பல்கலைகழகத்தில் பி.டெக் படித்து வருகிறார்.

இந்நிலையில் அவரது மகளை காண ஷாஜல் ஷீத் தனது பஜாஜ் பல்சர் 200 என்எஸ் பைக்கில் சுமார் 3630 கி.மீ., பயணம் செய்துள்ளார். இவர் பயணத்தின் போது இவர் 6 நாட்களில் 5 மாநிலங்களை கடந்துள்ளார்

அவர் கூறுகையில் : "என மகள் நேஹா ஷீத்தை காண 6 நாட்களாக ஓடிசா, ஜார்க்கண்ட், பீகார், உ.பி., ராஜஸ்தான் என 5 மாநிலங்களை கடந்து சுமார் 3630 கி.மீ. பயணம் செய்து பார்க்க வந்துள்ளேன்.

இந்த பயணம் என்பது வெறும் எனது மகளுக்காக மட்டும் அல்லது பெண் கல்வி குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும் தான். பெண்களுக்கு கல்வி தான் உயர்வை தரும். வெறும் பட்டபடிப்பு மட்டும் பெண்களுக்க போதாது நாம் அவர்களுக்கு உயர் கல்வியை வழங்க வேண்டும்.

நான் இந்த பயணத்திற்கு நேகாஸ்தான் என பெயரிட்டுள்ளேன். ஓடிசா மாநிலம் ராஜஸ்தானில் துவங்கிய என் பயணம் ராஜஸ்தான் மாநிலம் ஜெய்பூரில் முடிந்துள்ளது. " என கூறினார்.

இவர் பயணத்தின் போது பெண் கல்விகுறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வண்ணம் வழியில் பள்ளிக்கு சென்ற பெண் குழந்தைகளுடன் பெண்களுக்கு கல்வி அளிப்போம் என்ற வாசகத்துடன் புகைப்படம் எடுத்து பதிவிட்டுள்ளார்.

இந்த பயணம் இவருக்கு முதன்முறை அல்ல அதற்கு முன் இவரது மூத்த மகளின் வெளியூரில் படிக்கும்போதும் இது போன்ற ஒரு பயணத்தை மேற்கொண்டிருக்கிறார்.

சுமார் 3600 கி.மீ. என்பது நெடுதூர பயணம் இந்த பயணத்தின் போது பல்வேறு சவால்களை சந்திக்க வேண்டியது இருக்கும். அவை அனைத்தையும் மீறி இவர் இந்த பயணத்தை மேற்கொண்டுள்ளா்.

இவரது முயற்சி என்பது நிச்சயம் பாராட்டிற்குரியது. இந்த பயணத்தை ஷீத் மிகவும் அர்த்தமுள்ளதாகவும் அமைத்துள்ளார். அவர் இது போன்று மென்மேலும் பயணிக்க நீங்களும் இவரை கமெண்டில் வாழ்த்துங்கள்.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்ட செய்திகள்:

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #offbeat
English summary
Biker father rides 3630 kms to meet daughter in college – Educate Girl Child is the message. Read in Tamil
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X