மார்ச் 30 முதல் மூலிகை பெட்ரோல்! ராமர் பிள்ளை அதிரடி... விலை, மைலேஜை கேட்டு சொக்கி போன வாகன ஓட்டிகள்

மார்ச் 30 முதல் தமிழகம் முழுவதும் மிகவும் மலிவான விலையில் மூலிகை பெட்ரோல் கிடைக்கும் என ராமர் பிள்ளை வெளியிட்டுள்ள அறிவிப்பால், வாகன ஓட்டிகள் சொக்கி போயுள்ளனர்.

மார்ச் 30 முதல் மூலிகை பெட்ரோல்! ராமர் பிள்ளை அதிரடி... விலை, மைலேஜை கேட்டு சொக்கி போன வாகன ஓட்டிகள்

தமிழகத்தில் ராமர் பிள்ளை அவ்வப்போது பரபரப்புகளை உண்டாக்கி வருகிறார். இவரது கண்டுபிடிப்பான மூலிகை பெட்ரோல், தமிழக வாகன ஓட்டிகள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்புகளை மட்டுமல்லாது, பல்வேறு சர்ச்சைகளையும் சேர்த்தே உண்டாக்கியுள்ளது. தமிழகத்தில் ராமர் பிள்ளையின் மூலிகை பெட்ரோலை வரவேற்பவர்களும் இருக்கின்றனர். அதை விமர்சிப்பவர்களும் இருக்கின்றனர்.

மார்ச் 30 முதல் மூலிகை பெட்ரோல்! ராமர் பிள்ளை அதிரடி... விலை, மைலேஜை கேட்டு சொக்கி போன வாகன ஓட்டிகள்

இப்படிப்பட்ட சூழலில், ராமர் பிள்ளை தற்போது வெளியிட்டுள்ள அதிரடியான அறிவிப்பு ஒன்று அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. உச்ச நீதிமன்ற உத்தரவிற்கு பிறகு, மூலிகை பெட்ரோலின் விற்பனையை ராமர் பிள்ளை தொடங்கியுள்ளார். சென்னையில் தற்போது மூலிகை பெட்ரோல் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

மார்ச் 30 முதல் மூலிகை பெட்ரோல்! ராமர் பிள்ளை அதிரடி... விலை, மைலேஜை கேட்டு சொக்கி போன வாகன ஓட்டிகள்

சென்னை கடந்த ஜனவரி 29ம் தேதி முதல் மூலிகை பெட்ரோல் விற்பனையை ராமர் பிள்ளை தொடங்கினார். தற்போதைய நிலையில் சென்னை ஊரப்பாக்கம் பகுதியில் மூலிகை பெட்ரோல் விற்பனை நடைபெற்று வருகிறது. ஆனால் ஒரு நாளுக்கு 150 லிட்டர் மட்டுமே வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. ஒரு லிட்டர் மூலிகை பெட்ரோலின் விலை 30 ரூபாய் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

மார்ச் 30 முதல் மூலிகை பெட்ரோல்! ராமர் பிள்ளை அதிரடி... விலை, மைலேஜை கேட்டு சொக்கி போன வாகன ஓட்டிகள்

இதற்கு அடுத்தபடியாக தமிழ்நாடு முழுவதும் மூலிகை பெட்ரோலை விற்பனைக்கு அறிமுகம் செய்ய ராமர் பிள்ளை முடிவு செய்துள்ளார். இதன் முதற்கட்டமாக விருதுநகர், தேனி, மதுரை மற்றும் தென்காசி உள்ளிட்ட மாவட்டங்களில் மூலிகை பெட்ரோல் விற்பனைக்கு கொண்டு வரப்படவுள்ளது. வரும் பிப்ரவரி 27ம் தேதி முதல் இந்த மாவட்டங்களிலும் மூலிகை பெட்ரோலை விற்பனை செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மார்ச் 30 முதல் மூலிகை பெட்ரோல்! ராமர் பிள்ளை அதிரடி... விலை, மைலேஜை கேட்டு சொக்கி போன வாகன ஓட்டிகள்

இதற்காக விற்பனை முகவர்களுடன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. இந்த மாவட்டங்களின் முகவர்களை அறிமுகம் செய்யும் நிகழ்ச்சி ராஜபாளையத்தில் நடைபெற்றது. இதில், ராமர் பிள்ளையும் பங்கேற்றார். இதன்பின் அவர் நிருபர்களிடம் பேசினார். அப்போது பல்வேறு தகவல்களை ராமர் பிள்ளை பகிர்ந்து கொண்டார்.

மார்ச் 30 முதல் மூலிகை பெட்ரோல்! ராமர் பிள்ளை அதிரடி... விலை, மைலேஜை கேட்டு சொக்கி போன வாகன ஓட்டிகள்

இது தொடர்பாக அவர் கூறுகையில், ''மூலிகை பெட்ரோல் உற்பத்தியை யாரும் தடை செய்யக்கூடாது என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த மூலிகை பெட்ரோலால் வாகனங்களுக்கு எவ்விதமான பாதிப்பும் ஏற்படாது. மூலிகை பெட்ரோல் மூலம் டூவீலர்கள் ஒரு லிட்டருக்கு 80 கிலோ மீட்டர்கள் வரை மைலேஜ் வழங்கும்.

மார்ச் 30 முதல் மூலிகை பெட்ரோல்! ராமர் பிள்ளை அதிரடி... விலை, மைலேஜை கேட்டு சொக்கி போன வாகன ஓட்டிகள்

தினசரி 15 ஆயிரம் லிட்டர் மூலிகை பெட்ரோல் தயாரிக்கும் வகையில், கன்னியாகுமரி மாவட்டத்தில் பெரிய தொழிற்சாலை நிறுவப்பட்டுள்ளது. மூலிகை பெட்ரோலை தமிழகம் முழுவதும் விற்பனைக்கு கொண்டு வர ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. இதன்படி வரும் மார்ச் 30ம் தேதி முதல் தமிழகம் முழுவதும் பொதுமக்களுக்கு மூலிகை பெட்ரோல் கிடைக்கும்.

மார்ச் 30 முதல் மூலிகை பெட்ரோல்! ராமர் பிள்ளை அதிரடி... விலை, மைலேஜை கேட்டு சொக்கி போன வாகன ஓட்டிகள்

நான் நேரடியாக விற்பனை செய்யும் இடங்களில் ஒரு லிட்டர் பெட்ரோலை 20 ரூபாய்க்கும், ஒரு லிட்டர் டீசலை 24 ரூபாய்க்கும் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது'' என்றார். ராமர் பிள்ளை அறிவித்த விலையை கேட்டு தமிழக வாகன ஓட்டிகள் உற்சாகத்தில் திளைத்து வருகின்றனர். அதே சமயம் இன்னும் சிலரோ மூலிகை பெட்ரோலை தொடர்ந்து விமர்சித்து வருகின்றனர்.

Image Source: Puthiyathalaimurai, Thanthi TV

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Herbal Petrol Will Be Available In Tamil Nadu From March 30: Ramar Pillai. Read in Tamil
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X