அசர வைக்கும் மஹிந்திர சிங் தோனியின் பைக் கலெக்‌ஷன்... முதன்முறையாக கேரேஜ் வீடியோ வெளியீடு...

மஹிந்திர சிங் தோனி, உலகின் மிக சிறந்த கிரிக்கெட் வீரர் மற்றும் பல வெற்றிகளை குவித்த கேப்டன். கிரிக்கெட்டை தாண்டி தோனிக்கு ஆட்டோமொபைல்ஸிலும் ஈடுப்பட்டு உண்டு என்பது அனைவருக்கும் தெரிந்தது தான். இவரிடம் சொந்தமாக உள்ள விலையுயர்ந்த அரிய வாகனங்களில் பெரும்பான்மையானவை இருசக்கர வாகனங்கள் தான்.

இந்த நிலையில் சமீபத்தில் தோனி, ஸ்பெஷல் கேரேஜ் ஒன்றை தனது வீட்டினுள் உருவாக்கியுள்ளார். தோனி வெளியில் சாலையில் பைக்கில் சென்றிருப்பதை பல முறை செய்தியாக பார்த்திருக்கும். ஆனால் தற்போது முதன்முறையாக அவரது வீட்டிற்குள் உள்ள கேரேஜ் அருங்காட்சியகத்தின் வீடியோ வெளியாகியுள்ளது. அதனை இந்த செய்தியில் பார்ப்போம்.

அசர வைக்கும் மஹிந்திர சிங் தோனியின் பைக் கலெக்‌ஷன்... முதன்முறையாக கேரேஜ் வீடியோ வெளியீடு...

தோனி வீட்டிற்குள்ளேயே சுற்றி சுற்றி காட்டுகின்ற இந்த வீடியோவை அவரது மனைவி சாக்‌ஷி சிங் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்த வீடியோவின்படி பார்த்தோமேயானால் தோனி கேரேஜ் முழுக்க முழுக்க மோட்டார்சைக்கிள்களால் தான் நிரம்பியுள்ளது. இதில் மேல் மற்றும் கீழ் என இரு நிலைகளில் மிக நெருங்கமாக பைக்குகள் நிறுத்தப்பட்டுள்ளன.

அசர வைக்கும் மஹிந்திர சிங் தோனியின் பைக் கலெக்‌ஷன்... முதன்முறையாக கேரேஜ் வீடியோ வெளியீடு...

அவை எத்தனை உள்ளது என்பதை எண்ண முடியாவிட்டாலும் நிச்சயம் 100க்கும் மேற்பட்ட மோட்டார்சைக்கிகள் இருக்கும். தோனிக்கு மோட்டார்சைக்கிள்களை ஓட்டுவது எந்த அளவிற்கு பிடிக்குமோ அந்த அளவிற்கு அவற்றை கழுவி சுத்தம் செய்வதும் பிடிக்கும். இதனை பல போட்டோக்களில் பார்த்துள்ளோம்.

அசர வைக்கும் மஹிந்திர சிங் தோனியின் பைக் கலெக்‌ஷன்... முதன்முறையாக கேரேஜ் வீடியோ வெளியீடு...

தோனிக்கு குறிப்பாக 2-ஸ்ட்ரோக் மோட்டார்சைக்கிள்கள் என்றால் கொள்ளை பிரியம். இதனால் இவரிடம் அதிக எண்ணிக்கையில் யமஹா ஆர்டி350 மற்றும் ஆர்எக்ஸ்100 பைக்குகள் உள்ளன. இவற்றுடன் பிஎஸ்ஏ, ஹார்லி டேவிட்சன் உள்பட சில விண்டேஜ் ப்ராண்ட்களின் மோட்டார்சைக்கிள்களையும் சொந்தமாக வைத்துள்ளார்.

அசர வைக்கும் மஹிந்திர சிங் தோனியின் பைக் கலெக்‌ஷன்... முதன்முறையாக கேரேஜ் வீடியோ வெளியீடு...

பழமை வாய்ந்த ப்ராண்ட்களின் மோட்டார்சைக்கிள்கள் மட்டும் தான் இவருக்கு பிடிக்கும் என நினைத்துவிடாதீர்கள். தோனியிடம் தற்போதைய மாடர்ன் மோட்டார்சைக்கிள்களும் உள்ளன. இந்த வரிசையில் சமீபத்தில் இணைந்த பைக் கவாஸாகி நிஞ்சா எச்2.

அசர வைக்கும் மஹிந்திர சிங் தோனியின் பைக் கலெக்‌ஷன்... முதன்முறையாக கேரேஜ் வீடியோ வெளியீடு...

இதனை இவர் பயிற்சி நேரங்களில் வீட்டில் இருந்து அருகாமையில் உள்ள கிரிக்கெட் ஸ்டேடியத்திற்கு பயணிப்பதற்கு பயன்படுத்தி வருகிறார். இதுமட்டுமில்லாமல் பூத் சர்வதேச சுற்றிற்காக கான்ஃபெடெரேட் எக்ஸ்132 ஹெல்கேட் பைக்கையும் சமீபத்தில் தோனி வாங்கியிருந்தார். இந்த கேரேஜ் வீடியோ தோனிக்கு பைக்குகளுக்கும் இடையே உள்ள நெருக்கமான பிணைப்பை வெளிப்படுத்துகிறது.

அசர வைக்கும் மஹிந்திர சிங் தோனியின் பைக் கலெக்‌ஷன்... முதன்முறையாக கேரேஜ் வீடியோ வெளியீடு...

பைக்குகளுடன் நிஸான் 1 டன் ட்ரக் மற்றும் ரோல்ஸ் ராய்ஸ் சில்வர் ஷேடோ சீரிஸ் ஐ போன்ற விலையுயர்ந்த நான்கு சக்கர வாகனங்களையும் தோனி சொந்தமாக வைத்துள்ளார். இவற்றுடன் இந்தியாவின் ஒரே செரோக்கி ட்ராக்ஹாவ்க் மாடலான ஜீப் க்ராண்ட் செரோக்கி ட்ராக்ஹாவ்க் காரும் இவரிடம் உள்ளது.

அசர வைக்கும் மஹிந்திர சிங் தோனியின் பைக் கலெக்‌ஷன்... முதன்முறையாக கேரேஜ் வீடியோ வெளியீடு...

இந்த செரோக்கி மாடல் அதிகப்பட்சமாக 707 பிஎச்பி பவரையும், 825 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தவல்லது. முன்னதாக தோனி தனது ஜீவா உடன் தனது வீட்டு மதுசுவருக்கு உள்ளேயே மோட்டார்சைக்கிளில் ரைடிங் செய்த வீடியோவும் சமீபத்தில் வெளியிடப்பட்டு இருந்தது. அதனை காண கீழேயுள்ள லிங்கை பயன்படுத்தவும்.

தோனி தனது வீட்டினுள் உள்ள கேரேஜ்ஜை படம் பிடிக்க எந்த மீடியாவையும் அனுமதிப்பது இல்லை. இந்த கேரேஜ் வீடியோவை தொடர்ந்து அவரது பைக் மற்றும் கார் கலெக்‌ஷனை பற்றிய மேலும் சில வீடியோக்கள் விரைவில் வெளியாகும் என நம்புவோம்.

Most Read Articles

மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Here’s the first look of Mahendra Singh Dhoni’s car & bike museum [Video]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X