30 நொடியில் டிரைவிங் லைசன்ஸ்; உயிருக்கு உலை வைக்கும் உ.பி. அரசு

காசியாபாத்தில் 30 நொடிகளில் கார் ஓட்டினால் போதும் டிரைவிங் லைசன்ஸ் தரப்படுகிறதாம். சற்ற கனமாக கவனித்தால் கார் ஓட்ட தெரியாதர்கள் கூட லைசன்ஸ் பெறலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளது.

By Balasubramanian

காசியாபாத்தில் 30 நொடிகளில் கார் ஓட்டினால் போதும் டிரைவிங் லைசன்ஸ் தரப்படுகிறதாம். சற்ற கனமாக கவனித்தால் கார் ஓட்ட தெரியாதர்கள் கூட லைசன்ஸ் பெறலாம் என தகவல்கள வெளியாகியுள்ளது.

30 நொடியில் டிரைவிங் லைசன்ஸ்; உயிருக்கு உலை வைக்கும் உ.பி. அரசு

தலைநகர் டில்லியில் உள்ளவர்கள் கார் ஓட்டுவதற்கான லைசன்ஸ் வாங்க கார் ஓட்டுவது மட்டுமல்லாமல் காரை ரிவர்ஸ் எடுப்பது, கொண்டை ஊசி வளைவுகளில் காரை திருப்புவது. காரில் 8 போன் வடிவத்தில் ஓட்டி காண்பிப்பது என பல்வேறு சோதனைகள் நடத்தப்படுகிறது.

30 நொடியில் டிரைவிங் லைசன்ஸ்; உயிருக்கு உலை வைக்கும் உ.பி. அரசு

ஆனால் டில்லிக்கு மிக அருகில் உள்ள உ.பி. மாநிலத்தை சேர்ந்த காசியபாத்தில் இதற்கு நேர் தலைகீழ், அங்கு டிரைவிங் லைசன்ஸ் வாங்குவது மிகவும் எளிது. வெறும் 30 நொடிகள் டிரைவர் சீட்டில் உட்காந்து, ஆக்ஸிலரேட்டரை ரேஸ் செய்து சிறிது தூரம் காரை நகர்த்தினாலே லைசன்ஸை பெற்று விடலாம்.

30 நொடியில் டிரைவிங் லைசன்ஸ்; உயிருக்கு உலை வைக்கும் உ.பி. அரசு

மேலும் ஆர்.டி.ஓ. அலுவகத்தின் வாசலில் சில புரேக்கர்கள் இருக்கிறார்களாம் அவர்கள் கார் ஓட்ட தெரியாதர்வகளுக்கு கூட லைசன்ஸ் பெற்று கொடுக்கிறார்களாம் அதுவும் வெறும் ரூ 2100 விலையில்...!

30 நொடியில் டிரைவிங் லைசன்ஸ்; உயிருக்கு உலை வைக்கும் உ.பி. அரசு

காசியாபாத்தில் தினமும் லைசன்ஸ் பெற விண்ணப்பிற்பவர்களின் 98 சதவீதம் பேர் தேர்ச்சி பெறுகின்றனர். ஆனால் டில்லியில் 50 சதவீதம் பேர் தான் தேர்ச்சி பெறுகின்றனர். காசியாபாத்தில் லைசன்ஸ் பெறும் பாலானோர் அதிகமாக டிராபிக் உள்ள டில்லியில் தான் கார் ஓட்டி வருகின்றனர்.

30 நொடியில் டிரைவிங் லைசன்ஸ்; உயிருக்கு உலை வைக்கும் உ.பி. அரசு

இது குறித்து காசியாபாத்தில் உள்ள ஆர்.டி.ஒ., அதிகாரிகளிம் கேட்ட போது " எங்களிடம் கார் ஓட்டி சோதனை செய்ய 0.5 ஏக்கர் இடம் தான் உள்ளது. தற்போது அரசிடம் 3 ஏக்கர் நிலம் ஒதுக்க கோரி கேட்டுள்ளோம். மேலும் எங்கள் அலுவலகத்தில் 4 மோர்ட்டர் இன்ஸ்பெக்டர் பதவி உள்ளது ஆனால் ஒருவர் மட்டுமே பதவியில் உள்ளார். இதனால் பணியில் தோய்வு ஏற்படகூடாது என்ற அடிப்படையில் பணியாற்றி வருகிறோம்.

30 நொடியில் டிரைவிங் லைசன்ஸ்; உயிருக்கு உலை வைக்கும் உ.பி. அரசு

தற்போது உள்ள 0.5 ஏக்கர் நிலத்திலும் சரியான டிராக் இல்லை. இதற்கிடையில் நாங்கள் டிரைவிங் ஸ்முலேட்டர் வாங்க கோரிக்கை வைத்துள்ளோம். அது வந்துவிட்டால் இந்த இடப்பிரச்சனை சீராகிவிடும். விரைவில் இது ஆர்.டி.ஓ., அலுவலகத்திற்கு வரும் என நாங்கள் நம்புகிறோம். " என கூறினார்.

30 நொடியில் டிரைவிங் லைசன்ஸ்; உயிருக்கு உலை வைக்கும் உ.பி. அரசு

காசியாபாத்தில் கார் ஓட்ட தெரியாதவர்களுக்கு கூட லைசன்ஸ் வழங்கப்படுவதால் ரோட்டில் அடிக்கடி பெரும் விபத்துக்கள் ஏற்பட வழி வகுக்கும். எவ்வளவு பிரச்னைகள் இருந்தாலும் லைசன்ஸ் வழங்குவதில் கடுமையான சட்ட விதிகளை கடை பிடித்தால் தான் சாலை விபத்துக்களை குறைக்கமுடியும்.

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #offbeat
English summary
In Ghaziabad, pass driving test in 30 seconds flat.Read in Tamil
Story first published: Monday, May 7, 2018, 16:57 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X