இந்த ஷூ இருந்தா யார் உதவியும் தேவையில்ல... நேஷிகேசன் வசதி கொண்ட ஹோண்டா ஷூ... செம்மையா இருக்கே!

பிரபல இருசக்கர வாகன உற்பத்தி நிறுவனமான ஹோண்டா நேவிகேஷன் வசதிக் கொண்ட காலணியை (ஷூ) உருவாக்கியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த ஷூ இருந்தா யார் உதவியும் தேவையில்ல... நேஷிகேசன் வசதி கொண்ட ஹோண்டா ஷூ... செம்மையா இருக்கே!!

ஜப்பான் நாட்டை மையமாகக் கொண்டு இயங்கும் பிரபல இருசக்கர வாகன உற்பத்தி நிறுவனம் ஹோண்டா மோட்டார். இந்த நிறுவனம் அண்மையில் அஷிரஸ் இன்க் (Ashirase, Inc.) எனும் நிறுவனத்தை விரிவாக்கம் செய்வதாக அறிவித்திருந்தது. இது நிறுவனத்தின் புதிய தொழிலுக்கான அமைப்பு ஆகும்.

இந்த ஷூ இருந்தா யார் உதவியும் தேவையில்ல... நேஷிகேசன் வசதி கொண்ட ஹோண்டா ஷூ... செம்மையா இருக்கே!!

இந்த புதிய நிறுவனத்தின் வாயிலாகவே புதிய ஷூ ஒன்றை நிறுவனம் தற்போது உருவாகியிருக்கின்றது. இதனையே ஹோண்டா தற்போது காட்சிப்படுத்தியுள்ளது. இந்த ஷூவில் மிக பிரத்யேகமாக நேவிகேஷன் வசதியை ஹோண்டா வழங்கியிருக்கின்றது.

இந்த ஷூ இருந்தா யார் உதவியும் தேவையில்ல... நேஷிகேசன் வசதி கொண்ட ஹோண்டா ஷூ... செம்மையா இருக்கே!!

ஆமாங்க, வழி காட்ட உதவும் கருவியான நேவிகேஷனையே ஷூவில் ஹோண்டா பொருத்தியிருக்கின்றது. பார்வை திறன் பிரச்னைக் கொண்டவர்களுக்கு உதவும் விதமாக இந்த நேவிகேஷன் வசதி கொண்ட ஷூ உருவாக்கப்பட்டுள்ளது. ஆஷிரஸ் எனும் பெயரில் இந்த ஷூ வரும் 2023ம் ஆண்டு மார்ச் 31ம் தேதி விற்பனைக்கு வரும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த ஷூ இருந்தா யார் உதவியும் தேவையில்ல... நேஷிகேசன் வசதி கொண்ட ஹோண்டா ஷூ... செம்மையா இருக்கே!!

இந்த ஷூவை ஸ்மார்ட் ஃபோனுடன் இணைக்கும் வசதிக் கொடுக்கப்பட்டுள்ளது. இதற்காக பிரத்யேக செல்போன் செயலி ஒன்றும் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் வாயிலாக ஷூவை இணைத்தால், செல்லும் இடத்தை அதுவே நமக்கு கூறம். இதற்காக, மோஷன் சென்சார்கள் ஷூவில் கொடுக்கப்பட்டிருக்கின்றன.

இந்த ஷூ இருந்தா யார் உதவியும் தேவையில்ல... நேஷிகேசன் வசதி கொண்ட ஹோண்டா ஷூ... செம்மையா இருக்கே!!

இதுவே நடப்பதற்கான பாதையை வழிவகுத்து கொடுக்கும். பாதையைச் சுட்டிக் காட்டுவதற்கு ஏதுவாக முப்பரிமாண அதிர்வு திறன் கொண்ட சாதனம் ஷூவில் பொருத்தப்பட்டுள்ளது. இது அதிர்வுகளின் வாயிலாக திரும்பும் திசையை காட்டிக் கொடுக்கும்.

இந்த ஷூ இருந்தா யார் உதவியும் தேவையில்ல... நேஷிகேசன் வசதி கொண்ட ஹோண்டா ஷூ... செம்மையா இருக்கே!!

அதாவது, வலது பக்கம் திரும்ப வேண்டுமானால், வலது பக்கம் அதிர்வை வழங்கி அவ்வழியாக திரும்ப சொல்லும். இதேபோன்று திசைக்கு ஏற்ப அதிர்வுகளை மாற்றி மாற்றி எழுப்பி அறிவிப்பை அது வழங்கும். பார்வை திறன் குறைபாடுள்ளவர்கள் பிறரின் உதவியின்றி செல்ல இந்த ஷூ நிச்சயம் உதவும். இதற்காகவே இந்த ஷூ உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த ஷூ இருந்தா யார் உதவியும் தேவையில்ல... நேஷிகேசன் வசதி கொண்ட ஹோண்டா ஷூ... செம்மையா இருக்கே!!

உலகம் முழுவதிலும் பல மில்லியன் நபர்கள் பார்வை திறன் குறைபாடுடன் இருக்கின்றனர். இவர்களில் பலருக்கு தானாகவே வெளியில் செல்வதற்கான வசதியை இந்த ஏற்படுத்திக் கொடுக்க இருக்கின்றது.

இந்த ஷூ இருந்தா யார் உதவியும் தேவையில்ல... நேஷிகேசன் வசதி கொண்ட ஹோண்டா ஷூ... செம்மையா இருக்கே!!

ஹோண்டா நிறுவனம், அதன் பென்லி மின்சார இருசக்கர வாகனத்தை இந்திய சாலையில் வைத்து பரிசோதித்து வருகின்றது. இந்திய எலெக்ட்ரிக் வாகன பிரியர்கள் மத்தியில் ஆர்வத்தைத் தூண்டும் வகையில் அமைந்துள்ளது. குறிப்பாக, நிறுவனம் இந்த மின்சார இருசக்கர வாகனத்தை இந்தியாவில் விற்பனைக்குக் கொண்டு வரலாம் என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தத் தொடங்கியுள்ளது.

Most Read Articles

English summary
Honda Develops Shoe With Navigation System: Here Is Full Details. Read In Tamil.
Story first published: Sunday, June 13, 2021, 9:30 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X