வெறும் 15 நிமிடங்களில் கொரோனாவை கொல்லும்... ஃபோர்டு கண்டுப்பிடித்துள்ள புதிய தொழிற்நுட்பம்...

கார்களின் உட்புறத்தில் கொரோனா வைரஸ் இருந்தால் அவற்றை வெறும் 15 நிமிடங்களில் கொல்லும் வகையில் ஃபோர்டு மோட்டார்ஸ் நிறுவனம் ஹீட்டட் மென்பொருள் என்ற பெயரில் புதிய தொழிற்நுட்பத்தை உருவாக்கியுள்ளது. இதனை பற்றி விரிவாக இந்த செய்தியில் பார்ப்போம்.

வெறும் 15 நிமிடங்களில் கொரோனாவை கொல்லும்... ஃபோர்டு கண்டுப்பிடித்துள்ள புதிய தொழிற்நுட்பம்...

சீனாவின் வுகான் நகரில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் உலகின் அனைத்து நாடுகளையும் கடந்த இரு மாதங்களாக ஆட்டிப்படைத்து வருகிறது. இதனால் ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டு வருவதால் பொருளாதாரம் மிக மோசமான நிலைக்கு சரிவடைந்து வருகிறது.

MOST READ: பருவமழை தொடங்க போகுது... மழை நீரில் இருந்து வாகனங்களை பாதுகாக்க எளிமையான வழி என்னென்ன..?

வெறும் 15 நிமிடங்களில் கொரோனாவை கொல்லும்... ஃபோர்டு கண்டுப்பிடித்துள்ள புதிய தொழிற்நுட்பம்...

குறிப்பாக தொழிற்சாலைகள் மற்றும் வாகனங்களை விற்பனை செய்யும் டீலர்ஷிப் ஷோரூம்கள் மூடப்பட்டு உள்ளதால் ஆட்டோமொபைல் துறை அதாள பாதாளத்திற்கு சென்றுள்ளது. இது இத்தோடு நின்றுவிடுமா என்றால், அதுதான் இல்லை.

வெறும் 15 நிமிடங்களில் கொரோனாவை கொல்லும்... ஃபோர்டு கண்டுப்பிடித்துள்ள புதிய தொழிற்நுட்பம்...

ஏனெனில் பொருளாதாரம் சரிவடைந்துள்ளதால் பலர் வேலை இழந்துள்ளனர். இதன் காரணமாக புதிய வாகனங்களுக்கான தேவை பெரிய அளவில் குறைய வாய்ப்புள்ளது. மேலும் வைரஸின் பீதியினால் காசு உள்ளவர்களும் புதிய கார்களை வாங்க யோசிப்பர்.

வெறும் 15 நிமிடங்களில் கொரோனாவை கொல்லும்... ஃபோர்டு கண்டுப்பிடித்துள்ள புதிய தொழிற்நுட்பம்...

இதில் தனிநபர் பொருளாதாரத்தை உயர்த்த தயாரிப்பு நிறுவனங்களால் எதுவும் செய்ய முடியாது. ஆனால் தங்களால் தயாரிக்கப்படும் வாகனங்கள் மிகவும் சுத்திகரிக்கப்பட்டவை என்ற நம்பிக்கையை வாடிக்கையாளர்கள் மத்தியில் அவற்றால் கொண்டுவர முடியும். அதை தான் தற்போது பெரும்பான்மையான நிறுவனங்கள் மேற்கொண்டு வருகின்றன.

வெறும் 15 நிமிடங்களில் கொரோனாவை கொல்லும்... ஃபோர்டு கண்டுப்பிடித்துள்ள புதிய தொழிற்நுட்பம்...

இந்த வகையில் காரின் உட்புறத்தில் யார் மூலமாவது கொரோனா வைரஸ் வந்தால் அவற்றை வெறும் 15 நிமிடங்களில் அழிக்கும் புதிய தொழிற்நுட்பத்தை அமெரிக்காவை சேர்ந்த ஆட்டோமொபைல் நிறுவனமான ஃபோர்டு உருவாக்கியுள்ளது.

வெறும் 15 நிமிடங்களில் கொரோனாவை கொல்லும்... ஃபோர்டு கண்டுப்பிடித்துள்ள புதிய தொழிற்நுட்பம்...

குறிப்பாக அமெரிக்க போலீஸாருக்காக பிரத்யேகமாக தயாரிக்கப்பட்டுள்ள இந்த மென்பொருள் கொரோனா வைரஸை கண்டறிவது மட்டுமில்லாமல் அவர்களது கார்களின் உட்புற கேபினை 15 நிமிடங்களுக்கு 53 டிகிரி செல்சியஸ் வரை வெப்பப்படுத்தி அங்குள்ள வைரஸ் கிருமிகளை அழிக்கும்.

வெறும் 15 நிமிடங்களில் கொரோனாவை கொல்லும்... ஃபோர்டு கண்டுப்பிடித்துள்ள புதிய தொழிற்நுட்பம்...

இந்த வெப்பநிலையில் சுமார் 99 சதவீத வைரஸ்கள் அழிந்துவிடும் என ஃபோர்டு கூறியுள்ளது. அமெரிக்க போலீஸாருக்கு மட்டும் தற்போதைக்கு கிடைக்கவுள்ள இந்த தொழிற்நுட்பம் பிறகு கனடா என மற்ற நாட்டு போலீஸ் துறையை சேர்ந்தவர்களுக்கும் அனுப்பி வைக்கப்படவுள்ளது.

வெறும் 15 நிமிடங்களில் கொரோனாவை கொல்லும்... ஃபோர்டு கண்டுப்பிடித்துள்ள புதிய தொழிற்நுட்பம்...

இந்த மென்பொருள் செயல்படும் விதம் மிக எளிதாகும். என்ஜினை உயர்பட்ச வெப்பநிலைக்கு கொண்டு செல்லும் இந்த புதிய தொழிற்நுட்பம் உட்புற மின்விசிறியின் அமைப்பை அதிகப்பட்ச வெப்பத்தை அடைய செய்யும். ஃபோர்டு நிறுவனம் இந்த தொழிற்நுட்பத்தை ஓஹியோ ஸ்டேட் பல்கலைகழக்கத்துடன் இணைந்து இந்த புதிய தொழிற்நுட்பத்தை தயாரித்துள்ளது.

Most Read Articles
மேலும்... #ஃபோர்டு #ford
English summary
Ford Develops New Technology That Kills Coronavirus in Cars in 15 Mins
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X