டேங்கி லிண்டர்! ஹிந்துஸ்தான் அம்பாஸிடரின் வண்ணத்தை மெருகேற்ற கருத்து கேட்கும் ஜெர்மன் அம்பாஸிடர்!

இந்தியாவிற்கான ஜெர்மனி தூதர் பயன்படுத்தி வரும் ஹிந்துஸ்தான் அம்பாஸிடர் காரை ரீ-பெயிண்ட் செய்ய கருத்து கேட்கப்பட்டுள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

டேங்கி லிண்டர்! ஹிந்துஸ்தான் அம்பாஸிடரின் வண்ணத்தை மெருகேற்ற கருத்து கேட்கும் ஜெர்மன் அம்பாஸிடர்!

ஹிந்துஸ்தான் அம்பாஸிடர் காருக்கு அறிமுகமே தேவையில்லை. ஒரு காலத்தில் இந்திய சாலைகளை கட்டி ஆண்ட அரசன்தான் ஹிந்துஸ்தான் அம்பாஸிடர். இந்தியர்கள் மட்டுமல்லாது வெளிநாட்டினரையும் கூட கவர்ந்திழுக்கும் ஆற்றல் ஹிந்துஸ்தான் அம்பாஸிடருக்கு உண்டு.

டேங்கி லிண்டர்! ஹிந்துஸ்தான் அம்பாஸிடரின் வண்ணத்தை மெருகேற்ற கருத்து கேட்கும் ஜெர்மன் அம்பாஸிடர்!

இந்தியாவிற்கு வருகை தரும் வெளிநாட்டினர் ஹிந்துஸ்தான் அம்பாஸிடர் மற்றும் பத்மினி பீரிமியர் ஆகிய கார்களில் ஹாயாக ஒரு ரைடு வர ஆர்வம் காட்டுகின்றனர். இந்த சூழலில் இந்தியாவிற்கான ஜெர்மனியின் புதிய தூதராக வால்டர் ஜே லிண்டர் கடந்த ஆண்டு நியமிக்கப்பட்டார்.

டேங்கி லிண்டர்! ஹிந்துஸ்தான் அம்பாஸிடரின் வண்ணத்தை மெருகேற்ற கருத்து கேட்கும் ஜெர்மன் அம்பாஸிடர்!

ஆச்சரியம் அளிக்கும் விதமாக அவர் ஹிந்துஸ்தான் அம்பாஸிடர் காரை பயன்படுத்தி வருகிறார். இந்த கார் பிரகாசமான சிகப்பு நிறத்தில் பெயிண்ட் செய்யப்பட்டுள்ளது. லிண்டரால் பயன்படுத்தப்பட்டு வரும் ஹிந்துஸ்தான் அம்பாஸிடர் காரின் படத்தை புது டெல்லியில் ஜெர்மன் தூதரகம் கூட வெளியிட்டிருந்தது.

டேங்கி லிண்டர்! ஹிந்துஸ்தான் அம்பாஸிடரின் வண்ணத்தை மெருகேற்ற கருத்து கேட்கும் ஜெர்மன் அம்பாஸிடர்!

பேஸ்புக்கில் பகிரப்பட்டிருந்த இந்த பதிவில், ஹிந்துஸ்தான் அம்பாஸிடர் காரை ரீ-பெயிண்ட் செய்வதற்கான பரிந்துரைகள் கேட்கப்பட்டிருந்தன. உண்மையில் தற்போது உள்ள பிரகாசமான சிகப்பு நிறமே, சாலையில் அனைவரின் கவனத்தையும் ஈர்க்கும் வகையில்தான் உள்ளது.

டேங்கி லிண்டர்! ஹிந்துஸ்தான் அம்பாஸிடரின் வண்ணத்தை மெருகேற்ற கருத்து கேட்கும் ஜெர்மன் அம்பாஸிடர்!

ஆனால் ஜெர்மனி தூதரகமோ அல்லது தூதர் வால்டர் ஜே லிண்டரோ, ஹிந்துஸ்தான் அம்பாஸிடர் காரை இன்னும் மெருகேற்ற வேண்டும் என விரும்புகின்றனர். இதற்காகவே பேஸ்புக் பதிவு மூலம் கருத்துக்கள் கேட்கப்பட்டுள்ளன.

டேங்கி லிண்டர்! ஹிந்துஸ்தான் அம்பாஸிடரின் வண்ணத்தை மெருகேற்ற கருத்து கேட்கும் ஜெர்மன் அம்பாஸிடர்!

பொதுவாக வெளிநாடுகளை சேர்ந்த தூதர்கள் இந்தியாவிற்கு பணியாற்ற வரும்போது, தங்களது சொந்த வாகனங்களை இறக்குமதி செய்து கொள்கின்றனர். ஆனால் இத்தகைய வாகனங்களுக்கு மட்டும் இந்திய அரசு வரி விதிப்பதில்லை.

டேங்கி லிண்டர்! ஹிந்துஸ்தான் அம்பாஸிடரின் வண்ணத்தை மெருகேற்ற கருத்து கேட்கும் ஜெர்மன் அம்பாஸிடர்!

எனவே இந்தியாவிலும் தங்கள் சொந்த வாகனங்களை அவர்களால் எளிதாக பயன்படுத்த முடிகிறது. இந்த வகையில் பல்வேறு வெளிநாடுகளை சேர்ந்த தூதர்கள் தங்கள் சொந்த வாகனங்களை பயன்படுத்தி வருகின்றனர். இந்திய சாலைகளில் இத்தகைய வாகனங்களை பார்ப்பது அரிதான ஒரு விஷயமே.

டேங்கி லிண்டர்! ஹிந்துஸ்தான் அம்பாஸிடரின் வண்ணத்தை மெருகேற்ற கருத்து கேட்கும் ஜெர்மன் அம்பாஸிடர்!

இன்னும் சிலரோ தங்கள் தினசரி பயன்பாட்டிற்கு இந்திய மார்க்கெட்டில் கிடைக்கும் நவீன கால கார்களை வாங்கி கொள்கின்றனர். ஹிந்துஸ்தான் அம்பாஸிடரை பெரும்பாலும் யாரும் தேர்வு செய்வதில்லை என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

டேங்கி லிண்டர்! ஹிந்துஸ்தான் அம்பாஸிடரின் வண்ணத்தை மெருகேற்ற கருத்து கேட்கும் ஜெர்மன் அம்பாஸிடர்!

ஹிந்துஸ்தான் அம்பாஸிடர்தான் முதல் மேட் இன் இந்தியா கார் ஆகும். கடந்த 1957ம் ஆண்டு ஹிந்துஸ்தான் அம்பாஸிடர் காரின் உற்பத்தி தொடங்கியது. கடந்த 2014ம் ஆண்டு வரை ஹிந்துஸ்தான் அம்பாஸிடர் உற்பத்தி செய்யப்பட்டு வந்தது.

டேங்கி லிண்டர்! ஹிந்துஸ்தான் அம்பாஸிடரின் வண்ணத்தை மெருகேற்ற கருத்து கேட்கும் ஜெர்மன் அம்பாஸிடர்!

எனவே இந்தியாவில் மிக நீண்ட காலம் உற்பத்தியில் இருந்த கார் என்ற பெருமையும் அதற்கு உண்டு. கடந்த காலங்களில் அரசியல்வாதிகள் உள்பட பல்வேறு முக்கியமான நபர்களும் ஹிந்துஸ்தான் அம்பாஸிடர் காரைதான் பயன்படுத்தி வந்தனர்.

டேங்கி லிண்டர்! ஹிந்துஸ்தான் அம்பாஸிடரின் வண்ணத்தை மெருகேற்ற கருத்து கேட்கும் ஜெர்மன் அம்பாஸிடர்!

சொல்லப்போனால் இதுதான் அன்றைய கால கட்டத்தில் விஐபி கார். ஹிந்துஸ்தான் அம்பாஸிடர் வந்தால் அதன் பின்னே ஓடும் கூட்டமும் கூட இந்தியாவில் இருந்தது. என்றாலும் ஹிந்துஸ்தான் அம்பாஸிடர் காரை உண்மையான இந்திய வாகனம் என்று சொல்லி விட முடியாது.

டேங்கி லிண்டர்! ஹிந்துஸ்தான் அம்பாஸிடரின் வண்ணத்தை மெருகேற்ற கருத்து கேட்கும் ஜெர்மன் அம்பாஸிடர்!

மோரிஸ் ஆக்ஸ்போர்டு சீரிஸ் III அடிப்படையில்தான் ஹிந்துஸ்தான் அம்பாஸிடர் உருவாக்கப்பட்டது. அதே காரை இந்தியாவில் உற்பத்தி செய்வதற்கான லைசென்ஸை ஹிந்துஸ்தான் மோட்டார் கடந்த 1954ம் ஆண்டு பெற்றது. என்றாலும் உற்பத்தி 1957ம் ஆண்டுதான் தொடங்கப்பட்டது.

டேங்கி லிண்டர்! ஹிந்துஸ்தான் அம்பாஸிடரின் வண்ணத்தை மெருகேற்ற கருத்து கேட்கும் ஜெர்மன் அம்பாஸிடர்!

பெட்ரோல், டீசல் மற்றும் சிஎன்ஜி இன்ஜின் ஆப்ஷன்களில் ஹிந்துஸ்தான் அம்பாஸிடர் வந்தது. ஆனால் ஜெர்மனி தூதரின் ஹிந்துஸ்தான் அம்பாஸிடர் காரில் என்ன இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது? என்பது தெரியவில்லை.

டேங்கி லிண்டர்! ஹிந்துஸ்தான் அம்பாஸிடரின் வண்ணத்தை மெருகேற்ற கருத்து கேட்கும் ஜெர்மன் அம்பாஸிடர்!

ஹிந்துஸ்தான் அம்பாஸிடர் காரில், 75 பிஎஸ் பவர் மற்றும் 130 என்எம் டார்க் திறனை உருவாக்கும் 1.9 லிட்டர் பெட்ரோல் இன்ஜின், 56 பிஎஸ் பவர் மற்றும் 112 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தும் 2.0 லிட்டர் டீசல் இன்ஜின் ஆப்ஷன்கள் வழங்கப்பட்டன.

டேங்கி லிண்டர்! ஹிந்துஸ்தான் அம்பாஸிடரின் வண்ணத்தை மெருகேற்ற கருத்து கேட்கும் ஜெர்மன் அம்பாஸிடர்!

முந்தைய தலைமுறை மாடல்களில் வேறு விதமான இன்ஜின் ஆப்ஷன்களும் வழங்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது. இந்திய சாலைகளை பொறுத்தவரை இன்று ஹிந்துஸ்தான் அம்பாஸிடர் கார்கள் அரிதான ஒரு விஷயமாகி விட்டன.

டேங்கி லிண்டர்! ஹிந்துஸ்தான் அம்பாஸிடரின் வண்ணத்தை மெருகேற்ற கருத்து கேட்கும் ஜெர்மன் அம்பாஸிடர்!

ஆனால் வால்டர் ஜே லிண்டர் போன்ற கார் ஆர்வலர்கள் சிலர் இன்னும் ஹிந்துஸ்தான் அம்பாஸிடரை உயிருடன் வைத்துள்ளனர். இதற்காக உங்களுக்கு டேங்கி லிண்டர்! டேங்கி என்றால் ஜெர்மன் மொழியில் நன்றி என்று பொருள்.

Image Source: Wiki Commons

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
The German Ambassador To India Has A Hindustan Ambassador. Read In Tamil
Story first published: Thursday, June 13, 2019, 14:01 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X