புதிய டூவீலர் வாங்கும் அனைவருக்கும் 2 இலவச ஹெல்மெட்கள்... மாஸ் காட்டிய ஐகோர்ட் நீதிபதிகளின் உத்தரவு!

புதிய டூவீலர் வாங்கும் அனைவருக்கும் 2 இலவச ஹெல்மெட்கள் வழங்கப்பட வேண்டும் என ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.

புதிய டூவீலர் வாங்கும் அனைவருக்கும் 2 இலவச ஹெல்மெட்கள்... மாஸ் காட்டிய ஐகோர்ட் நீதிபதிகளின் உத்தரவு!

உலகிலேயே சாலை பாதுகாப்பு மிகவும் மோசமாக உள்ள நாடுகளில் ஒன்றாக இந்தியா உள்ளது. இந்தியாவில் ஒரு ஆண்டுக்கு சுமார் 1.50 லட்சம் பேர் சாலை விபத்துக்களில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்து வருகின்றனர். இது தவிர பல லட்சக்கணக்கானோர் படுகாயம் அடைய நேரிடுகிறது. எனவே சாலை விபத்துக்களின் எண்ணிக்கையை குறைக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

புதிய டூவீலர் வாங்கும் அனைவருக்கும் 2 இலவச ஹெல்மெட்கள்... மாஸ் காட்டிய ஐகோர்ட் நீதிபதிகளின் உத்தரவு!

இதன் ஒரு பகுதியாக போக்குவரத்து விதி மீறல்களுக்கான அபராத தொகைகள் தற்போது மிக கடுமையாக உயர்த்தப்பட்டுள்ளது. கடந்த 2019ம் ஆண்டு செப்டம்பர் 1ம் தேதி முதல் புதிய மோட்டார் வாகன சட்டம் இந்தியாவில் அமலுக்கு வந்தது. இதில், விதிமுறை மீறல்களுக்கான அபராத தொகைகள் பல மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது.

புதிய டூவீலர் வாங்கும் அனைவருக்கும் 2 இலவச ஹெல்மெட்கள்... மாஸ் காட்டிய ஐகோர்ட் நீதிபதிகளின் உத்தரவு!

சாலை விபத்துக்களை பொறுத்தவரை இரு சக்கர வாகனங்களில் பயணிப்பவர்கள்தான் மிகவும் அதிகமாக பாதிக்கப்படுகின்றனர். எனவே இரு சக்கர வாகனங்களில் பயணம் செய்யும் அனைவரையும் ஹெல்மெட் அணிய வைக்க பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்தியாவில் இரு சக்கர வாகனங்களில் பயணிக்கும் இருவரும் ஹெல்மெட் அணிய வேண்டும் என்பது விதி.

புதிய டூவீலர் வாங்கும் அனைவருக்கும் 2 இலவச ஹெல்மெட்கள்... மாஸ் காட்டிய ஐகோர்ட் நீதிபதிகளின் உத்தரவு!

எனவே புதிய இரு சக்கர வாகனங்களை வாங்கும் அனைவருக்கும் இரண்டு இலவச ஹெல்மெட்களை வழங்க வேண்டிய கடமை, டூவீலர் உற்பத்தியாளர்களுக்கும், டீலர்களுக்கும் உள்ளது. டூவீலரை ஓட்டுபவருக்கு ஒன்று, பின்னால் அமர்ந்து வருபவருக்கு ஒன்று என மொத்தம் 2 இலவச ஹெல்மெட்களை, புதிதாக டூவீலர் வாங்கும் அனைவருக்கும் வழங்க வேண்டும்.

புதிய டூவீலர் வாங்கும் அனைவருக்கும் 2 இலவச ஹெல்மெட்கள்... மாஸ் காட்டிய ஐகோர்ட் நீதிபதிகளின் உத்தரவு!

ஆனால் இப்படி ஒரு விதிமுறை இருப்பது நம்மில் பெரும்பாலானோருக்கு தெரிவதில்லை. மத்திய மோட்டார் வாகன விதிகள், 1989ன் படி, (CMVR - Central Motor Vehicles Rules, 1989) 2 இலவச ஹெல்மெட்கள் வழங்கப்பட வேண்டும். அதுவும் இந்த இரண்டு ஹெல்மெட்களும் பிஐஎஸ் சட்டம், 1986ன் (BIS - Bureau of Indian Standards Act, 1986) விதிமுறைகளுக்கு ஏற்ப இருக்க வேண்டியதும் அவசியம்.

புதிய டூவீலர் வாங்கும் அனைவருக்கும் 2 இலவச ஹெல்மெட்கள்... மாஸ் காட்டிய ஐகோர்ட் நீதிபதிகளின் உத்தரவு!

எனினும் இந்த விதிமுறை சரியாக பின்பற்றப்படுவது இல்லை. ஆனால் ஒரு சில இடங்களில் ஒரு ஹெல்மெட் மட்டும் வழங்கப்படுகிறது. இதனால் இலவச ஹெல்மெட் விதியை முறையாக பின்பற்ற உத்தரவிட கோரி, பாம்பே உயர் நீதிமன்றத்தின் நாக்பூர் பெஞ்ச்சில் பொது நல வழக்கு ஒன்று தொடரப்பட்டுள்ளது. சவுரப் பரத்வாஜ் மற்றும் மனீஷ் சிங் சவுகான் என்பவர்கள் இந்த வழக்கை தொடர்ந்துள்ளனர்.

புதிய டூவீலர் வாங்கும் அனைவருக்கும் 2 இலவச ஹெல்மெட்கள்... மாஸ் காட்டிய ஐகோர்ட் நீதிபதிகளின் உத்தரவு!

இந்த வழக்கு நேற்று (பிப்., 12) விசாரணைக்கு வந்தது. நீதிபதிகள் ரவி தேஷ்பாண்டே மற்றும் அமித் போர்கர் ஆகியோர் அடங்கிய டிவிஷன் பெஞ்ச் இந்த வழக்கை விசாரித்தது. அப்போது அனைத்து விதிமுறைகளும் முறையாக பின்பற்றப்பட வேண்டும் என நீதிபதிகள் தெரிவித்தனர். மேலும் விதிமுறைகள் பின்பற்றப்படாததால், நீதிபதிகள் கடுமை காட்டினர்.

புதிய டூவீலர் வாங்கும் அனைவருக்கும் 2 இலவச ஹெல்மெட்கள்... மாஸ் காட்டிய ஐகோர்ட் நீதிபதிகளின் உத்தரவு!

இதன்படி விதிமுறைகளுக்கு இணங்காவிட்டால், மஹாராஷ்டிர மாநிலத்தில் வாகனங்கள் பதிவு செய்வதை நாங்கள் நிறுத்தி விடுவோம் என நீதிபதிகள் எச்சரிக்கை விடுத்தனர். மேலும் அனைத்து இரு சக்கர வாகன உற்பத்தி நிறுவனங்களும், மத்திய மோட்டார் வாகன விதிகள், 1989-க்கு இணங்க வேண்டும் எனவும் நீதிபதிகள் தெரிவித்தனர்.

புதிய டூவீலர் வாங்கும் அனைவருக்கும் 2 இலவச ஹெல்மெட்கள்... மாஸ் காட்டிய ஐகோர்ட் நீதிபதிகளின் உத்தரவு!

இதனை அமல்படுத்த மாநில அரசு மற்றும் போக்குவரத்து கமிஷனருக்கு நீதிபதிகள் 6 வார காலம் அவகாசம் வழங்கினர். மேலும் இதுகுறித்த அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும் எனவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர். நீதிபதிகளின் இந்த அதிரடியால் புதிதாக இரு சக்கர வாகனங்களை வாங்கவுள்ளவர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளர்.

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Give 2 Free Helmets To All Two-wheeler Buyers - Bombay High Court. Read in Tamil
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X