காரின் நார்மல் டயரை காட்டிலும் ஸ்பேர் டயர் ஏன் சிறியதாக உள்ளது தெரியுமா? இந்த விஷயத்தை யாரும் சொல்ல மாட்டாங்க!

காரின் வழக்கமான டயர்களை காட்டிலும் ஸ்பேர் டயர்கள் ஏன் அளவில் சிறியதாக உள்ளன? என்பதற்கான காரணங்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

காரின் நார்மல் டயரை காட்டிலும் ஸ்பேர் டயர் ஏன் சிறியதாக உள்ளது தெரியுமா? இந்த விஷயத்தை யாரும் சொல்ல மாட்டாங்க!

நீங்கள் நெடுஞ்சாலையில் பயணம் செய்து கொண்டுள்ளீர்கள் என வைத்து கொள்வோம். அப்போது உங்கள் காரின் டயரில் திடீரென பிரச்னை ஏற்பட்டு விட்டது. உடனே காரை ஓரமாக நிறுத்தி விட்டு என்ன பிரச்னை? என்று பார்ப்பீர்கள். பின்னர் காரின் பின் பகுதியில் உள்ள ட்ரங்க்கில், அதாவது பூட் பகுதியில் வைக்கப்பட்டிருக்கும் ஸ்பேர் டயரை எடுப்பீர்கள்.

காரின் நார்மல் டயரை காட்டிலும் ஸ்பேர் டயர் ஏன் சிறியதாக உள்ளது தெரியுமா? இந்த விஷயத்தை யாரும் சொல்ல மாட்டாங்க!

ஸ்பேரை டயரை நீங்கள் வெளியே எடுக்கும்போது, காரின் மற்ற டயர்களை காட்டிலும், உருவத்தில் அது சிறியதாக இருப்பதை உணர்வீர்கள். காரின் மற்ற டயர்களுடன் ஒப்பிடும்போது ஏன் ஸ்பேர் டயர் சிறியதாக இருக்கிறது? மற்ற டயர்களின் அளவிலேயே ஏன் ஸ்பேர் டயர்கள் வழங்கப்படுவதில்லை? என்ற கேள்விகள் அப்போது உங்களுக்கு வரும். இந்த கேள்விகளுக்கான பதிலை இந்த செய்தி தொகுப்பு வழங்குகிறது.

காரின் நார்மல் டயரை காட்டிலும் ஸ்பேர் டயர் ஏன் சிறியதாக உள்ளது தெரியுமா? இந்த விஷயத்தை யாரும் சொல்ல மாட்டாங்க!

பொதுவாக காரில் அதிக எடை கூடி விடக்கூடாது என்பதற்காக ஸ்பேர் டயர்கள் சிறியதாக வழங்கப்படுகிறது. மேலும் ஸ்பேர் டயர்கள் எடை குறைவாகவும், சிறியதாகவும் இருந்தால், அனைவராலும் அதனை எளிதாக தூக்க முடியும். அத்துடன் பிரச்னை உள்ள டயருக்கு பதிலாக அதனை எளிதாக மாற்றவும் முடியும்.

காரின் நார்மல் டயரை காட்டிலும் ஸ்பேர் டயர் ஏன் சிறியதாக உள்ளது தெரியுமா? இந்த விஷயத்தை யாரும் சொல்ல மாட்டாங்க!

மேலும் ஸ்பேர் டயர்களை சிறியதாக வழங்குவதன் மூலம் உற்பத்தி நிறுவனங்களுக்கு செலவு குறையும். இதன் மூலம் காரின் விலையையும் ஓரளவிற்கு குறைக்க முடியும். இதன் மூலமாக மட்டும் காரின் விலை பெரிய அளவிற்கு குறைந்து விடுமா? என்ற சந்தேகம் உங்களுக்கு வரலாம். பொதுவாக காரின் விலையை குறைப்பதற்கு உற்பத்தி நிறுவனங்கள் கூடுமானவரை முயற்சி செய்யும்.

காரின் நார்மல் டயரை காட்டிலும் ஸ்பேர் டயர் ஏன் சிறியதாக உள்ளது தெரியுமா? இந்த விஷயத்தை யாரும் சொல்ல மாட்டாங்க!

விலை குறைவாக இருந்தால்தானே வாடிக்கையாளர்கள் அதிக அளவில் காரை வாங்குவார்கள். எனவே விலை குறைப்பிற்காக மேற்கொள்ளப்படும் பல்வேறு முயற்சிகளில் இதுவும் ஒன்று. பொதுவாக உங்கள் காரின் வழக்கமான டயரை நீங்கள் நீண்ட கால அடிப்படையில் பயன்படுத்தலாம். ஆனால் அதை காட்டிலும் சிறியதாக உள்ள ஸ்பேர் டயர்களை அப்படி பயன்படுத்த முடியாது.

காரின் நார்மல் டயரை காட்டிலும் ஸ்பேர் டயர் ஏன் சிறியதாக உள்ளது தெரியுமா? இந்த விஷயத்தை யாரும் சொல்ல மாட்டாங்க!

சிறிய ஸ்பேர் டயர்களில் நீங்கள் 150 கிலோ மீட்டர்களுக்கும் குறைவான தொலைவு மட்டுமே பயணிக்க வேண்டும். அதுவும் மணிக்கு 80 கிலோ மீட்டர்களுக்கும் குறைவான வேகத்தில்தான் காரை ஓட்ட வேண்டும். சிறிய ஸ்பேர் டயர்களை உங்கள் காரில் பொருத்தும்போது இந்த விஷயங்களை எல்லாம் நீங்கள் மறவாமல் மனதில் கொள்ள வேண்டும்.

காரின் நார்மல் டயரை காட்டிலும் ஸ்பேர் டயர் ஏன் சிறியதாக உள்ளது தெரியுமா? இந்த விஷயத்தை யாரும் சொல்ல மாட்டாங்க!

பொதுவாக ஸ்பேர் டயர்கள் காரின் ட்ரங்க் பகுதியில், அதாவது பூட் பகுதியில் வைக்கப்பட்டிருக்கும். அப்போது காரின் மற்ற டயர்களை போல் ஸ்பேர் டயரும் பெரியதாக இருந்தால், அதிக இடம் தேவைப்படும். அதுவே ஸ்பேர் டயர் சிறியதாக இருந்தால் குறைவான இடத்தையே எடுத்து கொள்ளும். இதன் மூலம் நாங்கள் ஏற்கனவே கூறியபடி காரின் ஒட்டுமொத்த எடை குறையும் என்பதுடன், உங்களுக்கு இடவசதியும் கிடைக்கும்.

காரின் நார்மல் டயரை காட்டிலும் ஸ்பேர் டயர் ஏன் சிறியதாக உள்ளது தெரியுமா? இந்த விஷயத்தை யாரும் சொல்ல மாட்டாங்க!

நீங்கள் உங்கள் லக்கேஜ்களை கூடுதலாக வைத்து கொள்வதற்கு இது ஏதுவாக இருக்கும். ஆனால் சிறிய ஸ்பேர் டயரை பொருத்தி கொண்டு நீங்கள் நீண்ட தூரம் பயணிக்க கூடாது. மற்ற டயர்களுடன் ஒப்பிடும்போது ஸ்பேர் டயரின் அளவு வித்தியாசமாக இருப்பதால், அலைன்மெண்ட் மற்றும் கையாளுமையில் பாதிப்புகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன.

Most Read Articles

மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Here is the reason why car s spare tyre is smaller than a standard tyre
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X