வாவ்... மக்களின் நலனுக்காக சிறப்பு நடவடிக்கை எடுக்கும் ஹரியானா காவல்துறை...

மாநில மக்களின் நலனுக்காக சிறப்பு நடவடிக்கையை மேற்கொள்ள இருப்பதாக காவல்துறை தலைமை இயக்குனர் தெரிவித்துள்ளார். இதுகுறித்த கூடுதல் தகவலை இந்த பதிவில் காணலாம்.

வாவ்... மக்களின் நலனுக்காக சிறப்பு நடவடிக்கை எடுக்கும் ஹரியானா காவல்துறை...

நாட்டிற்கே மிகப்பெரிய அச்சுறுத்தலாக போக்குவரத்து விதிமீறல்கள் உருவெடுத்து வருகின்றது. அதுமட்டுமின்றி, இதன் வீரியம் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் இருக்கின்றது. ஆகையால், இதனை முற்றிலுமாக ஒழித்துகட்டும் வகையில் மத்திய அரசு புதிய (திருத்தப்பட்ட) மோட்டார் வாகன சட்டத்தை நாடு முழுவதும் அமல்படுத்தியது.

வாவ்... மக்களின் நலனுக்காக சிறப்பு நடவடிக்கை எடுக்கும் ஹரியானா காவல்துறை...

இந்த சட்டம் அமலுக்கு வந்ததில் இருந்து நாடே பெரும் பரபரப்பாக காட்சியளிக்கின்றது. புதிய திருத்தப்பட்ட மோட்டார் வாகன சட்டம் முன்னதாக வசூலித்து வந்த அபராத்தை, முன்பெப்போதும் இல்லாத அளவில் பத்து மடங்கு உயர்த்தி வசூலிக்கும் வகையில் மாற்றியமைக்கப்பட்டுள்ளது.

வாவ்... மக்களின் நலனுக்காக சிறப்பு நடவடிக்கை எடுக்கும் ஹரியானா காவல்துறை...

இதுவே இந்த புதிய அபராத திட்டத்திற்கு ஒரு சில மாநில அரசுகள் எதிர்ப்பு தெரிவிக்க முக்கிய காரணமாக இருக்கின்றது.

அதேசமயம், பல மாநில அரசுகள் போக்குவரத்து விதிமீறல்களே இல்லாத மாநிலமாக மாற்றும் நோக்கில், புதிய அபராத திட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளன. குறிப்பாக பாஜக கட்சியினர் ஆளும் மாநிலங்கள் இதனை நடைமுறைக்கு கொண்டுவந்துள்ளன.

வாவ்... மக்களின் நலனுக்காக சிறப்பு நடவடிக்கை எடுக்கும் ஹரியானா காவல்துறை...

இதனால், ஒவ்வொரு நாளும் அந்த மாநிலத்தில் வெளிவரும் செய்திகளுக்கு மிகப்பெரிய கவனம் செலுத்தப்பட்டு வருகின்றது.

அதிலும், குறிப்பாக அபராதம் குறித்த வெளிவரும் செய்திகளுக்கு அதீத ஆர்வம் காட்டப்படுகின்றது. ஏனென்றால், போக்குவரத்து விதிமீறலில் ஈடுபடும் வாகன ஓட்டிகளுக்கு உச்சபட்ச அளவில் அபராதத்திற்கான செல்லாண் வழங்கப்பட்டு வருகின்றது.

வாவ்... மக்களின் நலனுக்காக சிறப்பு நடவடிக்கை எடுக்கும் ஹரியானா காவல்துறை...

அவ்வாறு, வழங்கப்படும் அபராதம் வாகனத்தின் விலையைக் காட்டிலும் அதிகமானதாக காட்சியளிக்கின்றன. இதனால், சில நேரங்களில் வாகன ஓட்டிகள் மற்றும் போலீஸார்கள் இடையே மோதல் ஏற்படுகின்றது.

அந்தவகையில், ஹரியானா மாநிலத்தில் அரங்கேறிய உச்சபட்ச அபராதம்குறித்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியிருந்தது.

வாவ்... மக்களின் நலனுக்காக சிறப்பு நடவடிக்கை எடுக்கும் ஹரியானா காவல்துறை...

இதனால், வாகன ஓட்டிகள் போக்குவரத்து விதிமீறலில் ஈடுபடாத வரை அவர்களை மடக்கி விசாரிக்க வேண்டாம் என அம்மாநில டிஜிபி போலீஸாருக்கு அறிவிறுத்தியிருந்தார்.

இந்நிலையில், மீண்டும் ஓர் புதிய அதிரடி அறிவிப்பை ஹரியானா மாநில டிஜிபி மனோஜ் யாதவ் வெளியிட்டுள்ளார்.

வாவ்... மக்களின் நலனுக்காக சிறப்பு நடவடிக்கை எடுக்கும் ஹரியானா காவல்துறை...

அதாவது, மாநிலத்தில் போக்குவரத்து விதிமீறலுக்கான அபராதம் பல மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி, முன்பெப்போதும் இல்லாத அளவிலான கெடுபிடியை போக்குவரத்து போலீஸார் காட்டி வருகின்றனர்.

ஆகையால், வாகன ஓட்டிகள் இதில் வீணாக சிக்கி, தேவையற்ற சட்ட சிக்கலை சந்திப்பதைத் தவிர்ப்பதற்காக விழிப்புணர்வு மற்றும் போக்குவரத்து கற்பித்தலை மேற்கொள்ளவிருப்பதாக அவர் அறிவித்துள்ளார்.

வாவ்... மக்களின் நலனுக்காக சிறப்பு நடவடிக்கை எடுக்கும் ஹரியானா காவல்துறை...

இந்த சிறப்பான நிகழ்வை மேற்கொள்வதற்காக ஓர் தனி குழு உருவாக்கப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், இந்த விழிப்புணர்வு நடவடிக்கை மாநிலத்தின் முக்கியமான உட்பட அனைத்து பகுதிகளும் மேற்கொள்ளப்பட உள்ளது.

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Haryana Police Launches Awareness Program. Read In Tamil.
Story first published: Saturday, September 14, 2019, 13:34 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X