இந்தியாவிலேயே இதுதான் முதல்முறை!! பல சோதனைகளுக்கு பிறகு, ஓட்டுனர் உரிமத்தை பெற்ற முதல் குறை-உயர மாற்று திறனாளி

இந்தியாவிலேயே முதல்முறையாக ஹைதராபாத்தில் உயரம் குறைவானவருக்கு ஓட்டுனர் உரிமம் வழங்கப்பட்டுள்ளது. இதுகுறித்த கூடுதல் விபரங்களை இனி இந்த செய்தியில் பார்ப்போம்.

இந்தியாவிலேயே இதுதான் முதல்முறை!! பல சோதனைகளுக்கு பிறகு, ஓட்டுனர் உரிமத்தை பெற்ற முதல் குறை-உயர மாற்று திறனாளி

ஹைதராபாத்தை சேர்ந்தவர் கட்டிப்பள்ளி ஷிவ்பால் (வயது 42). உயரம் குறைவான மாற்று திறனாளியான இவர் இந்தியாவிலேயே உயரம் குறைவானவர்களில் முதல் ஆளாக ஓட்டுனர் உரிமத்தை பெற்றுள்ளார். மூன்று அடியில் உயரம் கொண்டவராக இருப்பினும் கட்டிப்பள்ளி ஷிவ்பால் தனக்கு வரும் தடைகள் அனைத்தையும் உடைந்தெறிந்து வருகிறார்.

இந்தியாவிலேயே இதுதான் முதல்முறை!! பல சோதனைகளுக்கு பிறகு, ஓட்டுனர் உரிமத்தை பெற்ற முதல் குறை-உயர மாற்று திறனாளி

2004இல் பட்டப்படிப்பை முடித்த இவர் கரீம் நகர் மாவட்டத்தில் முதல் மாற்று திறனாளியாக பட்டப்படிப்பை முடித்தவராக விளங்குகிறார். தற்போது இவர் இந்தியாவிலேயே முதல் ஆளாக கார் ஓட்டுனர் உரிமத்தையும் பெற்றுள்ளார். இதுகுறித்து கட்டிப்பள்ளி ஷிவ்பால் அளித்த பேட்டியில், "என் உயரத்தை காரணம் காட்டி மக்கள் என்னை கிண்டல் செய்தார்கள்.

இன்று நான் தி லிம்கா சாதனை புத்தகம் மற்றும் பலவற்றிற்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளேன். டிரைவிங் பயிற்சிக்காக பல குட்டையானவர்கள் என்னை தொடர்பு கொள்கிறார்கள்" என்றவர், அடுத்த ஆண்டில் இருந்து ஓட்டுனர் பயிற்சி மையத்தினை திறக்கவுள்ளதாக தெரிவித்துள்ளார். 2000இல் ஹைதராபாத்திற்கு வந்த ஷிவ்பால், தற்சமயம் இந்த நகரத்தில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வருகிறார்.

இந்தியாவிலேயே இதுதான் முதல்முறை!! பல சோதனைகளுக்கு பிறகு, ஓட்டுனர் உரிமத்தை பெற்ற முதல் குறை-உயர மாற்று திறனாளி

தனது குடும்பம் குறித்து இவர் பேசுகையில், குடும்பத்தில் நான் மூத்த சகோதரன். இத்தகைய குறைப்பாட்டில் பாதிக்கப்பட்டுள்ளவன் நான் மட்டுமே" என்றார். படங்களில் மட்டுமல்லாமல், சில விளம்பரங்களிலும் நடித்துள்ளதாக கூறும் கட்டிப்பள்ளி ஷிவ்பால், ஆனால் அதன்பின் சினிமாவில் தனக்கு தொடர்ந்து வாய்ப்பு கிடைக்கவில்லை என சிரித்தப்படி கூறுகிறார்.

இந்தியாவிலேயே இதுதான் முதல்முறை!! பல சோதனைகளுக்கு பிறகு, ஓட்டுனர் உரிமத்தை பெற்ற முதல் குறை-உயர மாற்று திறனாளி

மேலும் பேசிய ஷிவ்பால், "ஊனமுற்ற எனக்கு வேலை வழங்க யாரும் தயாராக இல்லை. பிறகு நண்பர் ஒருவர் மூலம் தனியார் நிறுவனத்தில் வேலை கிடைத்து, கடந்த 20 ஆண்டுகளாக இங்கு பணிபுரிந்து வருகிறேன். பயணிக்க, நான் வாகானங்களை முன்பதிவு செய்யும்போதெல்லாம், அவர்களில் சிலர் சவாரியை ரத்து செய்வர். நான் என் மனைவியுடன் வெளியே செல்லும்போது, மக்கள் மோசமான கருத்துகளை கூறினர்.

அப்போதுதான் சொந்தமாக கார் வைத்து ஓட்ட வேண்டும் என்று முடிவு செய்தேன்" என்றார். புதியதாக கார் ஒன்றை வாங்கிய பிறகு, டிரைவிங் கற்றுக்கொள்வதில் ஆர்வத்துடன் ஷிவ்பால் இணையத்தில் உலாவும், அமெரிக்காவில் ஒரு நபர் பதிவேற்றிய வீடியோவை கண்டார். காரின் இருக்கை மற்றும் பிற உபகரணங்களை அவரது உயரத்திற்கு உயரத்துவதற்கு தேவையான மாற்றங்களை அது அவருக்கு விளக்கியுள்ளது.

இந்தியாவிலேயே இதுதான் முதல்முறை!! பல சோதனைகளுக்கு பிறகு, ஓட்டுனர் உரிமத்தை பெற்ற முதல் குறை-உயர மாற்று திறனாளி

இந்த கார் மாடிஃபிகேஷன்கள் அனைத்தும் முடிந்த பிறகு, ஷிவ்பால் தனது நண்பரிடம் இருந்து கார் டிரைவிங்கை கற்று கொண்டுள்ளார். இத்துடன் இவருக்கு இருந்த சவால்கள் நின்றுவிடவில்லை. ஓட்டுனர் உரிமத்தை பெறுவதில் சிக்கலாக, போக்குவரத்து துறை அலுவலகம் வரையில் வந்தது. சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் முறையிட்ட பிறகு இவர் 3 மாதங்கள் கற்றல் உரிமத்தை பெற்றுள்ளார்.

இந்தியாவிலேயே இதுதான் முதல்முறை!! பல சோதனைகளுக்கு பிறகு, ஓட்டுனர் உரிமத்தை பெற்ற முதல் குறை-உயர மாற்று திறனாளி

பின்னர் அதிகாரி ஒருவரின் நேரடி கண்காணிப்பில் ஒரு சோதனை ஓட்டம் நடத்தப்பட்ட பின்னரே ஓட்டுனர் உரிமத்தை பெற்றதாக ஷிவ்பால் தெரிவித்துள்ளார். ஓட்டுனர் உரிமத்தை பெற்ற பிறகு அளித்த பேட்டியில், அனைவருக்கும் சில தவறுகள் உள்ளன. ஆனால் உங்களுக்குள் மறைந்திருக்கும் திறமைகளை கண்டுப்பிடித்து அவற்றை அடைவதே முக்கியம் என கட்டிப்பள்ளி ஷிவ்பால் கூறியுள்ளார்.

இவ்வாறு ஓட்டுனர் உரிமம் விஷயத்தில் இந்திய போக்குவரத்து துறை சற்று தீவிரமாக தான் உள்ளது. அதேநேரம் பழைய வாகனங்களுக்கு எதிரான நடவடிக்கைகளிலும் போக்குவரத்து துறை தீவிரம் காட்டி வருகிறது. ஏனெனில் இந்தியாவில் காற்று மாசுபாடு அதிகரித்து கொண்டே செல்வதற்கு பல்வேறு காரணங்கள் இருந்தாலும், அவற்றில் முக்கியமானதாக பழைய வாகனங்களின் பயன்பாடு பார்க்கப்படுகிறது.

Most Read Articles

மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
First Dwarf To Receive a Driving license in India
Story first published: Monday, December 6, 2021, 15:08 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X