முக்கிய நபருக்கு சொகுசு கார் வாங்குவதற்காக பாஜக அரசு செய்த காரியம்... விலை தெரிஞ்சா ஸ்டண் ஆயிருவீங்க

கடும் நிதி நெருக்கடிக்கு மத்தியில், முக்கிய நபர் ஒருவருக்கு மிகவும் விலை உயர்ந்த சொகுசு காரை, பாஜக அரசு வழங்கியுள்ள சம்பவம் அனைவரது புருவங்களையும் உயர்த்தியுள்ளது.

முக்கிய நபருக்கு சொகுசு கார் வாங்குவதற்காக பாஜக அரசு செய்த காரியம்... விலை தெரிஞ்சா ஸ்டண் ஆயிருவீங்க

இந்தியாவின் முன்னாள் பிரதமரும், ராஜ்யசபா உறுப்பினருமான தேவ கவுடாவிற்கு தற்போது சொகுசு கார் கிடைத்துள்ளது. அவருக்கு வழங்கப்பட்டிருப்பது ஹை-எண்ட் வால்வோ கார் ஆகும். இந்த கார் கடந்த வாரம் அவருக்கு வழங்கப்பட்டுள்ளது. கர்நாடக மாநிலத்தில் தேர்ந்து எடுக்கப்பட்ட எந்தவொரு பிரதிநிதிக்கும் அம்மாநில அரசால் வழங்கப்பட்ட மிக விலை உயர்ந்த வாகனம் இதுவாகும்.

முக்கிய நபருக்கு சொகுசு கார் வாங்குவதற்காக பாஜக அரசு செய்த காரியம்... விலை தெரிஞ்சா ஸ்டண் ஆயிருவீங்க

கர்நாடக மாநிலத்தில் ஒரு ராஜ்யசபா உறுப்பினருக்கு அனுமதிக்கப்பட்ட அளவை காட்டிலும், மூன்று மடங்கு அதிக விலையில் இந்த கார் வாங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. கொரோனா வைரஸ் பிரச்னை காரணமாக இந்தியாவில் மத்திய அரசும், பல்வேறு மாநில அரசுகளும் தற்போது மிக கடுமையான நிதி நெருக்கடியில் சிக்கியுள்ளன. இதில், கர்நாடகாவும் ஒன்று.

முக்கிய நபருக்கு சொகுசு கார் வாங்குவதற்காக பாஜக அரசு செய்த காரியம்... விலை தெரிஞ்சா ஸ்டண் ஆயிருவீங்க

நிலைமை அப்படி இருக்கும் சூழலில், தேவ கவுடாவிற்காக மிகவும் விலை உயர்ந்த கார் வாங்கப்பட்டிருப்பது பலரின் புருவங்களை உயர்த்தியுள்ளது. தேவ கவுடாவிற்கு புதிய கார் வாங்குவதற்காக விதிகள் திருத்தி எழுதப்பட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தேர்ந்து எடுக்கப்பட்ட பிரதிநிதிகளுக்கு இவ்வளவு தொகைக்குள்தான் புதிய வாகனங்கள் வாங்கப்பட வேண்டும் என்று விதிமுறைகள் உள்ளன.

முக்கிய நபருக்கு சொகுசு கார் வாங்குவதற்காக பாஜக அரசு செய்த காரியம்... விலை தெரிஞ்சா ஸ்டண் ஆயிருவீங்க

இதன்படி அமைச்சர்கள், மக்களவை மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்களுக்கு, பணியாளர்கள் மற்றும் நிர்வாக சேவைகள் துறை 22 லட்ச ரூபாய்க்கு மேல் கார்களை வாங்க கூடாது. அதே சமயம் வாரியங்கள் மற்றும் கழகங்களின் தலைவர்களுக்கு 11 லட்ச ரூபாய்க்கும் மேல் புதிய கார்களை வாங்க கூடாது என விதிமுறைகள் தெரிவிக்கின்றன.

முக்கிய நபருக்கு சொகுசு கார் வாங்குவதற்காக பாஜக அரசு செய்த காரியம்... விலை தெரிஞ்சா ஸ்டண் ஆயிருவீங்க

ஆனால் முதல் அமைச்சரின் அதிகாரப்பூர்வ வாகனத்திற்கு இப்படியான வரம்புகள் எதுவும் இல்லை. எனினும் தேவகவுடாவிற்கு புதிய காரை ஒதுக்கீடு செய்வதற்காக விதிமுறைகள் மாற்றப்பட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தேவகவுடாவிற்கு வழங்கப்பட்டிருப்பது வால்வோ எக்ஸ்சி60 (Volvo XC60) கார் என கூறப்படுகிறது.

முக்கிய நபருக்கு சொகுசு கார் வாங்குவதற்காக பாஜக அரசு செய்த காரியம்... விலை தெரிஞ்சா ஸ்டண் ஆயிருவீங்க

சாலை வரி மற்றும் காப்பீடு உள்பட இதன் விலை 76 லட்ச ரூபாய். ஆனால் அரசு வாகனங்களுக்கு வரிகளில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. எனவே இதன் விலை 60 லட்ச ரூபாய் என்ற அளவில் வருகிறது. அதாவது அனுமதிக்கப்பட்ட அளவை காட்டிலும் 38 லட்ச ரூபாய் அதிகமான விலையில் இந்த கார் வாங்கப்பட்டுள்ளது.

முக்கிய நபருக்கு சொகுசு கார் வாங்குவதற்காக பாஜக அரசு செய்த காரியம்... விலை தெரிஞ்சா ஸ்டண் ஆயிருவீங்க

சௌகரியமான வாகனம் வேண்டும் என தேவகவுடா கோரிக்கை விடுத்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனை கர்நாடக முதல்வர் எடியூரப்பா ஏற்றுக்கொண்டு, நிதித்துறையின் ஒப்புதலுக்கு அனுப்பியதாக கூறப்படுகிறது. தேவகவுடாவின் வயதையும், கர்நாடகாவில் இருந்து சென்று பிரதமர் பதவி வகித்தவர் என்பதையும் மனதில் கொண்டு இந்த விலக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

முக்கிய நபருக்கு சொகுசு கார் வாங்குவதற்காக பாஜக அரசு செய்த காரியம்... விலை தெரிஞ்சா ஸ்டண் ஆயிருவீங்க

தற்போதைய நிலையில் பெரும்பாலான அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா கார்களை பயன்படுத்தி வருகின்றனர். இது இந்தியாவில் மிகவும் பிரபலமாக உள்ள எம்பிவி ரக கார் ஆகும். அதே சமயம் முதல்வர் எடியூரப்பா மற்றும் எதிர்கட்சி தலைவரும், முன்னாள் முதல் அமைச்சருமான சித்தராமையா ஆகியோர் டொயோட்டா பார்ச்சூனர் கார்களை பயன்படுத்துகின்றனர்.

முக்கிய நபருக்கு சொகுசு கார் வாங்குவதற்காக பாஜக அரசு செய்த காரியம்... விலை தெரிஞ்சா ஸ்டண் ஆயிருவீங்க

இது இந்தியாவில் மிகவும் பிரபலமாக இருக்கும் எஸ்யூவி ரக கார் ஆகும். தேவகவுடாவின் பயன்பாட்டிற்காக தற்போது வழங்கப்பட்டுள்ள வால்வோ எக்ஸ்சி60 காரும், எஸ்யூவி ரகத்தை சேர்ந்ததுதான். இந்த காரில், 2.0 லிட்டர் டர்போசார்ஜ்டு டீசல் இன்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் அதிகபட்சமாக 235 பிஎஸ் பவரையும், 480 என்எம் டார்க் திறனையும் வாரி வழங்க கூடியது.

முக்கிய நபருக்கு சொகுசு கார் வாங்குவதற்காக பாஜக அரசு செய்த காரியம்... விலை தெரிஞ்சா ஸ்டண் ஆயிருவீங்க

இதனுடன் 8 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் வழங்கப்பட்டுள்ளது. இந்த காரின் அதிகபட்ச வேகம் மணிக்கு 220 கிமீ ஆகும். பல்வேறு சொகுசு வசதிகளுடன், ஏராளமான பாதுகாப்பு வசதிகளையும் இந்த எஸ்யூவி பெற்றுள்ளது. தேவகவுடா தற்போது இந்த எஸ்யூவியை பெற்றிருப்பது பற்றி, தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Former Prime Minister Deve Gowda Gets Volvo XC60 Luxury SUV Worth Rs.60 Lakh. Read in Tamil
Story first published: Friday, September 25, 2020, 22:20 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X