சுமார் ரூ.18 கோடி செலவில் டெல்லியில் ஆட்டோமேட்டிக் பார்க்கிங் ஏரியா!! சென்னைக்கு எல்லாம் எப்போதுதான் வருமோ!

டெல்லியின் உயரமான பல-நிலை தானியங்கி பார்க்கிங் பகுதி அந்நகரத்தில் உள்ள க்ரீன் பார்க் மெட்ரோ இரயில் நிலையத்தில் கொண்டுவரப்பட்டுள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவல்களை இந்த செய்தியில் பார்ப்போம்.

சுமார் ரூ.18 கோடி செலவில் டெல்லியில் ஆட்டோமேட்டிக் பார்க்கிங் ஏரியா!! சென்னைக்கு எல்லாம் எப்போதுதான் வருமோ!

டெல்லியில் கிரீன் பார்க் மெட்ரோ நிலையத்தில் அதிநவீன 17-மட்டங்களை கொண்ட மல்டி லெவல் ஆட்டோமேட்டிக் பார்க்கிங் கடந்த நவம்பர் 25ஆம் தேதி, புதன்கிழமை திறக்கப்பட்டுள்ளது. தேசிய தலைநகரில் முதன்முறையாக இத்தகைய வசதி கொண்டுவரப்பட்டுள்ளது.

சுமார் ரூ.18 கோடி செலவில் டெல்லியில் ஆட்டோமேட்டிக் பார்க்கிங் ஏரியா!! சென்னைக்கு எல்லாம் எப்போதுதான் வருமோ!

இந்த ஆட்டோமேட்டிக் பார்க்கிங் பகுதி 39.5 மீட்டர் உயரத்தில் நான்கு கோபுரங்களைக் கொண்டுள்ளது. அங்கு 32 எஸ்யூவி உள்ளிட்ட 136 கார்களை நிறுத்த முடியும். 878 சதுர மீட்டர் நிலப்பரப்பில் கட்டப்பட்டுள்ள இந்த திட்ட செலவு சுமார் ரூ.18.20 கோடி ஆகும்.

டெல்லி லெப்டினன்ட் கவர்னர் அனில் பைஜால், தென் டெல்லி நகராட்சி ஆணையர் ஞானேஷ் பாரதி மற்றும் தெற்கு டெல்லி மேயர் அனாமிகா மிதிலேஷ் ஆகியோர் கலந்து கொண்ட டிஜிட்டல் விழாவில் இந்த வாகன நிறுத்தம் பொதுமக்களுக்காக திறக்கப்பட்டது.

சுமார் ரூ.18 கோடி செலவில் டெல்லியில் ஆட்டோமேட்டிக் பார்க்கிங் ஏரியா!! சென்னைக்கு எல்லாம் எப்போதுதான் வருமோ!

பார்க்கிங் பகுதியில் வெளியேறும் மற்றும் உள்ளே வரும் வழியில் பூம் தடை உடன் ஒரு தானியங்கி டிக்கெட் விநியோகிக்கும் இடம் உள்ளது. பார்க்கிங் கட்டணம் ஒரு மணி நேரத்திற்கு ரூ.20 ஆகவும், 24 மணி நேரத்திற்கு ரூ.100 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

சுமார் ரூ.18 கோடி செலவில் டெல்லியில் ஆட்டோமேட்டிக் பார்க்கிங் ஏரியா!! சென்னைக்கு எல்லாம் எப்போதுதான் வருமோ!

அதேநேரம் வாகன ஓட்டி ரூ.1200-ல் மாதாந்திர நாள் பாஸையும் வாங்கலாம். இந்த பாஸில் மாதம் முழுவதிலும் பகல் நேரத்தில் மட்டும் தான் பார்க்கிங்கை உபயோகப்படுத்த முடியும். இரவு நேரத்திலும் பயன்படுத்துவதற்கு மொத்தமாக ரூ.2,000 மாதந்தோறும் செலுத்த வேண்டும். வாகனத்தை மீட்டெடுக்க 150 வினாடிகள் தேவைப்படுக்கிறது.

சுமார் ரூ.18 கோடி செலவில் டெல்லியில் ஆட்டோமேட்டிக் பார்க்கிங் ஏரியா!! சென்னைக்கு எல்லாம் எப்போதுதான் வருமோ!

டெல்லி, க்ரீன் பார்க் போன்ற நெரிசலான சந்தைகள் மற்றும் மக்கள் தொகை கொண்ட காலனிகளில் செங்குத்து பார்க்கிங் மிகவும் பொருத்தமானது என்றும், வழக்கமான பார்க்கிங்கிற்கு தேவைப்படும் 30 சதுர மீட்டருடன் ஒப்பிடுகையில் இங்கு ஒரு காரை நிறுத்த 1.50 சதுர மீட்டர் இடம் மட்டுமே தேவைப்படும் என்றும் இந்நிகழ்ச்சியில் பேசிய டெல்லி லெப்டினண்ட் கவர்னர் அனில் பைஜால் தெரிவித்தார்.

சுமார் ரூ.18 கோடி செலவில் டெல்லியில் ஆட்டோமேட்டிக் பார்க்கிங் ஏரியா!! சென்னைக்கு எல்லாம் எப்போதுதான் வருமோ!

39.50 மீட்டர் உயரமுள்ள ஒவ்வொரு கோபுரத்திலும் 17 மட்டங்கள் உள்ளன. அவற்றில் வலதுப்பக்கம் ஒன்று, இடதுப்பக்கம் ஒன்று என மொத்தம் 34 கார்களை நிறுத்தி வைக்கலாம். கோபுரங்களின் ஒவ்வொரு மட்டத்திலும் தெளிப்பான்களுடன் பவர் பேக் அப் மற்றும் தீயணைப்பு அமைப்பு உள்ளது.

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Delhi's highest multi-level automatic parking comes up at Green Park Metro Station
Story first published: Saturday, November 28, 2020, 2:21 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X