உங்க காரை சிஎன்ஜி-க்கு மாற்றுவது லேசுபட்ட காரியம் இல்லை... மெக்கானிக்குகளுக்கு கூட இந்த விஷயங்கள் தெரியாது...

உங்கள் காரை சிஎன்ஜி-க்கு மாற்றும் முன்பு, நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கியமான விஷயங்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

உங்க காரை சிஎன்ஜி-க்கு மாற்றுவது லேசுபட்ட காரியம் கிடையாது... இந்த விஷயங்கள் தெரியலைனா பின்னாடி பிரச்னைதான்...

இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை மிகவும் அதிகமாக உள்ளது. இதனால் கார் வைத்திருப்பவர்கள் பெரும் சிரமங்களுக்கு ஆளாகி வருகின்றனர். போதாக்குறைக்கு பெட்ரோல், டீசலில் இயங்கும் வாகனங்களால் சுற்றுச்சூழல் வேறு மிக கடுமையாக மாசடைந்து வருகிறது. இந்த இரண்டு பிரச்னைகளுக்கும் எலெக்ட்ரிக் மற்றும் சிஎன்ஜி வாகனங்கள் நல்ல தீர்வாக இருக்கும்.

உங்க காரை சிஎன்ஜி-க்கு மாற்றுவது லேசுபட்ட காரியம் கிடையாது... இந்த விஷயங்கள் தெரியலைனா பின்னாடி பிரச்னைதான்...

ஆனால் எலெக்ட்ரிக் கார்கள் விலை உயர்ந்தவை என்பதால், அவற்றை வாங்குவதில் பல்வேறு சிரமங்கள் உள்ளன. எனவே பெட்ரோல், டீசல் விலை உயர்வு மற்றும் சுற்றுச்சூழல் மாசுபாடு ஆகிய இரண்டு பிரச்னைகளையும் சமாளிக்க சிஎன்ஜி வாகனங்கள் அருமையான தீர்வாக முன்வைக்கப்படுகின்றன. இதற்காக நீங்கள் புதிதாக சிஎன்ஜி கார்களை வாங்க வேண்டிய அவசியமில்லை.

உங்க காரை சிஎன்ஜி-க்கு மாற்றுவது லேசுபட்ட காரியம் கிடையாது... இந்த விஷயங்கள் தெரியலைனா பின்னாடி பிரச்னைதான்...

தற்போது உங்களிடம் உள்ள கார்களிலேயே சிஎன்ஜி கிட்களை பொருத்தி கொள்ள முடியும். இதன் மூலம் உங்கள் காரை சிஎன்ஜி எரிபொருளில் இயங்க வைக்கலாம். பெட்ரோல், டீசல் விலையுடன் ஒப்பிடும்போது, சிஎன்ஜி எரிபொருளின் விலை மிகவும் குறைவு. அத்துடன் பெட்ரோல், டீசலை போல், சிஎன்ஜி சுற்றுச்சூழலை மாசுபடுத்தாது.

உங்க காரை சிஎன்ஜி-க்கு மாற்றுவது லேசுபட்ட காரியம் கிடையாது... இந்த விஷயங்கள் தெரியலைனா பின்னாடி பிரச்னைதான்...

எனவே தங்கள் கார்களில் சிஎன்ஜி கிட்களை பொருத்துவதற்கு தற்போது பலர் ஆர்வம் காட்டி வருகின்றனர். ஆனால் உங்கள் காரில் சிஎன்ஜி கிட்களை பொருத்துவதற்கு முன்பு, ஒரு சில முக்கியமான விஷயங்களை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும். இந்த விஷயங்கள், எதிர்காலத்தில் உங்களுக்கு பாதிப்பு ஏற்படுவதை தடுக்கும். அந்த விஷயங்கள் என்னென்ன? என்பதை இந்த செய்தியில் தொகுத்து வழங்கியுள்ளோம்.

உங்க காரை சிஎன்ஜி-க்கு மாற்றுவது லேசுபட்ட காரியம் கிடையாது... இந்த விஷயங்கள் தெரியலைனா பின்னாடி பிரச்னைதான்...

1. அனைத்து கார்களிலும் சிஎன்ஜி கிட்களை பொருத்த முடியாது

உங்கள் காரில் சிஎன்ஜி கிட் பொருத்துவதற்கு முன்பாக, உங்கள் காரின் எரிபொருள் வகையை சிஎன்ஜி-க்கு மாற்ற முடியுமா? என்பதை நீங்கள் பரிசோதிக்க வேண்டும். ஆம், அனைத்து கார்களையும் சிஎன்ஜி-க்கு மாற்ற முடியாது. குறிப்பாக பழைய கார்களை சிஎன்ஜி-க்கு மாற்றுவதற்கான வாய்ப்புகள் குறைவு. எனவே உங்கள் பெட்ரோல்/டீசல் காரை, சிஎன்ஜி காராக மாற்ற முடியுமா? என்பதை பரிசோதிப்பது முக்கியம்.

உங்க காரை சிஎன்ஜி-க்கு மாற்றுவது லேசுபட்ட காரியம் கிடையாது... இந்த விஷயங்கள் தெரியலைனா பின்னாடி பிரச்னைதான்...

இங்கே மற்றொரு விஷயமும் குறிப்பிடத்தக்கது. அதாவது பெட்ரோல் கார்களை சிஎன்ஜி-க்கு மாற்றுவது மிகவும் எளிது. ஆனால் டீசல் கார்கள் என்றால், அதனை சிஎன்ஜி-க்கு மாற்றுவது சிரமம். பெட்ரோல் கார்களுடன் ஒப்பிடும்போது டீசல் கார்களை சிஎன்ஜி-க்கு மாற்ற அதிக மாடிஃபிகேஷன்களை செய்ய வேண்டியிருக்கும்.

உங்க காரை சிஎன்ஜி-க்கு மாற்றுவது லேசுபட்ட காரியம் கிடையாது... இந்த விஷயங்கள் தெரியலைனா பின்னாடி பிரச்னைதான்...

அதேபோல் பெட்ரோல் கார்களுடன் ஒப்பிடும்போது, டீசல் கார்களை சிஎன்ஜி-க்கு மாற்ற அதிக செலவு ஆகும். எனவே உங்கள் காரை சிஎன்ஜி-க்கு மாற்ற முடியுமா? என்பதை முதலில் பார்த்து விடுங்கள். உங்கள் காரை சிஎன்ஜி-க்கு மாற்ற முடியுமா? என்பதை பரிசோதிக்க, உங்கள் பகுதியில் உள்ள ஆர்டிஓ அலுவலகத்தை தொடர்பு கொள்வதுதான் மிக சிறப்பான வழி.

உங்க காரை சிஎன்ஜி-க்கு மாற்றுவது லேசுபட்ட காரியம் கிடையாது... இந்த விஷயங்கள் தெரியலைனா பின்னாடி பிரச்னைதான்...

எந்தெந்த கார்களில் சிஎன்ஜி கிட்களை பொருத்த முடியும்? என்ற பட்டியல் ஆர்டிஓ அலுவலகங்களால் வெளியிடப்படும். அந்த பட்டியலில் உங்கள் கார் மாடல் இருந்தால், நீங்கள் சிஎன்ஜி கிட்டை பொருத்தி கொள்ளலாம். ஆனால் சிஎன்ஜி-க்கு மாற்ற அனுமதிக்கப்பட்ட கார்களின் பட்டியல் ஒவ்வொரு இடத்தை பொறுத்தும் வேறுபடும். எனவே உங்கள் பகுதியில் உள்ள ஆர்டிஓ அலுவலகத்தை தொடர்பு கொள்வது நல்லது.

உங்க காரை சிஎன்ஜி-க்கு மாற்றுவது லேசுபட்ட காரியம் கிடையாது... இந்த விஷயங்கள் தெரியலைனா பின்னாடி பிரச்னைதான்...

2. ஆர்டிஓ அனுமதி பெற வேண்டும்

நீங்கள் உங்கள் பெட்ரோல் காரை, சிஎன்ஜி-க்கு மாற்றியுள்ளீர்கள் என வைத்து கொள்வோம். இதற்கு நீங்கள் ஆர்டிஓ-விடம் அனுமதி பெற வேண்டும். ஆர்டிஓ அனுமதி இல்லாமல், உங்களால் சட்டப்பூர்வமாக அந்த காரை பயன்படுத்த முடியாது. உங்கள் காரின் பதிவு சான்றிதழில் (ஆர்சி) எரிபொருள் வகையை பெட்ரோலில் இருந்து சிஎன்ஜி என மாற்றுவதும் அவசியம்.

உங்க காரை சிஎன்ஜி-க்கு மாற்றுவது லேசுபட்ட காரியம் கிடையாது... இந்த விஷயங்கள் தெரியலைனா பின்னாடி பிரச்னைதான்...

அனுமதி வழங்கிய பின்பு, எரிபொருள் வகை மாற்றம் செய்யப்பட்டதற்கான சீலை பதிவு சான்றிதழில் ஆர்டிஓ வைப்பார். அந்த சீல் வைக்கப்பட்ட பிறகு, நீங்கள் சட்டப்பூர்வமாக எந்த பிரச்னையும் இல்லாமல் பெட்ரோலில் இருந்து சிஎன்ஜி-க்கு மாற்றப்பட்ட காரை பயன்படுத்தலாம். ஆனால் உங்கள் பதிவு சான்றிதழில், எரிபொருள் வகையை மாற்றும் செய்யும் வேலை சற்று சிரமமானது. இதற்கு குறிப்பிட்ட காலம் ஆகலாம்.

உங்க காரை சிஎன்ஜி-க்கு மாற்றுவது லேசுபட்ட காரியம் கிடையாது... இந்த விஷயங்கள் தெரியலைனா பின்னாடி பிரச்னைதான்...

3. அனைத்து சிஎன்ஜி கிட்களும் உண்மையானவை கிடையாது

இன்று அனைத்து விஷயங்களிலும் போலி வந்து விட்டது. சிஎன்ஜி கிட்களும் அதற்கு விதிவிலக்கு அல்ல. சந்தையில் கிடைக்கும் அனைத்து சிஎன்ஜி கிட்களும் உண்மையானவை கிடையாது. எனவே உங்கள் காரில் சிஎன்ஜி கிட்டை பொருத்தும் முன்பு அதன் நம்பகத்தன்மையை பரிசோதிப்பது அவசியம். பிரச்னைகளை தவிர்க்க வேண்டுமென்றால் பிராண்டட் சிஎன்ஜி கிட்களை நீங்கள் வாங்குவது நல்லது.

உங்க காரை சிஎன்ஜி-க்கு மாற்றுவது லேசுபட்ட காரியம் கிடையாது... இந்த விஷயங்கள் தெரியலைனா பின்னாடி பிரச்னைதான்...

அங்கீகரிக்கப்பட்ட டீலர்களிடம் அவற்றை நீங்கள் வாங்கலாம். லோக்கல் டீலர்களிடம் சிஎன்ஜி கிட்கள் வாங்குவதை தவிர்ப்பது நல்லது. அவர்கள் போலியான ஒன்றை உங்கள் தலையில் கட்டி விடலாம். பிற்காலத்தில் அவை உங்களுக்கு தொல்லை தரும். எனவே அங்கீகரிக்கப்பட்ட டீலரிடம் பிராண்டட் சிஎன்ஜி கிட்டை வாங்குங்கள்.

உங்க காரை சிஎன்ஜி-க்கு மாற்றுவது லேசுபட்ட காரியம் கிடையாது... இந்த விஷயங்கள் தெரியலைனா பின்னாடி பிரச்னைதான்...

4. சிஎன்ஜி கிட் பொருத்த செலவு அதிகம்தான் ஆனால் பணத்தை மீட்டு விடலாம்

பெட்ரோல், டீசலுடன் ஒப்பிடுகையில் சிஎன்ஜி எரிபொருளின் விலை குறைவுதான். ஆனால் அங்கீகரிக்கப்பட்ட டீலரிடம் இருந்து பிராண்டட் சிஎன்ஜி கிட் வாங்குவதற்கு அதிக செலவு ஆகும். பொதுவாக அங்கீகரிக்கப்பட்ட டீலரிடம் இருந்து பிராண்டட் சிஎன்ஜி கிட்டை வாங்கி உங்கள் காரில் பொருத்துவதற்கு 50 ஆயிரம் ரூபாய் முதல் 60 ஆயிரம் ரூபாய் வரை செலவு ஆகலாம்.

உங்க காரை சிஎன்ஜி-க்கு மாற்றுவது லேசுபட்ட காரியம் கிடையாது... இந்த விஷயங்கள் தெரியலைனா பின்னாடி பிரச்னைதான்...

சிஎன்ஜி கிட் மற்றும் உங்கள் கார் ஆகியவற்றை பொறுத்து செலவு மாறுபடும். ஆனால் பெட்ரோல், டீசல் விலையை விட சிஎன்ஜி விலை குறைவு என்பதால், உங்கள் காரை இயக்குவதற்கு குறைந்த செலவுதான் ஆகும். எனவே சிஎன்ஜி கிட் பொருத்துவதற்கு நீங்கள் செய்த செலவை ஒரு சில ஆண்டுகளில் மீட்டு விடலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

உங்க காரை சிஎன்ஜி-க்கு மாற்றுவது லேசுபட்ட காரியம் கிடையாது... இந்த விஷயங்கள் தெரியலைனா பின்னாடி பிரச்னைதான்...

எனினும் சிஎன்ஜி கிட் பொருத்தப்பட்ட கார்களை பராமரிப்பதற்கு சற்று அதிகமாக செலவு ஆகும் என்பதையும் கவனத்தில் கொள்ளுங்கள். பெட்ரோல் அல்லது டீசல் கார்களுடன் ஒப்பிடும்போது, சிஎன்ஜி கிட் பொருத்தப்பட்ட கார்களை பராமரிப்பதற்கான செலவு அதிகம். ஆனால் சிஎன்ஜி எரிபொருளின் விலை குறைவு என்பதால், இந்த செலவுகளை ஈடுகட்டுவதற்கான வாய்ப்புகள் உள்ளன.

உங்க காரை சிஎன்ஜி-க்கு மாற்றுவது லேசுபட்ட காரியம் கிடையாது... இந்த விஷயங்கள் தெரியலைனா பின்னாடி பிரச்னைதான்...

5. காப்பீட்டு நிறுவனத்திற்கு தகவல் சொல்ல வேண்டும்

கிட் பொருத்தப்பட்ட உடனேயே, எரிபொருள் வகை சிஎன்ஜி-க்கு மாற்றம் செய்யப்பட்டிருப்பதை நீங்கள் கண்டிப்பாக உங்கள் காப்பீட்டு நிறுவனத்திடம் தெரிவிக்க வேண்டும். இந்த மாடிஃபிகேஷன் குறித்து காப்பீட்டு நிறுவனத்திற்கு தகவல் தெரிவிக்க, உங்கள் பாலிசியை புதுப்பிக்கும் நேரம் வரை காத்திருக்க வேண்டாம்.

உங்க காரை சிஎன்ஜி-க்கு மாற்றுவது லேசுபட்ட காரியம் கிடையாது... இந்த விஷயங்கள் தெரியலைனா பின்னாடி பிரச்னைதான்...

க்ளைம் செட்டில்மெண்ட்டின்போது, எரிபொருள் வகை மாற்றம் செய்யப்பட்டது குறித்த தகவல் தெரியவில்லை என்றால், காப்பீட்டு நிறுவனங்கள் க்ளைமை நிராகரிப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன. க்ளைம் தொகையை வழங்குவதற்கு முன்பாக காப்பீட்டு நிறுவனங்கள் சர்வயேரை அனுப்பி வைக்கும். அவர் உங்களின் காரை சோதனையிடுவார்.

உங்க காரை சிஎன்ஜி-க்கு மாற்றுவது லேசுபட்ட காரியம் கிடையாது... இந்த விஷயங்கள் தெரியலைனா பின்னாடி பிரச்னைதான்...

அத்துடன் இன்சூரன்ஸ் பாலிசியில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களையும் க்ராஸ்-செக் செய்வார். இதில், ஏதேனும் குளறுபடிகள் ஏற்பட்டால் க்ளைம் நிராகரிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. எனவே கிட் பொருத்தப்பட்ட உடனேயே சிஎன்ஜி-க்கு மாற்றப்பட்டிருக்கும் விஷயத்தை காப்பீட்டு நிறுவனங்களிடம் தெரியப்படுத்தி விடுங்கள்.

உங்க காரை சிஎன்ஜி-க்கு மாற்றுவது லேசுபட்ட காரியம் கிடையாது... இந்த விஷயங்கள் தெரியலைனா பின்னாடி பிரச்னைதான்...

6. குறிப்பிட்ட இடங்களில் மட்டுமே சிஎன்ஜி கிடைக்கிறது

காரில் சிஎன்ஜி கிட் பொருத்துவது என்ற முடிவுக்கு வருவதற்கு முன்பாக, உங்கள் இருப்பிடத்திற்கு அருகே சிஎன்ஜி ஸ்டேஷன்கள் இருக்கின்றனவா? என்பதை பாருங்கள். இந்தியாவில் பெட்ரோல் பங்க்குகள் அதிகமாக இருந்தாலும் கூட, சிஎன்ஜி ஸ்டேஷன்களின் எண்ணிக்கை மிக மிக குறைவு. உங்கள் வீட்டிற்கு அருகே நிறைய பெட்ரோல் பங்க்குகள் இருக்கலாம்.

உங்க காரை சிஎன்ஜி-க்கு மாற்றுவது லேசுபட்ட காரியம் கிடையாது... இந்த விஷயங்கள் தெரியலைனா பின்னாடி பிரச்னைதான்...

ஆனால் சிஎன்ஜி ஸ்டேஷன் இருக்குமா? என்பது சந்தேகம்தான். மெட்ரோ நகரங்களில் கூட சிஎன்ஜி ஸ்டேஷன்கள் அதிகளவில் இல்லை. எனவே உங்கள் காருக்கு எரிபொருள் நிரப்பு நீங்கள் நீண்ட தூரம் பயணிக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படலாம். சிறிய நகரங்களை எடுத்து கொண்டால், நிலைமை இன்னும் மோசமாக உள்ளது.

உங்க காரை சிஎன்ஜி-க்கு மாற்றுவது லேசுபட்ட காரியம் கிடையாது... இந்த விஷயங்கள் தெரியலைனா பின்னாடி பிரச்னைதான்...

ஒருவேளை உங்கள் இருப்பிடத்திற்கு அருகே சிஎன்ஜி ஸ்டேஷன் இருந்தால், நீங்கள் எரிபொருள் நிரப்ப செல்லும்போது நீண்ட வரிசையில் காத்திருக்க நேரிடலாம். சிஎன்ஜி ஸ்டேஷன்களின் எண்ணிக்கை குறைவாக இருப்பதும், எரிபொருள் நிரப்ப காத்திருக்கும் கார்களின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதும்தான் இதற்கு காரணம்.

உங்க காரை சிஎன்ஜி-க்கு மாற்றுவது லேசுபட்ட காரியம் கிடையாது... இந்த விஷயங்கள் தெரியலைனா பின்னாடி பிரச்னைதான்...

எனவே நேரம் கிடைக்கும்போது சிஎன்ஜி எரிபொருளை நிரப்பி வைத்து கொள்ள வேண்டிய சூழலில் சிஎன்ஜி கார் உரிமையாளர்கள் உள்ளனர். அதேபோல் லாங்-டிரிப் செல்வதாக இருந்தால், வழியில் சிஎன்ஜி ஸ்டேஷன்கள் இருக்கின்றனவா? என்பதை பரிசோதித்து பார்த்து கொள்ள வேண்டிய கட்டாயமும் சிஎன்ஜி கார் உரிமையாளர்களுக்கு உள்ளது.

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Fuel Price Hike: Important Things To Know Before Installing A CNG Kit In Your Petrol, Diesel Car. Read in Tamil
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X