மீண்டும் எரிந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்... ஆனா இதுக்கு ஸ்கூட்டர் காரணம் இல்ல... நடந்தது என்ன?

ஓடிசா மாநிலத்தில் ஹீரோ எலெக்ட்ரிக் நிறுவனத்தின் போத்தான் ஸ்கூட்டர் சார்ஜ் போடும் போது தீப்பிடித்து எரிந்துள்ளது. எப்படி இந்த தீவிபத்து நடந்தது? இதற்கான காரணம் என்ன? முழு விபரங்களைக் காணலாம் வாருங்கள்

மீண்டும் எரிந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் . . . ஆனா இதுக்கு ஸ்கூட்டர் காரணம் இல்ல . . . நடந்தது என்ன ?

இந்தியாவில் நாளுக்கு நாள் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களின் விற்பனை அதிகமாகி வருகிறது. பெட்ரோல் விலை ஏற்றம், பெட்ரோல் ஸ்கூட்டர்களின் பராமரிப்பு செலவு உள்ளிட்ட பல காரணங்களை மனதில் வைத்து மக்கள் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை வாங்கி வாங்கி வருகின்றனர். இந்தியாவில் ஹீரோ எலெக்ட்ரிக் நிறுவனம் தான் அதிக அளவிலான எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை விற்பனை செய்து வருகிறது. இந்தியாவில் இந்தியாவில் இந்நிறுவனத்தின் 4.5 லட்சம் ஸ்கூட்டர்கள் இதுவரை விற்பனையாகியுள்ளன.

மீண்டும் எரிந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் . . . ஆனா இதுக்கு ஸ்கூட்டர் காரணம் இல்ல . . . நடந்தது என்ன ?

இந்நிறுவனத்தைத் தவிர்த்து ஓலா, ஓகினவா, ஏத்தர், ப்யூர் இவி ஆகிய நிறுவனங்களும் இந்தியாவில் அதிகமாக எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை விற்பனை செய்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த மார்ச் மாதம் வேலூர் மாவட்டத்தில் ஒகினவா எலெக்டரிக் ஸ்கூட்டர் இரவில் சார்ஜ் ஏறும் போது வெடித்து தீப்பிடித்ததில் தந்தை மற்றும் மகள் பலியாகினர்.

மீண்டும் எரிந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் . . . ஆனா இதுக்கு ஸ்கூட்டர் காரணம் இல்ல . . . நடந்தது என்ன ?

இந்த சம்பவத்திற்குப் பிறகு அடுத்தடுத்து நாட்டின் பல பகுதிகளில் எலெக்டரிக் ஸ்கூட்டர்கள் தீ பிடிக்கத் துவங்கியது. பலர் இதனால் பாதிக்கப்பட்டனர். புனேவில் ஓலா எஸ்1 ப்ரோ ஸ்கூட்டர் தீ பிடித்தது. ஆந்திரா மாநிலத்தில் 80 வயது முதியவர் ஒருவர் இப்படியாக எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் ஒன்று வெடித்ததால் உயிரிழந்தது. விஜயவாடாவில் 40 வயது நபர் ஒருவர் பூம் மோட்டார்ஸ் நிறுவனத்தின் ஸ்கூட்டர் வெடித்து உயிரிழந்தது. நாசிக்கில் ஜிஜேந்திரா இவி நிறுவனத்தின் ஸ்கூட்டர்கள் ஏற்றி வரப்பட்ட கண்டெய்னரிலேயே தீ பிடித்தது எனப் பல சம்பவங்கள் நடந்து விட்டது.

மீண்டும் எரிந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் . . . ஆனா இதுக்கு ஸ்கூட்டர் காரணம் இல்ல . . . நடந்தது என்ன ?

இந்த சம்பவம் அடுத்தடுத்து நடந்த நிலையில் இதில் ஓலா, ஓகினவா எனப் பல நிறுவனங்களில் ஸ்கூட்டர்கள் இதுவரை தீப்பிடித்துள்ளது. ஆனால் இதுவரை ஹீரோ எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் தீப்பிடிக்கவில்லை. முன்னதாக தீ பிடித்த ஸ்கூட்டர் நிறுவனங்கள் ஏன் இந்த ஸ்கூட்டர்கள் தீ படித்தது என்பதற்கான ஆய்வுகளை நடத்தி வருகின்றனர். ஹீரோ எலெக்ட்ரிக் நிறுவனத்தின் ஸ்கூட்டர்கள் தீ பிடிக்காததால் அந்த நிறுவனத்தின் ஸ்கூட்டர்கள் தரமாகத் தயாரிக்கப்படுவதாக மக்கள் மத்தியில் ஒரு நம்பிக்கை வந்தது.

மீண்டும் எரிந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் . . . ஆனா இதுக்கு ஸ்கூட்டர் காரணம் இல்ல . . . நடந்தது என்ன ?

ஆனால் அந்த நம்பிக்கையை எல்லாம் தவிடுபொடியாகும் வகையில் சமீபத்தில் ஒடிசா மாநிலத்தில் ஹீரோ நிறுவனத்தின் போத்தான் என்ற எலெக்டரிக் ஸ்கூட்டர் சார்ஜ் ஏறும் போது வெடித்து தீ பிடித்த சம்பவம் சமீபத்தில் நடந்துள்ளது.

மீண்டும் எரிந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் . . . ஆனா இதுக்கு ஸ்கூட்டர் காரணம் இல்ல . . . நடந்தது என்ன ?

முன்னதாக நடந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் தீ பிடித்த சம்பவங்கள் குறித்து இந்திய ராணுவத்திற்கான தளவாடங்களைத் தயாரிக்கும் டிஆர்டிஓ மையத்தின் வெடிவிபத்து மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்பு இது குறித்து ஆய்வு நடத்திய போது இந்த நடந்த இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விபத்துக்கள் எல்லாம் பேட்டரியின் டிசைன், மற்றும் பேட்டரியில் உள்ள மற்ற பிரச்சனைகளால் ஏற்பட்டுள்ளதாகக் கண்டறிந்தது.

மீண்டும் எரிந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் . . . ஆனா இதுக்கு ஸ்கூட்டர் காரணம் இல்ல . . . நடந்தது என்ன ?

இதையடுத்து மத்திய அரசு எலெக்ட்ரிக் வாகனங்களுக்கான பேட்டரிக்கான புதிய விதிமுறைகளை வகுக்கத் துவங்கியுள்ளது. இதற்கான ஆய்வுகள் தற்போது நடந்து வருகின்றன. இந்நிலையில் தான் ஹீரோ எலெக்டரிக் நிறுவனத்தின் பைக் ஒன்று ஒடிசாவில் தீ விபத்தில் சிக்கியுள்ளது. இந்நிறுவனத்தின் பைக் தீ விபத்தில் சிக்குவது இது தான் முதன் முறை. இந்த தகவலை அறிந்ததும் ஹீரோ எலெக்டரிக் நிறுவனம் சம்பந்தப்பட்டவர்களைத் தொடர்பு கொண்டுள்ளது.

மீண்டும் எரிந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் . . . ஆனா இதுக்கு ஸ்கூட்டர் காரணம் இல்ல . . . நடந்தது என்ன ?

அப்பொது பாதிக்கப்பட்டவர் 8 மாதங்களாக ஹீரோ எலெக்டரிக் ஸ்கூட்டரின் போத்தான் ஸ்கூட்டரை பயன்படுத்தி வருவதாகவும் சம்பவம் நடந்த போது அவர் எலெக்டரிக் ஸ்கூட்டரை சார்ஜ் போட்டு வைத்திருந்ததாகவும், முதலில் சார்ஜ் போடப்பட்டிருந்த பிளக்கிலிருந்து ஏதோ வித்தியாசமாகச் சத்தம் வந்ததாகவும், வாகனத்தின் உரிமையாளர் உடனடியாக சென்று பார்த்த போது ஸ்விட்ச் போர்டிலிருந்து புகை மற்றும் தீப்பொறிகள் வந்ததாகவும் கூறியுள்ளார். மேலும் இவர் உடனடியாக மெயினை ஆஃப் செய்ய முயற்சித்துள்ளார். ஆனால் அதற்குள் நெருப்பு ஸ்கூட்டருக்கு பரவி ஸ்கூட்டரின் பின்பகுதி எரிந்துள்ளது. இவர் தீயை அணைக்க முயற்சி செய்வதற்குள் ஸ்கூட்டரின் பின் பகுதி முழுவதும் எரிந்துள்ளது. நல்லவேளையாக வீட்டிலிருந்த யாருக்கும் இதனால் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.

மீண்டும் எரிந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் . . . ஆனா இதுக்கு ஸ்கூட்டர் காரணம் இல்ல . . . நடந்தது என்ன ?

இந்த சம்பவத்தை அறித்தவுடன் இதுகுறித்து ஆய்வு செய்ய ஹீரோ எலெக்ட்ரிக் நிறுவனம் தங்கள் இன்ஜியர்களை சம்பவ இடத்திற்கு அனுப்பியுள்ளது. அங்கு அவர்கள் சென்று பார்த்த போது ஸ்கூட்டரின் பின் பகுதி முழுவதும் தீயில் எரிந்த நிலையிலிருந்துள்ளது. பின்னர் தீப்பிடித்ததற்கான காரணத்தை இவர்கள் ஆய்வு செய்த போது ஸ்விட்ச் போர்டில் ஏசி பேஷ் மற்றும் எர்த் ஒயர் உரசியதால் சாட் சர்க்கியூட் ஆகி தீ பிடித்திருந்திருக்கலாம். என்ற முடிவிற்கு வந்தனர்.

மீண்டும் எரிந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் . . . ஆனா இதுக்கு ஸ்கூட்டர் காரணம் இல்ல . . . நடந்தது என்ன ?

பின்னர் அந்த அதிகாரிகள் எரிந்து போன எலெக்டரிக் ஸ்கூட்டரை மாற்றித் தர ஹீரோ நிறுவனம் தயாராக இருப்பதாகவும் அதற்காக ஆகும் செலவை ஸ்கூட்டரின் ஓனர் தான் ஏற்க வேண்டும் எனவும், மேலும் இந்த ஸ்கூட்டர் மாற்றப்பட்டால் எல்லா விதமான பாகங்களையும் மீண்டும் சோதனை செய்து ஒப்படைக்கப்படும் எனவும் கூறி சென்றுள்ளனர்.

மீண்டும் எரிந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் . . . ஆனா இதுக்கு ஸ்கூட்டர் காரணம் இல்ல . . . நடந்தது என்ன ?

எரிந்த போன ஹீரோ எலெக்ட்ரிக் நிறுவனத்தின் போத்தான் ஸ்கூட்டர் ஒரு சிட்டி ஸ்கூட்டர். இது அதிகபட்சமாக 45 கி.மீ வேகத்தில் செல்லும், 1.9kWh லித்தியம் அயான் பேட்டரியை கொண்டது. இந்த ஸ்கூட்டரை முழுமையாக சார்ஜ் ஏற்றினால் 90 கி.மீ வரை பயணிக்க முடியும். இந்த ஸ்கூட்டர் ரூ80,490 என்ற எக்ஸ் ஷோரூம் விலையில் விற்பனையாகிறது.

மீண்டும் எரிந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் . . . ஆனா இதுக்கு ஸ்கூட்டர் காரணம் இல்ல . . . நடந்தது என்ன ?

இப்படியாகத் தொடர்ந்து எலெக்டரிக் ஸ்கூட்டர்கள் தீப்பிடிப்பது மக்கள் மத்தியில் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் மீதான அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. பலர் எலெக்டரிக் ஸ்கூட்டர்களை வாங்கத் தயக்கம் காட்டி வருகின்றனர். இந்த சம்பவங்கள் எலெக்ட்ரிக் வாகன விற்பனையில் பாதிப்பை ஏற்படுத்தாவிட்டாலும் விற்பனை வளர்ச்சியைத் தடுக்கிறது எனக் கூறப்படுகிறது. இப்படியாக எலெக்ட்ரிக் வாகனங்கள் அடிக்கடி தீவிபத்தில் சிக்கும் நிலையில் நீங்கள் எலெக்ட்ரிக் வாகனத்தை வாங்குவீர்களா? உங்கள் கருத்து என்ன? கமெண்டில் சொல்லுங்கள்

Source: ET Auto

Most Read Articles

English summary
Hero electric scooter photon fires in Odisha know the reason and other details
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X