594 கிமீ, 6 லேன்கள், 12 மாவட்டங்கள் வழியே செல்லும்! கங்கா எக்ஸ்பிரஸ்வே திட்ட பணிகள் 2021ல் துவக்கம்

கங்கா எக்ஸ்பிரஸ்வே திட்ட பணிகள் அடுத்த ஆண்டு தொடங்குகிறது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

594 கிமீ, 6 லேன்கள், 12 மாவட்டங்கள் வழியே செல்லும்! கங்கா எக்ஸ்பிரஸ்வே திட்ட பணிகள் 2021ல் துவக்கம்

கங்கா எக்ஸ்பிரஸ்வே (Ganga Expressway) திட்டத்திற்கு நிலங்களை கையகப்படுத்தும் பணிகளை விரைவுபடுத்துமாறு, உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். மீரட்டில் இருந்து பிரயக்ராஜ் வரை, 36,410 கோடி ரூபாய் மதிப்பிலான இந்த கங்கா எக்ஸ்பிரஸ்வே சாலை பணிகளை, அடுத்த ஆண்டு தொடங்குமாறும் யோகி ஆதித்யநாத் வலியுறுத்தியுள்ளார்.

594 கிமீ, 6 லேன்கள், 12 மாவட்டங்கள் வழியே செல்லும்! கங்கா எக்ஸ்பிரஸ்வே திட்ட பணிகள் 2021ல் துவக்கம்

மீரட்டின் ஷன்கார்பூர் கிராமத்திற்கு அருகே தேசிய நெடுஞ்சாலை-235ல் இருந்து தொடங்கும் கங்கா எக்ஸ்பிரஸ்வே, பிரயக்ராஜ் மாவட்டத்தின் சோரோனிற்கு அருகே தேசிய நெடுஞ்சாலை 330ல் முடிவடையும். மீரட், புலந்த்ஷாகர், ஹப்பூர், அமோரா, சாம்பல், படான், ஷாஜகான்பூர், ஹரோடி, உன்னாவ், ரேபரேலி, பிரதாப்கர் மற்றும் பிரயக்ராஜ் ஆகிய 12 மாவட்டங்கள் வழியாக இந்த எக்ஸ்பிரேஸ்வே செல்லும்.

ராயல் என்பீல்டு ஹிமாலயன் பிஎஸ்6 - இப்படி ஒரு ரிவியூ வீடியோ இதுக்கு முன்னாடி பாத்திருக்க மாட்டீங்க!!!

594 கிமீ, 6 லேன்கள், 12 மாவட்டங்கள் வழியே செல்லும்! கங்கா எக்ஸ்பிரஸ்வே திட்ட பணிகள் 2021ல் துவக்கம்

594 கிலோ மீட்டர்கள் நீளமுள்ள இந்த கங்கா எக்ஸ்பிரஸ்வே, 6 லேன்கள் கொண்டதாக அமைக்கப்படவுள்ளது. இதனை எட்டு லேன்களாக விரிவுபடுத்தி கொள்ள முடியும். இதற்கான அடிக்கல் நாட்டு விழா அடுத்த ஆண்டு ஜூன் மாதம் நடைபெறவுள்ளது. அதற்குள்ளாக 90 சதவீதம் நிலம் கையகப்படுத்துதல் பணிகள் முடிவடைந்து விடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

594 கிமீ, 6 லேன்கள், 12 மாவட்டங்கள் வழியே செல்லும்! கங்கா எக்ஸ்பிரஸ்வே திட்ட பணிகள் 2021ல் துவக்கம்

கங்கா எக்ஸபிரஸ்வே பணிகள் நிறைவடைந்தால், உத்தர பிரதேச மாநிலத்தில் மொத்தம் 1,900 கிலோ மீட்டர்கள் தொலைவிற்கு எக்ஸ்பிரஸ்வேக்கள் இருக்கும். அத்துடன் தொழில்துறை மற்றும் விவசாய துறைகளின் வளர்ச்சிக்கு இது வேகம் கொடுக்கும். மேலும் பல்வேறு துறைகளில் புதிய முதலீடுகளையும் ஈர்க்கும்.

594 கிமீ, 6 லேன்கள், 12 மாவட்டங்கள் வழியே செல்லும்! கங்கா எக்ஸ்பிரஸ்வே திட்ட பணிகள் 2021ல் துவக்கம்

பணிகள் முடிவடைந்து திறக்கப்பட்டவுடன், உத்தர பிரதேச மாநிலத்தின் மிக நீளமான 6 லேன்கள் கொண்ட எக்ஸ்பிரேவே சாலையாக இது உருவெடுக்கும். ஆனால் நாம் ஏற்கனவே கூறியபடி இதனை 8 லேன்கள் கொண்ட எக்ஸ்பிரஸ்வே சாலையாக விரிவுபடுத்தி கொள்ள முடியும். மேற்கு உத்தர பிரதேசத்தையும், கிழக்கு உத்தர பிரதேசத்தையும் இணைக்கும் முக்கிய சாலையாக இது இருக்கும்.

594 கிமீ, 6 லேன்கள், 12 மாவட்டங்கள் வழியே செல்லும்! கங்கா எக்ஸ்பிரஸ்வே திட்ட பணிகள் 2021ல் துவக்கம்

அத்துடன் மீரட் மற்றும் பிரயக்ராஜ் ஆகிய இரண்டு நகரங்களுக்கு இடையே பயணிப்பதற்கான நேரத்தை, இந்த எக்ஸ்பிரஸ்வே வெகுவாக குறைக்கும். வெறும் 5 மணி நேரத்திற்கு உள்ளாகவே, மீரட்டில் இருந்து பிரயக்ராஜ் சென்று விட முடியும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. மணிக்கு 120 கிலோ மீட்டர்கள் வேகத்தில் பயணிக்கும் வகையில் இந்த எக்ஸ்பிரஸ்வே கட்டமைக்கப்படவுள்ளது.

594 கிமீ, 6 லேன்கள், 12 மாவட்டங்கள் வழியே செல்லும்! கங்கா எக்ஸ்பிரஸ்வே திட்ட பணிகள் 2021ல் துவக்கம்

ஆனால் மணிக்கு 100 கிலோ மீட்டர்கள் வேகத்தில் பயணம் செய்ய அனுமதி வழங்கப்படும். அத்துடன் பயணிகளுக்கு தேவையான பல்வேறு வசதிகளும் ஏற்படுத்தி தரப்படும். இது மிக நீண்ட காலமாக நிலுவையில் இருந்து வரும் திட்டமாகும். எனினும் தற்போதைய அரசு கங்கா எக்ஸ்பிரஸ்வே பணிகளை விரைவாக முடிக்க விரும்புகிறது.

594 கிமீ, 6 லேன்கள், 12 மாவட்டங்கள் வழியே செல்லும்! கங்கா எக்ஸ்பிரஸ்வே திட்ட பணிகள் 2021ல் துவக்கம்

ஒரு பிராந்தியத்தின் பொருளாதார வளர்ச்சியில் சாலைகள் முக்கிய பங்கை வகிக்கின்றன. எனவே மத்தியில் தற்போது ஆளும் பாஜக அரசு இந்தியாவில் புதிய தேசிய நெடுஞ்சாலைகளை கட்டமைப்பதிலும், ஏற்கனவே நிலுவையில் உள்ள பணிகளை விரைவாக முடிப்பதிலும் அதிக ஆர்வம் காட்டி வருகிறது என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

Note: Images used are for representational purpose only.

Most Read Articles

மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Ganga Expressway Project To Start In 2021 - Details. Read in Tamil
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X