உலகில் எங்குமே இந்நிலை இல்லை.. ஆச்சரியத்தையும், சந்தேகத்தையும் ஒரு சேர வரவழைத்த சீனா...

கொரோனா வைரசின் கோர பிடியில் உலகமே சிக்கி தவித்து வரும்நிலையில் சீனாவில் மட்டும் சில அதிரடி மாற்றங்கள் நிகழ்ந்திருக்கின்றன. அதிலும், கொரோனா வைரசின் பிறப்பிடமாக கருதப்படும் வுஹான் நகரத்தில் இந்த மாற்றம் நடைபெற்றிருப்பது உலக நாடுகள் மத்தியில் ஆச்சரியத்தையும், பெரும் சந்தேகத்தையும் எழுப்பியுள்ளது.

உலகில் எங்குமே இந்த நிலை இல்லை.. சீனாவில் மட்டும் எப்படி..? அதுவும் கொரோனா பிறப்பிடமான வுஹான் நகரத்திலா!!!

உலகையே தனது கோரப் பிடியால் ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கும் உயிர் கொல்லி வைரஸ் கோரானவின் தாண்டவ ஆட்டம் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் இருக்கின்றது. இதன் அதி தீவிர தன்மையால் உலக நாடுகள் பல செய்வதறியாமல் திக்கு திணறி வருகின்றன. குறிப்பாக, வைரஸ் தொற்றுடைய நபர்களை குணப்படுத்துவதில் மிகுந்த சிரமத்தை அவை சந்தித்து வருகின்றன.

உலகில் எங்குமே இந்த நிலை இல்லை.. சீனாவில் மட்டும் எப்படி..? அதுவும் கொரோனா பிறப்பிடமான வுஹான் நகரத்திலா!!!

சுகாதாரத்துறையில் பல மடங்கு வளர்ச்சியடைந்ததாகக் கூறிக் கொண்ட நாடுகள்கூட இதில் தீர்வு எட்ட முடியாமல் நிலைந்து குலைந்து நிற்கின்றன. இதே நிலையைதான் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வரை சீனாவும் சந்தித்து வந்தது. ஏன், ஒரு சில வாரங்களுக்கு முன்பு வரைகூட இந்த நிலையே அங்கு காணப்பட்டது. ஆனால், குறுகிய நாட்களுக்குள்ளாக தங்கள் நாடு கொரோனாவின் பிடியில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக தப்பித்து வருவதாக அந்நாடு அறிவித்தது.

உலகில் எங்குமே இந்த நிலை இல்லை.. சீனாவில் மட்டும் எப்படி..? அதுவும் கொரோனா பிறப்பிடமான வுஹான் நகரத்திலா!!!

இது உலக நாடுகள் மத்தியில் ஆச்சரியத்தையும் ஏற்படுத்தினாலும், பெரும் தலைவர்கள் மத்தியில் பெருத்த சந்தேகத்தை எழுப்பியது. ஏற்கனவே இந்த வைரஸை பரப்பியது சீனாதான் என்ற குற்றச்சாட்டு பரவலாக முன்வைக்கப்பட்டு வருகின்றது. அதற்கேற்ப அதன் நடவடிக்கைகள் சில சந்தேகத்தை ஏற்படுத்தும் வகையில் உள்ளது. ஆனால், இதற்கு சீனா முழுமையாக மறுப்பு தெரிவித்து வருகின்றது.

உலகில் எங்குமே இந்த நிலை இல்லை.. சீனாவில் மட்டும் எப்படி..? அதுவும் கொரோனா பிறப்பிடமான வுஹான் நகரத்திலா!!!

இந்நிலையில், தினந்தோறும் சீனாவைச் சார்ந்து வெளிவரும் செய்திகள் அனைத்தும் அந்நாடு மீண்டும் பழைய நிலைக்கு திரும்பி வருவதாக தெரிவிக்கின்றன.

இந்த தகவல்கள் அந்நாட்டின் மீதுள்ள சந்தேகத்தை மேலும் வலுக்கச் செய்துள்ளது. ஏனெனில், ஆரம்பத்தில் இந்த வைரஸ், அதன் உக்கர தாண்டவ ஆட்டத்தை சீனாவின் வுஹான் நகரத்திலேயே காண்பித்தது. இந்த நகரத்தில்தான் இந்த வைரஸ் பிறந்ததாக நம்பப்படுகின்றது.

உலகில் எங்குமே இந்த நிலை இல்லை.. சீனாவில் மட்டும் எப்படி..? அதுவும் கொரோனா பிறப்பிடமான வுஹான் நகரத்திலா!!!

இதனாலயே, பலர் இந்த வைரஸை சீனா வைரஸ் மற்றும் வுஹான் வைரஸ் என்று கூறிவருகின்றனர். ஏன், அமெரிக்க அதிபர் ட்ரம்பும்கூட அந்த கொரோனா வைரசை இவ்வாறே அழைக்கின்றார்.

அந்தளவிற்கு தீவிரமும், பரவல் விகிதமும் அந்த நாட்டில் அதிகம் காணப்பட்டது. ஆனால், இப்போது நிலைமை அப்படியே தலைகீழாக மாறியிருக்கின்றது. அதாவது, சீனாவைத் தவிர மற்ற உலக நாடுகள் அனைத்திலும் வைரசின் தீவிரம் அதிகரித்து காணப்படுகின்றது.

உலகில் எங்குமே இந்த நிலை இல்லை.. சீனாவில் மட்டும் எப்படி..? அதுவும் கொரோனா பிறப்பிடமான வுஹான் நகரத்திலா!!!

மறுபக்கம் சீனாவில் வைரசின் தொற்று படிபடியாக குறைய ஆரம்பித்துள்ளது. இதை உறுதி செய்யும் வகையில் அண்மையில் வுஹான் நகரத்தில் அமல்படுத்தப்பட்டிருந்த ஊரடங்கு உத்தரவு சமீபத்தில் விலக்கிக் கொள்ளப்பட்டது. இதைத்தொடர்ந்து, அந்த நகரத்தில் இருக்கும் வணிக நிறுவனங்கள் மற்றும் உற்பத்தியாலைகள் பல மீண்டும் இயக்கநிலைக்கு திரும்பியுள்ளன.

உலகில் எங்குமே இந்த நிலை இல்லை.. சீனாவில் மட்டும் எப்படி..? அதுவும் கொரோனா பிறப்பிடமான வுஹான் நகரத்திலா!!!

அதன்படி, ஹோண்டா நிறுவனமும் வுஹானில் உள்ள அதன் பிளாணட்டில் வாகன உற்பத்தியைத் தொடங்கியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஆனால், முன்னாடி இருந்ததைக் காட்டிலும் இப்போது பல கட்டுப்பாடுகளுடன் உற்பத்தியாலை இயங்க இருக்கின்றது. அதாவது, பணியாளர்களுக்கு முக கவசம், கையுறை போன்ற பாதுகாப்பு கவசங்கள் வழங்கப்பட்டு, அதை அணிந்த பின்னரே தொழிற்சாலைக்குள் அனுமதிக்கப்பட இருக்கின்றனர்.

உலகில் எங்குமே இந்த நிலை இல்லை.. சீனாவில் மட்டும் எப்படி..? அதுவும் கொரோனா பிறப்பிடமான வுஹான் நகரத்திலா!!!

ஆகையால், கடந்த ஜனவரி மாதம் மூடப்பட்ட இந்த ஆலை தற்போது மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே, கடந்த மார்ச் மாதம் 11ம் தேதி இந்த ஆலை திறக்கப்பட்டது. அப்போது, வைரசில் இருந்து பாதுகாத்துக் கொள்வதற்கு தேவையான உபகரணங்களைத் தயாரிக்க திறக்கப்பட்டது. ஆனால், இப்போது வாகன உற்பத்தியை ஆரம்பிக்கும் நோக்கில் திறக்கப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்பட இருக்கின்றன.

உலகில் எங்குமே இந்த நிலை இல்லை.. சீனாவில் மட்டும் எப்படி..? அதுவும் கொரோனா பிறப்பிடமான வுஹான் நகரத்திலா!!!

ஹோண்டா நிறுவனம் இந்த உற்பத்தியாலையை சீனாவின் டோஹ்ஃபெங் மோட்டார் குழுமத்துடன் இணைந்து இயக்கி வருகின்றது. இவ்விரு நிறுவனங்களும் இணைந்து வருடத்திற்கு 8 லட்சம் வாகனங்களை இங்கு உற்பத்தி செய்து வருகின்றன.

இந்நிலையில், தற்போது ஆரம்பகட்டமாக 12 ஆயிரம் பணியாளர்கள் அனுமதிக்கப்பட்டு, மீண்டும் உற்பத்தி பணி தொடங்கப்பட்டுள்ளது.

உலகில் எங்குமே இந்த நிலை இல்லை.. சீனாவில் மட்டும் எப்படி..? அதுவும் கொரோனா பிறப்பிடமான வுஹான் நகரத்திலா!!!

இந்த பணியாளர்கள் அனைவருக்கும் பாதுகாப்பு கவசங்களை வழங்குவதைப் போலவே சில பரிசோதனைகளை மேற்கொள்ளவும் இரு நிறுவனங்களும் முடிவு செய்திருக்கின்றன. அதன்படி, ஒவ்வொரு ஊழியரும் ஆலைக்குள் நுழையும் முன்பு மற்றும் வெளியேறும் சிறப்பு கருவிகள் கொண்டு ஆய்விற்கு உட்படுத்தப்பட இருக்கின்றனர்.

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Honda Resumes Production Work In Wuhan. Read In Tamil.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X