ருத்ர தாண்டவம் ஆடிய கஜா... உயிரை பணயம் வைத்து பயணிகளை காப்பாற்றிய தமிழக அரசு பஸ் கன்டக்டர்

தமிழகத்தில் கஜா புயல் ருத்ரதாண்டவம் ஆடிய சூழலில், அரசு பஸ் கன்டக்டர் ஒருவர் தன் உயிரை பணயம் வைத்து, பயணிகளை பத்திரமாக ஊர் கொண்டு போய் சேர்த்துள்ளார்.

தமிழகத்தில் கஜா புயல் ருத்ரதாண்டவம் ஆடிய சூழலில், அரசு பஸ் கன்டக்டர் ஒருவர் தன் உயிரை பணயம் வைத்து, பயணிகளை பத்திரமாக ஊர் கொண்டு போய் சேர்த்துள்ளார். இது தொடர்பான வீடியோ சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

ருத்ர தாண்டவம் ஆடிய கஜா... உயிரை பணயம் வைத்து பயணிகளை காப்பாற்றிய தமிழக அரசு பஸ் கன்டக்டர்

ஒட்டுமொத்த தமிழகமும் இன்று ஒரு சேர உச்சரித்து கொண்டிருக்கும் ஒரு பெயர் கஜா. வங்காள விரிகுடா கடலில் உருவான கஜா புயல், கடந்த ஒரு வார காலமாக தமிழக மக்களை மிரட்டி கொண்டிருந்தது. புயல் கரையை கடந்த நேரத்தில், தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் கன மழை கொட்டி தீர்த்தது.

ருத்ர தாண்டவம் ஆடிய கஜா... உயிரை பணயம் வைத்து பயணிகளை காப்பாற்றிய தமிழக அரசு பஸ் கன்டக்டர்

நாகை, கடலூர், தஞ்சாவூர், திருவாரூர், திருச்சி உள்பட தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் நேற்று இரவு முதல் பேய் மழை பெய்து கொண்டிருக்கிறது. இதனால் வீடுகள் இடிந்து விழுந்ததில் இதுவரை சுமார் 23 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

ருத்ர தாண்டவம் ஆடிய கஜா... உயிரை பணயம் வைத்து பயணிகளை காப்பாற்றிய தமிழக அரசு பஸ் கன்டக்டர்

இதுதவிர தமிழகம் முழுவதும் சூறாவளி காற்று வீசியதால், பல்லாயிரக்கணக்கான மரங்கள் மற்றும் மின் கம்பங்கள் சாலையில் முறிந்து விழுந்தன. இதனால் பல்வேறு இடங்களில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது. அத்துடன் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது.

ருத்ர தாண்டவம் ஆடிய கஜா... உயிரை பணயம் வைத்து பயணிகளை காப்பாற்றிய தமிழக அரசு பஸ் கன்டக்டர்

ஒரே வரியில் சொல்வதென்றால், கஜா புயல் தமிழகத்தையே புரட்டி எடுத்து விட்டது. கோர தாண்டவம் ஆடிய கஜா புயல் ஒரு வழியாக, நாகை மற்றும் வேதாரண்யம் இடையே இன்று அதிகாலை கரையை கடந்தது. அப்போது மணிக்கு சுமார் 110 கிமீ வேகத்தில் பலத்த காற்று வீசியது.

ருத்ர தாண்டவம் ஆடிய கஜா... உயிரை பணயம் வைத்து பயணிகளை காப்பாற்றிய தமிழக அரசு பஸ் கன்டக்டர்

கஜா புயலின் காரணமாக நாகை மாவட்டம் கடுமையான பாதிப்புகளை சந்தித்துள்ளது. குறிப்பாக நாகை மாவட்டத்தில் உள்ள வேதாரண்யம் தனி தீவாக மாறி விட்டது என்றே சொல்லலாம். ஏனெனில் அந்த அளவிற்கு கஜா புயல் வேதாரண்யத்தை மிக கடுமையாக தாக்கி விட்டு சென்றுள்ளது.

ருத்ர தாண்டவம் ஆடிய கஜா... உயிரை பணயம் வைத்து பயணிகளை காப்பாற்றிய தமிழக அரசு பஸ் கன்டக்டர்

கடலோர பகுதியான வேதாரண்யத்தில் மின்சாரம், தொலை தொடர்பு வசதிகள் துண்டிக்கப்பட்டுள்ளன. வேதாரண்யம் அருகேதான் கஜா புயல் கரையை கடந்தது. அந்த நேரத்தில் அங்கு மணிக்கு சுமார் 110 கிமீ வேகத்தில் காற்று வீசியது.

ருத்ர தாண்டவம் ஆடிய கஜா... உயிரை பணயம் வைத்து பயணிகளை காப்பாற்றிய தமிழக அரசு பஸ் கன்டக்டர்

முன்னதாக தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்திற்கு சொந்தமான பேருந்து ஒன்று நேற்று இரவு சென்னையில் இருந்து கிளம்பி வேதாரண்யம் நோக்கி சென்று கொண்டிருந்தது. இதில், சென்னை கோயம்பேட்டை சேர்ந்த பாலபைரவன் என்ற இளைஞர் கன்டக்டராக பணியில் இருந்தார்.

ருத்ர தாண்டவம் ஆடிய கஜா... உயிரை பணயம் வைத்து பயணிகளை காப்பாற்றிய தமிழக அரசு பஸ் கன்டக்டர்

ஆனால் ஈசிஆர் சாலையில் ஏராளமான மரங்கள் மற்றும் மின் கம்பங்கள் சாலையில் முறிந்து விழுந்து கிடந்தன. இப்படிப்பட்ட சூழலில் பேருந்து பத்திரமாக வேதாரண்யம் போய் சேர்வது என்பதெல்லாம் அவ்வளவு எளிதான காரியம் அல்ல.

ருத்ர தாண்டவம் ஆடிய கஜா... உயிரை பணயம் வைத்து பயணிகளை காப்பாற்றிய தமிழக அரசு பஸ் கன்டக்டர்

என்றாலும் இன்று காலை பேருந்து பத்திரமாக வேதாரண்யம் சென்று சேர்ந்தது. இதற்கு அதன் கன்டக்டர் பாலபைரவன் முக்கியமான காரணம் என்றால் மிகையல்ல. ஏனெனில் வழியில் அறுந்து கிடந்த மின் கம்பிகள் மற்றும் மரங்களை அகற்றி பேருந்து செல்ல வழி ஏற்படுத்தி கொடுத்தவர் அவர்தான்.

ருத்ர தாண்டவம் ஆடிய கஜா... உயிரை பணயம் வைத்து பயணிகளை காப்பாற்றிய தமிழக அரசு பஸ் கன்டக்டர்

குறிப்பாக சில இடங்களில் மின் கம்பிகள் தாழ்வாக அறுந்து கிடந்தன. அவற்றை ஈரமான மர கிளைகளை கொண்டு தூக்கி பிடித்து, பேருந்து செல்ல வழி ஏற்படுத்தி கொடுத்தார் கன்டக்டர் பாலபைரவன். இதுதொடர்பான வீடியோ காட்சி தற்போது வைரலாக பரவி வருகிறது.

ருத்ர தாண்டவம் ஆடிய கஜா... உயிரை பணயம் வைத்து பயணிகளை காப்பாற்றிய தமிழக அரசு பஸ் கன்டக்டர்

வழி நெடுக பல்வேறு இடங்களில் பேருந்தை விட்டு இறங்கி மின் கம்பிகளை அகற்றி பேருந்தை பத்திரமாக வழி நடத்தி சென்றது கன்டக்டர் பாலபைரவன்தான். இந்த பணிகளின்போது ஒரு வேளை மின் கம்பிகளில் மின்சாரம் இருந்திருந்தால் பாலபைரவனின் நிலைமை என்னவாகி இருக்கும்?

ருத்ர தாண்டவம் ஆடிய கஜா... உயிரை பணயம் வைத்து பயணிகளை காப்பாற்றிய தமிழக அரசு பஸ் கன்டக்டர்

ஒருவேளை அவரது உயிருக்கே ஆபத்தாக முடிந்திருக்கலாம். ஆனால் அதனை எல்லாம் பொருட்படுத்தாமல், அவர் பயணிகளை பத்திரமாக வேதாரண்யம் கொண்டு சென்று சேர்த்துள்ளார். வழியில் பூவைத்தேடி என்ற பகுதியில், பாலபைரவனின் பணியை சபீர் அகமத் என்ற பத்திரிக்கையாளர் பார்த்துள்ளார்.

ருத்ர தாண்டவம் ஆடிய கஜா... உயிரை பணயம் வைத்து பயணிகளை காப்பாற்றிய தமிழக அரசு பஸ் கன்டக்டர்

உடனடியாக அவரிடம் பேசி, அதனை வீடியோவாகவும் பதிவு செய்து கொண்டார். பின்னர் அந்த வீடியோவை சமூக வலை தளங்களில் அவர் வெளியிட்டார். தற்போது பேஸ்புக், வாட்ஸ்அப், டிவிட்டரில் வைரலாக பரவி வரும் அந்த வீடியோவை நீங்கள் கீழே காணலாம்.

தற்போது பாலபைரவனுக்கு பாராட்டு குவிந்து வருகிறது. இவரைப்போன்ற இளைஞர்கள்தான் நாட்டிற்கு தேவை என பலர் பாராட்டி கொண்டிருக்கின்றனர். இவரைப்போன்ற ஹீரோக்கள் எல்லாம் பேரிடர் காலங்களில்தான் வெளி உலகிற்கு தெரிய வருகின்றனர்!

ருத்ர தாண்டவம் ஆடிய கஜா... உயிரை பணயம் வைத்து பயணிகளை காப்பாற்றிய தமிழக அரசு பஸ் கன்டக்டர்

அதே சமயம் அந்த நேரத்தில் மின்சாரம் இருக்காது என்பது அவருக்கு தெரியும் என்று சிலர் விமர்சனம் செய்து வருகின்றனர். மின்சாரம் இருக்காது என்பது நிச்சயமாக தெரிந்தாலும் கூட, புயல், மழை சமயங்களில் இதை செய்யும் துணிச்சல் எத்தனை பேருக்கு வரும்?

Most Read Articles

வாடிக்கையாளர்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் மீண்டும் அறிமுகம் செய்யப்பட்டுள்ள ஜாவா மோட்டார் சைக்கிள்களின் புகைப்பட ஆல்பத்தை நீங்கள் இங்கே காணலாம்.

மேலும்... #ஆஃப் பீட்
English summary
Gaja Cyclone: Tamilnadu Government Bus Conductor Save Passenger's Life. Read in Tamil
Story first published: Friday, November 16, 2018, 17:03 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X