புதிய ஸ்கூட்டரில் அடிக்கடி பிரச்னை... ஹோண்டா சர்வீஸ் சென்டருக்கு பாடம் புகட்டிய பெண்...

புதிய ஸ்கூட்டரில் அடிக்கடி பிரச்னை ஏற்பட்டதால், ஹோண்டா சர்வீஸ் சென்டருக்கு நீதிமன்றம் மூலம் பெண் ஒருவர் உரிய தண்டனையை வாங்கி கொடுத்துள்ளார். இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

 புதிய ஸ்கூட்டரில் அடிக்கடி பிரச்னை... ஹோண்டா சர்வீஸ் சென்டருக்கு பாடம் புகட்டிய பெண்...

ராம் டூவீலர்ஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனத்திடம் இருந்து, கோரி மெஹ் ஜபீன் என்ற பெண், கடந்த 2016ம் ஆண்டு நவம்பர் 21ம் தேதி ஹோண்டா டியோ ஸ்கூட்டர் ஒன்றை வாங்கினார். இது ஹோண்டா நிறுவனத்தின் அங்கீகாரம் பெற்ற விற்பனை மற்றும் சர்வீஸ் மையம் ஆகும். அந்நிறுவனம் விற்பனை செய்த ஹோண்டா டியோ ஸ்கூட்டரின் விலை 50,883 ரூபாய்.

 புதிய ஸ்கூட்டரில் அடிக்கடி பிரச்னை... ஹோண்டா சர்வீஸ் சென்டருக்கு பாடம் புகட்டிய பெண்...

ஆனால் கோரி மெஹ் ஜபீன் ஸ்கூட்டரை வாங்கியது முதலே அதில் மெக்கானிக்கல் ரீதியாக பிரச்னைகள் வந்து கொண்டே இருந்தது. எனவே பிரச்னைகளை நிவர்த்தி செய்வதற்காக சர்வீஸ் சென்டருக்கு அவர் பல முறை ஸ்கூட்டரை கொண்டு சென்றார். ஆனால் பிரச்னை சரி செய்யப்படவில்லை என கூறப்படுகிறது. எனவே ஸ்கூட்டரை மாற்றி தருமாறு அவர் கேட்டுள்ளார்.

 புதிய ஸ்கூட்டரில் அடிக்கடி பிரச்னை... ஹோண்டா சர்வீஸ் சென்டருக்கு பாடம் புகட்டிய பெண்...

எனினும் அவரின் கோரிக்கை நிறைவேறவில்லை. இதன் காரணமாக மாவட்ட நுகர்வோர் குறைதீர் மன்றத்தில் அவர் இதுகுறித்து முறையிட்டார். ஐதராபாத் III மாவட்ட நுகர்வோர் குறைதீர் மன்றத்தின் பெஞ்ச் முன்பாக இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது எதிர்தரப்பு தங்கள் வாதத்தை எழுத்து பூர்வமாக முன்வைத்தது.

 புதிய ஸ்கூட்டரில் அடிக்கடி பிரச்னை... ஹோண்டா சர்வீஸ் சென்டருக்கு பாடம் புகட்டிய பெண்...

இதில், ''இந்த ஸ்கூட்டரை ஒவ்வொரு முறை சர்வீஸ் சென்டருக்கு கொண்டு வந்தபோதும், உரிய நேரத்தில் ரெஸ்பான்ஸ் செய்தோம். அத்துடன் எங்கள் கவனத்திற்கு வந்த அனைத்து பிரச்னைகளையும் சரி செய்தோம். ஹோண்டாவால் உற்பத்தி செய்யப்படும் வாகனங்களை விற்கவும், சர்வீஸ் செய்யவும் மட்டுமே நாங்கள் அங்கீகாரம் பெற்றுள்ளோம்.

 புதிய ஸ்கூட்டரில் அடிக்கடி பிரச்னை... ஹோண்டா சர்வீஸ் சென்டருக்கு பாடம் புகட்டிய பெண்...

எங்களுக்கும் உற்பத்திக்கும் எவ்விதமான தொடர்பும் இல்லை'' என தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் நுகர்வோர் குறைதீர் மன்றம் இதனை ஏற்றுக்கொள்ளவில்லை. ஸ்கூட்டரை வாங்கிய ஆரம்பத்திலேயே மெக்கானிக்கல் பிரச்னைகள் வந்ததால், வாடிக்கையாளருக்கு அசௌகரியம் ஏற்பட்டுள்ளதாக நுகர்வோர் குறைதீர் மன்றம் தெரிவித்தது.

 புதிய ஸ்கூட்டரில் அடிக்கடி பிரச்னை... ஹோண்டா சர்வீஸ் சென்டருக்கு பாடம் புகட்டிய பெண்...

அடிக்கடி பழுது ஏற்பட்டு கொண்டே இருந்தால், வாகனத்தில் முதலீடு செய்ததன் நோக்கமே பாழாகி விடும் எனவும் நுகர்வோர் குறைதீர் மன்றம் தெரிவித்தது. எனவே டூவீலரை மாற்றி தருவதுடன், வாடிக்கையாளருக்கு இழப்பீடாக 50 ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும் என நுகர்வோர் குறைதீர் மன்றம் அதிரடியாக உத்தரவிட்டது.

 புதிய ஸ்கூட்டரில் அடிக்கடி பிரச்னை... ஹோண்டா சர்வீஸ் சென்டருக்கு பாடம் புகட்டிய பெண்...

இதுகுறித்து மாவட்ட நுகர்வோர் குறைதீர் மன்றம் தனது உத்தரவில் மேலும் கூறியிருப்பதாவது: இது புதிய வாகனம். எனவே அடிக்கடி பிரச்னைகள் வந்து கொண்டே இருக்க கூடாது. அத்துடன் இந்த வாகனம் வாரண்டி காலத்தின் கீழ் உள்ளது. எனவே வாடிக்கையாளரை திருப்திபடுத்த வேண்டியது எதிர்தரப்பின் கடமை. இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

 புதிய ஸ்கூட்டரில் அடிக்கடி பிரச்னை... ஹோண்டா சர்வீஸ் சென்டருக்கு பாடம் புகட்டிய பெண்...

வாகன உற்பத்தி நிறுவனங்கள் மற்றும் டீலர்களின் சேவையில் குறைபாடு இருப்பதாக கருதினால், நீங்களும் இதுபோல் நுகர்வோர் குறைதீர் மன்றங்களை அணுகி நிவாரணம் பெறலாம். ஆனால் இப்படி ஒரு வாய்ப்பை நம்மில் பலரும் பயன்படுத்தி கொள்வதில்லை என்பதே யதார்த்தம். வீண் சிரமம் என கருதி பிரச்னையை அப்படியே விட்டு விடுகிறோம்.

Note: Images used are for representational purpose only.

3.40 லட்ச ரூபாயை மொத்தமாக சுருட்ட முயன்ற யூஸ்டு கார் டீலருக்கு தக்க பாடம் புகட்டிய மதுரை பெண்...

ஆனால் மோசடிகளில் ஈடுபடும் டீலர்களுக்கு எதிராக பெண்கள் கூட தற்போது வெகுண்டெழுந்து விட்டனர். இந்த வகையில்தான் புதிய ஸ்கூட்டரில் அடிக்கடி பிரச்னை ஏற்பட்டதால், சம்பந்தப்பட்ட ஹோண்டா சர்வீஸ் சென்டருக்கு இந்த பெண் தக்க பாடம் புகட்டியுள்ளார்.

3.40 லட்ச ரூபாயை மொத்தமாக சுருட்ட முயன்ற யூஸ்டு கார் டீலருக்கு தக்க பாடம் புகட்டிய மதுரை பெண்...

இந்த வரிசையில் மற்றொரு பெண் குறித்த தகவல்களையும் நீங்கள் தெரிந்து கொள்வது சிறப்பாக இருக்கும். 3.40 லட்ச ரூபாயை மொத்தமாக சுருட்ட முயன்ற யூஸ்டு கார் டீலருக்கு அந்த பெண் தக்க பாடம் புகட்டியுள்ளார். அவர் நம்ம மதுரையை சேர்ந்தவர். இதுகுறித்த விரிவான தகவல்களை தொடர்ந்து பார்க்கலாம்.

3.40 லட்ச ரூபாயை மொத்தமாக சுருட்ட முயன்ற யூஸ்டு கார் டீலருக்கு தக்க பாடம் புகட்டிய மதுரை பெண்...

மதுரை கப்பலூர் பகுதியில் பெஸ்ட் மோட்டார்ஸ் பிரைவேட் லிமிடெட் என்ற யூஸ்டு கார் டீலர்ஷிப் (Used Car Dealership) செயல்பட்டு வருகிறது. இங்கு செகண்ட் ஹேண்ட் கார்கள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.

3.40 லட்ச ரூபாயை மொத்தமாக சுருட்ட முயன்ற யூஸ்டு கார் டீலருக்கு தக்க பாடம் புகட்டிய மதுரை பெண்...

இதனிடையே மதுரையை சேர்ந்த சுதா என்பவர், பெஸ்ட் மோட்டார்ஸ் நிறுவனத்திடம் இருந்து, ஹேட்ச்பேக் வகை கார் ஒன்றை, கடந்த 2013ம் ஆண்டு வாங்கினார். இந்த கார் அதன் உரிமையாளரால், 3 ஆண்டுகள் பயன்படுத்தப்பட்ட பிறகு பெஸ்ட் மோட்டார்ஸ் நிறுவனத்திடம் விற்பனை செய்யப்பட்டது ஆகும்.

3.40 லட்ச ரூபாயை மொத்தமாக சுருட்ட முயன்ற யூஸ்டு கார் டீலருக்கு தக்க பாடம் புகட்டிய மதுரை பெண்...

இந்த சூழலில்தான் சுதா அந்த காரை 3.40 லட்ச ரூபாய்க்கு வாங்கினார். ஆனால் வாங்கிய ஒரு சில நாட்களில் கார் அடிக்கடி பழுதாக தொடங்கியது. அத்துடன் ஒரு நாள் திருமங்கலம் டோல்கேட் அருகே திடீரென பிரேக் டவுன் ஆகி அப்படியே நின்று விட்டது.

3.40 லட்ச ரூபாயை மொத்தமாக சுருட்ட முயன்ற யூஸ்டு கார் டீலருக்கு தக்க பாடம் புகட்டிய மதுரை பெண்...

உடனடியாக கார் வாங்கிய பெஸ்ட் மோட்டார்ஸ் நிறுவனத்தை சுதா அணுகினார். இதன்பேரில் திருமங்கலம் டோல்கேட் வந்த அவர்கள் காரை டோ (Tow) செய்து, தங்கள் நிறுவனத்திற்கு கொண்டு சென்றனர். ஆனால் ஒரு சில மாதங்களை கடந்த பின்பும் கூட அவர்களிடம் இருந்து எவ்வித பதிலும் இல்லை.

3.40 லட்ச ரூபாயை மொத்தமாக சுருட்ட முயன்ற யூஸ்டு கார் டீலருக்கு தக்க பாடம் புகட்டிய மதுரை பெண்...

காரை அவர்கள் திருப்பி வழங்கவில்லை. அத்துடன் காரை வாங்குவதற்காக சுதா கொடுத்த 3.40 லட்ச ரூபாய் பணத்தையும் கொடுக்கவில்லை. இதனால் சுதா அதிர்ச்சியடைந்தார். அப்போது சுதாவிற்கு நெருக்கமான சிலர், அந்த டீலரை மீண்டும் அணுகி காரை விற்பனை செய்து விடும்படி ஆலோசனை வழங்கினர்.

3.40 லட்ச ரூபாயை மொத்தமாக சுருட்ட முயன்ற யூஸ்டு கார் டீலருக்கு தக்க பாடம் புகட்டிய மதுரை பெண்...

ஆனால் அதற்கு மாறாக அவர்களுக்கு தக்க பாடம் புகட்டியாக வேண்டும் என சுதா நினைத்தார். எனவே உடனடியாக மாவட்ட நுகர்வோர் குறைதீர் மன்றத்தை (District Consumer Disputes Redressal Forum-DCDRF) அவர் அணுகினார்.

3.40 லட்ச ரூபாயை மொத்தமாக சுருட்ட முயன்ற யூஸ்டு கார் டீலருக்கு தக்க பாடம் புகட்டிய மதுரை பெண்...

சுதா தாக்கல் செய்த மனு மீது நுகர்வோர் குறைதீர் மன்றம் தீவிர விசாரணை நடத்தியது. இதன் முடிவில் ரிப்பேருக்கு அப்பாற்பட்டு, குறைபாடுகளுடன் கூடிய கார் சுதாவிற்கு விற்பனை செய்யப்பட்டிருப்பதை நுகர்வோர் குறைதீர் மன்றம் உறுதி செய்தது.

3.40 லட்ச ரூபாயை மொத்தமாக சுருட்ட முயன்ற யூஸ்டு கார் டீலருக்கு தக்க பாடம் புகட்டிய மதுரை பெண்...

எனவே குறைபாடுகளுடன் கூடிய காரை விற்பனை செய்ததற்காக, சுதாவிற்கு ரூ.3.95 லட்ச ரூபாய் வழங்க வேண்டும் என பெஸ்ட் மோட்டார்ஸ் நிறுவனத்திற்கு, நுகர்வோர் குறைதீர் மன்றம் அதிரடியாக உத்தரவிட்டது.

3.40 லட்ச ரூபாயை மொத்தமாக சுருட்ட முயன்ற யூஸ்டு கார் டீலருக்கு தக்க பாடம் புகட்டிய மதுரை பெண்...

இதில், 3.40 லட்ச ரூபாய் காரை வாங்கியதற்காக சுதா செலுத்திய பணமாகும். அதனை திருப்பி வழங்கும்படி நுகர்வோர் குறைதீர் மன்றம் கூறியுள்ளது. அத்துடன் அவருக்கு ஏற்பட்ட மன உளைச்சலுக்கு இழப்பீடாக 55 ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

3.40 லட்ச ரூபாயை மொத்தமாக சுருட்ட முயன்ற யூஸ்டு கார் டீலருக்கு தக்க பாடம் புகட்டிய மதுரை பெண்...

ஆக மொத்தம் ரூ.3.95 லட்சம் வழங்க வேண்டும். இதுகுறித்து டைம்ஸ் ஆப் இந்தியா செய்தி வெளியிட்டுள்ளது. மதுரை மட்டுமின்றி தமிழகத்தில் உள்ள பெரும்பாலான யூஸ்டு கார் டீலர்கள் இத்தகைய மோசடிகளை அரங்கேற்றி வருகின்றனர்.

3.40 லட்ச ரூபாயை மொத்தமாக சுருட்ட முயன்ற யூஸ்டு கார் டீலருக்கு தக்க பாடம் புகட்டிய மதுரை பெண்...

செகண்ட் ஹேண்டில் கார் வாங்கிய பின்பு அதில் பல்வேறு பிரச்னைகள் ஏற்படுகின்றன. இதுகுறித்து யூஸ்டு கார் டீலர்களிடம் கேட்டால், ''இது பயன்படுத்தப்பட்ட கார்.

3.40 லட்ச ரூபாயை மொத்தமாக சுருட்ட முயன்ற யூஸ்டு கார் டீலருக்கு தக்க பாடம் புகட்டிய மதுரை பெண்...

இதை வாங்குவதில் உள்ள 'ரிஸ்க்' என்ன என்பது உங்களுக்கே தெரியும். நாங்கள் என்ன செய்வது'' என கூலாக பதில் சொல்லி விடுகின்றனர். எனவே செகண்ட் ஹேண்டில் கார் வாங்கும்போது எச்சரிக்கையாக இருப்பது நல்லது.

Note: Image for representative purpose only.

காரை தலையில் கட்ட டீலர்கள் சொல்லும் வழக்கமான பொய்கள்!

செகண்ட் ஹேண்டில்தான் இவ்வாறு பல்வேறு பிரச்னை என்றால், புதிய கார்களை வாங்கும்போதும் கூட வாடிக்கையாளர்கள் பல்வேறு இன்னல்களை சந்திக்க நேரிடுகிறது. கார் மார்க்கெட்டில் அதிகரித்துள்ள போட்டியை சமாளிக்க வாடிக்கையாளர்களை மதி மயக்கும் வித்தைகள் டீலர்களில் இருக்கும் விற்பனையாளர்களுக்கு கைவந்த கலை.

காரை தலையில் கட்ட டீலர்கள் சொல்லும் வழக்கமான பொய்கள்!

ஓடாத காரை ஓட்டுவதற்கும், இல்லாத பொய்களை சொல்லி தலையில் கட்டுவதிலுமே பல டீலர்களில் உள்ள விற்பனை பிரதிநிதிகள் குறியாக இருப்பதை காண முடிகிறது. அதிலும் குறிப்பாக, மாதக் கடைசியில் விற்பனை இலக்கை கடப்பதற்காக கூடுதல் பொய்களும் வந்துவிழுவதுண்டு.

காரை தலையில் கட்ட டீலர்கள் சொல்லும் வழக்கமான பொய்கள்!

கார் ஷோரூம்களுக்கு செல்லும்போது அதிகம் விற்பனையாகும் கார்களுக்கு டீலர்களில் அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுவதில்லை. அதற்கு நேர்மாறாக ஓடாத கார்களை தள்ளுவதிலேயே குறியாக இருப்பர். அந்த கார்களை பற்றி டீலர் பிரதிநிகள் அளப்பதை நம்பி ஏமாந்து போகும் வாடிக்கையாளர்கள் ஏராளம். எனவே, கார் வாங்கும்போது டீலர்களில் எச்சரிக்கையாக இருப்பதற்காக சில விஷயங்களை பின்வரும் ஸ்லைடர்களில் பார்க்கலாம்.

காரை தலையில் கட்ட டீலர்கள் சொல்லும் வழக்கமான பொய்கள்!

விலையேறப்போவுது...

ஆண்டில் இரண்டு அல்லது மூன்று முறை கார் விலை உயர்த்தப்பட்டு வருவது உண்மைதான். ஆனால், சில சமயம் ஷோரூம்களில் அமர்ந்து விலை உள்ளிட்டவற்றை ஆராய்ந்து கொண்டிருக்கும் வாடிக்கையாளர்களை திசை திருப்புவதற்காக, கார் விலை விரைவில் உயரப் போகிறது என்ற பிட்டை போடுவர்.

காரை தலையில் கட்ட டீலர்கள் சொல்லும் வழக்கமான பொய்கள்!

எனவே, உடனடியாக முன்பதிவு செய்து கொள்வது நல்லது என்று பீதியை கிளப்பும் சம்பவங்களும் நடந்து வருகிறது. விற்பனை பிரதிநிதி சொன்னதை நம்பி அவசரப்படாமல், உண்மையிலேயே விலை உயர்வு அமலுக்கு வர இருக்கிறதா என்பதை உறுதி செய்து கொள்வது நல்லது.

காரை தலையில் கட்ட டீலர்கள் சொல்லும் வழக்கமான பொய்கள்!

நீண்ட காத்திருப்பு காலம்...

சில ஷோரூம்களில் கார் வாங்கும் நோக்கத்தில் வாடிக்கையாளர்கள் இருப்பதை தெரிந்துகொண்டால், 2 வாரத்தில் காரை டெலிவிரி கொடுத்து விடுகிறோம் என்று கூறி ஏமாற்றுவதும் உண்டு. நீங்களும் கார் விரைவாக கிடைக்கப் போகிறது என்ற கற்பனையில் வீட்டிற்கு சென்றால், 2 வாரங்கள் அல்ல 4 வாரங்கள் கடந்தாலும், லோடு வந்து கொண்டிருக்கிறது என்று ஏதாவது ஒரு சமாளிப்பு பதில் கிடைக்கும்.

காரை தலையில் கட்ட டீலர்கள் சொல்லும் வழக்கமான பொய்கள்!

பல தடவை தொங்கிய பின்பு ஒரு வழியாக காரை டெலிவிரி தருவார்கள். அதுவும் வாடிக்கையாளர்களின் பின்புலத்தை அனுமானித்து டெலிவிரி கொடுப்பர். அதேவேளை, மஹிந்திரா உள்ளிட்ட நிறுவனங்கள் தற்போது ஆன்லைனில் முன்பதிவு மற்றும் டெலிவிரி டிராக்கிங் சிஸ்டத்தின் மூலம் வாடிக்கையாளர்கள் தங்களது காத்திருப்பு நிலையை தெரிந்து கொள்ளும் வசதியை வழங்குகின்றன. ஆன்லைனில் பார்க்க முடியாதவர்கள் டீலர் பற்றி பிற வாடிக்கையாளர்கள் அல்லது நட்பு வட்டத்தில் ஒரு விசாரணை செய்து கொள்வது நலம்.

காரை தலையில் கட்ட டீலர்கள் சொல்லும் வழக்கமான பொய்கள்!

ஆக்சஸெரீஸ்கள் கட்டாயமா?

டீலர்களுக்கு அதிக வருவாய் ஈட்டித் தருவதில் ஆக்சஸெரீஸ்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. எனவே, பல டீலர்களில் கூடுதல் ஆக்சஸெரீஸ்களை இன்வாய்ஸில் இணைத்து விற்பனை செய்கின்றனர். சில டீலர்களில் வெளியில் ஆக்சஸெரீஸ் வாங்கி பொருத்தினால் வாரண்டி கிடைக்காது என்று பயமுறுத்தி தங்களது ஆக்சஸெரீஸ்களை விற்கின்றனர்.

காரை தலையில் கட்ட டீலர்கள் சொல்லும் வழக்கமான பொய்கள்!

குறிப்பாக, ஸ்கஃப் பிளேட், மிதியடிகள் உள்ளிட்டவை வெளி மார்க்கெட்டில் மிகக் குறைந்த விலையில் ஏராளமாக கிடைக்கின்றன. இதேபோன்று, மியூசிக் சிஸ்டமும் அதிக விலை வைத்து விற்கப்படுகின்றன. ஆனால், வெளி மார்க்கெட்டில் நீங்கள் நினைத்ததைவிட ஏராளமான மாடல்களில் மியூசிக் சிஸ்டம்களை தேர்வு செய்து கொள்ளும் வாய்ப்புகள் இருக்கின்றன.

காரை தலையில் கட்ட டீலர்கள் சொல்லும் வழக்கமான பொய்கள்!

சூப்பர் இன்ஸ்யூரன்ஸ்

காருக்கு ஒருங்கிணைந்த காப்பீடு போட வேண்டியது அவசியம். பல டீலர்களில் இதுதான் சிறப்பான காப்பீட்டு திட்டம் என்று கூறி குறிப்பிட்ட நிறுவனத்தை பரிந்துரை செய்வது வழக்கம்.

காரை தலையில் கட்ட டீலர்கள் சொல்லும் வழக்கமான பொய்கள்!

இதுபோன்று பரிந்துரை செய்யப்படும் காப்பீட்டு திட்டங்களின் பின்னணியில், இன்ஸ்யூரன்ஸ் நிறுவனங்கள் கார் டீலர்களுடன் கூட்டணி வைத்துக் கொண்டு கூடுதல் பிரிமியத்துடன் கூடிய காப்பீட்டு திட்டங்களை நம் தலையில் கட்டுவதற்கு முனைகின்றன என்பதை தெரிந்து கொள்ள வேண்டும். மார்க்கெட்டில் இருக்கும் சிறந்த காப்பீட்டு திட்டங்களை தேர்வு செய்து கொள்வது அவசியம். இதேபோன்று, கடனுதவி தரும் நிறுவனங்களை தேர்வு செய்யும் போது விழிப்புடன் இருக்க வேண்டும்.

காரை தலையில் கட்ட டீலர்கள் சொல்லும் வழக்கமான பொய்கள்!

நீட்டிக்கப்பட்ட வாரண்டி

குறைந்தபட்சம் 2 ஆண்டுகள் வரை கார்களுக்கு வாரண்டி கிடைக்கின்றன. இத்துடன் சேர்த்து நீட்டிக்கப்பட்ட வாரண்டி திட்டங்களை வாங்கிக் கொள்வது நல்லதுதான். இல்லையென்று கூறவில்லை. ஆனால், சில டீலர்களில் நீட்டிக்கப்பட்ட வாரண்டியை வாங்குவதற்கு காருடன் வாங்குவது போன்ற மாயை ஏற்படுத்துகின்றனர். ஆனால், கார் வாங்கும்போது நீட்டிக்கப்பட்ட வாரண்டியை வாங்குவது அவசியமில்லை என்பதே உண்மை. கொஞ்சம் அவகாசம் எடுத்துக் கொண்டு பின்னர் அவர்களிடம் பேரம் பேசி வாங்குவதற்கான வாய்ப்புள்ளது என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

காரை தலையில் கட்ட டீலர்கள் சொல்லும் வழக்கமான பொய்கள்!

ரீசேல் மதிப்பு

விற்பனையில் பின் தங்கி ஷோரூம்களில் நிற்கும் மாடல்களை இதற்கு அதிக ரீசேல் மதிப்பு இருக்கிறது என்று கூறி நம் தலையில் கட்டும் முயற்சிகளும் ஆங்காங்கே நடக்கின்றன. எனவே, அது உண்மைதானா என்று தெரிந்து கொண்டு வாங்குவதும் நலம்.

காரை தலையில் கட்ட டீலர்கள் சொல்லும் வழக்கமான பொய்கள்!

கலர் தேர்வு

சில குறிப்பிட்ட கார் கலருக்கு அதிக டிமான்ட் இருக்கும். சில கலர் கொண்ட கார்கள் டீலர்களில் இருப்பில் தேங்கி இருக்கும். எனவே, இருப்பில், தேங்கி இருக்கும் காரை தள்ளும் விதமாக, அதிக டிமான்ட் இருக்கும் கலர் அல்லது நீங்கள் விரும்பி கேட்கும் கலரை ஸ்டாக் இல்லை என்று கூறிவிடுவர். மேலும், தற்போது கிடைக்காது என்பதோடு, அதற்கு வேண்டாம் என்று சொல்லும் அளவிற்கு காத்திருப்பு காலத்தை சொல்லிவிடுவர். அப்படியே, விற்பனை பிரதிநிதி சொல்லும் காரை வாங்கும்போது தயாரிப்பு தேதி உள்ளிட்டவற்றை சரிபார்த்து வாங்குவது நலம்.

காரை தலையில் கட்ட டீலர்கள் சொல்லும் வழக்கமான பொய்கள்!

தள்ளுபடி சலுகைகள்

பல டீலர்களில் தள்ளுபடி சலுகைகள் குறித்து விமரிசையாக விளம்பரம் செய்வதோடு, ஷோரூம்களிலும் விலாவரியாக சொல்வார்கள். ஆனால், இந்த சலுகைகளை வேறு விதத்தில் அட்ஜெஸ்ட் செய்வதும் உண்டு. எனவே, கார் வாங்கும்போது தள்ளுபடி சலுகைகள் விபரத்தை நன்கு தெரிந்துகொண்டு, ஏதெனும் உள்குத்தல் இருக்கிறதா என்பதை தெரிந்து கொள்வதும் அவசியம்.

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Honda Service Centre Asked To Pay Rs.50,000 Fine And Replace Faulty Scooter. Read in Tamil
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X