எது சிறந்தது: 5000 கிலோ அழுத்தத்தில் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட ஹெல்மெட்கள்!

பாதுகாப்பான ஹெல்மெட் குறித்த பரிசோதனையை பிரபல யுடியூப் சேனல் ஒன்று செய்துள்ளது. இதில், பல்வேறு நிறுவனத்தின் ஹெல்மெட்கள் 5 ஆயிரம் கிலோ எடை அழுத்தத்தில் சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளன. இதுகுறித்த தகவலை இந்த பதிவில் முழுமையாக காணலாம்.

எது சிறந்தது: 5000 கிலோ அழுத்தத்தில் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட ஹெல்மெட்கள்!

யுடியூப்பை மையமாக கொண்டு இயங்கும் ஹைட்ராலிக் பிரஸ் சேனல், அவ்வப்போது ஹைட்ராலிக் எந்திரத்தில், ஏதேனும் ஒரு பொருளை வைத்து நொருக்கி சோதனைக்கு உட்படுத்தும். மேலும், அந்த பொருள் குறித்த உறுதி தன்மையை விளக்கம் வகையில் அதனைக் காட்சிப்படுத்தி யுடியூப் பக்கத்தில் வெளியிடும். இந்த வீடியோவானது, நல்ல பொழுதுபோக்காக அமைந்தாலும், நாம் பயன்படுத்தும் பொருட்களின் உறுதித் தன்மை குறித்த தகவலை அறிந்து கொள்ள முடியும்.

எது சிறந்தது: 5000 கிலோ அழுத்தத்தில் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட ஹெல்மெட்கள்!

அந்தவகையில், ஹைட்ராலிக் பிரஸ் சேனல், அண்மைக் காலங்களாக வாகனங்களைச் சார்ந்த பொருட்களை ஹைட்ராலிக் மெஷின்மூலம் சோதனைச் செய்து வருகிறது. மேலும், இம்முறை இருசக்கர வாகன ஓட்டிகள் பயன்படுத்தும் ஹெல்மெட்டை நொருக்கி சோதனைச் செய்துள்ளது. இதுகுறித்த வீடியோவையும் அந்த சேனல் வெளியிட்டுள்ளது. இதில், பல்வேறு நிறுவனத்தின் ஹெல்மெட்டுகள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளன. அதில், முழு முகம் மற்றும் அரை முகங்களை மறைக்கின்ற வகையிலான ஹெல்மெட்டுகள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளன.

எது சிறந்தது: 5000 கிலோ அழுத்தத்தில் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட ஹெல்மெட்கள்!

ஹெல்மெட் என்பது, பெரும் விபத்துகளிலிருந்து வாகன ஓட்டிகளின் உயிரை காக்கும் கவசமாக செயல்பட்டு வருகிறது. இதன்காரணமாகவே, இந்தியாவில் ஹெல்மெட் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஆனால், இந்திய இளைஞர்கள் பெரும்பாலும் ஹெல்மெட்களை பயன்படுத்துவதை தவிர்க்கின்றனர். மேலும், அது தேவையில்லாதது எனவும் கருதுகின்றனர். அதிலும், சிலர் போலீஸார் அபராதம் விதிப்பார்கள் என்பதற்காகவே பயந்து ஹெல்மெட்களை அணிகின்றனர்.

எது சிறந்தது: 5000 கிலோ அழுத்தத்தில் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட ஹெல்மெட்கள்!

பைக்கில் பயணம் செய்பவர்களுக்கு எந்த வித பாதுகாப்பும் இருக்காது. அவர்கள் கட்டாயமாக ஹெல்மெட் அணிவதுதான் அவர்களின் உயிருக்கு உத்திரவாதம். அந்த வகையில், இந்தியாவில் பல்வேறு வகையிலான ஹெல்மெட்கள் விற்பனையாகின்றன. ஆட்டோமொபைல் தயாரிப்புகளை கட்டுப்படுத்தும் அமைப்புதான் தற்போது ஹெல்மெட் தயாரிப்புகளையும் கட்டுப்படுத்துகிறது.

எது சிறந்தது: 5000 கிலோ அழுத்தத்தில் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட ஹெல்மெட்கள்!

இந்த அமைப்பு அங்கீகரித்த ஹெல்மெட்களைதான் அணிய வேண்டும். மாறாக, மலிவு விலையில் கிடைக்கிறது என்பதற்காக கண்ட ஹெல்மெட்களை பயன்படுத்தினால், நிச்சயம் அது நமது உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும். இதனை உறுதிசெய்யும் விதமாகதான் தற்போது ஹைட்ராலிக் பிரஸ் சேனல், வெளியிட்டுள்ள வீடியோ அமைந்துள்ளது.

எது சிறந்தது: 5000 கிலோ அழுத்தத்தில் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட ஹெல்மெட்கள்!

இந்த சோதனையின்போது, அனைத்துவிதமான நிறுவனங்களின் ஹெல்மெட்டுகளும் குறைந்தது, 5 ஆயிரம் கிலோ அழுத்தத்திற்கு உட்படுத்தப்பட்டது. அப்போது, ஹெல்மெட்டின் உள்பகுதியில் முட்டைகோஸ் வைத்து சோதனைச் செய்யப்பட்டது. மேலும், விலை குறைவு மற்றும் அதிகமான விலையில் விற்பனையாகும் ஹெல்மெட்டுகள் அனைத்தும் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன.

எது சிறந்தது: 5000 கிலோ அழுத்தத்தில் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட ஹெல்மெட்கள்!

அதில், மிக குறைவான விலையில் விற்பனையாகும் ஹெல்மெட்கள், குறைந்த அழுத்தத்திலேயே நொருங்கி விட்டன. அவ்வாறு, விலை அதிகரிப்புக்கு ஏற்ப ஹெல்மெட்டுகளின் உறுதி இருப்பது இந்த சோதனையில் உறுதி செய்யப்பட்டது. அதேசமயம், அரை முகத்தை மட்டும் கவர் செய்யும் ஹால்ப் ஹெல்மெட் மிகவும் ஆபத்து நிறைந்ததாக இருக்கின்றது.

எது சிறந்தது: 5000 கிலோ அழுத்தத்தில் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட ஹெல்மெட்கள்!

மேலும், இந்த சோதனையில் ஸ்பெஷலைஸ்ட் நிறுவனத்தின் ஹெல்மெட் அதிகம் உறுதி வாய்ந்ததது சான்றைப் பெற்றது. இந்த ஹெல்மெட்டில் கூடுதலாக தொழில்நுட்ப வசதிகளான ஸ்மார்ட்போன் கனெக்டிவிட்டி மற்றும் கிராஷ் டிடெக்ட்ஸ் வசதிகள் இணைக்கப்பட்டுள்ளன. இது, விபத்தின் குறிப்பிட்ட நபர்களுக்கு நோடிஃபிகேஷன் மூலம் தகவலை அனுப்பி வைக்க உதவும்.

இருசக்கர வாகன ஓட்டிகள் கட்டாயம் ஹெல்மெட்டைப் பயன்படுத்துவது அவர்களுக்கு நன்மையையே பயக்கும் என்பதை இந்த வீடியோ உறுதி செய்துள்ளது. மேலும், நாம் வாங்கும் ஹெல்மெட் நல்ல தரமானதா என்பதை உறுதிச் செய்த பின்னரே வாங்க வேண்டும். மலிவு விலையில் கிடைக்கிறது என்பதற்காக, ஏதோ ஹெல்மெட்டை வாங்கி ஆபத்தில் சிக்க வேண்டாம் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பும்.

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Helmet Strength Test Under Hydraulic Press. Read In Tamil.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X