ஹெல்மெட் அணியாவிட்டால் தடபுடல் விருந்துடன் ஒரு நாள் ஜாலி டூர்... எங்கு என தெரிந்தால் போக மாட்டீங்க!

ஹெல்மெட் அணியாமல் டூவீலர்களில் பயணம் செய்பவர்களுக்கு தடபுடல் விருந்துடன் ஒரு நாள் ஜாலி டூரை தமிழக போலீசார் ஏற்பாடு செய்து வருகின்றனர். ஆனால் எங்கு? என தெரிந்தால், நீங்கள் நிச்சயம் போக மாட்டீர்கள்.

ஹெல்மெட் அணியாவிட்டால் தடபுடல் விருந்துடன் ஒரு நாள் ஜாலி டூர்... எங்கு என தெரிந்தால் போக மாட்டீங்க!

இந்தியாவில் நடைபெறும் சாலை விபத்துக்களில் மக்கள் கொத்து கொத்தாய் உயிரிழந்து வருகின்றனர். ஒரு உயிரை இழந்த குடும்பத்திற்கு மட்டுமே அதன் வலி என்னவென்று தெரியும். யாரோ ஒருவர் அலட்சியமாக செய்த தவறால், சம்பந்தமே இல்லாத நபர்கள் பாதிக்கப்படுகின்றனர். சில சமயங்களில் சின்னஞ்சிறு தவறுகள் கூட மிகப்பெரிய பின்விளைவுகளை ஏற்படுத்தி விடுகின்றன.

ஹெல்மெட் அணியாவிட்டால் தடபுடல் விருந்துடன் ஒரு நாள் ஜாலி டூர்... எங்கு என தெரிந்தால் போக மாட்டீங்க!

இருந்தபோதும் வாகன ஓட்டிகள் பலர் போக்குவரத்து விதிமுறைகள் எதையும் பெரிதாக சட்டை செய்வதே கிடையாது. இதுதான் சாலை விபத்துக்களுக்கு மிக முக்கியமான காரணம். இந்தியாவில் தண்டனைகள் கடுமையாக இல்லாததும் கூட இதற்கு ஒரு காரணம் என்று சொல்லலாம். ஆனால் தற்போது காட்சிகள் படிப்படியாக மாறி வருகின்றன.

ஹெல்மெட் அணியாவிட்டால் தடபுடல் விருந்துடன் ஒரு நாள் ஜாலி டூர்... எங்கு என தெரிந்தால் போக மாட்டீங்க!

போக்குவரத்து விதிமுறை மீறல்களுக்கு எதிரான தண்டனைகளை மத்திய, மாநில அரசுகள் கடுமையாக்கி கொண்டுள்ளன. சமீபத்தில் நிறைவேற்றப்பட்ட மோட்டார் வாகன சட்ட திருத்த மசோதாவை இதற்கு ஓர் உதாரணமாக சொல்லலாம். இதில், போக்குவரத்து விதிமீறல்களுக்கான அபராதம் பல மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது.

ஹெல்மெட் அணியாவிட்டால் தடபுடல் விருந்துடன் ஒரு நாள் ஜாலி டூர்... எங்கு என தெரிந்தால் போக மாட்டீங்க!

இதுதவிர விதிகளை மீறுபவர்களை சிசிடிவி கேமரா உள்ளிட்ட அதிநவீன வசதிகள் மூலம் போலீசாரும் கண் கொத்தி பாம்பாக கவனிக்க தொடங்கியுள்ளனர். போலீசார்தான் இல்லையே என்ற அலட்சியம் வேண்டாம். அபராத ரசீது உங்கள் வீடு தேடி வந்து விடும். போக்குவரத்து விதிமீறல்களை குறைக்க அந்தளவிற்கு அதிநவீன வசதிகள் கொண்டு வரப்பட்டு விட்டன.

ஹெல்மெட் அணியாவிட்டால் தடபுடல் விருந்துடன் ஒரு நாள் ஜாலி டூர்... எங்கு என தெரிந்தால் போக மாட்டீங்க!

இரு சக்கர வாகனங்களில் பயணம் செய்யும் இருவரும் ஹெல்மெட் அணிய வேண்டும் என்ற விதி இந்தியா முழுக்க அமலில் உள்ளது. ஆனால் பெயரளவிற்கு ஏதோ ஒரு சிலர் மட்டுமே இந்த விதிமுறையை பின்பற்றி வருகின்றனர். மற்றவர்களுக்கோ தலை முடி அதிகம் கொட்டுகிறது, தலை அதிகம் வியர்க்கிறது என ஏகப்பட்ட கவலைகள்.

ஹெல்மெட் அணியாவிட்டால் தடபுடல் விருந்துடன் ஒரு நாள் ஜாலி டூர்... எங்கு என தெரிந்தால் போக மாட்டீங்க!

இதில், நீங்கள் இரண்டாவது ரகத்தை சேர்ந்தவர் என்றால் உங்களை உடனடியாக மாற்றி கொள்ளுங்கள். இந்தியாவில் சாலை விபத்துக்களால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை மிக அதிகமாக இருப்பதற்கு ஹெல்மெட் அணியாமல் இரு சக்கர வாகனங்களில் பயணம் செய்வதே முக்கிய காரணமாக உள்ளது. எனவே அத்தகைய நபர்களைதான் தற்போது போலீசார் குறி வைத்துள்ளனர்.

ஹெல்மெட் அணியாவிட்டால் தடபுடல் விருந்துடன் ஒரு நாள் ஜாலி டூர்... எங்கு என தெரிந்தால் போக மாட்டீங்க!

தமிழ் நாட்டை பொறுத்தவரை கட்டாய ஹெல்மெட் விதி தற்போது தீவிரமாக அமல்படுத்தப்பட்டு வருகிறது. சென்னை உயர் நீதிமன்றம் சாட்டையை சுழற்றியதே இதற்கு முக்கிய காரணம். தமிழகத்தில் கட்டாய ஹெல்மெட் விதிமுறையை கண்டிப்புடன் அமல்படுத்த வேண்டும் என சமீபத்தில் சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டது.

ஹெல்மெட் அணியாவிட்டால் தடபுடல் விருந்துடன் ஒரு நாள் ஜாலி டூர்... எங்கு என தெரிந்தால் போக மாட்டீங்க!

அத்துடன் இதனை முறையாக அமல்படுத்தாத போலீசாரையும் நீதிபதிகள் லெப்ட், ரைட் வாங்கி விட்டனர். எனவே போலீசார் உடனடியாக செயலில் இறங்கியுள்ளனர். ஆனால் இன்னும் எத்தனை நாளுக்குதான் அபராதம் என்ற பழைய பல்லவியையே பாடி கொண்டிருப்பது? எவ்வளவு அபராதம் விதித்தாலும், அசால்ட்டாக கட்டி விட்டு டாடா காட்டி செல்பவர்கள் ஏராளமானோர் இங்கு உள்ளனர்.

ஹெல்மெட் அணியாவிட்டால் தடபுடல் விருந்துடன் ஒரு நாள் ஜாலி டூர்... எங்கு என தெரிந்தால் போக மாட்டீங்க!

எனவே தமிழக காவல் துறை தற்போது கொஞ்சம் மாற்றி யோசிக்க தொடங்கியுள்ளது. குறிப்பாக தர்மபுரி மாவட்டத்தில் தற்போது எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் மூலம் ஹெல்மெட் அணிவதன் அவசியத்தை வலியுறுத்தி விழிப்புணர்வு பேரணி உள்ளிட்டவற்றைகளை நடத்தி நடத்தி போலீசாருக்கும் 'போர்' அடித்து விட்டது.

ஹெல்மெட் அணியாவிட்டால் தடபுடல் விருந்துடன் ஒரு நாள் ஜாலி டூர்... எங்கு என தெரிந்தால் போக மாட்டீங்க!

இனி அதிரடி ஆக்ஸன்தான் சரிப்பட்டு வரும் என போலீசார் செயலில் இறங்கி விட்டனர். தர்மபுரி நகரில் நேற்று முன் தினம் (ஆகஸ்ட் 7) வாகன தணிக்கை மிக தீவிரமாக நடைபெற்றது. இதில், ஹெல்மெட் அணியாமல் இரு சக்கர வாகனங்களில் பயணம் செய்த 70 பேர் சிக்கினர். வழக்கம் போல் ஃபைன் கட்டிவிட்டு சென்று விடலாம் என அவர்கள் நினைத்திருக்கலாம். ஆனால் நடந்ததோ வேறு.

ஹெல்மெட் அணியாவிட்டால் தடபுடல் விருந்துடன் ஒரு நாள் ஜாலி டூர்... எங்கு என தெரிந்தால் போக மாட்டீங்க!

காவல் துறை ஏற்பாடு செய்திருந்த வாகனம் அவர்கள் அனைவரையும் அள்ளிப்போட்டு கொண்டு பயணிக்க தொடங்கியது. சுமார் 8 கிலோ மீட்டர் சென்ற பின்புதான் அந்த வாகனம் நின்றது. வாகனம் வந்து நின்ற இடம் தர்மபுரி மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம். பல்வேறு நீதிமன்றங்கள் அங்கு இயங்கி வருகின்றன.

ஹெல்மெட் அணியாவிட்டால் தடபுடல் விருந்துடன் ஒரு நாள் ஜாலி டூர்... எங்கு என தெரிந்தால் போக மாட்டீங்க!

இதன்பின் அவர்கள் அனைவரையும் வாகனத்தில் இருந்து கீழே இறக்கி போலீசார் நீதிமன்ற வளாகத்திற்குள் அழைத்து சென்றனர். ஹெல்மெட் அணியாத குற்றத்திற்கு அபராதம் செலுத்துவதற்காக நீதிமன்றத்திற்கு சென்றால் என்ன நடக்கும்? என்பதை அவர்கள் போதும் போதும் எனக்கூறும் அளவிற்கு போலீசார் விலாவரியாக வகுப்பு எடுத்தனர்.

ஹெல்மெட் அணியாவிட்டால் தடபுடல் விருந்துடன் ஒரு நாள் ஜாலி டூர்... எங்கு என தெரிந்தால் போக மாட்டீங்க!

இந்த வித்தியாசமான நடவடிக்கைக்கு தலைக்கவச இன்ப சுற்றுலா என போலீசார் பெயரிட்டுள்ளனர். இதில், மொத்தம் 11 நீதிமன்றங்களுக்கு அவர்கள் அழைத்து செல்லப்பட்டனர். மாவட்ட அமர்வு நீதிமன்றம், மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றம், சார்பு நீதிமன்றம், முதன்மை குற்றவியல் நடுவர் நீதிமன்றம், மாவட்ட உரிமையியல் நீதிமன்றம், குடும்ப நல நீதிமன்றம், மாவட்ட மகிளா நீதிமன்றம், கூடுதல் மகிளா நீதிமன்றம் உள்பட 11 நீதிமன்றங்கள் இதில் அடக்கம்.

ஹெல்மெட் அணியாவிட்டால் தடபுடல் விருந்துடன் ஒரு நாள் ஜாலி டூர்... எங்கு என தெரிந்தால் போக மாட்டீங்க!

படிக்கும்போதே தலை சுற்றுகிறதா? ஹெல்மெட் அணியாதவர்களுக்கு இன்னும் இன்பமாக இருந்திருக்கும்! அதனால்தான் இதற்கு பெயர் இன்ப சுற்றுலா. நீதிமன்றத்திற்கு வந்தால் எவ்வளவு கால விரயம் ஏற்படும் என்பதையும் போலீசார் அவர்களுக்கு விளக்கினர். வான்டட் ஆக ஜாலி டூர் அழைத்து வந்ததால், சிக்கியவர்களில் பலரால் அன்றைய தினம் வேலைக்கு செல்ல முடியாமல் போய் விட்டது.

ஹெல்மெட் அணியாவிட்டால் தடபுடல் விருந்துடன் ஒரு நாள் ஜாலி டூர்... எங்கு என தெரிந்தால் போக மாட்டீங்க!

எனவே நேரத்தின் அருமை அவர்களுக்கு தற்போது நன்றாக புரிந்திருக்கும் என போலீசார் தெரிவித்துள்ளனர். அத்துடன் இனி கண்டிப்பாக ஹெல்மெட் அணிவோம் என அவர்கள் வாக்குறுதி கொடுத்ததாகவும் போலீசார் கூறியுள்ளனர். போலீசாரையும் சும்மா சொல்லக்கூடாது. தேனீர், சிற்றுண்டி என சிக்கியவர்களை நன்றாக கவனித்தும் கொண்டுள்ளனர்.

ஹெல்மெட் அணியாவிட்டால் தடபுடல் விருந்துடன் ஒரு நாள் ஜாலி டூர்... எங்கு என தெரிந்தால் போக மாட்டீங்க!

தலைக்கவச இன்ப சுற்றுலா திட்டத்திற்கு என போலீசார் தயார் செய்துள்ள பேனரில், சுற்றுலா நேரம் காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை என குறிப்பிட்டிருப்பது ஹைலைட்! மதிய விருந்து அளிக்கப்படும் என பின்குறிப்பிட்டிருப்பது அதை விட ஹைலைட்!! எப்படியோ போலீசாரின் இந்த வித்தியாசமான முயற்சி சக்ஸஸ்தான்.

ஹெல்மெட் அணியாவிட்டால் தடபுடல் விருந்துடன் ஒரு நாள் ஜாலி டூர்... எங்கு என தெரிந்தால் போக மாட்டீங்க!

வாகன ஓட்டிகள் விழிப்புணர்வு அடைந்திருப்பதுடன், தற்போது இந்த செய்தி தமிழ்நாடு முழுக்க பரவலாக பேசப்படுகிறது. அனைவராலும் பாராட்டவும் படுகிறது. முடி கொட்டுகிறது, வியர்க்கிறது போன்ற தவிர்க்கவே முடியாத காரணங்களால் ஹெல்மெட் அணிவதை தவிர்க்கும் ரகத்தை சேர்ந்தவர்களில் நீங்களும் ஒருவரா? அப்படியென்றால் உடனே மாறி விடுங்கள் பாஸ். காவல் துறை கைவசம் இன்னும் புதுப்புது திட்டங்கள் இருப்பதாக தகவல்.

Source: Puthiyathalaimurai

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Happy Tour For Helmetless Bike Riders : Tamil Nadu Police New Plan. Read in Tamil
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X