ஒரேநாடு..! ஒரே வரி..! ஒரே பெர்மிட்...! மத்திய அரசு புது திட்டம்

நாடு முழுவதும் வாகனங்களுக்கு ஒரே வரியை அமல் படுத்தவும், கமர்ஷியல் வாகனங்களுக்கு வேறு மாநிலங்களுக்கு செல்ல ஒரே பெர்மிட் வழங்கவும் மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலதத்துறை அமைச்சகம் முடிவு

By Balasubramanian

வேறு மாநிலங்களுக்கு சென்று குறைந்த வரி செலுத்தி வாகனம் வாங்கும் தில்லாலங்கடிகளுக்க ஆப்பு வைக்கும் வகையில் நாடு முழுவதும் வாகனங்களுக்கு ஒரே வரியை அமல் படுத்தவும், கமர்ஷியல் வாகனங்களுக்கு வேறு மாநிலங்களுக்கு செல்ல ஒரே பெர்மிட் வழங்கவும் மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலதத்துறை அமைச்சகம் பரிந்துரைத்துள்ளது.

ஒரேநாடு..! ஒரே வரி..! ஒரே பெர்மிட்...! மத்திய அரசு புது திட்டம்

தற்போது கார்கள் விற்பனை செய்யும் போது விதிக்கப்படும் வரிகளின் விகிதம் ஒவ்வொரு மாநிலத்திற்கும் ஒவ்வொரு விதமாக இருக்கிறது. சில மாநிலத்தில் அதிக வரியும் சில மாநிலங்களில் குறைந்த வரியும் உள்ளது.

ஒரேநாடு..! ஒரே வரி..! ஒரே பெர்மிட்...! மத்திய அரசு புது திட்டம்

இந்த வித்தியாசம் குறைந்த விலை கார்களை அதிகம் பாதிக்காவிட்டாலும் அதிக விலை கார்களை பெரும் வகையில் பாதிக்கிறது. அதிக விலை கார்களை வாங்குபவர்கள் வரி வித்தியாசம் காரணமாக சில நகரங்களில் அதிக வரி கொடுத்து வாங்குகின்றனர்.

ஒரேநாடு..! ஒரே வரி..! ஒரே பெர்மிட்...! மத்திய அரசு புது திட்டம்

உதாரணத்திற்கு சென்னையில் உள்ளவர்கள் வரி காரணமாக உயர் ரக கார்களை புதுச்சேரியில் வாங்குகின்றனர். இதனால் அவர்களுக்கு அதிக அளவு பணம் சேமிக்கப்படுகிறது. ஆனால் அரசுக்கு பணம் நஷ்டம் ஏற்படுகிறது.

ஒரேநாடு..! ஒரே வரி..! ஒரே பெர்மிட்...! மத்திய அரசு புது திட்டம்

இதை தடுக்க அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டும் பலனளிக்கவில்லை. இதனால் அரசு நாடு முழுவதும் கார்களுக்கு ஒரே மாதிரியான வரி விதிப்பு முறையை அமலில் கொண்டு வர முடிவு செய்துள்ளது.

ஒரேநாடு..! ஒரே வரி..! ஒரே பெர்மிட்...! மத்திய அரசு புது திட்டம்

இந்த தகவலை மத்திய சாலை போக்குவரத்து அமைச்சகம் தனது அதிகராபூர்வ டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. அதை நீங்கள் கீழே காணலாம்.

இந்த அறிவிப்பை நடைமுறைக்கு வரும் பட்சத்தில் இந்தியாவில சில இடங்களில் தற்போது விற்பனையாகி வரும் கார்களில் விலையில் மாறுதல்கள் ஏற்படும் உதாரணமாக பெங்களூரு, மும்பை, சென்னை ஆகிய இடங்களில் விற்பனையாகும் வாகனங்களின் விலை குறையும் அதே நேரத்தில் டில்லி, புதுச்சேரி ஆகிய பகுதிகளில் விற்பனையாகும் விலை அதிகரிக்கும்.

இதுபோல் நடுமுழுவதிற்கும் ஒரே பெர்மிட் வழங்கவும் மத்திய போக்குவரத்து அமைச்சகம் பரிந்துரை செய்துள்ளது. ஏற்கனவே சொந்த வாகனங்கன பயன்பாட்டிற்கு ஒரே பெர்மிட் அமலில் உள்ள நிலையில் கமர்ஷியல் வாகனங்களுக்கும் இந்த நடைமுறையை கொண்டு வரவிருக்கிறது.

இதன் மூலம் டிராவல்ஸ் கார்களோ, அல்லது சரக்கு ஏற்றி செல்லும் வாகனங்களோ வெளி மாநிலங்களுக்கு செல்லும் போது தனியாக பெர்மிட் எடுக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை.

ஒரேநாடு..! ஒரே வரி..! ஒரே பெர்மிட்...! மத்திய அரசு புது திட்டம்

கார் வாங்கும் போது எடுக்கும் பெரிமிட்டை கொண்டு இனி இந்தியா முழவதும் வலம் வரலாம். அதே நேரத்தில் குறிப்பிட காலத்திற்கு ஒரு முறை அந்த பெர்மிட்டை புதுபிக்க வேண்டும் என்று. பெர்மிட்டை புதுப்பிக்கவில்லை என்றால் உங்கள் வீட்டை விட்டு கூட வாகனத்தை வெளியே எடுக்க முடியாது.

ஒரேநாடு..! ஒரே வரி..! ஒரே பெர்மிட்...! மத்திய அரசு புது திட்டம்

ஏற்கனவே ஜி.எஸ்.டி., என்ற வரியை கொண்டு இந்தியா முழுவதும் ஒரே மாதிரியான வரிக்குள் கொண்டு வரபப்பட்டதையடுத்து சரக்கு வாகனங்களுக்காக அமைக்கப்பட்ட சுங்க வரி சாவடிகள் அகற்றப்பட்டது.

ஒரேநாடு..! ஒரே வரி..! ஒரே பெர்மிட்...! மத்திய அரசு புது திட்டம்

இதன் மூலம் இந்தியா முழுவதும் எங்கு வேண்டுமனாலும் ஒரே வரி மூலம் பொருட்களை கொண்டு செல்ல முடிந்தது. இந்த நடைமுறைக்கு வணிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பு கிடைத்துள்ள நிலையில் தற்போது இந்த முடிவை அரசு எடுத்துள்ளது.

ஒரேநாடு..! ஒரே வரி..! ஒரே பெர்மிட்...! மத்திய அரசு புது திட்டம்

இந்த சட்டம் அமலுக்கு வரும் பட்சத்தில் இந்தியா முழுவதும் உள்ள ஆர்.டி.ஓ., பெர்மிட் மையங்கள் அகற்றப்பட்டும். ஏற்கனவே பெர்மிட் வழங்குவதில் பல்வேறு ஊழல்கள் நடப்பதாகவும் லஞ்சம் பெற்றுக்கொண்டு பெர்மிட் வழங்கப்படுவதாகவும் புகார்கள் கூறப்பட்டு வந்தன.

ஒரேநாடு..! ஒரே வரி..! ஒரே பெர்மிட்...! மத்திய அரசு புது திட்டம்

தற்போது இந்த சட்டத்தால் ஆர்.டி.ஓ. பெர்மிட் மையங்கள் அகற்றப்பட்டு ஒரு பெர்மிட் மூலம் இந்தியா முழவதும் செல்லும் வகையில் பெர்மிட்கள் வழங்கப்படவிருக்கிறது.

ஒரேநாடு..! ஒரே வரி..! ஒரே பெர்மிட்...! மத்திய அரசு புது திட்டம்

மேலும் மாற்று எரிபொருள் பயன்படுத்தும் வாகனங்களை ஊக்குவிக்கும் வகையில் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கான பெர்மிட்டிலும் சில சலுகைகள் வழங்க மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம் பரிந்துரை செய்துள்ளது.

ஒரேநாடு..! ஒரே வரி..! ஒரே பெர்மிட்...! மத்திய அரசு புது திட்டம்

இந்த சட்ட முன் வடிவம் தற்போது மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம் முன் மொழிந்துள்ளது. இது லோக் சபா மற்றும் ராஜ்யசபாவில் விவாதிக்கப்பட்டு விரைவில் நடைமுறைக்கு வரும்.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்ட செய்திகள்:

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #offbeat
English summary
Government Proposes Uniform Tax On Cars Across The Country. Read in Tamil
Story first published: Friday, April 20, 2018, 15:20 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X