"இனி ஹெல்மெட் கட்டாயம் இல்லை" நகரவாசிகளுக்கு மட்டும் விலக்களித்த மாநிலம்.. எது தெரியுமா?

நகரத்தின் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் மட்டும் ஹெல்மெட் கட்டாயம் அணிவதற்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளதாக ஓர் மாநில அரசு அறிவித்துள்ளது. அது எந்த மாநிலம், எதற்காக இத்தகைய அறிவிப்பை வெளியிட்டது என்ற தகவலை இந்த பதிவில் காணலாம்.

பழைய 500 மற்றும் ஆயிரம் ரூபாய் நோட்டுக்கள் மதிப்பிழப்பிற்கு பிறகு இந்தியாவில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது புதிய (திருத்தப்பட்ட) மோட்டார் வாகன சட்டம்.

இந்த சட்டம் நடைமுறைக்கு வந்த நாள் முதல் தற்போது வரை பெரும் பரபரப்பை ஏற்படுத்திக் கொண்டிருக்கின்றது.

இதற்கு, போக்குவரத்து விதிமீறல்களுக்கான அபராதங்கள் பல மடங்கு உயர்த்தப்பட்டதே முக்கிய காரணமாக இருக்கின்றது. இந்த அபராதம் முன்பெப்போதும் இல்லாத அளவில் உச்சபட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.

ஆகையால், புதிய திருத்தப்பட்ட சட்டத்தின் மூலம் விதிக்கப்படும் அபராதங்கள், சில சமயங்களில் விதிமீறலில் ஈடுபடும் வாகனங்களின் விலையைக் காட்டிலும் பல மடங்கு அதிகமானதாக வழங்கப்படுகின்றன.

இதனால், போலீஸார் மற்றும் வாகன ஓட்டிகள் மத்தியில் மோதல் ஏற்பட்ட சம்பவங்கள் அதிகரித்த வண்ணம் உள்ளன. அண்மையில்கூட ஹெல்மெட் அணியாமல் வந்ததாகக் கூறி அபராதத்தை விதித்த போலீஸார் கண் முன்னிலையிலேயே இளைஞர் ஒருவர் அவரது பைக்கை சுக்கு நூறாக உடைத்தெறிந்தார். முன்னதாக பைக்கை கொளுத்திய சம்பவங்களும் அரங்கேறியுள்ளன. இதுபோன்ற பல்வேறு சம்பவங்கள் சமீபகாலமாக நாட்டில் அதகரித்த வண்ணம் உள்ளது.

இந்நிலையில், நகரத்தின் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் பயணிக்கும் இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு இனி கட்டாய ஹெல்மெட்டில் இருந்து விளக்கு அளிக்கப்பட்டிருப்பதாக ஓர் மாநில அறிவித்துள்ளது.

அது வேறெந்த மாநிலமும் இல்லை நம்முடைய பாரத பிரதமர் மோடியின் சொந்த மாநிலமான குஜராத்தில்தான் இந்த சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து அம்மாநில போக்குவரத்துத்துறை அமைச்சர் ஆர்.சி. ஃபலுடு கூறியதாவது, "நகரப் பகுதிக்குள் டூ வீலர்களை பயன்படுத்தும் வாகன ஓட்டிகள் தங்களின் விருப்பத்திற்கேற்ப ஹெல்மெட் அணிந்தால் போதுமானது" என தெரிவித்துள்ளார்.

அதேசமயம், நகரமல்லாத நெடுஞ்சாலைகள் மற்றும் கிராம சாலைகளில் ஹெல்மெட் பயன்படுத்துவது கட்டாயம் எனவும் அவர் கூறினார்.

குஜராத் மாநில அமைச்சரின் இந்த அறிவிப்பால் நகராட்சி மற்றும் மாநகராட்சி வரம்பிற்கு உட்பட்ட பகுதிகளில் ஹெல்மெட் அணிவதற்கான கட்டாயத்தில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

மேலும், தேசிய நெடுஞ்சாலை மற்றும் மாநிலத்தின் முக்கிய நெடுஞ்சாலைகளில் ஹெல்மெட் கட்டாயம் அணிய வேண்டும் கூறப்பட்டுள்ளது. இல்லையெனில் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

புதிய மோட்டார் வாகன சட்டம் அமலுக்கு வந்தபோது, அச்சட்டத்தின்கீழ் பல்வேறு போக்குவரத்து விதிமீறல்களுக்காக அதிக அபராதம் வசூலித்த மாநிலங்களில் குஜராத் முன்னணி இடத்தைப் பிடித்திருந்தது. இதில், சாமானிய மக்களே அதிகம் பாதிக்கப்பட்டதாக கூறப்படுகின்றது.

ஆகையால், மாநில அரசுக்கு பல்வேறு தரப்பில் இருந்து புகார் கடிதங்கள் அளிக்கப்பட்டன. இதனால், மக்களின் கோரிக்கள் மற்றும் நெருக்கடியை அடுத்து, வாகன ஓட்டிகளின் சொந்த பாதுகாப்பு ஆர்வத்தின் அடிப்படையில் இந்த விலக்கை அளிப்பதாக குஜராத் அரசு அறிவித்துள்ளது.

எனவே, நகர எல்லைக்குள் இருசக்கர வாகனங்களை இயக்கும் சாரதிகள் பாதுகாப்பில் அதிகம் அக்கறை கொண்டவர்களாக இருப்பின் தாராளமாக ஹெல்மெட் அணிந்துக் கொள்ளலாம். மாறாக ஹெல்மெட் அணியவில்லை என்றாலும் போலீஸார் இனி பிடிக்க மாட்டார்கள் என அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிய மோட்டார் வாகனச் சட்டத்தின்படி, இரு சக்கர வாகனத்தில் பயணம் செய்யும் போது வாகன ஓட்டி மற்றும் பின்னால் அமர்ந்து வரும் பயணி என இருவரும் ஹெல்மெட் அணிவது கட்டாயம் என கூறப்பட்டுள்ளது. இரு சக்கர வாகன விபத்துகளின்போது, முதலில் தலைப்பகுதியே எளிதில் காயமடைவதன் காரணமாகவும், இதனால் பலி எண்ணிக்கை அதிகமாக ஏற்படுவதன் காரணமாகவும் இதனை ஒவ்வொரு இருசக்கர வாகன ஓட்டியும் கட்டாயம் கடைபிடிக்க வேண்டும் என வலியுறுத்தப்படுகின்றது.

ஆனால், குஜராத் அரசு மக்களின் விருப்பத்தையும், தேவையையும் பூர்த்தி செய்யும் வகையில் இந்த விலக்கை அளித்துள்ளது. இதனை அண்மையில் நடைபெற்ற சட்டமன்ற கூட்டத்தில் போக்குவரத்துத்துறை அமைச்சர் ஆர்.சி. ஃபலுடு தெரிவித்துள்ளார்.

புகைப்படங்கள் உதாரணத்திற்காக வழங்கப்பட்டவை.

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Helmets Now Optional On City Roads on Gujarat. Read In Tamil.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X