கோவப்பட்றாதீங்க... விபத்துக்கள் அதிகமாக நடப்பது ஏன் தெரியுமா? துணை முதல்வர் சொன்ன அடேங்கப்பா காரணம்

சாலை விபத்துக்கள் அதிகமாக நடைபெறுவது ஏன்? என்பதற்கு துணை முதல்வர் சொன்ன காரணம் சர்ச்சையை உண்டாக்கியுள்ளது.

கோவப்பட்றாதீங்க... விபத்துக்கள் அதிகமாக நடப்பது ஏன் தெரியுமா? துணை முதல்வர் சொன்ன அடேங்கப்பா காரணம்

இந்தியாவில் சாலை விபத்துக்களால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையை குறைக்கும் நோக்கில், புதிய மோட்டார் வாகன சட்டத்தை பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. கடந்த செப்டம்பர் 1ம் தேதி முதல் அமலுக்கு கொண்டு வரப்பட்டுள்ள புதிய மோட்டார் வாகன சட்டத்தில், போக்குவரத்து விதிமீறல்களுக்கான அபராதம் மிக கடுமையாக உயர்த்தப்பட்டுள்ளது.

கோவப்பட்றாதீங்க... விபத்துக்கள் அதிகமாக நடப்பது ஏன் தெரியுமா? துணை முதல்வர் சொன்ன அடேங்கப்பா காரணம்

மத்திய அரசின் இந்த அதிரடி நடவடிக்கைக்கு ஆரம்பத்தில் நல்ல வரவேற்பு இருக்கவே செய்தது. ஆனால் அபராதங்கள் மிக கடுமையானது என்பதால், பின்னர் வந்த நாட்களில், அதிகப்படியான எதிர்ப்பு எழ தொடங்கியது. அத்துடன் வாகன ஓட்டிகளிடம் போலீசார் காட்டிய கெடுபிடிகளும் எரிகின்ற தீயில் எண்ணெய்யை ஊற்றுவது போல் அமைந்து விட்டது.

கோவப்பட்றாதீங்க... விபத்துக்கள் அதிகமாக நடப்பது ஏன் தெரியுமா? துணை முதல்வர் சொன்ன அடேங்கப்பா காரணம்

அபராத தொகைகளை குறைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தற்போது வாகன ஓட்டிகள் வலியுறுத்தி வருகின்றனர். ஆனால் அதற்கெல்லாம் வாய்ப்பே இல்லை என மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் நிதின் கட்கரி திட்டவட்டமாக கூறி விட்டார். இவரது தீவிர முயற்சியால்தான் புதிய மோட்டார் வாகன சட்டம் அமலுக்கு வந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

கோவப்பட்றாதீங்க... விபத்துக்கள் அதிகமாக நடப்பது ஏன் தெரியுமா? துணை முதல்வர் சொன்ன அடேங்கப்பா காரணம்

மத்திய அரசு கை விரித்து விட்ட நிலையில், அபராத தொகைகளை குறைக்க பல்வேறு மாநில அரசுகள் தீவிர நடவடிக்கையை எடுத்து வருகின்றன. ஆரம்பத்தில் மேற்கு வங்கம், ராஜஸ்தான், மத்திய பிரதேசம், பஞ்சாப் உள்ளிட்ட மாநில அரசுகள் அபராத தொகையை கடுமையாக உயர்த்தியிருப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தன. பின்னர் இந்த மாநிலங்களுடன் பாஜக ஆளும் குஜராத்தும் இணைந்தது.

கோவப்பட்றாதீங்க... விபத்துக்கள் அதிகமாக நடப்பது ஏன் தெரியுமா? துணை முதல்வர் சொன்ன அடேங்கப்பா காரணம்

குஜராத் மாநிலத்தில் தற்போது அபராத தொகைகள் அதிரடியாக குறைக்கப்பட்டுள்ளன. குஜராத் பாணியில் மேலும் சில மாநிலங்களிலும் அபராத தொகைகள் குறைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதில், தமிழகமும் ஒன்று. அபராத தொகைகளை குறைப்பது தொடர்பாக தமிழக அரசு தற்போது ஆராய்ந்து வருகிறது.

கோவப்பட்றாதீங்க... விபத்துக்கள் அதிகமாக நடப்பது ஏன் தெரியுமா? துணை முதல்வர் சொன்ன அடேங்கப்பா காரணம்

இந்த வரிசையில் பாஜக ஆட்சி நடைபெற்று வரும் மற்றொரு மாநிலமான கர்நாடகாவிலும் அபராத தொகை குறைக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அபராத தொகைகளை குறைப்பது தொடர்பாக ஆராயும்படி அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளதாக கர்நாடக முதல் அமைச்சர் எடியூரப்பா நேற்று (செப்டம்பர் 11) தெரிவித்தார்.

கோவப்பட்றாதீங்க... விபத்துக்கள் அதிகமாக நடப்பது ஏன் தெரியுமா? துணை முதல்வர் சொன்ன அடேங்கப்பா காரணம்

அதே நேரத்தில் குஜராத் மாநில அரசால் செய்யப்பட்ட மாற்றங்கள் தொடர்பான அனைத்து தகவல்களையும் பெற கர்நாடகா முயன்று வருவதாக அம்மாநிலத்தின் துணை முதல்வர்களில் ஒருவரான லக்ஸ்மன் சவடி கூறியுள்ளார். கர்நாடக மாநில அரசின் போக்குவரத்து துறையை லக்ஸ்மன் சவடிதான் கவனித்து கொண்டுள்ளார் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

கோவப்பட்றாதீங்க... விபத்துக்கள் அதிகமாக நடப்பது ஏன் தெரியுமா? துணை முதல்வர் சொன்ன அடேங்கப்பா காரணம்

இதுகுறித்து லக்ஸ்மன் சவடி கூறுகையில், ''அபராதம் என்ற பெயரில் சாமானிய மக்களின் தலையில் சுமை ஏற்றக்கூடாது. எனவே தேவையான நடவடிக்கையை நாங்கள் எடுப்போம்'' என்றார். கடந்த செப்டம்பர் 4 முதல் 9ம் தேதி வரை மட்டும் பெங்களூர் போக்குவரத்து போலீசார் அபராதமாக 72.49 லட்ச ரூபாயை வசூலித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

கோவப்பட்றாதீங்க... விபத்துக்கள் அதிகமாக நடப்பது ஏன் தெரியுமா? துணை முதல்வர் சொன்ன அடேங்கப்பா காரணம்

இதனிடையே அபராத தொகையை உயர்த்தியிருப்பதால், சாலைகளை தரமாக அமைத்து தரும்படி அரசிடம் வாகன ஓட்டிகள் வலியுறுத்த தொடங்கியுள்ளனர். சாலைகளை முதலில் தரமாக அமைத்து விட்டு அதன்பின் இதுபோல் கடுமையான அபராதங்களை வசூல் செய்யுங்கள் எனவும் வாகன ஓட்டிகள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

கோவப்பட்றாதீங்க... விபத்துக்கள் அதிகமாக நடப்பது ஏன் தெரியுமா? துணை முதல்வர் சொன்ன அடேங்கப்பா காரணம்

வாகன ஓட்டிகளின் இந்த கோரிக்கை தொடர்பாக கர்நாடகாவின் மற்றொரு துணை முதல்வரான கோவிந்த் கர்ஜோலிடம் கேள்வி எழுப்பப்பட்டது. இந்த கேள்விக்கு கோவிந்த் கர்ஜோல் அளித்துள்ள பதில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. ''நல்ல சாலைகள்தான் அதிகமான விபத்துக்களுக்கு வழிவகுக்கின்றன. மோசமான சாலைகள் அல்ல'' என்பதுதான் கோவிந்த் கர்ஜோல் அளித்த பதில்.

கோவப்பட்றாதீங்க... விபத்துக்கள் அதிகமாக நடப்பது ஏன் தெரியுமா? துணை முதல்வர் சொன்ன அடேங்கப்பா காரணம்

இதுகுறித்து கோவிந்த் கர்ஜோல் கூறுகையில், ''ஒவ்வொரு ஆண்டும் கர்நாடக மாநிலத்தில் 10 ஆயிரம் சாலை விபத்துக்கள் நடைபெற்று வருகின்றன. இதற்கு மோசமான சாலைகள்தான் காரணம் என்று ஊடகங்கள் கூறுகின்றன. ஆனால் இதை நான் இல்லை என்கிறேன். உண்மையில் நல்ல சாலைகள்தான் காரணம்'' என்றார்.

கோவப்பட்றாதீங்க... விபத்துக்கள் அதிகமாக நடப்பது ஏன் தெரியுமா? துணை முதல்வர் சொன்ன அடேங்கப்பா காரணம்

தரமான சாலைகள் வேண்டும் என வாகன ஓட்டிகள் வலியுறுத்தி வரும் கர்நாடக துணை முதல்வரின் இந்த பேட்டி சர்ச்சையை உண்டாக்கியுள்ளது. கர்நாடக துணை முதல்வரின் இந்த பேட்டி தொடர்பான உங்கள் கருத்துக்களை கமெண்ட் பாக்ஸில் தெரியப்படுத்துங்கள்.

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Good Roads Lead To More Accidents, Says Karnataka Minister. Read in Tamil
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X