Just In
- 2 hrs ago
பிரம்மாண்ட சாதனை... இந்தியாவில் வெறும் 17 மாதங்களில் 2 லட்சம் கார்களை விற்பனை செய்தது கியா...
- 2 hrs ago
இமயமலை பகுதியில் சோதனையில் 2021 மஹிந்திரா ஸ்கார்பியோ!! அட... அறிமுகம் எப்போ தாங்க?
- 4 hrs ago
சுஸுகி மோட்டார்சைக்கிள்களின் விலைகள் அதிகரித்தன!! ஆனா பெரிய அளவில் இல்லைங்க...
- 4 hrs ago
விலை மிகவும் குறைவு என்பதால் வாடிக்கையாளர்களிடம் செம ரெஸ்பான்ஸ்... நிஸான் மேக்னைட் டெலிவரி பணிகள் தீவிரம்!
Don't Miss!
- News
சாலமன் பாப்பையா முதல் 2 ரூபாய் டாக்டர், சாந்தி கியர்ஸ் சுப்பிரமணியன் ஆகியோருக்கு பத்ம ஸ்ரீ விருது
- Movies
வெங்கட் பிரபுவின் ‘லைவ் டெலிகாஸ்ட் ‘ வெப் சீரிஸ்…ரிலீஸ் தேதியை அறிவித்த படக்குழு !
- Finance
5% சரிவில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பங்குகள்.. காலாண்டு முடிவின் எதிரொலி..!
- Sports
ஐபிஎல் ஏலம் சென்னையில நடக்குதாம்... பிப். 18 அல்லது 19ல் நடத்த பிசிசிஐ திட்டமிட்டிருக்கு!
- Lifestyle
மைதா போண்டா
- Education
ரூ.1.77 லட்சம் ஊதியத்தில் சென்னை உயர்நீதிமன்ற அலுவலகத்தில் வேலை!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
தனது முதல் பறக்கும் வாகனத்தை அறிமுகம் செய்த பிரபல நிறுவனம்... வீட்டில் இருக்கும் அனுபவத்தை இது வழங்கும்!!
பிரபல வாகன உற்பத்தி நிறுவனம் ஒன்று தனது முதல் மின்சார பறக்கும் வாகனத்தை வெளியீடு செய்திருக்கின்றது. இந்த வாகனத்தின் சிறப்பு வசதிகள் மற்றும் சுவாரஷ்ய தகவல்களை இப்பதிவில் காணலாம்.

மின்சார வாகனங்களைத் தொடர்ந்து வாகன ஆர்வலர்கள் மத்தியில் பறக்கும் வாகனங்கள் மீது அதிக ஆர்வம் நிலவ ஆரம்பித்துள்ளது. வாகன பிரியர்களின் இந்த எதிர்பார்ப்பைத் தொடர்ந்து சில முன்னணி நிறுவனங்கள் அதன் பறக்கும் வாகனங்களைக் காட்சிப்படுத்தத் தொடங்கியுள்ளன.

இந்த வரிசையில் உலக புகழ்பெற்ற ஜெனரல் மோட்டார்ஸ் கோ நிறுவனம் இணைந்துள்ளது. இந்நிறுவனம் அதன் எதிர்கால பறக்கும் வாகனத்தை தற்போது வெளியீடு செய்திருக்கின்றது. இந்த பறக்கும் கார் செங்குத்தாக தரையிறங்கும் திறனைக் கொண்டிருக்கின்றது. டேக்ஆஃப்-பினையும் இது செங்குத்தாகவே செய்யும்.

இந்த திறனைக் கொண்டிருக்கின்ற காரணத்தினாலயே இந்த வாகனத்திற்கு ஜிஎம் நிறுவனம் விடோல் (vertical take-off and landing - VTOL) எனும் பெயரை வைத்திருக்கின்றது. ஆகையால், விமானங்களுக்கு தேவைப்படும் ஓடு தளம் இதற்கு தேவைப்படாது. மேலும், இது ஓர் சுய-ஓட்டுநர் திறன் கொண்ட பறக்கும் வாகனம் என்பது கூடுதல் சிறப்பு தகவலாக இருக்கின்றது.

ட்ரோன் கேமிராவைத் தழுவிய உருவத்தையே இந்த பறக்கும் வாகனம் பெற்றிருக்கின்றது. இது அதிகபட்சமாக மணிக்கு 55 மைல் (88கிமீ) எனும் வேகத்தில் பறக்கும். இந்த சூப்பர் திறனுக்காக 90kW திறன் கொண்ட மின் மோட்டார் இதில் பயன்படுத்தப்பட்டிருக்கின்றது. இந்த மின் மோட்டாருக்கு தேவையான மின்சாரத்தை ஜிஎம் அல்டியம் பேட்டரிகள் வழங்குகின்றது.

இந்த வாகனத்தின் உடற்கூடு மிக இலகு ரக எடையில் உருவாக்கப்பட்டிருக்கின்றது. அதேசமயம் உறுதியானது. ஆகையால், அதிக ரேஞ்ஜ் (மைலேஜ்) பலனை எதிர்பார்க்க முடியும். இந்த வாகனத்தைப் பறக்கச் செய்ய ஏதுவாக நான்கு ஜோடி ரோட்டார்கள் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன.

இவையே அதிவேகத்தில் பறக்க செய்தல், செங்குத்தாக தரையிறங்குதல் - மேலெழும்புதலைச் செய்ய உதவுகின்றது. இந்த பறக்கும் வாகனம் எப்படி இயங்கும் என்கிற அதிகாரப்பூர்வ வீடியோ நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ யுட்யூப் பக்கத்தில் வெளியிடப்பட்டிருக்கின்றது. அதில், பறக்கும் வாகனத்தின் இயக்கம் மற்றும் செயல்பாடுகள் பற்றிய பல்வேறு சுவாரஷ்ய தகவல்கள் இடம்பெற்றிருக்கின்றன.

முன்மாதிரி மாடலாகவே இந்த வாகனம் தற்போது அறிமுகம் செய்யப்பட்டிருக்கின்றது. விரைவில் பயன்பாட்டிற்கான உற்பத்தி மாடல் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இதை உறுதிப்படுத்தும் வகையில் தற்போது வெளியிடப்பட்டிருக்கும் வீடியோவில் "விரைவில் வந்து சேரும்" என்ற வாசகம் இடம்பெற்றிருக்கின்றன.

இதன் கேபின் வீட்டில் இருக்கும் சோஃபாக்களைப் போன்ற அதிக சொகுசு வசதிக் கொண்ட இருக்கைகளை தாங்கியிருக்கின்றது. இத்துடன், பயோமெட்ரிக் சென்சார், குரல் கட்டளை மற்றும் ஹேண்ட் கெஸ்சர் ரெகாக்னிஷன் உள்ளிட்ட தொழில்நுட்ப வசதிகள் இதில் இடம்பெற்றிருக்கின்றன.