Subscribe to DriveSpark

காரில் தீ பிடிக்காமல் இருக்க செய்யவேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்..!

Written By:

இந்தியாவில் காரில் ஏற்படும் தீ விபத்துகளால் ஏற்படும் உயிரழப்பு ஆண்டாண்டிற்கு அதிகரித்துக்கொண்டு வருகிறது. கடந்த மார்ச் 18ம் தேதி மோட்டார் ஸ்போர்ட்ஸ் வீரர் அஸ்வின் சென்னையில் தன் மனைவியுடன் உயர் ரக பி.எம்.டபுள்யூ காரில் ஏற்பட்ட தீ விபத்தில் மரணமடைந்தார்.

To Follow DriveSpark On Facebook, Click The Like Button
காரில் தீ பிடித்தால் செய்யவேண்டியவை..! செய்யக்கூடாதவை..!

நீங்கள் இந்த செய்தியை படித்துக்கொண்டுயிருக்கும் போது சில மணித்துணிகளுக்கு முன்னர் சத்தியமங்கலம் வனப்பகுதியில் திம்பம் மலைப்பாதையில் ஒரு கார் தீ பிடித்து எரிந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நல்லவேளையாக அதில் பயணித்த 2 பேர் காரில் தீ பிடித்திருப்பதை உணர்ந்து வெளியே குதித்து உயர் தப்பினர்.

காரில் தீ பிடித்தால் செய்யவேண்டியவை..! செய்யக்கூடாதவை..!

உற்பத்தி குறைபாடுகள், கார் உரிமையாளரின் அலட்சியம் போக்கு ஆகியவையே இந்தியாவி நடைபெற்ற கார் தீ விபத்த் தொடர்பான சம்பவங்களுக்கு காரணமாக அமைந்துள்ளது. காரில் தீ விபத்து நிகழ என்னென்ன காரணங்கள், அதை தடுக்கும் வழிமுறைகள் என்ன என்பதை இனி பார்க்கலாம்.

காரில் தீ ஏற்பட காரணங்கள்

காரில் தீ ஏற்பட காரணங்கள்

பொதுவாக புதிய கார்களை விட, பயன்படுத்தப்பட்டு பலமுறை பழுதுபார்க்கப்பட்ட கார் என்றால் தீ ஏற்படுவது எளிதாகி விடுகிறது. காரில் பழுது ஏற்பட்டால், செலவை குறைக்கிறேன் என்ற பேரில் உரிமையாளர்கள் பெரும்பாலும், அங்கீகரிக்கப்படாத சர்வீஸ் நிலையங்களை அணுகவதால், தரமற்ற சர்வீஸ் காருக்கு செய்யப்பட்டு அது காரை பாதித்து இறுதியில் நம்மையே பாதித்து விடுகிறது.

காரில் தீ பிடித்தால் செய்யவேண்டியவை..! செய்யக்கூடாதவை..!

சவுண்ட் சிஸ்டம், பாதுகாப்பு கருவி, முகப்பு விளக்கு, பார்க்கிங் துணை கருவிகள் ஆகிய பொருட்களில் தரமற்ற பிராண்டுகளே பெரும்பாலும் பயன்படுத்தப்படுகின்றன. அவை சீக்கரத்தில் பழுதாகிவிடுவதால், வயர்களில் பொறி ஏற்பட்டு, பின் அது காரில் தீ ஏற்பட காரணமாக அமைகின்றன.

காரில் தீ பிடித்தால் செய்யவேண்டியவை..! செய்யக்கூடாதவை..!

அதிகாரப்பூர்வமற்ற நிறுவனங்களால் தயாரிக்கப்படும் சி.என்.ஜி அல்லது எல்.பி.ஜி கேஸ்களை காருக்கான எரிவாயுவாக பயன்படுத்தும்போது அவையும் தீ விபத்திற்கான முக்கிய காரணமாக அமைந்துவிடுகின்றன.

பாதுகாப்பு வழிமுறைகள்

பாதுகாப்பு வழிமுறைகள்

1) முறைப்படுத்தப்பட்ட சர்வீஸ், காற்று மற்றும் ஆயில் வடிகட்டிகளை அடிக்கடி மாற்றுவது, மற்றும் எஞ்சின் ஆயில் முறையாக பராமரிப்பு ஆகியவை விபத்தை தவிர்க்க வல்லது.

காரில் தீ பிடித்தால் செய்யவேண்டியவை..! செய்யக்கூடாதவை..!

2) காரில் கூடுதலாக சுமையை ஏற்றவேண்டாம். அது உடமைகளனாலும் சரி, ஆடம்பர உபகரணங்கள் ஆனாலும் சரி.

3) அங்கீகாரம் பெற்ற டீலர்களிடமிருந்து சி.என்.ஜி அல்லது எல்.பி.ஜி வாயூக்களை பெறுதல்

4) முக்கியமாக காரின் திறனுக்கு ஏற்றவாறு கஸ்டமைஸை மேற்கொண்டால் நிச்சயம் அவசர காலத்தில் தீ விபத்து ஏற்படாமல் தடுக்க முடியும்.

காரில் தீ ஏற்பட காரணங்கள் என்னென்ன?

காரில் தீ ஏற்பட காரணங்கள் என்னென்ன?

1.) அனைத்து மின்சார யூனிட்களிலும் நெருக்கடி ஏற்பட்டு, ஜன்னல், சீட் பெல்ட், காரின் லாங்கிக் சிஸ்டம் ஆகியவைக் கூட இயங்காமல் போய்விடும். இதனால் அவசர காலத்தில் பயணிகள் காரிலிருந்து வெளிவருவது முடியாமல் ஆகிவிடும்.

காரில் தீ பிடித்தால் செய்யவேண்டியவை..! செய்யக்கூடாதவை..!

2.) காரில் தீ விபத்து ஏற்படுயிருப்பதை முன்னரே நீங்கள் உணராதிருந்தால், தீ விபத்தின் போது காரிலிருந்து வெளியேறும் கார்பன் மோனாஆக்ஸைடு நச்சவாய்வுவின் தாக்குதலுக்கு ஆளாகி விடுவீர்கள். இதனாலும் உங்களது மரணம் ஏற்படலாம்.

தீ விபத்து ஏற்படும் போது தப்பிப்பது எப்படி?

தீ விபத்து ஏற்படும் போது தப்பிப்பது எப்படி?

1) சுத்தில் அல்லது பெரிய ஸ்பேனர் போன்றவற்றை கார் பயணங்களின் போது கையில் வைத்திருங்கள். இவை தீ விபத்து ஏற்பட்டால், கார் கண்ணாடிகளை உடைக்க அதிக உதவியாகயிருக்கும்.

காரில் தீ பிடித்தால் செய்யவேண்டியவை..! செய்யக்கூடாதவை..!

2) தீ விபத்தின் போது காரின் சீட் பெல்ட் இறுகிவிட்டால், அவற்றை கத்திர்த்து தூற எரிய, கத்திரிக்கோலும் அவசியமாக கையிலெடுக்கும் தூரத்தில் காரினுள் வைத்துத்திருங்கள்.

காரில் தீ பிடித்தால் செய்யவேண்டியவை..! செய்யக்கூடாதவை..!

3) மேற்கூறியவற்றை விட, சிறியளவிலான தீ அணைப்பான் இருந்தால், இன்னும் நல்லது. தீ விபத்து ஏற்பட்டால், நீரின்றி தீ அணைப்பானை பயன்படுத்தலாம், மேலும் மின்சார உராய்வுகள் ஏற்படாமலும் இது காரை பாதுகாக்கும்.

காரில் தீ பிடித்தால் செய்யவேண்டியவை..! செய்யக்கூடாதவை..!

காரில் விபத்து ஏற்படாமல் இருக்க முக்கியமான ஒரு செயலை நிச்சயமாக வாடிக்கையாளர்கள் பின்பற்றவேண்டும். அது தான் தேர்வு. ஆடம்பரத்தை காட்டவோ அல்லது பந்தாவாக வலம் வரவோ என்றும் கார்களை தேர்வு செய்யாதீர்கள்.

காருக்கான செயல்திறன், ஆற்றல் ஆகியவற்றை அறிந்து, உங்கள் பட்ஜெட்டை பொருத்து பின் அதற்கான சோதனை மேற்கொண்டு, பாதுகாப்பு, வழிமுறை, கஸ்டமைஸ் மேற்கொள்ளகூடிய வாய்ப்பு ஆகியவற்றை திறனறிந்து காரை தேர்வு செய்யுங்கள்.

English summary
Cars catching fire something that is not new to India. Here are some causes for cars catching fire, and what you can do to avoid it.
Please Wait while comments are loading...

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark