Just In
- 7 min ago
இந்தியாவின் கடைசி போலோ கார் டெலிவரி வழங்கப்பட்டது... சோகத்தில் மூழ்கிய ஃபோக்ஸ்வேகன் நிர்வாகம்!
- 1 hr ago
காலி பால்பாக்கெட்டிற்கு தள்ளுபடி விலையில் பெட்ரோல் / டீசல்... அசத்தும் தொழிலதிபர்...
- 2 hrs ago
விபத்தில் சிக்கிய பாடகியின் டாடா பஞ்ச் கார்... ஹைலைட் என்னனா அவங்களுக்கு சின்னத ஒரு கீரல்கூட ஏற்படல!
- 13 hrs ago
விமான பணிப்பெண்களுக்கு இவ்ளோ சம்பளம் தர்றாங்களா! இத்தன சலுகைகள் வேற இருக்கா! இதுக்கெல்லாம் குடுப்பினை வேணும்!
Don't Miss!
- News
ஆஹா இது தெரியாம போச்சே.. "ரக்கர்ட் பாய்ஸ்"னா யாரு? அவங்களைதான் பொண்ணுங்களுக்கு ரொம்ப பிடிக்குமாம்!
- Technology
5.8-இன்ச் டிஸ்பிளேவுடன் விரைவில் அறிமுகமாகும் சூப்பரான Samsung போன்.!
- Finance
தங்கம் விலை இன்று எவ்வளவு குறைந்திருக்கு தெரியுமா.. இது வாங்க சரியான நேரம் தான்!
- Movies
முதல் ரவுண்டில் ப்ளாக் பஸ்டர் கொடுத்த டாப் ஹீரோஸ்: இரண்டாவது ரவுண்ட்ல சக்சஸ் பண்ண முடிஞ்சுதா?
- Sports
காமன்வெல்த்-ல் அனல்பறந்த குத்தாட்டம்.. அரங்கையே ஆட வைத்த தமிழர்கள்.. சர்வதேச அளவில் பெருமை - வீடியோ!
- Lifestyle
Today Rasi Palan: இன்று இந்த ராசிக்காரர்கள் பெரிய ஒப்பந்தம் எதையும் செய்திடாமல் இருப்பது நல்லது...
- Education
ஹாய் சிவகங்கை கேர்ள்ஸ்... உங்களுக்கு குஷி செய்தி…!
- Travel
வால்பாறை ஏன் ‘தி செவன்த் ஹெவன்’ என அழைக்கப்படுகிறது – காரணங்கள் இதோ!
ரூ.750இல் இந்தியாவை ஒரு சுத்து சுத்த ஆசையா? விவேக் எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணிச்சா பாதி நாட்டை சுத்தின மாதிரிதான்!
இந்தியாவின் மிக நீண்ட தூர பயணத்தை மேற்கொள்ளும் விவேக் எக்ஸ்பிரஸ் ரயில் பற்றிய சுவாரஷ்யமான தகவல்களையே இந்த பதிவில் வழங்கியிருக்கின்றோம். வாருங்கள் விரிவான பதிவிற்குள் போகலாம்.

நமது டிரைவ்-ஸ்பார்க் தமிழ் தளத்தில் புதுமுக வாகனங்களின் அறிமுகம், வாகனங்கள் சார்ந்த பரிந்துரைகள் மற்றும் வாகனங்களை பராமரிப்பதற்கான வழிமுறைகள் என பலதரப்பட்ட பயனுள்ள தகவல்களை வழங்கிக் கொண்டிருக்கின்றோம். சில நேரங்களில் வாகனங்கள் சார்ந்து அரங்கேறும் வைரல் நிகழ்வுகள் மற்றும் போக்குவரத்துத் துறைகள் சார்ந்த முக்கிய அறிவிப்பு ஆகியவற்றைப் பற்றியும் வெளியிட்டுக் கொண்டிருக்கின்றோம்.

அந்தவகையில், இம்முறை இந்தியாவின் மிக நீளமான வலையமைப்பைக் கொண்ட ஓர் ரயிலின் வழித்தடம் பற்றிய தகவலையே இன்று இந்த பதிவில் நாம் பார்க்க இருக்கின்றோம். தென் இந்தியா, வட-கிழக்கு இந்தியா என நாட்டின் மிக முக்கியமான ஒன்பது மாநிலங்களை இணைக்கும் வகையில் இயங்கிக் கொண்டிருக்கும் 'விவேக் எக்ஸ்பிரஸ்' ரயில் பற்றியே இந்த பதிவில் பார்க்க உள்ளோம். வாருங்கள் விரிவான பதிவிற்குள் போகலாம்.

விவேக் எக்ஸ்பிரஸ் ஓர் நாட்டின் மிக நீண்ட தூரம் பயணிக்கும் ரயிலாகும். இது ஒட்டுமொத்தமாக 4,247 கிமீ தூரம் பயணிக்கின்றது. இத்தகைய நீண்ட தூர பயணத்தை நாட்டில் உள்ள வேறு எந்த ரயிலும் பயணிக்கவில்லை என்பது குறிப்பிடத்தகுந்தது. தமிழகத்தின் தென்கோடி முனையான கன்னியாகுமரி தொடங்கி வட கிழக்கு இந்திய பகுதியில் அமைந்துள்ள அசாம் மாநிலத்தின் திப்ருகர்ஹ் வரையில் விவேக் எக்ஸ்பிரஸ் ரயில் பயணிக்கின்றது.

இந்த ரயிலில் ஒரு முறை முழுமையாக பயணித்தால் இந்தியாவின் ஒரு பகுதியையே சுற்றி வந்த உணர்வு நமக்கு கிடைக்கும். தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, ஒடிசா, ஜார்கண்ட், மேற்கு வங்கம், பீஹார், நாகாலாந்து, அசாம் ஆகிய ஒன்பது மாநிலங்களையே விவேக் எக்ஸ்பிரஸ் எனும் ஒற்றை ரயில் இணைத்துக் கொண்டிருக்கின்றது.

Image Courtesy: YouTube
நாகாலாந்து மற்றும் அசாம் ஆகியவற்றிற்கு சுற்றுலா செல்வோர் பெரும்பாலானோரின் விருப்பமான ரயிலாக விவேக் எக்ஸ்பிரஸ் இருக்கின்றது. ஒரு கூலான-ஹாயான நார்த்-ஈஸ்ட் சுற்றுலா ட்ரிப்பை மேற்கொள்ள நினைப்பவர்களின் முதன்மையான தேர்வாகும் இந்த விவேக் எக்ஸ்பிரஸ் ரயில் காட்சியளிக்கின்றது.

2011 ஆம் ஆண்டே இந்த ரயில் முதல் முறையாக நாட்டில் பயன்பாட்டிற்கு வந்தது. 2011-12 பட்ஜெட்டில் அப்போதைய ரயில்வேத்துறை அமைச்சர் மம்தா பானர்ஜியால் அறிவிக்கப்பட்ட ரயிலே இந்த விவேக் எக்ஸ்பிரஸ் ஆகும். சுவாமி விவேகானந்தா அவர்களின் 150வது பிறந்த நாளை முன்னிட்டு நாட்டிற்காக இந்த ரயில் அர்பணிக்கப்பட்டது.

விவேக் எக்ஸ்பிரஸ், திப்ருகர்ஹ் - கன்னியாகுமரியைப் போல் இன்னும் மூன்று விதமான வழித்தடங்களில் இயங்கிக் கொண்டிருக்கின்றது. தூத்துக்குடி - டூ - குஜராத்தின் ஓகா, மும்பையின் பந்த்ரா - டூ - கத்ரா, மேற்கு வங்கத்தின் ஹவுரா - டூ - கர்நாடகாவின் மங்களூரு ஆகிய வழித்தடங்களிலேயே விவேக் எக்ஸ்பிரஸ் ரயில் இயங்கிக் கொண்டிருக்கின்றது.

விவேக் எக்ஸ்பிரஸ்போல் இன்னும் பல ரயில்கள் இந்த உலகில் நீண்ட தூர இடைவெளியை இணைக்கும் வகையில் இயங்கிக் கொண்டிருக்கின்றன. ஏன், விவேக் எக்ஸ்பிரஸ் ரயில் எல்லாம் குழைந்த என கூறுமளவிற்கு மிக அதிக தூர பயணத்தை மிகக் குறுகிய காலை இடைவெளியில் கடக்கும் ரயில்களும் பயன்பாட்டில் உள்ளன.

அந்தவகையில் உலகின் மிக நீண்ட தூர வழித்தடத்தைக் கொண்ட ரயிலாக ரஷ்யாவின் டிரான்ஸ்-சைபீரியன் ரயில் உள்ளது. 9,250 கிமீ, ஆறு நாட்கள் பயணம் என மிகப் பெரிய பின்புலத்தை இந்த ரயில் கொண்டிருக்கின்றது. ரஷ்யாவின் மாஸ்கோ தொடங்கி வ்ளாடிவோஸ்டோக் வழித்தடத்திலேயே இந்த ரயில் பயணித்துக் கொண்டிருக்கின்றது.

விவேக் எக்ஸ்பிரஸின் ஒட்டுமொத்த பயண நேரம் 83 மணி நேரங்கள் ஆகும். நாகர்கோயில், திருவனந்தபுரம், கொல்லம், செங்கன்னுர், கோட்டயம், எர்னாகுளம், அலுவா, திருச்சூர், பாலாகாட், கோயம்பத்தூர், ஈரோடு, சேலம், வேலூர், ரேணிகுண்டா, நெல்லூர், ஓங்கோல், விஜயவாடா, எலுரு, ராஜமுந்திரி, சமல்கோட், விசாகப்பட்டினம், விழியநகரம், ஸ்ரீகுளம், பிரஹ்மபூர், கோர்தா, புவனேஷ்வர், கட்டக், பாலசோர், கரக்பூர், அசன்சோல், துர்காபூர், பகுர், ராம்புர்ஹட், மல்டா, கிஷான்கன்ஞ், சிலிகுரி, அலிபுர்துவர், போங்கைகவோன், கவுகாத்தி, திமபுர், தின்சுகியா உள்ளிட்ட பகுதிகளையே இந்த ரயில் இணைத்துக் கொண்டிருக்கின்றது.

இத்தகைய சூப்பரான ரயில் சேவையையே 2020 மார்ச் மாதத்தில் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக இந்திய ரயில்வேதுறை நிறுத்தியது. தற்போது இந்த ரயில் சேவை மீண்டு தொடங்கப்பட்டுள்ளது. தோராயமாக இந்த ரயில் வியாழன் அன்று மாலை 5.30 மணியளவில் கன்னியாகுமரியில் இருந்து புறப்படுகிறது என்றால், அந்த ரயில் ஞாயிற்று கிழமை இரவு 8.50 மணியளவில் திப்ருகர்ஹை சென்றடையும். இந்த ரயிலில் 2 சிட்டரில் பயணிக்க ரூ. 745 கட்டணம் வசூலிக்கப்படுகின்றது.
-
ஹோண்டா சிபி350ஆர்எஸ் செம்ம போட்டியா இருக்கும்... ராயல் என்பீல்டு ஹண்டர் 350 சந்தையில் தாக்குப்பிடிக்குமா?
-
இந்த செக்மெண்ட்ல இப்போ டாடாதான் கிங்... 5 ஸ்டார் ரேட்டிங் வாங்கி இந்தியாவிற்கு பெருமை தேடி தந்த கார் முதலிடம்!
-
இவ்ளோ கம்மியான ரேட்ல ராயல் என்பீல்டு பைக்கா! நாளைக்கு லான்ச் பண்றாங்க... ஷோரூமை மொய்க்கும் வாடிக்கையாளர்கள்!