இனி எல்லாமே பத்து மடங்கு அதிகம்.... புதிய அபராதம் குறித்த முழுமையான தகவல்!

போக்குவரத்து விதிமீறலில் ஈடுபடும் வாகன ஓட்டிகளுக்கு விதிக்கப்பட்டு வரும் அபராதத் தொகை பத்து மடங்கு அதிகமாக உயர்த்தப்பட்டுள்ளது. எந்த குற்றத்திற்கு எவ்வளவு தொகை என்பது குறித்த தகவலை இந்த பதிவில் காணலாம்.

இனி எல்லாமே பத்து மடங்கு அதிகம்.... புதிய அபராதம் குறித்த முழுமையான தகவல்!

போக்குவரத்து விதிமுறைகளை மீறுபவர்களுக்கு அபராதம் விதிக்க பரிந்துரைக்கும் மோட்டார் வாகன (திருத்த) மசோதாவுக்கு மத்திய அரசு நேற்று (திங்கள்கிழமை) ஒப்புதல் அளித்தது. இந்த திருத்தப்பட்ட மசோதாவில், பழைய அபராதக் கட்டணத்தைக் காட்டிலும் பத்து மடங்கு அதிகமாக வசூல் செய்வதற்கு வழிவகைச் செய்யப்பட்டுள்ளது.

இனி எல்லாமே பத்து மடங்கு அதிகம்.... புதிய அபராதம் குறித்த முழுமையான தகவல்!

மோட்டார் வாகன சட்டத்திருத்த மசோதா காலாவதியாகிய நிலையில், அதனை மீண்டும் மத்திய அரசு புதுப்பித்திருந்தது. இந்த மசோதா 16ம் மக்களவை கூட்டத்திலேயே நிறைவேற்றப்பட்டுவிட்டது. இருப்பினும், மாநிலங்களவை ஒப்புதல் பெறாத காரணத்தால், அது இத்தனை நாட்களாக நிலுவையில் இருந்தது. இந்நிலையில், பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு இந்த புதிய மசோதாவிற்கு ஒப்புதல் அளித்துள்ளது.

இனி எல்லாமே பத்து மடங்கு அதிகம்.... புதிய அபராதம் குறித்த முழுமையான தகவல்!

இந்த புதிய விதியானது நாட்டின் தற்போதைய போக்குவரத்து முறையை மாற்றியமைக்கும் வகையில் திருத்தப்பட்டுள்ளது. அதற்கேற்ப வகையிலான புதிய விதிகளைதான், சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம் மத்திய அரசுக்கு வழங்கியிருந்தது.

இனி எல்லாமே பத்து மடங்கு அதிகம்.... புதிய அபராதம் குறித்த முழுமையான தகவல்!

அந்தவகையில், புதிய மசோதாவில் போக்குவரத்து விதிமீறல்களான ஓட்டுநர் உரிமம் இல்லாமல் வாகனத்தை இயக்குதல், குடித்துவிட்டு வாகனத்தை இயக்குதல், அதிகவேகமாக வாகனத்தை இயக்குதல், ரேஷ் டிரைவிங், சிறுவர்கள் வாகன ஓட்டுதல் உள்ளிட்ட குற்றங்களைக் கடுமையாக கண்டிக்கும் வகையில், உச்சபட்ச அளவில் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

இனி எல்லாமே பத்து மடங்கு அதிகம்.... புதிய அபராதம் குறித்த முழுமையான தகவல்!

அந்தவகையில், புதிய மசோதாவில் இடம்பெற்றுள்ள புதிய அபராத கட்டணம் மற்றும் விதிமுறைகளை கீழே பார்க்கலாம்:

அவசரகால வாகனங்களுக்கு, அதாவது ஆம்புலன்ஸ் மற்றும் தீயணைப்பு போன்று வாகனங்களுக்கு வழி விடாமல் சென்றால், அந்த வாகன ஓட்டிக்கு ரூ.10 ஆயிரம் வரை விதிக்கப்படும்.

அதிவேக பயணத்திற்கு ரூ. 1,000 முதல் ரூ. 2,000 வரை அபராதம்.

இனி எல்லாமே பத்து மடங்கு அதிகம்.... புதிய அபராதம் குறித்த முழுமையான தகவல்!

வாகனத்திற்கு உரிய காப்பீடு இல்லையென்றால் ரூ. 2,000 அபராதம் வசூலிக்கப்படும். அதேபோன்று, ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனத்தை இயக்கினால் ரூ. 1,000 வசூலிக்கப்பட உள்ளது. இத்துடன், மூன்று மாதங்களுக்கு ஓட்டுநர் உரிமம் ரத்து செய்யப்படும்.

சிறுவர்கள் வாகனத்தை இயக்கினால், அந்த வாகனத்தின் உரிமையாளர் அல்லது சிறுவர்களின் பெற்றோர்களுக்கு தண்டனை வழங்கப்படும். மேலும், வாகனத்தின் பதிவும் ரத்து செய்யப்படும். அந்தவகையில், மூன்றாண்டுகள் சிறைத்தண்டனை மற்றும் ரூ. 25 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட உள்ளது.

இனி எல்லாமே பத்து மடங்கு அதிகம்.... புதிய அபராதம் குறித்த முழுமையான தகவல்!

முன்னதாக சிக்னல் விதிமீறலுக்கு விதிக்கப்பட்ட ரூ. 100க்கு பதிலாக 500 ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட உள்ளது. அதேபோன்று, போக்குவரத்து காவல்துறை அதிகாரியின் உத்தரவிற்கு சாலையில் கட்டுப்படாதவாறு செயல்பட்டால், ரூ. 2 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட உள்ளது. இதற்கு முன்னதாக ரூ.500 வசூலிக்கப்பட்டு வந்தது.

இனி எல்லாமே பத்து மடங்கு அதிகம்.... புதிய அபராதம் குறித்த முழுமையான தகவல்!

உரிமம் இல்லாத வாகனங்களை அங்கீகரிக்கப்படாத முறையில் பயன்படுத்துபவர்களுக்கு ரூ .5 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட உள்ளது. அதேசமயம், அந்த வாகனத்தை ஓட்டுநர் உரிமம் இல்லாமல் இயக்கினால், ரூ. 10,000 வரை அபராதம் விதிக்கப்படும்.

அபாயமான முறையில் வாகனத்தை இயக்கினால் ரூ. 5 ஆயிரமும், குடித்து வாகனத்தை இயக்கினால் ரூ. 10 ஆயிரம் அபராதம் வசூலிக்கப்பட உள்ளது. முன்னதாக ரேஷ் டிரைவிங்கிற்கு ரூ. 1,000 வசூலிக்கப்பட்டு வந்தது. அதேபோன்று, மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுபவர்களிடம் ரூ. 2,000 வசூலிக்கப்பட்டு வந்தது.

இனி எல்லாமே பத்து மடங்கு அதிகம்.... புதிய அபராதம் குறித்த முழுமையான தகவல்!

அக்ரிகேட்டர்களுக்கு வழங்கப்பட்ட உரிமத்தை மீறி செயல்பட்டால் அவர்களுக்கு ரூ. 1 லட்சம் வரை அபராதம் விதிக்கப்பட உள்ளது. அதேபேன்று, ஓவர்லோடிங் செய்து வாகனத்தை இயக்குபவர்களுக்கு ரூ. 25 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட இருக்கின்றது.

காரில் சீட் பெல்ட் அணியாமல் செல்பவர்களுக்கு ரூ. 1,000 அபராதம் மற்றும் இரு சக்கர வாகனங்களை ஓட்டும்போது ஹெல்மெட் அணியாதவர்களுக்கு ரூ. 1,000 அபராதம் விதிக்கப்படும். அதே நேரத்தில் அவர்களின் ஓட்டுநர் உரிமங்களும் மூன்று மாதங்களுக்கு தகுதி நீக்கம் செய்யப்படும்.

இனி எல்லாமே பத்து மடங்கு அதிகம்.... புதிய அபராதம் குறித்த முழுமையான தகவல்!

இந்த புதிய சட்டத்தின்மூலம், ஓட்டுநர் பயிற்சி முறையும் பலப்படுத்தப்பட்டுள்ளது. அதேபோன்று, விபத்தில் சிக்கியவர்களுக்கு உதவுபவர்களுக்கு எந்தவொரு பிரச்னையும் ஏற்படாதவாறும் இந்த மசோதாவில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது.

மேற்கூரிய குற்றங்களை அதிகாரிகளே மீறும்பட்சத்தில், அவர்களிடம் இரு மடங்காக அபராதம் வசூலிக்கப்பட இருக்கின்றது.

இனி எல்லாமே பத்து மடங்கு அதிகம்.... புதிய அபராதம் குறித்த முழுமையான தகவல்!

மத்திய அரசின் இந்த புதிய திட்டமானது, சாலை போக்குவரத்து விதிமீறல்களைக் குறைக்கும் விதமாகக் கொண்டு வரப்பட்டுள்ளது. இருப்பினும், இந்த அதிகபட்ச அபராதத் தொகையைக் காட்டி, போலீஸார் சிலர் வாகன ஓட்டிகளிடம் முறைகேடு செய்யலாம் என கூறப்படுகிறது.

Source:auto.economictimes

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Govt Approves Motor Bill. Read In Tamil.
Story first published: Tuesday, June 25, 2019, 19:46 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X