கப்பல்களில் பயன்படுத்தப்படும் ஏடிஏ கார்னெட் என்றால் என்ன? கப்பல்ல பலமுற பயணிச்சவங்களுக்குகூட இத பத்தி தெரியாது

கப்பல்களில் பயன்படுத்தப்படும் ஏடிஏ கார்னெட் (ATA Carnet) என்றால் என்ன என்பது பற்றிய தகவலைக் கீழே உள்ள பதிவில் பார்க்கலாம், வாங்க.

கப்பல்களில் பயன்படுத்தப்படும் ஏடிஏ கார்னெட் என்றால் என்ன? கப்பல்ல பல முறை பயணிச்சவங்களுக்குகூட இத பத்தி தெரியாது!

கார்னெட் என்பது பிரெஞ்சு வார்த்தை ஆகும். இதற்கு நோட் புக் என்பதே பொருள் ஆகும். ஆனால், ஏடிஏ கார்னெட் என்பது சற்று வித்தியாசமான நோட்டு புத்தகமாக காட்சியளிக்கின்றது. புத்தக வடிவத்தில் இருக்கும் டிக்கெட் என்றும் இதனை கூறலாம். இதற்கு கப்பல் உலகில் என்ன வேலை என்று நீங்கள் கேட்கலாம். ஒரு வேலை கப்பல் பயணங்களுக்கான டிக்கெட்டா என்றும் உங்களுக்கு சந்தேகம் எழும்பியிருக்கலாம்.

கப்பல்களில் பயன்படுத்தப்படும் ஏடிஏ கார்னெட் என்றால் என்ன? கப்பல்ல பல முறை பயணிச்சவங்களுக்குகூட இத பத்தி தெரியாது!

உங்களின் சந்தேகம் சரிதான். ஆனால், பாதி சரி, பாதி தப்பாகும். அதாவது, இந்த ஏடிஏ கார்னெட் என்பது ஒரு நாட்டில் இருந்து மற்றொரு நாட்டிற்கு மனிதனை அனுப்ப பயன்படும் டிக்கெட் அல்ல. பொருட்களை அனுப்பி வைப்பதற்கான ஆவணம் இதுவாகும். இதனை பர்மிட் அல்லது லைசென்ஸ் என்றுகூட அழைக்கலாம். இன்னும் சரியாக கூற வேண்டும் என்றால் இதனை கூட்ஸ்களுக்கான பாஸ்போர்ட் என்றுகூட கூறலாம். சுங்கத்துறை அதிகாரிகளினாலேயே இந்த ஆவணம் வழங்கப்படுகின்றது.

கப்பல்களில் பயன்படுத்தப்படும் ஏடிஏ கார்னெட் என்றால் என்ன? கப்பல்ல பல முறை பயணிச்சவங்களுக்குகூட இத பத்தி தெரியாது!

குறிப்பிட்ட ஓர் பொருளின் முழு விபரங்களும் ஏடிஏ கார்னெட்டில் வழங்கப்பட்டிருக்கும். மேலும், அது என்ன காரணத்திற்காக சொந்த நாட்டை விட்டு வெளியேறுகின்றது என்பது போன்ற அனைத்து விபரங்களும் இந்த ஆவணத்தில் இடம் பெற்றிருக்கும். இந்த ஆவணத்தைக் கொண்டிருக்கும் எந்தவொரு பொருளும் எந்தவொரு நாட்டிற்கும் சென்று வர முடியும். குறிப்பாக நுழைவு வரி ஏதும் இல்லாமல் குறிப்பிட்ட சில நாட்களுக்கு குறிப்பிட்ட ஓர் நாட்டில் இருக்க ஏடிஏ கார்னெட் வாயிலாக அனுமதி வழங்கப்படுகின்றது.

கப்பல்களில் பயன்படுத்தப்படும் ஏடிஏ கார்னெட் என்றால் என்ன? கப்பல்ல பல முறை பயணிச்சவங்களுக்குகூட இத பத்தி தெரியாது!

கண்காட்சி அல்லது வர்த்தக கண்காட்சிக்கு எடுத்துச் செல்லப்படும் பொருட்களுக்கே இந்த ஆவணம் வழங்கப்படுகின்றது. அதேநேரத்தில், அனைத்து விதமான பொருட்களுக்கும் இந்த வழங்கப்படாது. மேலும், இதற்கும் சில ரூல்கள் உள்ளன. இதுகுறித்த விபரங்களையே இந்த பதிவில் விரிவாக பார்க்க இருக்கின்றோம். வாருங்கள் பதிவிற்குள் போகலாம்.

கப்பல்களில் பயன்படுத்தப்படும் ஏடிஏ கார்னெட் என்றால் என்ன? கப்பல்ல பல முறை பயணிச்சவங்களுக்குகூட இத பத்தி தெரியாது!

யார் யாரால் இந்த ஏடிஏ கார்னெட்டை பெற முடியும்:

சட்டப்பூர்வமாக பதிவு செய்யப்பட்ட எந்தவொரு வணிக நிறுவனத்தாலும் ஏடிஏ கார்னெட்டை பெற முடியும். கண்காட்சியில் கலந்துக் கொள்வது, மோஷன் பிக்சர் படக்குழுக்கள் மற்றும் விளையாட்டு அணிகளும் தங்களின் பொருட்களுக்காக ஏடிஏ கார்னெட்டை பெற்று கொள்ள முடியும்.

கப்பல்களில் பயன்படுத்தப்படும் ஏடிஏ கார்னெட் என்றால் என்ன? கப்பல்ல பல முறை பயணிச்சவங்களுக்குகூட இத பத்தி தெரியாது!

ஏடிஏ என்றால் என்ன?

ஆங்கில வார்த்தை 'டெம்பரரி அட்மிஷன்' என்பதன் சுருக்கமே ஏடிஏ (ATA) ஆகும். அதாவது, 'தற்காலிக சேர்க்கை' அல்லது 'தற்காலிகமான அனுமதி' என்பது இந்த வார்த்தையின் தமிழ் அர்த்தம். ஆகும்.

இந்த ஏடிஏ கார்னெட் குறிப்பிட்ட சில நாடுகளின் சுங்க அதிகாரிகளுக்கு இடையே சர்வதேச ஒப்பந்தமாக செயல்படுகின்றது. ஆகையால், இந்த ஆவணத்தைக் கொண்டிருக்கும் ஓர் தயாரிப்பு எந்த நாட்டிற்குள்ளும் சுங்க வரி அல்லது பிற ஆவண பதிவை செய்யாமலே நுழைய முடியும். இதற்கான கூட்டமைப்பில் இந்தியா உட்பட மொத்தம் 80 நாடுகள் இணைந்திருக்கின்றன என்பது குறிப்பிடத்தகுந்தது.

கப்பல்களில் பயன்படுத்தப்படும் ஏடிஏ கார்னெட் என்றால் என்ன? கப்பல்ல பல முறை பயணிச்சவங்களுக்குகூட இத பத்தி தெரியாது!

உலக சுங்க அமைப்பு (World Customs Organisation) மூலம் நிர்வகிக்கப்படும், சர்வதேச சுங்க ஒப்பந்தங்களின் கீழே இந்த ஏடிஏ கார்னெட் செயல்படுகிறது. உலக ஏடிஏ கார்னெட் கவுன்சில் உலக சுங்க அமைப்பு உடன் இணைந்து இந்த அமைப்பை நிர்வகிக்கிறது. இந்த அமைப்பில் அந்தந்த உறுப்பு நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் அங்கம் வகிப்பர். இவ்வாறே இந்த அமைப்பு செயல்படுகின்றது.

பொருட்கள் இறக்குமதி செய்வது தொடங்கி மீண்டும் உரிய நாட்டிற்கு திருப்பி அனுப்பி வைக்கப்படுவது வரை, அனைத்திற்கும் தேவையான சுங்க சம்பிரதாயங்களை செய்வதே இந்த பிரதிநிதிகளின் பணியாகும்.

கப்பல்களில் பயன்படுத்தப்படும் ஏடிஏ கார்னெட் என்றால் என்ன? கப்பல்ல பல முறை பயணிச்சவங்களுக்குகூட இத பத்தி தெரியாது!

ஏடிஏ கார்னெட்டை மிஸ் யூஸ் செய்வார்களா? அப்படி செய்தால் என்ன நேரிடும்?

ஏடிஏ கார்னெட் வழங்கப்பட்டதற்கான காரணம் மீறப்படுமானால் உத்தரவாத குழுவினரால் அபராதம் விதிக்கப்படும். இதுதவிர, அனைத்து வரிகளும் வசூலிக்கப்படும். அதேவேலையில், ஏடிஏ கார்னெட் வாயிலாக இறக்குமதி செய்யப்படும் எந்தவொரு பொருளையும் விற்கவோ அல்லது மாற்றிக் கொள்ளவோ அனுமதி கிடையாது. ஆகையால், இந்த செயலில் இறக்குமதியாளர்களால் கட்டாயம் ஈடுபட முடியாது. மேலும், குறிப்பிட்ட கால கெடுவிற்குள் இறக்குமதி செய்யப்பட்ட அந்த பொருள் சொந்த நாட்டை திரும்பி சென்றடைய வேண்டும் என்பதும் விதியாகும். இந்த விதி மீறப்பட்டாலும் அபராதம் மற்றும் வரி உள்ளிட்டவை வசூலிக்கப்படும்.

கப்பல்களில் பயன்படுத்தப்படும் ஏடிஏ கார்னெட் என்றால் என்ன? கப்பல்ல பல முறை பயணிச்சவங்களுக்குகூட இத பத்தி தெரியாது!

ஏடிஏ கார்னெட்டின் பயன்பாடுகள்:

ஏடிஏ கார்னெட் வாயிலாக சர்வதேச சந்தைக்கு எடுத்துச் செல்லப்படும் பொருட்களுக்கு எந்த வரியும் பொருந்தாது. ஒரு பொருளை ஏற்றுமதி மற்றும் இறக்குமதி செய்வதில் நிலவும் சிக்கல்களைத் தவிர்க்கவும் இந்த ஏடிஏ கார்னெட்டுகள் உதவுகின்றன. மேலும், பணம் மற்றும் நேரமும் இதன் வாயிலாக அதிக மிச்சமாகும். ஆம், ஏற்றுமதி-இறக்குமதிக்கு ஆவதை விட மிக மிகக் குறைவான செலவே இதற்கு ஆகும்.

கப்பல்களில் பயன்படுத்தப்படும் ஏடிஏ கார்னெட் என்றால் என்ன? கப்பல்ல பல முறை பயணிச்சவங்களுக்குகூட இத பத்தி தெரியாது!

இதுதவிர, ஏற்றுமதியாளர் தன்னுடைய பொருளை குறிப்பிட்ட நாட்களுக்கு திரும்பப்பெற தவறிவிட்டால் தானாகவே சுங்க வரி வசூலிக்கவும் இந்த ஆவணம் உதவியாக இருக்கும். தற்போது பயன்பாட்டில் உள்ள பெரும்பாலான ஏடிஏ கார்னெட்டுகள் ஒரு வருட செல்லுபடி காலத்தைக் கொண்டிருக்கின்றன. சில நாடுகள் இதனை நீட்டித்துக்கொள்ள அனுமதி வழங்குகின்றன. ஆனால், காலாவதி காலம் முடிவடைவதற்குள் அது புதுப்பிக்கப்பட வேண்டும். தொழில்துறையினருக்கு மிக சிறந்த வசதியை வழங்கும் பொருட்டு நீட்டிப்பு காலத்தை சில நாடுகள் வழங்குகின்றன.

கப்பல்களில் பயன்படுத்தப்படும் ஏடிஏ கார்னெட் என்றால் என்ன? கப்பல்ல பல முறை பயணிச்சவங்களுக்குகூட இத பத்தி தெரியாது!

எல்லா பொருட்களுக்கும் ஏடிஏ கார்னெட் கிடைத்துவிடாது

கண்காட்சிகளில் காட்சிப்படுத்தப்படும் பொருட்கள், தொழில்துறை பொருட்கள் மற்றும் விளையாட்டு உபகரணங்கள் இவற்றிற்கு மட்டுமே ஏடிஏ கார்னெட் வழங்கப்படுகின்றது. கண்காட்சிப் பொருட்கள் எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம்.

புதிய தயாரிப்பு கார், பைக், இசைக் கருவி, கேமிரா மற்றும் பிற படப்பிடிப்பு கருவி இவற்றிற்கே ஏடிஏ கார்னெட்டுகள் பெரும்பாலும் பயன்படுத்தப்படுகின்றன. ஆயில், புகையிலை, எரிபொருள், உணவு, பானம் உள்ளிட்ட விற்பனைச் செய்யக் கூடிய பொருட்களுக்கு ஏடிஏ கார்னெட் வழங்கப்படாது.

கப்பல்களில் பயன்படுத்தப்படும் ஏடிஏ கார்னெட் என்றால் என்ன? கப்பல்ல பல முறை பயணிச்சவங்களுக்குகூட இத பத்தி தெரியாது!

ஒவ்வொரு நாடும் தங்களின் நாட்டிற்குள் பொருட்களை இறக்குமதி மற்றும் ஏற்றுமதி செய்வதற்கென தனி கொள்கைகளைக் கடைப்பிடித்துக் கொண்டிருக்கின்றன. இதனால்தான் ஏடிஏ கார்னெட் கீழ் ஓர் பொருளை இறக்குமதி செய்யும் முன் குறிப்பிட்ட நாட்டின் பிரிநிதியுடன் குறிப்பிட்ட தயாரிப்பை இறக்குமதி செய்யும் முன்கூட்டியே அனைத்து பணிகளையும் ஏற்பாடு செய்ய வேண்டும் என உலக சுங்க அமைப்பு கூறப்படுகின்றது.

கப்பல்களில் பயன்படுத்தப்படும் ஏடிஏ கார்னெட் என்றால் என்ன? கப்பல்ல பல முறை பயணிச்சவங்களுக்குகூட இத பத்தி தெரியாது!

இந்தியாவில், இந்திய வர்த்தக மற்றும் தொழில் கூட்டமைப்பே (FICCI) ஏடிஏ கார்னெட்டுகளை வழங்கவும், அவற்றிற்கான உத்தரவாதம் வழங்குவதற்கான அதிகாரத்தையும் பெற்றிருக்கின்றன. இதேபோல், அமெரிக்காவில் சர்வதேச வணிகத்திற்கான யுனைடெட் ஸ்டேட்ஸ் கவுன்சிலுக்கு (USCIB) இதற்கான அதிகாரம் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த கவுன்சில் இரு அமைப்பு நியமித்துள்ளது. ரோவனோக் ஏடிஏ கார்னெட் மற்றும் பூமரேங் கார்னெட் இவையே ஏடிஏ கார்னெட்டை வழங்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றன.

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Here is full details about ata carnet in shipping
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X