விமானத்தில் உள்ள ரகசியங்கள் பற்றி உங்களுக்கு தெரியுமா?

நீங்கள் இதுவரை விமானத்தில் பயணம் செய்திருக்கிறீர்களா? அப்படி பயணம் செய்திருந்தாலும் விமானத்தில் உள்ள சில ரகசியங்கள் குறித்து உங்களுக்கு தெரிந்திருக்க வாய்ப்பு குறைவு தான்.

நீங்கள் இதுவரை விமானத்தில் பயணம் செய்திருக்கிறீர்களா? அப்படி பயணம் செய்திருந்தாலும் விமானத்தில் உள்ள சில ரகசியங்கள் குறித்து உங்களுக்கு தெரிந்திருக்க வாய்ப்பு குறைவு தான். அட இப்படி எல்லாம் கூட இருக்கிறதா!, இதற்கு தான் இது அமைக்கப்பட்டுள்ளதா! என்று நீங்கள் ஆச்சரியப்படும் அளவிற்கு விமானத்தில் பல்வேறு ரகசியங்கள் இருக்கின்றன. அவற்றை இந்த செய்தியில் காணலாம்.

விமானத்தில் உள்ள ரகசியங்கள் பற்றி உங்களுக்கு தெரியுமா?

கருப்பு முக்கோணம்

விமானத்தின் ஜன்னல்கள் பயணிகள் மேல இருந்து பூமியின் அழகை பார்ப்பதற்காக மட்டும் அமைக்கப்பவில்லை, விமான ஓட்டுநர்களுக்கு அது பயன்படுகிறது.

விமானத்தின் குறிப்பிட்ட ஒரு ஜன்னல் கண்ணாடிக்கு மேல் பகுதியில் கருப்பு நில முக்கோண குறியீடு பொறிக்கப்பட்டிருக்கும் அந்த ஜன்னல் வழியாக பார்த்தால் விமானத்தின் றெக்கையும், இன்ஜினும் தெளிவாக தெரியும். விமானம் பறக்கும் போது இன்ஜினில் கோளாறு ஏற்பட்டால், விமானிகள் இந்த ஜன்னல் வழியாக பார்த்து தான் இன்ஜின் கோளாறை உறுதி செய்வர்.

விமானத்தில் உள்ள ரகசியங்கள் பற்றி உங்களுக்கு தெரியுமா?

காற்று அழுத்தம்

பொதுவாக விமானங்களில் எந்த பகுதியிலும் ஓட்டைகள் இருப்பதில்லை. ஆனால் விமானத்தின் மையபகுதியில் உள்ள ஜன்னல்களில் மட்டும் சிறிய ஓட்டை இருக்கும்.

விமானம் பறக்கும் போது விமானத்திற்குள் ஒரு வித காற்று அழுத்தம் ஏற்பட வாய்ப்புள்ளது. இந்த அழுத்தம் தொடர்ந்து காணப்பாட்டால் பயணிகளுக்கு மூச்சு திணறல் கூட ஏற்படும். இந்த ஓட்டை காற்றழுதத்தை ஓரளவு சீர் செய்யும்.

விமானத்தில் உள்ள ரகசியங்கள் பற்றி உங்களுக்கு தெரியுமா?

ரகசிய ஓய்வறை

அதிக நேரம் பயணம் செய்யும் விமானங்களில் விமானத்தில் பணியாற்றும் ஊழியர்கள் ஓய்வெடுக்க தனியாக ரகசிய அறை அமைக்கப்பட்டிருக்கும். அங்கு செல்ல பயணிகளுக்கு அனுமதி கிடையாது. சில நேரங்களில் வம்பு செய்யும் பயணிகளிடமிருந்து தங்களை காத்துக்கொள்ளவும் விமான ஊழியர்கள் இந்த அறையை பயன்படுத்துகின்றனர்.

விமானத்தில் உள்ள ரகசியங்கள் பற்றி உங்களுக்கு தெரியுமா?

கைப்பிடி பட்டன்

விமானத்தில் உள்ள சிட்களின் கைப்பிடி அருகில் சிறிய பட்டன் ஒன்று அமைக்கப்பட்டிருக்கும். இந்த பட்டனை அழுத்துவதன் மூலம் அந்த கைப்பிடியின் உயரத்தை மாற்றிக்கொள்ளலாம். இது ஊனமுற்றவர்களுக்கு பயனளிக்கும்.

விமானத்தில் உள்ள ரகசியங்கள் பற்றி உங்களுக்கு தெரியுமா?

கழிவறை லாக்

விமானத்தில் உள்ள கழிவறையில் உள்ள லாக்களை நீங்கள் உள்ள சென்று பூட்டிக்கொண்டாலும் அதை வெளியே இருந்து திறக்கும் வசதி இருக்கும். அவசர காலத்தின் போது, விமான ஊழியர்கள் இந்த முறையை பயன்படுத்து கொள்வர், பொதுவாக வயதானவர்கள் கழிவறை பயன்படுத்து திடீர் என மயங்கி விழுந்தால் அவர்களை மீட்க இது பயனளிக்கும்.

விமானத்தில் உள்ள ரகசியங்கள் பற்றி உங்களுக்கு தெரியுமா?

மஞ்சள் நிறப்பிடி

விமானம் பறக்கும் போது மிகவும் ஈக்கட்டான நிலையில் விமானத்தை உடனடியாக தரையிறக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும். அப்பொழுது அருகில் எந்த விமான நிலையமும் இல்லாவிட்டால் விமானி விமானத்தை தண்ணீரில் தரையிறக்க முடிவு செய்வார். அவ்வாறான நேரங்களில் பயணிகளை விமானத்தின் றெக்கையின் மேற்பகுதியில் நிற்க வைத்து அவர்களின் உயிரை காப்பாற்ற விமானிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டிருக்கும்.

அந்த நேரங்களில் விமானத்தின் றெக்கையில் பயணிகள் நிற்கும் போது தண்ணீருக்கும் விழுந்துவிடாமல் இருக்க கயிறு கட்டப்படும். அதற்காக விமான பகுதியில் நிரந்தரமாக மஞ்சள் நில ஹூக் ஒன்று அமைக்கப்பட்டிருக்கும். சிலர் இதை கவனித்திருக்கலாம்.

விமானத்தில் உள்ள ரகசியங்கள் பற்றி உங்களுக்கு தெரியுமா?

ஆஷ் டிரே

விமானத்தின் புகைபிடிப்பது என்பது தடை செய்யப்பட்ட ஒன்று தான், இருந்தாலும் அங்கு ஆஷ் டிரேவை நீங்கள் பார்த்து ஆச்சரியப்பட்டிருக்கலாம். அந்த ஆஷ்டிரே எதற்காக அமைக்கப்பட்டிருக்கிறது என்றால் சிலர் தடையை மீறியும் புகைபிடிப்பர் அவர்கள் புகைத்துவிட்டு சிகரெட்டை கீழே போட்டால் தீ விபத்துநடக்க வாய்ப்புள்ளது. அதை தடுக்க அவர்களுக்காக ஆஷ்டிரை அமைக்கப்பட்டுள்ளது. எனினும் விமானத்தில் புகை பிடிப்பது ஆபத்தானது என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

விமானத்தில் உள்ள ரகசியங்கள் பற்றி உங்களுக்கு தெரியுமா?

ஆக்சிஜன் இருக்காது

விமானம் பறக்கும் போது விமானத்திற்குள் ஆக்சிஜன் குறைந்தால் விமானத்தில் உள்ள பயணிகளுக்கு மூச்சு திணறல் ஏற்படும் இதை சமாளிக்க அவர்களுக்கு ஆக்சிஜன் வழங்கப்படும். ஆக்சிஜன் பொதுவாக எளிதில் தீப்பற்றக்கூடியது. கடந்த 1996ல் நடந்த ஒரு விமான விபத்தில் சுமார் 110 பேர் பலியாகினர். இந்த விபத்து ஆக்சிஜன் சிலிண்டரால் ஏற்பட்டது. அதில் இருந்து நேரடியாக ஆக்சிஜன் பயன்படுத்துவதை விமான நிறுவனங்கள் நிறுத்தி விட்டன.

அதிற்கு மாறாக பெரியம் பெராக்ஸைடு, சோடியம் குளோரேட், பொட்டாசியம் குளோரேட், ஆகியன இருக்கும். இதை ரியாக் செய்யவைத்தால் இருந்து இருந்து ஆக்சிஜன் வெளி வரும் இதை தான் பயணிகள் சுவாசிக்க முடியும்.

விமானத்தில் உள்ள ரகசியங்கள் பற்றி உங்களுக்கு தெரியுமா?

மருத்துவகருவி

பொதுவாக விமானங்களில் முதலுதவி பெட்டி இருக்கும் என நம் எல்லோருக்கும் தெரியும். ஆனால் இதய அடைப்பால் ஒருவர் மரணத்தை தவழுப்போகும் வேலையில் அவர்களை காப்பாற்றும் டிபிர்லேட்டர் எனும் கருவியும் பெரும்பாலான விமானங்களில் இருப்பது நம்மில் பலருக்கு தெரியாது. கடந்த 2015ல் ஒரு பிரிட்டிஷ் பெண் விமான பயணத்தில் இறந்த சம்பவத்தையடுத்து இந்த கருவியை பெரும்பாலான விமான நிறுவனங்கள் பெற்றுவிட்டன.

விமானத்தில் உள்ள ரகசியங்கள் பற்றி உங்களுக்கு தெரியுமா?

ஸ்கை மார்ஷல்

விமானத்தை தீவிரவாதிகள் கடத்துவதில் இருந்து பாதுகாக்கவும், பயணிகளின் பாதுகாப்பிற்காகவும் சில விமானங்களில் ஸ்கை மார்ஷல் என்பவர் நியமிக்கப்படுவார். இவர் பயணியோடு பயணியாக விமானத்தில் பயணம் செய்வார். இவர் தான் ஸ்கை மார்ஷல் பயணிகள் கண்டுபிடிக்க முடியாது. சில நேரங்கள் ஸ்கை மார்ஷல் குறித்த விபரம் கேப்டன் தவிர மற்ற ஊழியர்களுக்கு கூட தெரியாது.

இவர்களுக்கு தீவிரவாதிகள் விமானத்தை கடத்த முயலும் போது அவர்களிடம் இருந்து விமானத்தை மீட்க பயிற்சி அளிக்கப்பட்டிருக்கும். சில நேரங்களில் விமானம் கடத்தப்பட்டாலும் விமானத்தில் பயணிகள் போல நடித்து வெளில் உள்ள அதிகாரிகள் பயணிகளை மீட்கும் முயற்சியில் அதிகாரிகளுக்கு நம்பகமான ஆளாகவும் ஸ்கை மார்ஷல் செயல்படுவார்.

விமானத்தில் உள்ள ரகசியங்கள் பற்றி உங்களுக்கு தெரியுமா?

காக்பிட் கேமரா

பொதுவாக விமானங்களில் "பிளாக் பாக்ஸ்" எனும் விமான பயணத்தின் போது விமானிகளில் உரையாடல்கள் பதிவாகும் பெட்டி இருக்கும். இந்த பெட்டியில் தற்போது கேமராவும் இணைக்கப்பட்டுள்ளது. சில விமானங்களில் விமானத்தை ஓட்டும் அறைகளில் நடப்பது முற்றிலுமாக "பிளாக் பாக்ஸில் பதிவாகிவிடும்"

அதே போல் பயணிகள் அமர்ந்திருக்கும் இடத்திலும் கேமராக்கள் அமைக்கப்பட்டிருக்கும். இது பயணிகளின் நடவடிக்கையை கண்காணிக்க உதவும், இந்த கேமராவில் பதிவாதை விமானத்தின் கேப்டன் பார்க்க முடியும்.

விமானத்தில் உள்ள ரகசியங்கள் பற்றி உங்களுக்கு தெரியுமா?

அடுத்த முறை நீங்கள் விமானத்தில் பயணம் செய்யும் போது இந்த ரகசியங்களை எல்லாம் காணத்தவறாதீர்கள். பட்டியலில் இருப்பதை தவிர உங்களுக்கு மேலும் பல தகவல்கள் தெரிந்திருந்தால் கீழே கமெண்ட் பாக்ஸ்லில் கமெண்ட் செய்யுங்கள்.

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #offbeat
English summary
hidden aircraft features you probably didn't know about. Read in Tamil
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X