இந்த வாசனைக்குப் பல பேரு அடிக்ட் ஆகிட்டாங்க... புதிய காரில் வரும் வாசனை பின்னால் இவ்வளவு விஷயங்கள் இருக்கிறதா?

புதிதாக வாங்கப்பட்ட கார்களில் நறுமணம் வருகிறதே அது எங்கிருந்து வருகிறது, எப்படி வருகிறது, எதனால் வருகிறது? இதெல்லாம் உங்களுக்குத் தெரியுமா? இதைப்பற்றி முழுமையான விஷயத்தை இங்கே காணலாம்.

இந்த வாசனைக்குப் பல பேரு அடிக்ட் ஆகிட்டாங்க . . . புதிய காரில் வரும் வாசனை பின்னால் இவ்வளவு விஷயங்கள் இருக்கிறதா . . .

கார் காதலர்களுக்கு எல்லாம் இருக்கும் பெரும் கனவு என்னவென்றால் தனக்கென சொந்தமாக ஒரு காரை வாங்கி அந்த காருக்குள் அமர்ந்து தனக்கான சொந்தமான புதிய காரில் அமர்ந்து அதன் வாசனையை நுகர்வது என்பது தனி அனுபவம் தான். பலருக்கு இந்த வாசனை என்பது மிகவும் பிடித்தமான வாசனையாக இருக்கும். இந்த பதிவில் நாம் இப்படியாக புதிய கார்களில் வரும் வாசனைகளைப் பற்றி தான் காணப்போகிறோம்.

இந்த வாசனைக்குப் பல பேரு அடிக்ட் ஆகிட்டாங்க . . . புதிய காரில் வரும் வாசனை பின்னால் இவ்வளவு விஷயங்கள் இருக்கிறதா . . .

பொதுவாகப் புதிதாகப் புத்தகம் வாங்கினாலும் சரி, புதிதாக கார் வாங்கினாலும் சரி அதில் குறிப்பிட்ட சில காலத்திற்கு ஒரு விதமான வாசம் இருந்து கொண்டிருக்கும் பலருக்கு அந்த வாசனை மிகவும் பிடிக்கும்,சிலருக்கு அந்த வாசனை பிடிக்காது. இந்த வாசம் எல்லாம் எங்கிருந்து வருகிறது என்ற சந்தேகம் பலருக்கும் இருக்கும். பொதுவாக புதிய கார்களில் அதில் உட்புறத்தில் பயன்படுத்தப்பட்டுள்ள பிளாஸ்டிக், லெதர் மற்றும் அங்கு பயன்படுத்தப்பட்டுள்ள பசைகளின் வாசம் தான். அது.

இந்த வாசனைக்குப் பல பேரு அடிக்ட் ஆகிட்டாங்க . . . புதிய காரில் வரும் வாசனை பின்னால் இவ்வளவு விஷயங்கள் இருக்கிறதா . . .

இந்த வாசனை கார் வாங்கியதில் வேண்டுமானால் நன்றாக இருக்கலாம். ஆனால் நாட்கள் செல்லசெல்ல காருக்குள் இது துர்நாற்றத்தை ஏற்படுத்திவிடும். இதனால் பலர் காருக்குள் செயற்கை வாசத்தை ஏற்படுத்தும் வாசனை பொருட்களை வைத்திருப்பர். இதனால் காருக்குள் துர்நாற்றம் விலகி நறுமணம் கமழும், கார் தயாரிக்கப்படும் போது ஆஃப் கியஸிங் என்ற ஒரு பிராசஸ் இருக்கிறது. இந்த பிராசஸ் நடக்கும் போது தான் அதிலிருந்து இந்த மணம் வெளிவருகிறது.

இந்த வாசனைக்குப் பல பேரு அடிக்ட் ஆகிட்டாங்க . . . புதிய காரில் வரும் வாசனை பின்னால் இவ்வளவு விஷயங்கள் இருக்கிறதா . . .

இது எல்லாம் சாதாரண கார்களில் தான் ஆனால் ரோஸ்ராய்ஸ், பென்ட்லி போன்ற நிறுவனங்கள் தங்கள் கார்களிலிருந்து எந்த விதமான நறுமணம் வர வேண்டும் என்பதை அந்நிறுவனம் முடிவு செய்கிறது அதற்காக அந்நிறுவனம் கார் தயாரிக்கும் போதே அதில் பயன்படுத்தப்படும் மெட்டியல்களில் வாசனைத் திரவியங்களைக் கலந்து வருகிறது. இதற்காகப் பல நிறுவனங்களுடன் கை கோர்த்து காரின் பிரேம் ஒர்க்கிலிருந்து இந்த சென்ட் வாசனையை சேர்த்துக்கொண்டே வருவார்கள்.

இந்த வாசனைக்குப் பல பேரு அடிக்ட் ஆகிட்டாங்க . . . புதிய காரில் வரும் வாசனை பின்னால் இவ்வளவு விஷயங்கள் இருக்கிறதா . . .

இறுதியாக கார் கஸ்டமருக்கு டெலிவரியாகும் போது காருக்குள் எந்த வாசம் இருக்க வேண்டும் என்பதில் இந்நிறுவனங்கள் மிக கவனமாக இருக்கும். இதற்காக அவர்கள் பயன்படுத்தும் பெயிண்ட், பசை, லெதர் உள்ளிட்ட விஷயங்களிலிருந்து துர்நாற்றங்கள் வராமல் இருக்கவும் பல வேலைகளை முன்னரே செய்திருப்பார்கள். சில கார் தயாரிப்பு நிறுவனங்கள் ஒவ்வொரு நாட்டிற்கும் ஏற்ப காரின் வாசனையை முடிவு செய்வார்கள்.

இந்த வாசனைக்குப் பல பேரு அடிக்ட் ஆகிட்டாங்க . . . புதிய காரில் வரும் வாசனை பின்னால் இவ்வளவு விஷயங்கள் இருக்கிறதா . . .

ஒரே கார் ஒவ்வொரு நாட்டிலும் ஒவ்வொரு வாசனை வரும்படி வடிவமைக்கப்பட்டிருக்கும். உதாரணமாகச் சீனாவில் கார் வாங்கும் மக்கள் அதிலிருந்து எந்த விதமான வாசனையுமே வரக்கூடாது அப்பொழுது தான் அது சிறப்பான கார் என்ற கருத்தை வைத்திருக்கிறார்கள். அதனால் அந்நாட்டில் விற்பனையாகும் கார்களில் வாசனையே இல்லாத தன்மையை ஏற்படுத்த கார் தயாரிப்பு நிறுவனங்கள் முயற்சி செய்கின்றன.

இந்த வாசனைக்குப் பல பேரு அடிக்ட் ஆகிட்டாங்க . . . புதிய காரில் வரும் வாசனை பின்னால் இவ்வளவு விஷயங்கள் இருக்கிறதா . . .

சீனாவில் எந்த காரை வாங்கினாலும் சரி எந்த விலையில், குறைந்த வேரியன்ட், உயர்வான வேரியன்ட் என எல்லா கார்களிலும் வாசனை இல்லாத தன்மையே இருக்கும். வாசனை உள்ள கார்கள் என்றால் சீனாவில் விற்பனையே ஆகாது. ஆனால் இந்தியாவில் நேர் எதிர் நல்ல நறுமணம் உள்ள வாசனைகளில் உள்ள கார்களுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருக்கிறது

இந்த வாசனைக்குப் பல பேரு அடிக்ட் ஆகிட்டாங்க . . . புதிய காரில் வரும் வாசனை பின்னால் இவ்வளவு விஷயங்கள் இருக்கிறதா . . .

இந்த காரில் உள்ள வாசனை குறித்து நடத்தப்பட்ட ஆய்வில் காரிலிருந்து வெளியாகும் வாசனை மனித உடலுக்கு ஏற்றது இல்லை. இது மனிதர்கள் உடலுக்குத் தீங்கை விளைவிக்கும் சிலருக்கு மயக்கம், மூச்சுத் திணறல் போன்ற விஷயங்களை ஏற்படுத்தும் எனக் கூறப்பட்டுள்ளது. இது நீங்கள் விரும்பும் நறுமணமாக இருந்தாலும் சரி துர்நாற்றமாக இருந்தாலும் சரி இரண்டும் உடலுக்கு கேடு தான் என இந்த ஆய்வு சொல்கிறது. உங்களுக்கு புதிய காரிலிருந்து வரும் வாசனை பிடிக்குமா? உங்கள் பதிலை கமெண்டில் சொல்லுங்கள்

Most Read Articles

மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
From where the new car smells come from
Story first published: Thursday, September 22, 2022, 13:14 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X