விமானங்களை ஏன் கார்பன் ஃபைபர் மூலம் தயாரிக்கறாங்க தெரியுமா? இந்த விஷயத்தை இதுக்கு முன்னாடி கேள்விபட்டதே இல்லயே

அலுமினியத்தை ஓரம் கட்டி விட்டு தற்போது விமானங்களை ஏன் கார்பன் ஃபைபர் மூலம் தயாரிக்கின்றனர்? என்பதை இந்த செய்தியில் பார்க்கலாம்.

விமானங்களை ஏன் கார்பன் ஃபைபர் மூலம் தயாரிக்கறாங்க தெரியுமா? இந்த விஷயத்தை இதுக்கு முன்னாடி கேள்விபட்டதே இல்லயே

விமானங்கள் பெரும்பாலும் அலுமினியத்தால்தான் (Aluminum) உருவாக்கப்படுகின்றன. லைட்வெயிட்டாக (Lightweight) இருந்தாலும், அலுமினியம் மிகவும் வலிமையானது. இதன் காரணமாகவே விமானங்களை உருவாக்குவதில் அலுமினியத்திற்கு அதிக முக்கியத்துவம் வழங்கப்படுகிறது. விமானங்கள் உடற்பகுதி, இறக்கைகள் போன்றவை அலுமினியத்தால் உருவாக்கப்படுகின்றன.

விமானங்களை ஏன் கார்பன் ஃபைபர் மூலம் தயாரிக்கறாங்க தெரியுமா? இந்த விஷயத்தை இதுக்கு முன்னாடி கேள்விபட்டதே இல்லயே

ஆனால் தற்போது காலம் மாறி வருகிறது. விமானங்களின் உருவாக்கத்தில், அலுமினியத்தின் இடத்தை கார்பன் ஃபைபர் (Carbon Fiber) பிடிக்க தொடங்கியுள்ளது. விமானங்களை உருவாக்குவதற்கு, அலுமினியத்திற்கு பதிலாக நிறைய நிறுவனங்கள் தற்போது கார்பன் ஃபைபரை பயன்படுத்த தொடங்கியுள்ளன.

விமானங்களை ஏன் கார்பன் ஃபைபர் மூலம் தயாரிக்கறாங்க தெரியுமா? இந்த விஷயத்தை இதுக்கு முன்னாடி கேள்விபட்டதே இல்லயே

அலுமினியத்தால் உருவாக்கப்பட்ட விமானங்களை நீங்கள் தற்போதும் காண முடியும்தான். ஆனால் தற்போது நிறைய விமானங்கள் கார்பன் ஃபைபர் மூலமும் உருவாக்கப்படுகின்றன. விமான தயாரிப்பு நிறுவனங்கள், அலுமினியத்திற்கு பதிலாக கார்பன் ஃபைபருக்கு ஏன் அதிக முக்கியத்துவம் வழங்க தொடங்கியுள்ளன? என்பதை இந்த செய்தியில் பார்க்கலாம்.

விமானங்களை ஏன் கார்பன் ஃபைபர் மூலம் தயாரிக்கறாங்க தெரியுமா? இந்த விஷயத்தை இதுக்கு முன்னாடி கேள்விபட்டதே இல்லயே

அலுமினியத்தை விட கார்பன் ஃபைபரின் விலை மிகவும் அதிகம். இருந்தாலும் லைட்வெயிட் என்ற பண்பை கொண்டிருப்பதால், தற்போது கார்பன் ஃபைபர் முக்கியத்துவம் பெற தொடங்கியுள்ளது. அலுமினியத்தை காட்டிலும் கார்பன் ஃபைபர் 40 சதவீதம் எடை குறைவானது. அலுமினியமே மிகவும் லைட்வெயிட்டான மெட்டீரியலாகதான் கருதப்படுகிறது.

விமானங்களை ஏன் கார்பன் ஃபைபர் மூலம் தயாரிக்கறாங்க தெரியுமா? இந்த விஷயத்தை இதுக்கு முன்னாடி கேள்விபட்டதே இல்லயே

ஸ்டீல் (Steel) போன்ற மற்ற பல்வேறு மெட்டீரியல்களுடன் ஒப்பிடும்போது அலுமினியம் லைட்வெயிட்டான ஒன்று. ஆனால் அப்படிப்பட்ட அலுமினியத்தை விட கார்பன் ஃபைபர் மிகவும் எடை குறைவானது. இந்த எடை குறைவான பண்புதான், விமானங்களின் உடற்பகுதி, இறக்கைகள் மற்றும் இதர பாகங்கள் உருவாக்கத்தில், தற்போது கார்பன் ஃபைபர் முக்கியத்துவம் பெற முதன்மையான காரணம்.

விமானங்களை ஏன் கார்பன் ஃபைபர் மூலம் தயாரிக்கறாங்க தெரியுமா? இந்த விஷயத்தை இதுக்கு முன்னாடி கேள்விபட்டதே இல்லயே

விமானங்களை உருவாக்குவதற்கு கார்பன் ஃபைபருக்கு அதிக முன்னுரிமை வழங்க தொடங்கியிருப்பதற்கு 2வது காரணம் அதன் வலிமை. கார்பன் ஃபைபரின் 'டென்சில்' (Tensile) வலிமை, அலுமினியத்தை விட 4 மடங்கு அதிகம் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. எனவே கார்பன் ஃபைபர் மூலம் உருவாக்கப்பட்டால், விமானம் நீண்ட காலத்திற்கு நீடித்து உழைக்கும்.

விமானங்களை ஏன் கார்பன் ஃபைபர் மூலம் தயாரிக்கறாங்க தெரியுமா? இந்த விஷயத்தை இதுக்கு முன்னாடி கேள்விபட்டதே இல்லயே

விமானங்கள் வானத்தில் பறக்கும்போது, மிகவும் சக்தி வாய்ந்த விசைகளால் பாதிக்கப்படலாம். இதனை மிக எளிமையாக தாங்கும் சக்தி கார்பன் ஃபைபருக்கு உண்டு. அலுமினியத்துடன் ஒப்பிடும்போது 4 மடங்கு வலிமையானது என்பதால், இது சேதத்திற்கு ஆளாகாது. விமானங்கள் கார்பன் ஃபைபர் மூலமாக உருவாக்கப்படுவதற்கு மற்றொரு காரணமும் உள்ளது.

விமானங்களை ஏன் கார்பன் ஃபைபர் மூலம் தயாரிக்கறாங்க தெரியுமா? இந்த விஷயத்தை இதுக்கு முன்னாடி கேள்விபட்டதே இல்லயே

அரிப்பில் இருந்து விமானங்களை பாதுகாக்கிறது என்பதுதான் அந்த காரணம். அலுமினியமும் அரிப்பிற்கு எதிராக சிறப்பாக செயலாற்ற கூடியதுதான். இரும்பை கொண்டிருக்கவில்லை என்பதால், அலுமினியம் துருபிடிக்காது. எனினும் அவை அரிப்பிற்கு ஆளாவதற்கான வாய்ப்புகள் இல்லவே இல்லை என சொல்ல முடியாது.

விமானங்களை ஏன் கார்பன் ஃபைபர் மூலம் தயாரிக்கறாங்க தெரியுமா? இந்த விஷயத்தை இதுக்கு முன்னாடி கேள்விபட்டதே இல்லயே

ஈரப்பதம் போன்றவற்றால் நீண்ட கால அடிப்படையில் பாதிக்கப்பட்டால் காலப்போக்கில் அலுமினியம் சிதைந்து விடக்கூடும். ஆனால் கார்பன் ஃபைபர் துருபிடிக்கவும் செய்யாது. அரிக்கவும் அரிக்காது. இது போன்ற காரணங்களால்தான், விமானங்களை உருவாக்குவதற்கு தற்போது கார்பன் ஃபைபரை அதிக அளவில் பயன்படுத்த தொடங்கியுள்ளனர்.

விமானங்களை ஏன் கார்பன் ஃபைபர் மூலம் தயாரிக்கறாங்க தெரியுமா? இந்த விஷயத்தை இதுக்கு முன்னாடி கேள்விபட்டதே இல்லயே

பெரிய விமானங்கள் மட்டுமல்லாது, அளவில் சிறிய விமானங்களும் கூட தற்போது கார்பன் ஃபைபர் மூலமாக உருவாக்கப்படுகின்றன. லைட்வெயிட், வலிமை மற்றும் அரிப்பு மற்றும் துரு ஆகியவற்றுக்கு எதிரான தனது பண்புகள் மூலமாக விமான உற்பத்தி துறையில் கார்பன் ஃபைபர் தற்போது மிகவும் பிரபலமான மெட்டீரியலாக மாறி வருகிறது.

விமானங்களை ஏன் கார்பன் ஃபைபர் மூலம் தயாரிக்கறாங்க தெரியுமா? இந்த விஷயத்தை இதுக்கு முன்னாடி கேள்விபட்டதே இல்லயே

எனவே வரும் காலங்களில் கார்பன் ஃபைபர் மூலமாக உருவாக்கப்பட்ட இன்னும் அதிகமான விமானங்களை நாம் பார்ப்பதற்கான வாய்ப்புகள் பிரகாசமாக இருக்கின்றன. விமானங்கள் மட்டுமல்லாது, கார்களும் கூட தற்போது கார்பன் ஃபைபர் மூலமாக உருவாக்கப்பட்டு வருகின்றன என்பது இங்கே குறிப்பிட வேண்டிய மற்றொரு விஷயம் ஆகும்.

Note: Images used are for representational purpose only.

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Here s why carbon fiber airplanes are superior
Story first published: Thursday, June 30, 2022, 19:02 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X