கூல்ட்ரிங்ஸ், சாப்பாடு கொடுப்பது மட்டும் அல்ல... விமான பணிப்பெண்களின் உண்மையான வேலை என்னனு தெரியுமா?

விமான பணிப்பெண்களின் பொறுப்புகள் மற்றும் கடமைகள் என்ன? என்பதை இந்த செய்தியில் விரிவாக பார்க்கலாம்.

கூல்ட்ரிங்ஸ், சாப்பாடு கொடுப்பது மட்டும் அல்ல... விமான பணிப்பெண்களின் உண்மையான வேலை என்னனு தெரியுமா?

விமானங்கள் என்றாலே நமக்கு முதலில் நினைவிற்கு வருவது விமான பணிப்பெண்கள்தான். உதட்டில் பளிச்சென்று தெரியும் லிப்ஸ்டிக்கை பூசி கொண்டு நவநாகரீகமாக வரும் விமான பணிப்பெண்கள் நம் அனைவருக்குமே பிடித்தமானவர்கள். ஒரு சில பஸ் கண்டக்டர்களை போல், அவர்கள் எப்போதும் பயணிகளிடம் கோபத்தை கனலாய் கக்கியதில்லை.

கூல்ட்ரிங்ஸ், சாப்பாடு கொடுப்பது மட்டும் அல்ல... விமான பணிப்பெண்களின் உண்மையான வேலை என்னனு தெரியுமா?

ஏனெனில் அவர்கள் டோனியை போன்று எப்போதும் கூலாக இருக்க கூடியவர்கள். நம்மில் ஒரு சிலருக்கு விமானத்தில் பறப்பது என்றாலே பயமாக இருக்கும். அப்படி இருக்கும்போது எந்த நேரமும் உயிரை பணயம் வைத்து வேலை செய்து கொண்டிருக்கும் விமான பணிப்பெண்களின் பொறுப்புகள் மற்றும் கடமைகள் என்ன? என்பதை இந்த செய்தியில் விரிவாக பார்க்கலாம்.

கூல்ட்ரிங்ஸ், சாப்பாடு கொடுப்பது மட்டும் அல்ல... விமான பணிப்பெண்களின் உண்மையான வேலை என்னனு தெரியுமா?

விமான பணிப்பெண்கள் என்றாலே நமக்கு சாப்பாடு மற்றும் கூல்ட்ரிங்ஸ் கொண்டு வந்து தருபவர்கள் என்று பலரும் நினைத்து கொண்டிருக்கலாம். உண்மையில் அதுவும் அவர்களது பணியின் ஒரு பகுதிதான். ஆனால் அதை கடந்து அவர்களுக்கு இன்னும் பல்வேறு பொறுப்புகள் இருக்கின்றன. அவை என்னென்ன? என்பதைதான் இந்த செய்தியில் விரிவாக பார்க்கவுள்ளோம்.

கூல்ட்ரிங்ஸ், சாப்பாடு கொடுப்பது மட்டும் அல்ல... விமான பணிப்பெண்களின் உண்மையான வேலை என்னனு தெரியுமா?

விமானத்திற்கு உள்ளே வரும் பயணிகளை அன்புடன் வரவேற்பதுதான் விமான பணிப்பெண்களின் முதல் கடமை. பயணிகள் தங்கள் இருக்கைகளை கண்டறிய உதவுவது அவர்களின் அடுத்த பொறுப்பு. டிக்கெட் மற்றும் இருக்கை எண்களை சரிபார்த்து, பயணிகளை அவர்களுடைய இருக்கையில் அமர செய்யும் பொறுப்பு விமான பணிப்பெண்களுக்கு இருக்கிறது.

கூல்ட்ரிங்ஸ், சாப்பாடு கொடுப்பது மட்டும் அல்ல... விமான பணிப்பெண்களின் உண்மையான வேலை என்னனு தெரியுமா?

அத்துடன் பயணிகளை கொண்டு வரும் லக்கேஜ்களை பாதுகாப்பாக வைக்க உதவும் பொறுப்பும், விமான பணிப்பெண்களுக்கு உள்ளது. அத்துடன் பயணிகளை கண்காணித்து, பாதுகாப்பை உறுதி செய்யும் கடமையும் விமான பணிப்பெண்களுக்கு இருக்கிறது. அதாவது பயணிகள் சீட் பெல்ட் அணிந்துள்ளார்களா? என்பது போன்ற விஷயங்களை கண்காணித்து, விதிமுறைகளை அமல்படுத்தும் பொறுப்பு அவர்களுடையது.

கூல்ட்ரிங்ஸ், சாப்பாடு கொடுப்பது மட்டும் அல்ல... விமான பணிப்பெண்களின் உண்மையான வேலை என்னனு தெரியுமா?

மேலும் பயணிகளுக்கு உணவு மற்றும் பானங்களை வழங்குதல், அவர்களின் பயணத்தை சௌகரியமாக இருக்க செய்யும் தலையணை மற்றும் போர்வைகளை வழங்குதல் ஆகியவையும் விமான பணிப்பெண்களின் வேலைதான். இதுதவிர பாதுகாப்பு விதிமுறைகள் தொடர்பாக பயணிகளுக்கு விளக்கம் அளிக்கும் பொறுப்பும் விமான பணிப்பெண்களுக்கு உள்ளது.

கூல்ட்ரிங்ஸ், சாப்பாடு கொடுப்பது மட்டும் அல்ல... விமான பணிப்பெண்களின் உண்மையான வேலை என்னனு தெரியுமா?

அவசர சூழல்களில் விமானத்தில் இருந்து எப்படி வெளியேற வேண்டும்? என்பதை அவர்கள்தான் பயணிகளுக்கு விளக்கமாக தெரிவிக்க வேண்டும். அத்துடன் 'டர்புலன்ஸ்' (Turbulence) உள்பட விமானத்தை பற்றிய மிக முக்கியமான தகவல்களை பயணிகளுக்கு எடுத்துரைக்க வேண்டிய பொறுப்பும் விமான பணிப்பெண்களுக்கு இருக்கிறது.

கூல்ட்ரிங்ஸ், சாப்பாடு கொடுப்பது மட்டும் அல்ல... விமான பணிப்பெண்களின் உண்மையான வேலை என்னனு தெரியுமா?

மேலும் அனைத்து பாதுகாப்பு உபகரணங்களும் விமானத்தில் இருப்பதையும், அவை சரியாக செயல்படுகின்றனவா? என்பதை உறுதி செய்வதும், விமான பணிப்பெண்களின் வேலைதான். அவசியம் ஏற்படும் சமயங்களில், அந்த பாதுகாப்பு உபகரணங்களை எப்படி பயன்படுத்த வேண்டும்? என்பதை பயணிகளுக்கு விளக்க வேண்டிய கடமையும் விமான பணிப்பெண்களுக்கு உள்ளது.

கூல்ட்ரிங்ஸ், சாப்பாடு கொடுப்பது மட்டும் அல்ல... விமான பணிப்பெண்களின் உண்மையான வேலை என்னனு தெரியுமா?

மேலும் விமானம் கிளம்புவதற்கு முன்பும், கிளம்பியதற்கு பின்பும் பாதுகாப்பு பரிசோதனைகளை செய்ய வேண்டிய வேலையும் விமான பணிப்பெண்களுக்கு இருக்கிறது. விமானத்தின் கேபினை தொடர்ச்சியாக கண்காணித்து கொண்டே இருப்பதும், நிர்வகிப்பதும், பாதுகாப்பதும் விமான பணிப்பெண்களின் வேலைகளில் ஒன்றாகும்.

கூல்ட்ரிங்ஸ், சாப்பாடு கொடுப்பது மட்டும் அல்ல... விமான பணிப்பெண்களின் உண்மையான வேலை என்னனு தெரியுமா?

இதுதவிர விமானங்களில் நடைபெறும் முக்கியமான நிகழ்வுகள் தொடர்பான அறிக்கைகளை தயாரித்து, அவற்றை அதிகாரிகளிடம் சமர்ப்பிக்க வேண்டிய பொறுப்பும் விமான பணிப்பெண்களுக்கு உள்ளது. விமான பணிப்பெண்கள் இப்படி பல்வேறு கடமைகளுடன் வேலை செய்து வருகின்றனர். எனவே அவர்களிடம் மரியாதையாக நடந்து கொள்வது நமது கடமையாகும்.

கூல்ட்ரிங்ஸ், சாப்பாடு கொடுப்பது மட்டும் அல்ல... விமான பணிப்பெண்களின் உண்மையான வேலை என்னனு தெரியுமா?

ஒட்டுமொத்தத்தில் விமான பணிப்பெண்கள் 'ரிஸ்க்' எடுத்துதான் வேலை செய்து வருகின்றனர். விமான பணிப்பெண்கள் ஆக வேண்டும் என ஆசைப்படுபவர்கள், அதற்கு உரிய கல்வி தகுதியுடன், ஆங்கிலம் மற்றும் கூடுதலாக ஒரு சில மொழிகளிலும் நிபுணத்துவம் பெற்றால், அவர்களின் தகுதி கூடும். மேலும் நேர்த்தியான தோற்றமும், விமான பணிப்பெண் வேலையில் சேர ஆசைப்படுபவர்களுக்கான முக்கிய தகுதியாகும்.

கூல்ட்ரிங்ஸ், சாப்பாடு கொடுப்பது மட்டும் அல்ல... விமான பணிப்பெண்களின் உண்மையான வேலை என்னனு தெரியுமா?

அவசர சூழல்களிலும் சாமர்த்தியமாக யோசிப்பதும், பிரச்னைகளை தீர்க்க கூடிய திறன் பெற்றவராக இருப்பதும் விமான பணிப்பெண் வேலையில் சேர ஆசைப்படுபவர்களிடம் இருக்க வேண்டிய மற்றொரு முக்கியமான தகுதிகளில் ஒன்று. அனைவருடனும் ஒருங்கிணைந்து வேலை செய்தல், நேரத்தை சரியாக கையாளுதல் உள்ளிட்டவை மேலும் பிற தகுதிகள் ஆகும்.

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Flight attendant job responsibilities
Story first published: Thursday, August 11, 2022, 23:55 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X