ரஃபேல் போர் விமானங்கள் இந்தியா வந்தடைந்தன... எதிரிகள் இனி அடக்கி வாசிக்கணும்!

பிரான்ஸ் நாட்டிலிருந்து நேற்றுமுன்தினம் கிளம்பிய  ரஃபேல் போர் விமானங்கள் சற்றுமுன் அம்பாலா விமானப்படை தளத்தில் வந்து தரை இறங்கின. இந்திய எல்லைக்குள் இரண்டு சுகோய் போர் விமானங்கள் புடை சூழ அம்பாலா விமான நிலையத்தில் வந்திறங்கிய ரஃபேல் போர் விமானங்களுக்கு வாட்டர் சல்யூட் வரவேற்பு அளிக்கப்பட்டது. மேலும், இந்திய விமானப் படை தலைமை தளபதி ஆர்கேஎஸ் பதவுரியா உள்ளிட்ட முக்கிய அதிகாரிகளும் ரஃபேல் போர் விமானங்களை வரவேற்கும் நிகழ்வில் பங்கு கொண்டுள்ளனர்.

ரஃபல் போர் விமானங்கள் இந்தியா வந்தடைந்தன... எதிரிகள் இனி அடக்கி வாசிக்கணும்!

எல்லைப் பகுதிகளில் அண்டை நாடுகளின் அச்சுறுத்தல் அதிகரித்து வந்ததையடுத்து, அதிநவீன போர் விமானங்களை வாங்குவதற்கு மத்திய அரசு முடிவு செய்தது. இதற்காக, உலக அளவில் டென்டர் கோரப்பட்டது. இதில், உலகின் பல முன்னணி நிறுவனங்கள் இந்தியாவுக்கு போர் விமானங்களை சப்ளை செய்வதற்கு விண்ணப்பித்தன.

ரஃபல் போர் விமானங்கள் இந்தியா வந்தடைந்தன... எதிரிகள் இனி அடக்கி வாசிக்கணும்!

இதில், பிரான்ஸ் நாட்டை சேர்ந்த டஸால்ட் ஏவியேஷன் நிறுவனம் குறைவான விலையை நிர்ணயத்து, டென்டரில் வெற்றி பெற்றது. கடந்த 2012ம் ஆண்டு இதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதன்படி, 126 ரஃபேல் போர் விமானங்களை வாங்க அப்போதைய காங்கிரஸ் தலைமையிலான அரசாங்கம் சார்பில் முடிவு செய்யப்பட்டது.

ரஃபல் போர் விமானங்கள் இந்தியா வந்தடைந்தன... எதிரிகள் இனி அடக்கி வாசிக்கணும்!

இதில், 18 ரஃபேல் போர் விமானங்கள் முழுமையாக கட்டமைக்கப்பட்ட நிலையில் வாங்குவதற்கும், மீதமுள்ள 108 ரஃபேல் போர் விமானங்களை உரிமத்தின் அடிப்படையில் இந்தியாவின் ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடேட் நிறுவனம் உற்பத்தி செய்யவும் முடிவு செய்யப்பட்டது.

ரஃபல் போர் விமானங்கள் இந்தியா வந்தடைந்தன... எதிரிகள் இனி அடக்கி வாசிக்கணும்!

இந்த நிலையில், ஆட்சி மாற்றம், அரசியல் பிரச்னைகள், விலை நிர்ணயம் உள்ளிட்டவற்றால் ரஃபேல் போர் விமான ஒப்பந்தம் பல்வேறு தடைகளை சந்தித்தது. ஒருவழியாக இந்த ஒப்பந்தம் மறு சீரமைப்பு செய்யப்பட்டு 36 ரஃபேல் போர் விமானங்கள் முழுமையாக கட்டமைக்கப்பட்ட நிலையில் வாங்குவதற்கு பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு முடிவு செய்தது.

ரஃபல் போர் விமானங்கள் இந்தியா வந்தடைந்தன... எதிரிகள் இனி அடக்கி வாசிக்கணும்!

ரூ.58,000 கோடியில் இந்த ஒப்பந்தம் கையெழுத்தானது. பல்வேறு தடைகளுக்கு பின்னர் இறுதி ஒப்பந்தம் செய்யப்பட்ட நிலையில், கடந்த மே மாதம் முதல் தொகுதியில் 5 ரஃபேல் போர் விமானங்கள் டெலிவிரி கொடுக்கப்பட இருந்தது.

ரஃபல் போர் விமானங்கள் இந்தியா வந்தடைந்தன... எதிரிகள் இனி அடக்கி வாசிக்கணும்!

ஆனால், கொரோனா பிரச்னை காரணமாக தாமதம் ஏற்பட்டது. இந்த நிலையில், கடந்த மாதம் சீன ராணுவம் அத்துமீறியதால், ஏற்பட்ட மோதலில் 20 இந்திய ராணுவ வீரர்கள் வீர மரணம் அடைந்தனர். இதனால், எல்லைப் பகுதியில் இந்தியா- சீனா இடையே பதட்டம் ஏற்பட்டுள்ளது.

ரஃபல் போர் விமானங்கள் இந்தியா வந்தடைந்தன... எதிரிகள் இனி அடக்கி வாசிக்கணும்!

எல்லைப் பாதுகாப்பை வலுப்படுத்த வேண்டிய கட்டாயம் இந்தியாவுக்கு ஏற்பட்டது. எனவே, ரஃபேல் போர் விமானங்களை விரைந்து வழங்க பிரான்ஸ் அரசுக்கு இந்தியா சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. இதனையடுத்து, முதல் தொகுதியில் 5 ரஃபேல் போர் விமானங்களை வழங்க பிரான்ஸ் முடிவு செய்தது. இதன்படி, முதல் தொகுதியில் வழங்கப்பட்ட 5 ரஃபேல் போர் விமானங்கள் நேற்று முன்தினம் பிரான்ஸிலிருந்து இந்தியாவுக்கு புறப்பட்டன.

ரஃபல் போர் விமானங்கள் இந்தியா வந்தடைந்தன... எதிரிகள் இனி அடக்கி வாசிக்கணும்!

டஸால்ட் ஏவியேஷன் ஆலை வளாகத்தில் இருந்து புறப்பட்ட 5 ரஃபேல் போர் விமானங்களையும் பயிற்சி பெற்ற இந்திய விமானப் படை விமானிகள் இயக்குகின்றனர். சுமார் 7,000 கிமீ தூர பயணத்தை மேற்கொண்டுள்ள ரஃபேல் போர் விமானங்கள் வரும் வழியில் எரிபொருள் நிரப்புதல், விமானிகளுக்கு ஓய்வு உள்ளிட்டவற்றிற்காக இடைநிறுத்தம் செய்யப்பட்டது. பிரான்ஸ் நாட்டில் புறப்பட்டு 7 மணிநேர பயணத்திற்கு பின் அபுதாபி அருகே உள்ள அல் தாஃப்ரா விமானப் படை தளத்தில் தரை இறக்கப்பட்டன.

ரஃபல் போர் விமானங்கள் இந்தியா வந்தடைந்தன... எதிரிகள் இனி அடக்கி வாசிக்கணும்!

இந்த நிலையில், நேற்று ஒருநாள் ஓய்வுக்கு பின் அல் தாஃப்ரா விமானப் படை தளத்திலிருந்து இந்தியா நோக்கி ரஃபேல் போர் விமானங்கள் இன்று காலை புறப்பட்டன. 4 மணிநேர பயணத்திற்கு பின் இந்திய வான் எல்லையை அடைந்த ரஃபேல் போர் விமானங்கள், ஹரியானா மாநிலம் அம்பாலா விமானப் படை தளத்தில் சற்று முன் தரை இறங்கின. ரஃபேல் போர் விமானங்கள் தரை இறங்குவதை போட்டோ, வீடியோ எடுக்க தடை விதிக்கப்பட்டது. மேலும், அம்பாலான விமானப் படை தளத்தை சுற்றி 3 கிமீ தூரத்திற்கு பல அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

ரஃபல் போர் விமானங்கள் இந்தியா வந்தடைந்தன... எதிரிகள் இனி அடக்கி வாசிக்கணும்!

போர் செய்வதற்கு தயாரான அம்சங்களுடன் வந்திருப்பதால், உடனடியாக பாதுகாப்புப் பணியில் ரஃபேல் போர் விமானங்களை ஈடுபடுத்தலாம். மேலும், சீனாவால் பதட்டம் அதிகரித்துள்ள லடாக் பிராந்திய பாதுகாப்பில் இந்த ரஃபேல் போர் விமானங்கள் ஈடுபடுத்தப்பட உள்ளன.

ரஃபல் போர் விமானங்கள் இந்தியா வந்தடைந்தன... எதிரிகள் இனி அடக்கி வாசிக்கணும்!

ரஃபேல் போர் விமானங்கள் 4.5 தலைமுறையை சார்ந்தது. எதிரிகளின் ரேடார்களில் சிக்காத வகையில் டெல்டா விங் என்ற றெக்கை அமைப்பு மற்றும் தொழில்நுட்பங்களுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. சுய பாதுகாப்பு மற்றும் எதிரி இலக்குகளை கண்காணிப்பதற்கான அதிநவீன ரேடார்கள், வானிலிருந்து வான் இலக்கையும், தரை இலக்கையும் துல்லியமாக தாக்கும் இரண்டு வகை ஏவுகணைகள், கண்காணிப்பு சாதனங்களுடன் வந்துள்ளது. இது எதிரி நாடுகளுக்கு சிம்ம சொப்பனமாக இருக்கும் என்று கருதப்படுகிறது.

ரஃபல் போர் விமானங்கள் இந்தியா வந்தடைந்தன... எதிரிகள் இனி அடக்கி வாசிக்கணும்!

2022ம் ஆண்டுக்குல் ஆர்டர் செய்யப்பட்ட அனைத்து ரஃபேல் போர் விமானங்களும் இந்தியாவிடம் வழங்கப்படும் என்று தகவல்கள் கூறுகின்றன. கொரோனா பிரச்னையால் சற்றே கால தாமதம் ஏற்படலாம். அம்பாலா தவிர்த்து, மேற்கு வங்கத்திலும் ரஃபேல் போர் விமானங்கள் அடங்கிய ஒரு படையணி நிறுவப்படும். இந்த இரண்டு படையணிகளிலும் தலா 18 ரஃபேல் போர் விமானங்கள் இடம்பெற்றிருக்கும். இதில், தலா 3 பயிற்சி ரஃபேல் போர் விமானங்களும் அடங்கும்.

ரஃபல் போர் விமானங்கள் இந்தியா வந்தடைந்தன... எதிரிகள் இனி அடக்கி வாசிக்கணும்!

ரஃபேல் போர் விமானங்கள் மூலமாக இந்தியாவின் பாதுகாப்பு நிச்சயம் பெரிய அளவில் வலுப்பெறும் என்று பாதுகாப்பு வல்லுனர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். சீனாவின் ஜே-20 விமானத்தின் அச்சுறுத்தல்களை ரஃபேல் போர் விமானம் மூலமாக இந்தியா சமாளிக்க முடியும் என்றும் அவர்கள் கூறி இருப்பது குறிப்பிடத்தக்கது. இனி இந்திய எல்லையில் சீண்டுவதற்கு ஒருமுறைக்கு இருமுறை எதிரிகள் யோசிக்க வைக்கும் என்று நம்பப்படுகிறது.

Most Read Articles
 

மேலும்... #ராணுவம் #military
English summary
Rafale Fighter Jets Landed In India.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X