சிறுவனின் பிறந்த நாளுக்காக அசத்தல்... இப்படி ஒரு கார் டெலிவரியை இதற்கு முன் பாத்திருக்க மாட்டீங்க...

சிறுவனின் பிறந்த நாளை முன்னிட்டு, கியா நிறுவனத்தின் டீலர்ஷிப் ஒன்று, மிகவும் வித்தியாசமான முறையில் காரை டெலிவரி செய்துள்ளது. இதுகுறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

சிறுவனின் பிறந்த நாளுக்காக அசத்தல்... இப்படி ஒரு கார் டெலிவரியை இதற்கு முன் பாத்திருக்க மாட்டீங்க...

புதிய கார்களை டெலிவரி எடுப்பது என்பது கொண்டாட்டமான ஒரு நிகழ்வாக இருக்கும். குறிப்பாக முதல் முறையாக கார் வாங்குபவர்களுக்கு, அது வாழ்க்கையில் மறக்க முடியாத அளவிற்கு இன்பமான நாளாக கூட இருக்கலாம். ஆனால் கார்களை டெலிவரி எடுக்கும் நிகழ்ச்சிகள் சில சமயங்களில், கேக் வெட்டுவதுடனும், ஒரு சில புகைப்படங்களை எடுப்பதுடனும் முடிந்து விடுகிறது.

சிறுவனின் பிறந்த நாளுக்காக அசத்தல்... இப்படி ஒரு கார் டெலிவரியை இதற்கு முன் பாத்திருக்க மாட்டீங்க...

இந்த சூழலில், தங்களது மகனின் பிறந்த நாளை முன்னிட்டு கியா சொனெட் காரை தம்பதியினர் டெலிவரி எடுக்கும் காணொளி ஒன்று தற்போது வெளியாகியுள்ளது. பிறந்த நாள் கொண்டாடும் அந்த சிறுவனின் மகிழ்ச்சிக்காக, சொனெட் காரை டெலிவரி கொடுக்கும்போது, சிறிய நிகழ்ச்சி ஒன்றை கியா டீலர்ஷிப் நடத்தியது.

ராயல் என்பீல்டு ஹிமாலயன் பிஎஸ்6 - இப்படி ஒரு ரிவியூ வீடியோ இதுக்கு முன்னாடி பாத்திருக்க மாட்டீங்க!!!

சிறுவனின் பிறந்த நாளுக்காக அசத்தல்... இப்படி ஒரு கார் டெலிவரியை இதற்கு முன் பாத்திருக்க மாட்டீங்க...

அந்த நிகழ்ச்சிதான் தற்போது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. அந்த நிகழ்ச்சியின் கருப்பொருளாக மார்வெல்லின் அவென்ஜர்ஸ் இருந்ததே அதற்கு காரணம். விக்ரம் பட்டேல் என்ற யூ-டியூப் சேனலில் வெளியாகியுள்ள காணொளியில், மிகவும் பிரபலமான சூப்பர்ஹீரோக்களின் சிறிய கட்அவுட்களை நம்மால் பார்க்க முடிகிறது. அத்துடன் ஸ்பைடர்மேன் மற்றும் சூப்பர்மேன் போல் இரண்டு பேர் உடை அணிந்திருந்தனர்.

ராயல் என்பீல்டு ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்கிறதா புதிய மீட்டியோர் 350? வீடியோ!

பிறந்த நாள் கொண்டாடிய சிறுவனுக்கு இந்த நிகழ்ச்சி பெரும் மகிழ்ச்சியை அளித்திருக்கும் என்பதில் சந்தேகமில்லை. எனவே இது பாராட்டத்தக்க ஒரு முயற்சிதான். குஜராத் மாநிலம் வதோதரா நகரில், கோபிநாத்ஜி கியா என்ற டீலர்ஷிப் செயல்பட்டு வருகிறது. அங்குதான் இந்த சிறிய நிகழ்ச்சி நடத்தப்பட்டுள்ளது.

சிறுவனின் பிறந்த நாளுக்காக அசத்தல்... இப்படி ஒரு கார் டெலிவரியை இதற்கு முன் பாத்திருக்க மாட்டீங்க...

இந்த குடும்பத்தினர் வாங்கியுள்ள கியா சொனெட், கடந்த செப்டம்பர் மாதம்தான் இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. கவர்ச்சிகரமான டிசைன், அட்டகாசமான வசதிகள், பல்வேறு இன்ஜின் தேர்வுகள் மற்றும் சவாலான விலை நிர்ணயம் உள்ளிட்ட காரணங்களால், கியா சொனெட் காரின் விற்பனை மிகவும் சிறப்பாக உள்ளது.

சிறுவனின் பிறந்த நாளுக்காக அசத்தல்... இப்படி ஒரு கார் டெலிவரியை இதற்கு முன் பாத்திருக்க மாட்டீங்க...

கியா சொனெட் கார் மொத்தம் மூன்று இன்ஜின் தேர்வுகளில் கிடைக்கிறது. இதில், முதலாவது இன்ஜின் 1.2 லிட்டர் பெட்ரோல் யூனிட் ஆகும். இந்த இன்ஜின் அதிகபட்சமாக 83 பிஎஸ் பவரையும், 115 என்எம் டார்க் திறனையும் உருவாக்க கூடியது. இந்த இன்ஜின் உடன் 5 ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் தேர்வு வழங்கப்படுகிறது.

சிறுவனின் பிறந்த நாளுக்காக அசத்தல்... இப்படி ஒரு கார் டெலிவரியை இதற்கு முன் பாத்திருக்க மாட்டீங்க...

இரண்டாவது இன்ஜின், 1.5 லிட்டர் டர்போ டீசல் யூனிட் ஆகும். 6 ஸ்பீடு மேனுவல் அல்லது 6 ஸ்பீடு ஆட்டோமெட்டிக் டிரான்ஸ்மிஷன் தேர்வுகளுடன் இந்த இன்ஜினை பெறலாம். மேனுவல் கியர் பாக்ஸ் தேர்வில் இந்த இன்ஜின் அதிகபட்சமாக 100 பிஎஸ் பவரையும், 240 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். ஆட்டோமெட்டிக் மாடலில் 115 பிஎஸ் பவரையும், 200 என்எம் டார்க் திறனையும் உருவாக்கும்.

கடைசி இன்ஜின் தேர்வு, 1.0 லிட்டர் டர்போ-பெட்ரோல் யூனிட் ஆகும். இந்த இன்ஜின் அதிகபட்சமாக 120 பிஎஸ் பவரையும், 172 என்எம் டார்க் திறனையும் வழங்க கூடியது. 6 ஸ்பீடு ஐஎம்டி அல்லது 7 ஸ்பீடு டிசிடி தேர்வுகளுடன் இந்த இன்ஜின் கிடைக்கும். மாருதி சுஸுகி விட்டாரா பிரெஸ்ஸா, ஹூண்டாய் வெனியூ, டாடா நெக்ஸான், மஹிந்திரா எக்ஸ்யூவி300 உள்ளிட்ட கார்களுடன் கியா சொனெட் போட்டியிட்டு வருகிறது.

Most Read Articles

மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Gujarat: Kia Sonet Compact SUV Delivered To Customer In An Avengers-Themed Event - Details. Read in Tamil
Story first published: Saturday, November 21, 2020, 17:36 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X