வாகன உற்பத்தி நிறுவனங்களுக்கு மத்திய அரசு இரண்டு வாரம் கெடு... எதற்கு தெரியுமா...?

வாகன உற்பத்தி நிறுவனங்களுக்கு நிறுவனங்களுக்கு மத்திய அரசு இரண்டு வாரங்கள் கெடு விதித்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அது எதற்காக என்பது குறித்த தகவலை இந்த பதிவில் காணலாம்.

வாகன உற்பத்தி நிறுவனங்களுக்கு மத்திய அரசு இரண்டு வாரம் கெடு... எதற்கு தெரியுமா...?

எரிபொருள் வாகனங்களே இல்லாத இந்தியாவை உருவாக்கும் முயற்சியை தற்போதைய மத்திய அரசு மேற்கொண்டு வருகின்றது. இதற்கு முக்கிய காரணமாக, அதன் பயன்பாட்டால் ஏற்படும் பின்விளைவுகளே இருக்கின்றன. ஆகையால், அண்மைக் காலங்களாக பெட்ரோல் மற்றும் டீசலால் இயங்கும் வாகனங்களின் பயன்பாட்டை அடியோடு ஒழித்துவிட்டு, மின் வாகன பயன்பாட்டை ஊக்குவிக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

வாகன உற்பத்தி நிறுவனங்களுக்கு மத்திய அரசு இரண்டு வாரம் கெடு... எதற்கு தெரியுமா...?

அந்தவகையில், மின்வாகனங்களுக்கு மானியம் வழங்குதல் போன்ற சிறப்பு சலுகைகள் அளிக்கப்பட்டு வருகின்றன. இத்துடன், மின் வாகனங்களுக்கான பதிவு இலவசமாக செய்யப்பட இருப்பதாகவும் கடந்த சில நாட்களுக்கு முன்பு அறிவிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து, தற்போது மின் வாகனங்கள்மீது விதிக்கப்பட்டு வரும் ஜிஎஸ்டி வரியை 12ல் இருந்து 5 சதவீதமாக குறைக்க இருப்பதாக மத்திய அரசு குறைக்க இருப்பதாக தகவல் வெளியாகியது.

வாகன உற்பத்தி நிறுவனங்களுக்கு மத்திய அரசு இரண்டு வாரம் கெடு... எதற்கு தெரியுமா...?

இந்த முயற்சியிகளின் அடுத்தகட்ட நடவடிக்கையாக, அனைத்து இருசக்கர வாகன தயாரிப்பு நிறுவனங்களுக்கும் மத்திய அரசு ஓர் புதிய உத்தரவை பிறப்பித்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, நாட்டில் இயங்கும் அனைத்து இருசக்கர வாகன தயாரிப்பு நிறுவனங்களும் இன்னும் இரண்டு வாரங்களில், தங்களுடைய மின் வாகன உற்பத்திக்கான திட்டத்தை (EV roadmap) வரைவாக சமர்பிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

வாகன உற்பத்தி நிறுவனங்களுக்கு மத்திய அரசு இரண்டு வாரம் கெடு... எதற்கு தெரியுமா...?

இந்த காலக்கெடுவானது, இருசக்கர வாகனங்களுக்கு மட்டுமின்றி மூன்று மற்றும் நான்கு சக்கர வாகன தயாரிப்பு நிறுவனங்களுக்குமானதுதான் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே நாட்டில் இயங்கும் பல வாகன தயாரிப்பு நிறுவனங்கள், மின்வாகன உற்பத்தியை துவங்கவிட்ட நிலையில், சில நிறுவனங்கள் காலம் தாழ்த்தி வருகின்றன. அந்த நிறுவனங்களும் மின்வாகன உற்பத்தியைத் தொடங்குவதற்கான முயற்சியாக இது மேற்கொள்ளப்பட்டுள்ளது.

வாகன உற்பத்தி நிறுவனங்களுக்கு மத்திய அரசு இரண்டு வாரம் கெடு... எதற்கு தெரியுமா...?

முன்னதாக, 150சிசிக்கும் குறைவான இருசக்கரம் மற்றும் மூன்று சக்கர வாகனங்களுக்கான ரெஜிஸ்ட்ரேஷன் செய்யப்படாது வரும் காலங்களில் நிறுத்தப்பட இருப்பதாக அறிவிக்கப்பட்டது. அவ்வாறு, மூன்று சக்கரங்களின் பதிவு 2023ம் ஆண்டிலும், இருசக்கர வாகனங்களின் பதிவு 2025ஆம் ஆண்டிலும் நிறுத்தப்பட இருப்பதாக அறிவிக்கப்பட்டது.

வாகன உற்பத்தி நிறுவனங்களுக்கு மத்திய அரசு இரண்டு வாரம் கெடு... எதற்கு தெரியுமா...?

ஆனால், இதனை பல நிறுவனங்கள் கடைப்பிடிக்க துவங்கவில்லை என தெரியவருகின்றது. ஆகையால், ஓஇஎம் மற்றும் நிதி ஆயோக் அமைப்பு நாட்டில் இயங்கும் வாகன தயாரிப்பு நிறுவனங்களுக்கு, மின் வாகன உற்பத்திக்கான வரைவை சமர்பிக்க காலக்கெடு வழங்கியுள்ளது. ஆனால், வாகன உற்பத்தி நிறுவனங்கள் தரப்பில் இதற்கு ஆறு மாதங்கள் கோரப்பட்டதாக கூறப்படுகிறது. இதற்கு, மத்திய அரசு மறுப்பு தெரிவித்துள்ளது. குறிப்பிட்ட காலத்தில் மின்வாகனங்களுக்கான ரோட் மேப்பை சமர்பிக்க உத்தரவிடப்பிட்டுள்ளது.

வாகன உற்பத்தி நிறுவனங்களுக்கு மத்திய அரசு இரண்டு வாரம் கெடு... எதற்கு தெரியுமா...?

மத்திய அரசு இவ்வாறு பெட்ரோல் மற்றும் டீசல் வாகனங்கள் விவகாரத்தில் கெடுபிடி காட்டுவது மக்களிடையே சற்று கலக்கத்தை ஏற்படுத்தும் விஷயமாக இருக்கின்றது. இருப்பினும், எரிபொருள் வாகனங்களினால் உருவாகும் பின்விளைவுகள் சொல்லிடங்கா ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் உருவாக்குகின்றன.

வாகன உற்பத்தி நிறுவனங்களுக்கு மத்திய அரசு இரண்டு வாரம் கெடு... எதற்கு தெரியுமா...?

ஏன்... தற்போது, கத்திரி வெயில் முடிவடைந்த பின்னரும் சென்னை போன்ற பல இடங்களில் இன்றளவும் வெயில் கொளுத்த காரணமாக, எரிபொருள் வாகனங்களில் இருந்து வெளியேறும் புகையே காரணமாக இருக்கின்றது. ஆம், புவி வெப்ப மயமாதலுக்கு முக்கிய காரணமாக வாகனங்களில் இருந்து வெளியேறும் விஷ வாயுக்களே காரணமாக இருக்கின்றது. இதன்காரணமாகவே மத்திய அரசு எரிபொருள் வாகன பயன்பாட்டை அடியோடு ஒழித்துக்கட்டும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றது.

Source: autocarpro

Most Read Articles
English summary
Government Gives Vehicle Manufacturers 2 Weeks To Come Up With EV Roadmap. Read In Tamil.
Story first published: Saturday, June 22, 2019, 11:48 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X