லஞ்சம் வாங்கும் "வசூல் ராஜாக்களுக்கு" ஆப்பு ; இனி டிஜிட்டல் முறையில் அபராதம் வசூல்

சென்னையில் வாகன தணிக்கையில் ஈடுபடும் போலீசார் விதிமுறைகளை மீறும் வாகன ஓட்டிகளிடம் டிஜிட்டல் முறையில் அபராதம் வசூல் செய்யும் முறை நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

By Balasubramanian

சென்னையில் வாகன தணிக்கையில் ஈடுபடும் போலீசார் விதிமுறைகளை மீறும் வாகன ஓட்டிகளிடம் டிஜிட்டல் முறையில் அபராதம் வசூல் செய்யும் முறை நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இதனால் லஞ்சம் வாங்கும் "வசூல் ராஜாக்கள்" களகத்தில் உள்ளனர்.

லஞ்சம் வாங்கும்

சென்னையில் விதிமுறை மீறி வாகனம் ஓட்டுபவர்களை கட்டுப்படுத்த போக்குவரத்து போலீசார் அவ்வப்போது ஆய்வு நடத்தி அவர்களுக்கு அபராதம் விதித்து வருகின்றனர்.

லஞ்சம் வாங்கும்

அபராதம் விதிப்பதில் பல்வேறு சிக்கல்கள் நிலவுகிறது. பலர் பணம் இல்லாமல் வருவதால் அவர்களிடம் ஸ்பாட் பைன் வசூல் செய்ய முடிவதில்லை. அதனால் அவர்களது வாகனத்தைபறிமுதல் செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது.

லஞ்சம் வாங்கும்

இதனால் பறிமுதல் செய்த வாகனங்களை கொண்டு செல்வது, அவர்களிடம் அபராத தொகைய வசூல் செய்வது அது வரை அந்த வாகனத்தை பாதுகாப்பது என போலீசாரின் வேலைப்பளூ இதனால் அதிகரித்திருந்தது.

லஞ்சம் வாங்கும்

மேலும் வாகன தணிக்கையில் ஈடுபடும் சில போலீசார் சரியான ஆவணங்கள் இல்லாமல் வரும் வாகன ஓட்டிகளிடம் லஞ்சம் பெற்று கொண்டு அவர்களை விட்டுவிடுவதும், சிலரிடம் மிரட்டி லஞ்சம் கேட்பதுமாக புகார்கள் தொடர்ந்து வந்து கொண்டிருந்தது. போலீசார் லஞ்சம் வாங்கும் வீடியோக்களும் அவ்வப்போது சமூகவலைதளங்களில் வெளியாகி வைரலாக பரவியது.

லஞ்சம் வாங்கும்

இந்த பிரச்னைகளுக்கு முடிவு கட்ட இந்தாண்டு துவங்க்கத்தில் வாகன தணிக்கையில் ஈடுபடும் போலீசார்களுக்கு பி.ஓ.எஸ். இயந்திரம் வழங்கப்பட்டு அதன் மூலம் அபராத தொகையை கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகள் மூலம் வசூல் செய்ய துவங்கினர்.

லஞ்சம் வாங்கும்

இதனால் பல போலீசார் அபாரத தொகைக்கும் அதிகமாக லஞ்சம் வாங்குவது குறைந்தது. பணம் இல்லாமல் வந்து போலீசிடம் சிக்கும் வாகன ஓட்டிகளிடம் பணம் வசூல் செய்வதும் எளிதாக இருந்தது. இதையடுத்து இந்த முயற்சியை அடுத்த கட்டத்திற்கு எடுத்து செல்லும் முயற்சியாக அபராத தொகையை டிஜிட்டல் முறையில் வசூல் செய்ய சென்னை போலீசாருக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

லஞ்சம் வாங்கும்

மிக பிரபலமான பேடிஎம் போன்ற இ வேலட் அப்ளிகேஷன்களிலும், வி.பி.ஏ. மூலமாகவும் போலீசார் இனி அபராத தொகையை வசூல் செய்ய முடியும். அதாவது விதிமுறை மீறி வாகனத்தில் வரும் வாகன ஓட்டிகளில் இனி தங்கள் மொபைல் போனில் க்யூ.ஆர். கோர்டை ஸ்கேன் செய்து அதன் மூலம் அபாராத தொகையை செலுத்த முடியும்.

லஞ்சம் வாங்கும்

இது குறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறியபோது தற்போது டிஜிட்டல் முறையில் பணபரிமாற்றம் செய்யும் பழக்கம் மக்கள் மத்தியில் அதிகமாக இருந்து வருகிறது. அதனால் இந்த முறையில் அபராதத்தை வசூலிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இது போலீசாருக்கும் எளிதாக அமையும்.

லஞ்சம் வாங்கும்

மேலும் வரும் காலங்களில் டிஜிட்டலர் முறையில் பணம் வசூல் செய்யும் முறையை மட்டுமே கையாளலாம் என முடிவு செய்ப்பட்டுள்ளது. இதன் மூலம் சில லஞ்சம் வாங்கும் போலீசார், இனி லஞ்சம் வாங்க முடியாத சூழ்நிலை உருவாகும் எனவும் எதிர்பார்க்கிறோம்.

லஞ்சம் வாங்கும்

சென்னையில் பல இடங்களில் உயர் தர சி.சி.டி.வி கேமராக்கள் பொருத்தியுள்ளளோம். அதில் விதிமுறைகளை மீறும் வாகனங்கள் வாகன நம்பர் பிளேட்டுடன் பதிவாகும். அதை வைத்து அந்த வாகனத்தின் உரிமையாளரின் வீட்டிற்கே அபராத ரசீதை அனுப்புவோம் அவர்களும் அபராத்தில் இருந்து தப்ப முடியாது." என கூறுனார்.

லஞ்சம் வாங்கும்

போலீசாரின் இந்த முயற்சி பாராட்டிற்குரியதே அதே போல் வாகன தணிக்கை நடத்தப்படும் காலத்ததை அதிகரிக்க வேண்டும். பொதுமக்களுக்கு விதிமுறைகளை மீறுவதில் உள்ள ஆபத்துக்களையும், தண்டனைகளையும் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

லஞ்சம் வாங்கும்

சிலர் தங்களின் செல்வாக்கை கொண்டு இது போன்ற தண்டனைகளில் இருந்து தப்பித்து விடுகின்றனர். யாராக இருந்தாலும் அவர்கள் விதிமுறைகளை மீறினால் தண்டனை/அபராதம் என்பதை போலீசார் உறுதி செய்ய வேண்டும்.

லஞ்சம் வாங்கும்

இதற்காக போலீசார் செயல்படுத்தி வரும் நடைமுறைகளில் சில மாற்றங்கள் செய்வதோடு, லஞ்சம் வாங்கும் போலீசாருக்கு தண்டனைகளை அதிகரித்தால் தான் பெரும்மாற்றம் ஏற்படும் என பொதுமக்கள் மத்தியில் கருத்து எழுந்துள்ளது.

டிரைவ் ஸ்பார்க் தமிழ் தளத்தில் அதிகம் படிக்கப்பட்ட செய்திகள்

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #offbeat
English summary
Now pay traffic challan through Digital Cash. Read in Tamil
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X