பெட்ரோல் விலை உயர்வுக்கு மாநில அரசுகள் தான் காரணம்; ஜிஎஸ்டிக்குள் கொண்டு வர கடும் எதிர்ப்பு

இந்தியாவில் பெட்ரோல், டீசலை ஜிஎஸ்டி வரம்பிற்குள் கொண்டு வர மத்திய அரசு விருப்பம் தெரிவித்துள்ளதாகவும், ஆனால் மாநில அரசுகள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருவதால் தற்போதைக்கு பெட்ரோல், டீசலுக்கு

By Balasubramanian

இந்தியாவில் பெட்ரோல், டீசலை ஜிஎஸ்டி வரம்பிற்குள் கொண்டு வர மத்திய அரசு விருப்பம் தெரிவித்துள்ளதாகவும், ஆனால் மாநில அரசுகள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருவதால் தற்போதைக்கு பெட்ரோல், டீசலுக்கு ஜிஎஸ்டி வரி என்பது சாத்தியமே இல்லை என நம்ப தகுந்த வட்டாரங்களில் இருந்து தகவல்கள் வெளியாகியுள்ளது.

பெட்ரோல் விலை உயர்வுக்கு மாநில அரசுகள் தான் காரணம்; ஜிஎஸ்டிக்குள் கொண்டு வர கடும் எதிர்ப்பு

இந்தியாவில் மத்திய அரசு ஒரு தேசம் ஒரு வரி என்ற கொள்கையில் ஜிஎஸ்டி வரியை கடந்தாண்டு ஜூலை மாதம் அறிமுகப்படுத்தியது. நாட்டில் உள்ள பல்வேறு வரிகளை ஒன்றினைத்து 5 ஸ்லாப்களாக பிரித்து அதன் கீழ் அனைத்து வகையான தயாரிப்புகள் மற்றும் சேவைகள் வகைப்படுத்தப்பட்டு அதற்கு வரி விதிக்கப்படுகிறது.

பெட்ரோல் விலை உயர்வுக்கு மாநில அரசுகள் தான் காரணம்; ஜிஎஸ்டிக்குள் கொண்டு வர கடும் எதிர்ப்பு

இந்த வகைப்படுத்தல் மற்றும் ஜிஎஸ்டி விவகாரங்களை கட்டமைக்க ஜிஎஸ்டி கவுன்சில் உருவாக்கப்பட்டுள்ளது. அந்த கவுன்சிலில் இந்தியாவில் உள்ள அனைத்து மாநில அரசின் பிரதிநிதிகளும் உள்ளடக்கம்.

பெட்ரோல் விலை உயர்வுக்கு மாநில அரசுகள் தான் காரணம்; ஜிஎஸ்டிக்குள் கொண்டு வர கடும் எதிர்ப்பு

இந்நிலையில் இந்தியாவில் சில பொருட்களுக்கு மட்டும் ஜி.எஸ்.டியில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. அதில் பெட்ரோல்,டீசல், நேச்சுரல் கேஸ், ஜெட் பியூயல், குரூட் ஆயில், ஆகியவையும் அடங்கும்.

பெட்ரோல் விலை உயர்வுக்கு மாநில அரசுகள் தான் காரணம்; ஜிஎஸ்டிக்குள் கொண்டு வர கடும் எதிர்ப்பு

தற்போது இந்தியாவில் விற்பனையாகும் பெட்ரோலுக்கு மத்திய அரசு ரூ 19.48 மற்றும் டீசலுக்கு 15.33 என வரி வசூலிக்கிறது. மாநில அரசுகள் அதற்கு மேல் வாட் வரியை வசூலிக்கிறது. ஒவ்வொரு மாநிலமும் ஒவ்வொரு விதமாக வரியை வசூலிக்கின்றனர்.

பெட்ரோல் விலை உயர்வுக்கு மாநில அரசுகள் தான் காரணம்; ஜிஎஸ்டிக்குள் கொண்டு வர கடும் எதிர்ப்பு

குறைந்த பட்சமாக அந்தமான் நிக்கோபார் தீவுகளில் பெட்ரோல் மற்றும் 6 சதவீத வரியை வாட் வரியாக வசூலிக்கிறது, அதிகபட்சமாக பெட்ரோலுக்கு மஹாராட்டிராவில் 39.12 சதவீத வரியும், டீசலுக்கு அதிகபட்சமாக தெலுங்கானாவில் 26 சதவீத வரியும் வசூலிக்கப்படுகிறது.

பெட்ரோல் விலை உயர்வுக்கு மாநில அரசுகள் தான் காரணம்; ஜிஎஸ்டிக்குள் கொண்டு வர கடும் எதிர்ப்பு

தற்போது நாம் பெட்ரோலுக்காக வழங்கப்படும் விலையில் பெட்ரோலில் 45-50 சதவீதமான பணமும், டீசலில் 35-40 சதவீதமான பணமும் வரியாக மத்திய மாநில அரசுகள் வசூலிக்கிறது.

பெட்ரோல் விலை உயர்வுக்கு மாநில அரசுகள் தான் காரணம்; ஜிஎஸ்டிக்குள் கொண்டு வர கடும் எதிர்ப்பு

தற்போது ஜிஎஸ்டியில் அதிகபட்சமாக உள்ள 28 சதவீத வரியை பெட்ரோலுக்கு விதித்தால் கூட பெட்ரோல் தற்போது விற்கப்படும் விலையில் இருந்து மிகவும் குறையும்.

பெட்ரோல் விலை உயர்வுக்கு மாநில அரசுகள் தான் காரணம்; ஜிஎஸ்டிக்குள் கொண்டு வர கடும் எதிர்ப்பு

ஆனால் இதன் மூலம் இருஅரசுகளும் பெரிய அளவு நஷ்டத்தை சந்திக்க நேரிடும். ஆனால் மக்கள் மத்தியிலும் சில அரசியல் கட்சிகள் மத்தியிலும் பெட்ரோலை ஜிஎஸ்டி வரம்பிற்குள் கொண்டு வர கோரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது.

பெட்ரோல் விலை உயர்வுக்கு மாநில அரசுகள் தான் காரணம்; ஜிஎஸ்டிக்குள் கொண்டு வர கடும் எதிர்ப்பு

இது குறித்து நம்ப தகுந்த வட்டாரத்தில் இருந்து வந்த தகவலில் கடந்த 4ம் தேதி நடந்த ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் இது குறித்த விவகாரத்தை மத்திய அரசு கொண்டு வந்தது. அதற்கு அனைத்து மாநில தரப்பில் இருந்தும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டதாக தெரிகிறது.

பெட்ரோல் விலை உயர்வுக்கு மாநில அரசுகள் தான் காரணம்; ஜிஎஸ்டிக்குள் கொண்டு வர கடும் எதிர்ப்பு

மத்திய அரசு தற்போது பெட்ரோல் மற்றும் டீசலை மட்டுமாவது ஜிஎஸ்டி வரம்பிற்குள் கொண்டு வர முயற்சி செய்து வருகிறது. ஆனால் அதற்கு மாநில அரசுகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. பெட்ரோல் டீசல் ஜிஎஸ்டி வரம்பிற்குள் வந்தால் மத்திய அரசு ஆண்டிற்கு சுமார் 20 ஆயிரம் கோடி அளவில் வருவாய் இழப்பை சந்திக்க நேரிடும் என உத்தேசிக்கப்பட்டுள்ளது.

பெட்ரோல் விலை உயர்வுக்கு மாநில அரசுகள் தான் காரணம்; ஜிஎஸ்டிக்குள் கொண்டு வர கடும் எதிர்ப்பு

இதன் காரணமாக பெட்ரோலிய பொருட்கள் மூலம் மத்திய அரசிற்கு கடந்த 2014-2015ம் ஆண்டில் ரூ 99,184 கோடியாக இருந்த வருவாய் 2017-2018ல் 2,29,019 கோடியாக உயர்ந்தது. அதே போல மாநில அரசுகளுக்கு 2014-15ல் மொத்தமாக ரூ 1,37,157 கோடியாக கிடைத்த வருவாய், 2017-18 ல் 1,84,091 கோடியாக உயர்ந்துள்ளது.

பெட்ரோல் விலை உயர்வுக்கு மாநில அரசுகள் தான் காரணம்; ஜிஎஸ்டிக்குள் கொண்டு வர கடும் எதிர்ப்பு

தற்போது நம்ப தகுந்த வட்டாரங்களில் இருந்து வரும் தகவலின் படி பெட்ரோலை ஜிஎஸ்டி வரம்பிற்குள் கொண்டு வர மத்திய அரசு ஆர்வம் காட்டி வந்தாலும் மாநில அரசுகள் அதை தொடர்ந்து எதிர்த்து வருகிறது. பொட்ரோல், டீசலை ஜிஎஸ்டி வரம்பிற்குள் கொண்டு வருவது மூலம் ஏற்படும் நஷ்டத்தை ஈடு செய்ய மாநில அரசுகள் முயற்சி எடுக்காத வரையில் பெட்ரோல் டீசல் ஜிஎஸ்டி வரம்பிற்குள் வருவது கஷ்டம் தான்.

டிரைவ்ஸ்பார்க் தமிழ்தளத்தில் அதிகம் வாசிக்கப்படும் செய்திகள்

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #offbeat
English summary
GST on petrol, diesel affair, states are not in favor of Center. Read in Tamil
Story first published: Wednesday, August 22, 2018, 12:13 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X