பெட்ரோலுக்கு பதிலாக கோகோ கோலா ஊற்றினால் பைக் ஓடுமா? விடை தெரிந்தால் ஆச்சரியப்படுவீர்கள்...

பெட்ரோலுக்கு பதிலாக கோகோ கோலாவை ஊற்றி பைக்கை இயங்க வைக்கும் பரிசோதனை முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

பெட்ரோலுக்கு பதிலாக கோகோ கோலா ஊற்றினால் பைக் ஓடுமா? விடை தெரிந்தால் ஆச்சரியப்படுவீர்கள்...

உலகில் விற்பனை செய்யப்படும் பெரும்பாலான மோட்டார்சைக்கிள்கள் பெட்ரோலில் இயங்க கூடியவை. டீசலில் இயங்க கூடிய மோட்டார்சைக்கிள்களும் இருக்கவே செய்கின்றன. ஆனால் டீசலில் இயங்க கூடிய மோட்டார்சைக்கிள்களின் எண்ணிக்கை மிகவும் குறைவு. இதுதவிர சமீப காலமாக உலகம் முழுக்க எலெக்ட்ரிக் மோட்டார்சைக்கிள்களும் கூட மிக வேகமாக பிரபலம் அடைந்து வருகின்றன.

பெட்ரோலுக்கு பதிலாக கோகோ கோலா ஊற்றினால் பைக் ஓடுமா? விடை தெரிந்தால் ஆச்சரியப்படுவீர்கள்...

தற்போதைய நிலையில் மேற்கத்திய நாடுகள் அளவிற்கு இந்தியாவில் எலெக்ட்ரிக் மோட்டார்சைக்கிள்கள் இன்னும் பிரபலம் அடையவில்லை என்றாலும் கூட இங்கு எலெக்ட்ரிக் பைக்குகளின் பயன்பாடு மெல்ல மெல்ல அதிகரித்து வருகிறது. ரிவோல்ட் மோட்டார்ஸ் போன்ற ஸ்டார்ட் அப் நிறுவனங்கள், இந்தியாவில் எலெக்ட்ரிக் மோட்டார்சைக்கிள்களை விற்பனைக்கு அறிமுகம் செய்ய தயாராகி வருகின்றன.

பெட்ரோலுக்கு பதிலாக கோகோ கோலா ஊற்றினால் பைக் ஓடுமா? விடை தெரிந்தால் ஆச்சரியப்படுவீர்கள்...

இங்கே இதைப்பற்றி பேசி கொண்டிருக்க காரணம் உள்ளது. இன்று வரை உலகில் எந்த ஒரு மோட்டார்சைக்கிளும், சாஃப்ட் டிரிங் (Soft Drink) மூலம் இயங்கும் வகையில் வடிவமைக்கப்படவில்லை. ஆனால் கோகோ கோலாவை பயன்படுத்தி மோட்டார்சைக்கிளை இயங்க வைக்க பரிசோதனை முயற்சி ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஆம், சரியாகதான் படித்துள்ளீர்கள். உண்மையில் கோகோ கோலாதான்.

பெட்ரோலுக்கு பதிலாக கோகோ கோலா ஊற்றினால் பைக் ஓடுமா? விடை தெரிந்தால் ஆச்சரியப்படுவீர்கள்...

உலகப்புகழ் பெற்ற கோகோ கோலா நிறுவனத்தில் பணியாற்றும் உயர் அதிகாரிகளுக்கு கூட இந்த யோசனை தோன்றியிருக்குமா? என்று தெரியவில்லை. ஆனால் இளைஞர் ஒருவர் பரிசோதனை முயற்சியாக இதனை செய்து பார்த்துள்ளார். இந்த பரிசோதனை முயற்சிக்கு, பழைய ஹீரோ ஹோண்டா கிளாமர் மோட்டார்சைக்கிள் பயன்படுத்தப்பட்டுள்ளது.

பெட்ரோலுக்கு பதிலாக கோகோ கோலா ஊற்றினால் பைக் ஓடுமா? விடை தெரிந்தால் ஆச்சரியப்படுவீர்கள்...

முதலில் ஹீரோ ஹோண்டா கிளாமர் மோட்டார்சைக்கிளின் எரிபொருள் டேங்க் காலியாக்கப்பட்டு விட்டது. அதன் பின் எரிபொருளுக்கு பதிலாக ஒரு பெரிய பாட்டில் நிறைய இருந்த கோகோ கோலா, ஹீரோ ஹோண்டா கிளாமர் மோட்டார்சைக்கிளின் எரிபொருள் டேங்க்கில் ஊற்றப்பட்டது. ஒருவேளை கோகோ கோலா ''ஜில்'' என்று இருந்திருந்தால், மோட்டார்சைக்கிளின் இன்ஜினிற்கு தேவையான அளவு கூலிங்கையும் கொடுத்திருக்கும்!!

பெட்ரோலுக்கு பதிலாக கோகோ கோலா ஊற்றினால் பைக் ஓடுமா? விடை தெரிந்தால் ஆச்சரியப்படுவீர்கள்...

சிரிக்க வேண்டாம். இனி விஷயத்திற்கு வருவோம். கோகோ கோலாவை ஊற்றி முடித்த பின் அந்த பைக் ஸ்டார்ட் செய்யப்பட்டது. ஆச்சரியம் அளிக்கும் விதமாக மிக எளிதாக பைக் ஸ்டார்ட் ஆகி விட்டது. பைக் ஸ்டார்ட் ஆவதில் சிறு தடங்கல் கூட இல்லை. இதற்கே ஆச்சரியம் அடைந்து விட வேண்டாம். ஸ்டார்ட் ஆனவுடன் பைக் சிறிது தூரம் பயணிக்கவும் செய்தது. ஆனால் சிறிது தூரத்திற்கு பிறகு நின்று விட்டது. இது தொடர்பாக Yash Ke Experiments வெளியிட்டுள்ள வீடியோவை நீங்கள் கீழே காணலாம்.

உண்மையில் பைக்கை இயங்க வைக்க கூடிய ஆற்றல் கோகோ கோலாவிற்கு உள்ளதா? என்ற சந்தேகம் தற்போது உங்களுக்கு எழலாம். இதற்கான விடை நிச்சயமாக கிடையவே கிடையாது என்பதுதான். இது மட்டும் உண்மையாக இருந்தால், பெட்ரோல் பங்க்குகள் அனைத்திலும் பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருள்களுக்கு பதிலாக இது போன்ற சாஃப்ட் டிரிங்ஸ்தான் விற்பனை செய்யப்பட்டு கொண்டிருக்கும்.

பெட்ரோலுக்கு பதிலாக கோகோ கோலா ஊற்றினால் பைக் ஓடுமா? விடை தெரிந்தால் ஆச்சரியப்படுவீர்கள்...

சரி, அப்படி என்றால் பைக் எப்படி இயங்கியது என்று யோசிக்கிறீர்களா? கோகோ கோலாவை ஊற்றிய பின்பு பைக் ஸ்டார்ட் ஆகி சிறிது தூரம் பயணித்ததற்கு பின்னால் காரணம் உள்ளது. பைக்கின் கார்புரேட்டரில் சிறிதளவு பெட்ரோல் மீதம் இருந்திருக்கும். பைக் சிறிது தூரம் பயணிக்க அதுவே போதுமானது. இதன் மூலமாகவே பைக் இயங்கியிருக்கும்.

பெட்ரோலுக்கு பதிலாக கோகோ கோலா ஊற்றினால் பைக் ஓடுமா? விடை தெரிந்தால் ஆச்சரியப்படுவீர்கள்...

ஆனால் கோகோ கோலா எரியக்கூடிய திரவம் இல்லை என்பதால், அது இன்ஜினை அடைந்தவுடன், பைக் நின்றிருக்கலாம். எனவே இந்த செய்தியை படிப்பவர்கள் தயவு செய்து, இதனை உங்கள் வீட்டில் ஒருபோதும் முயற்சி செய்து பார்க்க வேண்டாம். ஏனெனில் உங்கள் மோட்டார்சைக்கிள் வீணாகி விடுவதற்கான வாய்ப்புகள் உள்ளன.

Most Read Articles

மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Hero Honda Glamour Bike's Fuel Tank Filled With Coca Cola. Read in Tamil
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X