சாட்டையை சுழற்றும் தமிழக காவல் துறை... இனி இந்த விதியை மீறினால் காலி... எல்லா இடத்துலயும் நின்னு பிடிக்கறாங்க!

தமிழகத்தில் இன்று முதல் காவல் துறையினர் அதிரடி நடவடிக்கை ஒன்றை மேற்கொண்டு வருகின்றனர். இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

சாட்டையை சுழற்றும் தமிழக காவல் துறை... இனி இந்த விதியை மீறினால் காலி... எல்லா இடத்துலயும் நின்னு பிடிக்கறாங்க!

உலகிலேயே சாலை விபத்துக்கள் அதிகமாக நடக்கும் நாடுகளில் ஒன்று இந்தியா. இரு சக்கர வாகனங்களில் பயணம் செய்பவர்கள்தான் அதிகளவில் விபத்துக்களில் சிக்கி வருகின்றனர். அவர்களில் பலர் ஹெல்மெட் அணியாத காரணத்தால், சாலை விபத்துக்களில் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும் மிக அதிகமாக இருக்கிறது.

சாட்டையை சுழற்றும் தமிழக காவல் துறை... இனி இந்த விதியை மீறினால் காலி... எல்லா இடத்துலயும் நின்னு பிடிக்கறாங்க!

இந்தியாவில் இரு சக்கர வாகனங்களில் பயணம் செய்யும் இருவரும் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என்ற விதிமுறை அமலில் உள்ளது. ஆனால் ஒரு சில நகரங்களில் மட்டுமே இந்த விதிமுறையை போக்குவரத்து காவல் துறையினர் கண்டிப்புடன் அமல்படுத்தி வருகின்றனர். மற்ற பகுதிகளில் இந்த விதிமுறையை யாரும் பெரிதாக கண்டு கொள்வதில்லை.

சாட்டையை சுழற்றும் தமிழக காவல் துறை... இனி இந்த விதியை மீறினால் காலி... எல்லா இடத்துலயும் நின்னு பிடிக்கறாங்க!

இந்த சூழலில் சென்னை மாநகரில் இன்று முதல் (மே 23) இரு சக்கர வாகனங்களில் பின்னால் அமர்ந்து செல்பவரும் கட்டாயமாக ஹெல்மெட் அணிய வேண்டும் என்ற விதிமுறையை போக்குவரத்து காவல் துறையினர் தீவிரமாக அமல்படுத்த தொடங்கியுள்ளனர். எனவே இனி இரு சக்கர வாகனத்தை ஓட்டுபவருடன், பின்னால் அமர்ந்து பயணிப்பவரும் கண்டிப்பாக ஹெல்மெட் அணிய வேண்டும்.

சாட்டையை சுழற்றும் தமிழக காவல் துறை... இனி இந்த விதியை மீறினால் காலி... எல்லா இடத்துலயும் நின்னு பிடிக்கறாங்க!

சென்னை மாநகரில் இரு சக்கர வாகன விபத்துக்களில் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை தொடர்பாக ஆய்வு நடத்தியதை தொடர்ந்து, இரு சக்கர வாகனங்களில் பயணம் செய்யும் இருவரும் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என்ற உத்தரவை மாநகர போக்குவரத்து காவல் துறையினர் அதிரடியாக பிறப்பித்துள்ளனர்.

சாட்டையை சுழற்றும் தமிழக காவல் துறை... இனி இந்த விதியை மீறினால் காலி... எல்லா இடத்துலயும் நின்னு பிடிக்கறாங்க!

நடப்பாண்டு ஜனவரி 1ம் தேதியில் இருந்து கடந்த மே 15ம் தேதி வரையில், இரு சக்கர வாகனங்களில் ஹெல்மெட் அணியாமல் சென்ற காரணத்தால், 98 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இதில், 80 பேர் இரு சக்கர வாகனத்தை ஓட்டி சென்றவர்கள் ஆவர். எஞ்சிய 18 பேர் இரு சக்கர வாகனங்களில் பின்னால் அமர்ந்து சென்றவர்கள் ஆவர். ஹெல்மெட் அணிந்திருந்தால், அவர்கள் உயிர் பிழைத்திருக்கலாம் என கருதப்படுகிறது.

சாட்டையை சுழற்றும் தமிழக காவல் துறை... இனி இந்த விதியை மீறினால் காலி... எல்லா இடத்துலயும் நின்னு பிடிக்கறாங்க!

இதுதவிர இதே காலகட்டத்தில் இரு சக்கர வாகன விபத்துக்களில், ஹெல்மெட் அணியாத காரணத்தால், 841 பேர் காயம் அடைந்துள்ளனர். இதில், இரு சக்கர வாகனத்தை ஓட்டியவர்களின் எண்ணிக்கை 714 ஆகும். எஞ்சிய 127 பேர் பின்னால் அமர்ந்து சென்றவர்கள் ஆவர். ஹெல்மெட் அணிந்திருந்தால், இவர்கள் காயம் அடைந்தது தவிர்க்கப்பட்டிருக்கலாம்.

சாட்டையை சுழற்றும் தமிழக காவல் துறை... இனி இந்த விதியை மீறினால் காலி... எல்லா இடத்துலயும் நின்னு பிடிக்கறாங்க!

இந்த தரவுகளை பார்த்த பிறகே, இரு சக்கர வாகனங்களில் பயணம் செய்யும் இருவரும் கண்டிப்பாக ஹெல்மெட் அணிய வேண்டும் என சென்னை மாநகர போக்குவரத்து காவல் துறையினர் அதிரடியாக உத்தரவு பிறப்பித்தனர். இந்த விதிமுறை சென்னை மாநகரில் இன்று முதல் தீவிரமாக அமலுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

சாட்டையை சுழற்றும் தமிழக காவல் துறை... இனி இந்த விதியை மீறினால் காலி... எல்லா இடத்துலயும் நின்னு பிடிக்கறாங்க!

இரு சக்கர வாகனங்களில் ஹெல்மெட் அணியாமல் பயணம் செய்பவர்களை பிடிப்பதற்காக சென்னையில் தற்போது சிறப்பு வாகன தணிக்கை நடத்தப்பட்டு வருகிறது. இந்த சிறப்பு வாகன தணிக்கை தொடர்ச்சியாக நடத்தப்படும் என மாநகர போக்குவரத்து காவல் துறையினர் தெரிவித்துள்ளனர். இந்த வாகன தணிக்கையில் பிடிபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

சாட்டையை சுழற்றும் தமிழக காவல் துறை... இனி இந்த விதியை மீறினால் காலி... எல்லா இடத்துலயும் நின்னு பிடிக்கறாங்க!

இதன் ஒரு பகுதியாக ஹெல்மெட் அணியாமல் இரு சக்கர வாகனங்களில் செல்பவர்களுக்கு, நிகழ்விடத்திலேயே அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. போக்குவரத்து காவல் துறையினரின் நடவடிக்கைகளில் இருந்து தப்பிக்க வேண்டுமென்றால், இரு சக்கர வாகனங்களில் பயணம் செய்யும் அனைவரும் ஹெல்மெட் அணிந்து கொள்வது நல்லது.

சாட்டையை சுழற்றும் தமிழக காவல் துறை... இனி இந்த விதியை மீறினால் காலி... எல்லா இடத்துலயும் நின்னு பிடிக்கறாங்க!

இது அபராதம் செலுத்துவதில் இருந்து மட்டுமல்லாது, மருத்துவமனையில் வீணாக பணம் செலுத்துவதில் இருந்தும் உங்களை காப்பாற்றும். அத்துடன் உங்கள் உயிரையும் இது காக்கும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். சென்னையில் மட்டும்தானே தற்போது இந்த விதிமுறை தீவிரமாக அமலுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது என்று அலட்சியமாக இருக்காமல், அனைத்து பகுதிகளை சேர்ந்தவர்களும் இந்த விதிமுறையை பின்பற்றுவது நன்மை பயக்கும்.

சாட்டையை சுழற்றும் தமிழக காவல் துறை... இனி இந்த விதியை மீறினால் காலி... எல்லா இடத்துலயும் நின்னு பிடிக்கறாங்க!

கார்களில் பயணம் செய்பவர்களுக்கு ஏராளமான பாதுகாப்பு வசதிகள் இருக்கின்றன. ஆனால் இரு சக்கர வாகனங்களின் கதை வேறு. கார்களுடன் ஒப்பிடும்போது, இரு சக்கர வாகனங்களில் பயணம் செய்பவர்கள் விபத்தில் படுகாயம் அடைவதற்கோ, உயிரிழப்பதற்கோ வாய்ப்புகள் அதிகம். இதுபோன்ற விபரீதங்களை தவிர்க்க வேண்டுமென்றால், கண்டிப்பாக ஹெல்மெட் அணியுங்கள். மற்றவர்களுக்கும் முன்னுதாரணமாக இருங்கள்.

Note: Images used are for representational purpose only.

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Helmet mandatory for pillion riders in chennai from today check details here
Story first published: Monday, May 23, 2022, 13:55 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X