Just In
- 3 hrs ago
டாடா ஹாரியர் காரின் விற்பனை அமோகம்... அடுத்து இந்திய சந்தையை கலக்க வருகிறது புதிய சஃபாரி...
- 4 hrs ago
350,000வது மான்ஸ்டர் பைக்கை டெலிவிரி செய்தது டுகாட்டி!! இந்தியாவில் விற்பனையில் இருக்கா?
- 6 hrs ago
இவ்வளவு கம்மி விலையில் கிடைக்கும்போது வாங்காமல் விட முடியுமா? நிஸான் மேக்னைட் காருக்கு 35 ஆயிரம் முன்பதிவுகள்!
- 6 hrs ago
ஹோண்டா மின்சார பைக் எப்படி இருக்கும் தெரியுமா?.. இணையத்தில் கசிந்த புகைப்படம்...
Don't Miss!
- News
சங்கமம் கலைநிகழ்ச்சிகளுடன் இன்று மினசோட்டா தமிழ் சங்கத்தின் பொங்கல் விழா!
- Sports
தம்பிகளா.. அப்படி ஓரமா போய் உட்காருங்க.. இளம் வீரர்களுக்கு நோ சான்ஸ்.. இந்திய அணி முடிவு!
- Finance
யூனியன் பட்ஜெட் 2020-க்காக சிறப்பு ஆப்.. மோடி அரசின் புதிய டிஜிட்டல் சேவை..!
- Movies
கொல மாஸ்.. சிறுவர் சீர்த்திருத்த பள்ளியில் ‘குட்டி ஸ்டோரி’ பாடும் விஜய்.. வெளியானது வீடியோ பாடல்!
- Lifestyle
எல்லோரும் விரும்பும் கூட்டாளராக நீங்க இருக்க என்ன பண்ணனும் தெரியுமா?
- Education
10-வது தேர்ச்சியா? ரூ.50 ஆயிரம் ஊதியத்தில் அரசு வேலைக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
கொல மாஸ்... இதுவரை யாராலும் செய்ய முடியாததை செய்து காட்டிய மத்திய அரசு... தரமான சம்பவம்...
இதுவரை யாராலும் செய்ய முடியாததை மத்திய அரசு செய்து காட்டியுள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

இந்தியாவில் சாலை விபத்துக்கள் மிக அதிக அளவில் நடைபெற்று வருகின்றன. இந்தியாவில் ஒரு ஆண்டுக்கு மட்டும் சாலை விபத்துக்களால் சுமார் 1.50 லட்சம் பேர் பரிதாபமாக உயிரிழந்து வருகின்றனர். எனவே சாலை விபத்துக்களையும், சாலை விபத்துக்களால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையையும் குறைக்க பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

வாகன ஓட்டிகள் போக்குவரத்து விதிமுறைகளை மீறுவதால்தான், இந்தியாவில் சாலை விபத்துக்கள் மிகவும் அதிகமாக நடைபெற்று வருகின்றன. குடிபோதையில் அதிவேகமாகவும், தாறுமாறாகவும் வாகனம் ஓட்டுவது, தலை கவசம் அணியாமல் டூவீலர்களில் பயணம் செய்வது என போக்குவரத்து விதிமுறைகளை வாகன ஓட்டிகள் சர்வ சாதாரணமாக மீறுகின்றனர்.

எனவே வாகன ஓட்டிகள் அனைவரும் போக்குவரத்து விதிமுறைகளை முறையாக கடைபிடிக்க வேண்டும் என்பதற்காக அபராத தொகைகளை மத்திய அரசு மிக கடுமையாக உயர்த்தியுள்ளது. இந்தியாவில் கடந்த 2019ம் ஆண்டு செப்டம்பர் 1ம் தேதி முதல் புதிய மோட்டார் வாகன சட்டத்தை மத்திய அரசு அதிரடியாக அமலுக்கு கொண்டு வந்தது.

இதில், போக்குவரத்து விதிமீறல்களுக்கான அபராத தொகைகள் பல மடங்கு உயர்த்தப்பட்டுள்ளன. இதன் எதிரொலியாக இந்தியாவில் சமீப காலமாக சாலை விபத்துக்களின் எண்ணிக்கை குறைந்து வருவதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. ஆனால் வாகன ஓட்டிகள் விதிமுறைகளை மீறுவதை மட்டும் விபத்துக்களுக்கு காரணமாக கூறி விட முடியாது.

மோசமான சாலைகளும் விபத்துக்களுக்கு காரணமாக இருக்கின்றன. இந்தியா என்றாலே சாலைகள் மிகவும் மோசமாக இருக்கும் என்ற எண்ணம் பலரின் மனதிலும் ஆழமாக பதிந்து விட்டது. இதில், உண்மை இருக்கவே செய்கிது. இந்தியாவில் பெரும்பாலான சாலைகள் குண்டும், குழியுமான நிலையில் மிகவும் மோசமாகதான் இருக்கின்றன.

ஊழல் மற்றும் முறைகேடு போன்ற காரணங்களால் இந்தியாவின் பெரும்பாலான இடங்களில் தரம் இல்லாத சாலைகள்தான் அமைக்கப்படுகின்றன. ஆனால் தற்போது அந்த நிலை கொஞ்சம் கொஞ்சம் மாறி வருகிறது. நரேந்திர மோடி பிரதமர் பொறுப்பை ஏற்றது முதல் சாலை கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதில் அதிக ஆர்வம் காட்டி வருகிறார்.

குறிப்பாக தேசிய நெடுஞ்சாலை பணிகளை விரைவாக முடிப்பதில் மத்திய அரசு தீவிரம் காட்டி வருகிறது. தரமான சாலைகள் விபத்துக்களை தவிர்க்க உதவுவதுடன், நாட்டின் பொருளதார வளர்ச்சியிலும் முக்கிய பங்காற்றுகின்றன. எனவேதான் சாலை கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதில் மத்திய அரசு தீவிரம் காட்டுகிறது.

இதன் எதிரொலியாக புதிய சாதனை ஒன்றை மத்திய அரசு நிகழ்த்தியுள்ளது. மத்திய அரசு கடந்த ஆண்டு சுமார் 4 ஆயிரம் கிலோ மீட்டருக்கு தேசிய நெடுஞ்சாலைகளை கட்டமைத்துள்ளது. இதற்கு முன்பாக ஒரே ஆண்டில் இவ்வளவு கிலோ மீட்டர் தேசிய நெடுஞ்சாலைகள் கட்டமைக்கப்பட்டதில் என்பதால், இது ஒரு சாதனையாக பார்க்கப்படுகிறது.

2019-20ம் நிதியாண்டில், 3,979 கிலோ மீட்டர் தொலைவிற்கு தேசிய நெடுஞ்சாலைகளை அமைத்திருப்பதாக இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் தெரிவித்துள்ளது. இதற்கு முன்பாக ஒரே நிதியாண்டில், இவ்வளவு அதிகமான தொலைவிற்கு தேசிய நெடுஞ்சாலைகள் அமைக்கப்பட்டதில்லை. கடந்த சில வருடங்களாகவே இந்தியாவில் தேசிய நெடுஞ்சாலை கட்டுமான பணிகள் துரிதமாக நடக்கின்றன.

முன்னதாக கடந்த 2018-19ம் நிதியாண்டில், 3,380 கிலோ மீட்டர்கள் தொலைவிற்கு தேசிய நெடுஞ்சாலைகள் அமைக்கப்பட்டிருந்தன என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியாவில் தற்போது சாலைகளின் தரம் மேம்பட்டு வருவதை நம்மால் கண் கூடாக பார்க்க முடிகிறது. இதே நிலை தொடர்ந்தால், இந்தியாவில் சாலை விபத்துக்களின் எண்ணிக்கை குறைவதோடு, பொருளாதாரமும் மேம்படும்.
Note: Images used are for representational purpose only.