எதிரிங்க எல்லாம் அள்ளுவிடுவாங்க... இந்தியா ராணுவத்தில் இணைந்த ஹெலிகாப்டரில் இவ்வளவு அம்சங்கள் இருக்குதா?

எச்ஏஎல் நிறுவனம் முற்றிலுமாக இந்தியாவிலேயே உருவாக்கிய ஹெலிகாப்டர் அதிகாரப்பூர்வமாக ராணுவத்தில் இணைந்துள்ளது. இந்த ஹெலிகாப்டரில் உள்ள அம்சங்கள் என்னென்ன, இது எப்படி உருவானது உள்ளிட்ட தகவல்களைக் காணலாம் வாருங்கள்.

எதிரிங்க எல்லாம் அள்ளுவிடுவாங்க . . . இந்தியா ராணுவத்தில் இணைந்த ஹெலிகாப்டரில் இவ்வளவு அம்சங்கள் இருக்குதா . . .

இந்திய ராணுவத்திற்கு விமானப்படை மிக முக்கியமான ஒன்று, விமானப்படையில் இந்திய ராணுவத்திற்கு போதுமான பல விமானங்கள்,ஹெலிகாப்டர்கள் எல்லாம் அவ்வப்போது வாங்கப்பட்டுக்கொண்டே இருக்கின்றன. இப்படியாக இன்று இந்திய விமானப்படையில் முற்றிலுமாக இந்தியாவிலேயே வடிவமைக்கப்பட்ட ஆத்மநிர்பார் லைட் காம்பட் ஹெலிகாப்டர் இணைக்கப்பட்டுள்ளது.

எதிரிங்க எல்லாம் அள்ளுவிடுவாங்க . . . இந்தியா ராணுவத்தில் இணைந்த ஹெலிகாப்டரில் இவ்வளவு அம்சங்கள் இருக்குதா . . .

மத்திய ராணுவத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூர் ஏர்பேஸில் இந்த ஹெலிகாப்டரை நாட்டிற்காக அர்ப்பணித்தார். Prachand எனப் பெயரிடப்பட்ட இந்த ஹெலிகாப்டர் தான் உலகிலேயே 5000 மீட்டருக்கு மேலிருந்து லேண்டிங் மற்றும் டேக் ஆஃப் செய்யும் திறன் கொண்டது. இது மட்டுமல்ல இந்த ஹெலிகாப்டரில் மேலும் ஏராளமான அம்சங்கள் இருக்கிறது. இதைப் பற்றித் தான் இந்த பதிவில் விரிவாகக் காணப்போகிறோம்.

எதிரிங்க எல்லாம் அள்ளுவிடுவாங்க . . . இந்தியா ராணுவத்தில் இணைந்த ஹெலிகாப்டரில் இவ்வளவு அம்சங்கள் இருக்குதா . . .

இந்த ஹெலிகாப்டரை இந்திய அரசுக்குச் சொந்தமான ஹிந்துஸ்தான் ஏரோனாட்டிக்ஸ் லிமிடெட் நிறுவனம் தான் உருவாக்கியது. இந்த விமானத்திற்கான தேவை 1999ல் நடந்த கார்கில் போரின் போது தான் ராணுவம் உணர்ந்தது. கடும் குளிர் மற்றும் கடும் வெப்பம் ஆகிய இரண்டு இடங்களிலும் இயங்கும்படியான ஒரு விமானத்தை இந்தியா சொந்தமாகத் தயாரிக்க வேண்டும் என ராணுவம் கருதியது.

எதிரிங்க எல்லாம் அள்ளுவிடுவாங்க . . . இந்தியா ராணுவத்தில் இணைந்த ஹெலிகாப்டரில் இவ்வளவு அம்சங்கள் இருக்குதா . . .

அப்பொழுது இந்தியாவின் பிரான்ஸ் நாட்டின் லெகஸி ஹெலிகாப்டர்கள் மற்றும் இந்தியாவில் தயாரான சேத்தக் மற்றும் சீட்டா என் ஹெலிகாப்டர் தான் இருந்தன. இது எல்லாம் ஒரு இன்ஜின் கொண்டு இயங்கும் ஹெலிகாப்டர்கள், அதிகபட்சம் 3 டன் வரையிலான எடையைத் தான் எடுத்த செல்ல முடியும். இவை தளவாடங்களை எடுத்துச் செல்ல மட்டுமே பயன்பட்டது. தற்போது இந்தியாவிடம் எம்ஐ-17 மற்றும் அதன் வேரியன்ட்களான எம்ஐ-17-IV மற்றும் எம்ஐ-17 வி5 ஆகிய ஹெலிகாப்டர்கள் தான் இருக்கிறது. இது அதிகபட்சம் 13 டன் வரையிலான எடைகளை எடுத்துச் செல்ல முடியும். இந்த ஹெலிகாப்டரும் வரும் 2028ம்ஆண்டு முதல் தனது ஆயுளை இழக்கும் நிலைக்குச் செல்லும்.

எதிரிங்க எல்லாம் அள்ளுவிடுவாங்க . . . இந்தியா ராணுவத்தில் இணைந்த ஹெலிகாப்டரில் இவ்வளவு அம்சங்கள் இருக்குதா . . .

அதனால் இந்திய விமானப்படைக்கு நல்ல துடிப்பான எல்லாவேலைகளையும் செய்யும் ஆயுதம் தாங்கிய ஒரு ஹெலிகாப்டர் தேவைப்பட்டது. இதற்காகக் கடந்த 2006ம் ஆண்டே லைட் காம்பட் ஹெலிகாப்டர்களை தயாரிக்க அரசு அனுமதியளித்தது. எச்ஏஎல் நிறுவனத்தின் ரோட்டரி விங் ரிசர்ச் மற்றும் டெவலப்மெண்ட் சென்டரில் தயாரிக்கப்பட்டது. இந்த சென்டரில் தான் அட்வான்ஸ்டு லைட் ஹெலிகாப்டரான ALH துருவா மற்றும் அதன் ஆயுதம் தாங்கிய வெர்ஷனான ALH ருத்ரா ஆகிய ஹெலிகாப்டர்களை உருவாக்கப்பட்டது.

எதிரிங்க எல்லாம் அள்ளுவிடுவாங்க . . . இந்தியா ராணுவத்தில் இணைந்த ஹெலிகாப்டரில் இவ்வளவு அம்சங்கள் இருக்குதா . . .

இந்த லைட் காம்பேட் ஹெலிகாப்டர் (LCH),இரண்டு இன்ஜின்களுடன் முழுமையான போர் விமானமாக 5.8 டன் எடையுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனால் இது லைட் கேட்டகிரியில் இணைக்கப்பட்டுள்ளது. இந்த விமானம் நேரோ ஃப்யூயல்ஏஜ் முறையில் டிசைன்செய்யப்பட்டுள்ளது. இதை இயக்க 2 விமானங்கள் வேண்டும் ஆனால் இதில் ஒருவர் பின் மற்றொருவர் என்ற ரீதியில் அமர வேண்டும். இதில் துணை விமானி விமானத்தின் ஆயுதங்களை ஆப்ரேட் செய்யும் அதிகாரியாகவும் செயல்படுவார்.

எதிரிங்க எல்லாம் அள்ளுவிடுவாங்க . . . இந்தியா ராணுவத்தில் இணைந்த ஹெலிகாப்டரில் இவ்வளவு அம்சங்கள் இருக்குதா . . .

இந்த LCH விமானத்தில் ALH விமானத்தின் பல அம்சங்கள் இடம் பெற்றுள்ளது. இவை இரண்டிற்குமான முக்கியமான வேறுபாடு பைலட்களுக்கான சீட் அலைன்மெண்ட் தான். மாறுபடும். இந்த விமானத்திற்கான பணிகள் 2006ம் ஆண்டே துவங்கப்பட்டு விட்டது பல்வேறு காலங்களில் 4 விதமான புரோட்டோ டைப்கள் உருவாக்கப்பட்டு டெஸ்ட் செய்யப்பட்டுள்ளன.

எதிரிங்க எல்லாம் அள்ளுவிடுவாங்க . . . இந்தியா ராணுவத்தில் இணைந்த ஹெலிகாப்டரில் இவ்வளவு அம்சங்கள் இருக்குதா . . .

2010ம் ஆண்டு முதல் பரிசோதனை நடத்தப்பட்டது. இரண்டாம் தொழிற்நுட்ப பரிசோதனை 2012ம் ஆண்டு கடும் குளிரில் உயரமான இடத்தில் நடத்தப்பட்டது. மூன்றும் மற்றும் நான்காம் பரிசோதனை முறையே 2014 மற்றும் 2015ம் ஆண்டுகளில் நடத்தப்பட்டது. இந்த ஹெலிகாப்டர் கடல் மட்டத்திலிருந்து சியாசின் வரை இருக்கும் அனைத்து விதமான பரு நிலைகளிலும் இயங்கும் திறன் கொண்டது. பாலைவன சூழ்நிலையிலும் சிறப்பாக இயங்கும்.

எதிரிங்க எல்லாம் அள்ளுவிடுவாங்க . . . இந்தியா ராணுவத்தில் இணைந்த ஹெலிகாப்டரில் இவ்வளவு அம்சங்கள் இருக்குதா . . .

இதன் பரிசோதனையின் போது எலெக்ட்ரோ ஆப்டிக்கல் சிஸ்டம், ஹெல்மெட் மவுண்டட் டிஸ்பிளே சிஸ்டம், சாலிட் ஸ்டேட் டேட்டா ரெக்கார்டர், வீடியோ ரெக்கார்டர், ஆயுத சிஸ்டம்ஸ், ராக்கெட் லாஞ்சர், ஏர்-டு -ஏர் மிசேல் சிஸ்டம் ஆகியன சோதனை செய்யப்பட்டது. இதற்காக 1600 மணி நேரம் ஹெலிகாப்டர் பறக்க விடப்பட்டிருந்தது. அதன் பின்னர் ராணுவம் மற்மு் அரசு அனுமதிகளுக்குப் பிறகு 15 ஹெலிகாப்டர்கள் தயாரிக்கப்பட்டது. இதில் 10 இந்திய விமானப்படைக்கும் 5 இந்திய ராணுவத்திற்குள் வழங்கப்பட்டுள்ளது. இதற்காக ரூ 3,887 கோடி நிதி ஒதுக்கப்பட்டது.

எதிரிங்க எல்லாம் அள்ளுவிடுவாங்க . . . இந்தியா ராணுவத்தில் இணைந்த ஹெலிகாப்டரில் இவ்வளவு அம்சங்கள் இருக்குதா . . .

இந்த ஹெலிகாப்டர் அதிகபட்சம் 5.8 டன் எடையைத் தூக்கிக்கொண்டு பறக்கும் திறன் கொண்டது. இந்த எடையுடன் இந்த விமானம் மணிக்கு 268 கி.மீ வேகத்தில் பயணிக்கும். முழு எரிபொருள் கொள்ளளவில் இந்த விமானம் 550 கி.மீ வரை பயணிக்கும் திறன் கொண்டது. இந்த விமானம் அதிகபட்சமாகக் கடல் மட்டத்திலிருந்து 6.5 கி.மீ உயரம் வரை பறக்கும் திறன் கொண்டது. இந்த ஹெலிகாப்டரில் ரேடார் அப்சர்பிங் மெட்டிரியல் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதனால் இந்த ஹெலிகாப்டர் ரேடாரில் சிக்குவதற்கான வாய்ப்பு குறைவு தான்.

எதிரிங்க எல்லாம் அள்ளுவிடுவாங்க . . . இந்தியா ராணுவத்தில் இணைந்த ஹெலிகாப்டரில் இவ்வளவு அம்சங்கள் இருக்குதா . . .

இந்த விமானத்தின் விமானிகள் இருக்கும் கேபின் பிரஷரைடு செய்யப்பட்ட கேபினாகும். இந்த கேபின் அணுக்குண்டு, பயாலஜிக்கல் குண்டு, கெமிக்கல் குண்டுகளால் சேதமாகாது. அதாவது ஹெலிகாப்டர் சேதமானாலும் விமானிகளுக்கு எந்த விமான பாதிப்பும் ஏற்படாதவாறு உருவாக்கப்பட்டுள்ளது. இந்த ஹெலிகாப்டரில் கவுண்டர்மெஷனர் டிஸ்பென்சின் சிஸ்டம் பயன்படுத்தப்படுகிறது. இது எதிரிகளின் ரேடார் மற்றும் இன்ஃப்ராரெட் சிக்கல்களிலிருந்து தன்னை மறைத்துக்கொள்ளும் திறன் பெற்றது.

எதிரிங்க எல்லாம் அள்ளுவிடுவாங்க . . . இந்தியா ராணுவத்தில் இணைந்த ஹெலிகாப்டரில் இவ்வளவு அம்சங்கள் இருக்குதா . . .

இந்த ஹெலிகாப்டரில் உள்ள ஆயுதங்களைப் பொருத்தவரை 20 மிமீ டர்ரெட் கன், 70 மிமீ ராக்கெட்கள், ஏர்-டூ-ஏர் மிசேல் சிஸ்டம்கள் பொருத்தப்பட்டுள்ளது. இந்த ஹெலிகாப்டர் எச்ஏஎல் உருவாக்கிய சக்தி இன்ஜினை கொண்டுள்ளது. இந்த விமானம் போர் நேரத்தில் பயன்படுத்துவதற்காகத் தயாரிக்கப்பட்டது. எதிரிகளை விமான வழி தாக்குதல்களைத் தகர்க்கவும், போர் நேரத்தில் தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கை, டேங்க்களை அழித்தல், தரை வழி தாக்குதல்களைத் தடுத்தல் உள்ளிட்டவைகளுக்காக பயன்படுத்தப்படவுள்ளன.

எதிரிங்க எல்லாம் அள்ளுவிடுவாங்க . . . இந்தியா ராணுவத்தில் இணைந்த ஹெலிகாப்டரில் இவ்வளவு அம்சங்கள் இருக்குதா . . .

எச்ஏஎல் நிறுவனம் இப்படியாக மொத்தம் 160 LCH ஹெலிகாப்டர்களை உருவாக்கவுள்ளது. அதில் 65 இந்திய விமானப்படைக்கும் 95 இந்திய ராணுவத்திற்கும் வழங்கப்படவுள்ளது. இதில் சில ஹெலிகாப்டர்கள் டெலிவரி செய்யப்பட்ட நிலையில் அதைத் தான் இந்திய ராணுவ அமைச்சர் நாட்டிற்காக அர்ப்பணித்தார். எச்ஏஎல் ஆண்டிற்கு 30 ஹெலிகாப்டர் விதம் மீதம் உள்ள 145 ஹெலிகாப்டர்களை அதிகபட்சமாக 8 ஆண்டிற்கும் தயாரிக்க முடிவு செய்துள்ளது.

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Features in IAF indigenous light combat helicopter prachand
Story first published: Monday, October 3, 2022, 15:08 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X