விமானத்தில் நீங்கள் சுவாசிக்கும் பிராண வாயு எங்கிருந்து வருகிறது தெரியுமா?

விமானத்தில் பயணிக்கும்போது நீங்கள் சுவாசிக்கும் காற்று எங்கிருந்து வருகிறது தெரியுமா?. பயணிகளுக்கான பிராண வாயு எஞ்சினிலிருந்து பெறப்படும் காற்றிலிருந்துதான் பெறப்படுகிறது. இதற்காக, விசேஷ குளிர்விப்பு

விமானங்களின் தொழில்நுட்ப ரகசியங்கள் குறித்த பல்வேறு சுவாரஸ்யத் தகவல்களை தொடர்ந்து பார்த்து வருகிறோம். அதில், இன்று ஒரு முக்கிய தொழில்நுட்ப ரகசியத்தை பார்க்கப் போகிறோம்.

விமானத்தில் நீங்கள் சுவாசிக்கும் பிராண வாயு எங்கிருந்து வருகிறது தெரியுமா?

விமானங்களின் கேபின் வெளிக்காற்று அழுத்தத்தால் பாதிக்கப்படாத வகையில் சிறந்த தடுப்பு அமைப்புடன் உருவாக்கப்படுகிறது. இதனால், உள்ளே இருப்பவர்களுக்கு தேவையான பிராண வாயு விசேஷ அமைப்பு மூலமாக எந்நேரமும் சப்ளை செய்யப்படுகிறது.

விமானத்தில் நீங்கள் சுவாசிக்கும் பிராண வாயு எங்கிருந்து வருகிறது தெரியுமா?

பலரும் விமானத்திற்கு தேவையான பிராண வாயு வெளிப்புறத்திலிருந்து உறிஞ்சப்பட்டு, பின்னர் சுத்திகரிப்பு கருவிகள் உதவியுடன் விமானத்திற்குள் சப்ளை செய்யப்படுவதாக கருதுகின்றனர். விமானம் 35,000 அடி உயரம் வரை பறக்கின்றன.

விமானத்தில் நீங்கள் சுவாசிக்கும் பிராண வாயு எங்கிருந்து வருகிறது தெரியுமா?

அங்கு போதுமான காற்று இருக்காது என்ற கூற்று தவறானது. போதுமான காற்று இருந்தாலும், அதில் ஆக்சிஜன் அளவு குறைவாக இருக்கும். எனவே, இதற்காக விசேஷ அமைப்பு மூலமாக விமானத்தில் பயணிப்போருக்கான பிராண வாயு அளவு சீரான அளவில் தக்க வைக்கப்படுகிறது.

விமானத்தில் நீங்கள் சுவாசிக்கும் பிராண வாயு எங்கிருந்து வருகிறது தெரியுமா?

இதற்காக, விமானத்தின் உட்புற பகுதிக்கான காற்று எஞ்சினிலிருந்துதான் பெறப்படுகிறது. எஞ்சினில் இருக்கும் கம்ப்ரஷர்கள் மூலமாக 25 சதவீதம் முதல் 50 சதவீதம் பெறப்படும் அழுத்தம் கூட்டப்பட்ட காற்றுதான் கேபினுக்குள் பல்வேறு அமைப்புகள் மூலமாக சுத்திகரிக்கப்பட்டு சப்ளையாகிறது.

விமானத்தில் நீங்கள் சுவாசிக்கும் பிராண வாயு எங்கிருந்து வருகிறது தெரியுமா?

எஞ்சின்களிலிருந்து கழிவாக வெளியேறும் காற்று புகைப்போக்கி வழியாக வெளியேற்றப்படும். ஆனால், கேபினுக்கு தேவைப்படும் காற்று கம்பரஷர்கள் மூலமாகவே சப்ளை செய்யப்படுகிறது. எஞ்சின் கம்பரஷரிலிருந்து பெறப்படும் இந்த காற்று 200 டிகிரி ஃபாரன்ஹீட் வரை வெப்பத்தை கொண்டிருக்கும். இதனை Bleed Air என்று குறிப்பிடுகின்றனர்.

விமானத்தில் நீங்கள் சுவாசிக்கும் பிராண வாயு எங்கிருந்து வருகிறது தெரியுமா?

இதனை முதலில் குளிர்விப்பு அமைக்குள் செலுத்தி சரியான வெப்பநிலைக்கு மாற்றப்படுகிறது. பின்னர், சுத்திகரிக்கப்படும் தடுப்பு அமைப்பு வழியாக கேபினுக்குள் செலுத்தப்படுகிறது. இந்த காற்றையே பயணிப்பவர்கள் சுவாசிக்கின்றனர்.

விமானத்தில் நீங்கள் சுவாசிக்கும் பிராண வாயு எங்கிருந்து வருகிறது தெரியுமா?

விமானத்தின் பின்புறத்தில் கொடுக்கப்படும் சிறிய வால்வு அமைப்பு மூலமாக கேபினுக்குள் இருக்கும் அசுத்தக் காற்று வெளியேற்றப்படுகிறது. இந்த தொடர் நிகழ்வு மூலமாக கேபினுக்குள் சீரான காற்றழுத்தமும், குளிர்ச்சியும் தக்க வைக்கப்படுகிறது.

விமானத்தில் நீங்கள் சுவாசிக்கும் பிராண வாயு எங்கிருந்து வருகிறது தெரியுமா?

விமானத்தை செலுத்துவதற்கு மட்டுமல்ல, பயணிப்பவர்களுக்கு சீரான பிராண வாயுவை பெறுவதிலும் எஞ்சின்களின் பங்கு முக்கியமானது. இந்த வேளையில், எஞ்சின்கள் பழுதடைந்தால் பிரச்னை எழும் என்பது தெரிந்ததே.

விமானத்தில் நீங்கள் சுவாசிக்கும் பிராண வாயு எங்கிருந்து வருகிறது தெரியுமா?

முதலில் வெளியேற்றும் வால்வு அமைப்பை விமானிகள் மூடிவிடுவார்கள். இதன்மூலமாக, விமான கேபினுக்குள் உடனடியாக காற்றழுத்தம் மாறுபாடு ஏற்படாது. எனினும், காற்றில் இருக்கும் ஆக்சிஜன் அளவு குறையும்.

விமானத்தில் நீங்கள் சுவாசிக்கும் பிராண வாயு எங்கிருந்து வருகிறது தெரியுமா?

அந்த சமயத்தில் விமானங்களில் பிரத்யேக உருளைகளில் ஆக்சிஜன் நிரப்பி வைக்கப்பட்டு இருக்கும். ஒவ்வொரு பயணிக்கும் தனித்தனியாக கொடுக்கப்படும் ஆக்ஜிஜன் மாஸ்க் மூலமாக, அந்த உருளைகளில் உள்ள ஆக்சிஜனை சுவாசிக்க அறிவுறுத்தப்படும்.

விமானத்தில் நீங்கள் சுவாசிக்கும் பிராண வாயு எங்கிருந்து வருகிறது தெரியுமா?

அதிகபட்சமாக 15 நிமிடங்களுக்கு தேவையான ஆக்சிஜனை பயணிகளுக்கு வழங்க முடியும். அதற்குள், அருகிலுள்ள விமான நிலையத்தை நோக்கி விமானத்தை செலுத்தி தரை இறக்க முடிவு செய்கின்றனர்.

விமானத்தில் நீங்கள் சுவாசிக்கும் பிராண வாயு எங்கிருந்து வருகிறது தெரியுமா?

எஞ்சின்கள் மூலமாகவே விமான கேபினுக்குரிய காற்று பெறப்படுவது இதுவரை கேள்விப்படாத விஷயமாக இருக்கலாம். அதேபோலவே, விமான ஜன்னல்கள் கோள வடிவில் இருப்பதற்கான காரணமும் சுவாரஸ்யமானது. தொடர்ந்து பார்க்கலாம்.

விமானத்தில் நீங்கள் சுவாசிக்கும் பிராண வாயு எங்கிருந்து வருகிறது தெரியுமா?

விமானங்களில் எல்லோருக்கும் பிடித்த இடம் ஜன்னல் ஓர இருக்கைதான். ஜன்னல் ஓரத்தில் அமர்ந்தபடி, விமானம் மேலே எழும்போதும், இறங்கும்போது ஒரு அலாதியான உணர்வு ஏற்படும். ஆனால், அந்த ஜன்னல்கள் பொதுவாக பஸ், கார் உள்ளிட்டவற்றில் இருப்பது போன்று சதுரமாகவோ அல்லது செவ்வக வடிவிலோ இல்லை என்பதை கவனித்திருக்கிறீர்களா?

விமானத்தில் நீங்கள் சுவாசிக்கும் பிராண வாயு எங்கிருந்து வருகிறது தெரியுமா?

ஆம். விமான ஜன்னல்கள் சதுரமாகவோ அல்லது கூர்மையான முனைகளுடன் வடிவமைக்கப்படுவதில்லை. ஏன் இவ்வாறு வட்டமாகவோ அல்லது கோள வடிவிலோ வடிவமைக்கப்படுகிறது என்பது குறித்த சற்றே ஆய்வு செய்தோமேயானால் பல விஷயங்கள் தெரிய வருகின்றன.

விமானத்தில் நீங்கள் சுவாசிக்கும் பிராண வாயு எங்கிருந்து வருகிறது தெரியுமா?

1949ம் ஆண்டு உலகின் முதலாவது வர்த்தக விமானமான டீ ஹாவிலேண்ட் காமட் அறிமுகம் செய்யப்பட்டது. இங்கிலாந்து தயாரிப்பாக வெளிவந்த இந்த விமானங்கள் மிக நேர்த்தியான டிசைன் மற்றும் சிறப்பான ஏரோடைனமிக்ஸ் தத்துவத்தை கொண்ட விமானங்களாக பாராட்டுகளை பெற்றன.

விமானத்தில் நீங்கள் சுவாசிக்கும் பிராண வாயு எங்கிருந்து வருகிறது தெரியுமா?

இந்த நிலையில், இந்த விமானங்களுக்கு பெரும் சோதனைகள் காத்திருந்தன. அறிமுகம் செய்யப்பட்டு வர்த்தக ரீதியிலான சேவையில் இருந்த இரண்டு டீ ஹாவிலேண்ட் காமட் விமானங்கள் நடுவானில் வெடித்து விபத்துக்குள்ளானது.

விமானத்தில் நீங்கள் சுவாசிக்கும் பிராண வாயு எங்கிருந்து வருகிறது தெரியுமா?

இதனால் அதிர்ச்சியடைந்த விமான தயாரிப்பு நிறுவனம், இதுகுறித்து தீவிர விசாரணைகளையும், ஆய்வுகளையும் நடத்தியது. ஆனால், விமானங்கள் நடுவானில் திடீரென வெடிப்பதற்கான காரணம் அறியாமல் குழம்பின.

விமானத்தில் நீங்கள் சுவாசிக்கும் பிராண வாயு எங்கிருந்து வருகிறது தெரியுமா?

இந்த சூழலில் தீவிர விசாரணைகளுக்கு பின்னர், இரு விமானங்களிலும் ஜன்னல்களில் வெடிப்பு ஏற்பட்டு விமானம் விபத்தில் சிக்கியது தெரிய வந்தது. அந்த விமானங்களில் சதுர வடிவில் இருந்த ஜன்னல்களால்தான் விபத்து ஏற்படுவதும் தெரிய வந்தது.

விமானத்தில் நீங்கள் சுவாசிக்கும் பிராண வாயு எங்கிருந்து வருகிறது தெரியுமா?

விமானம் அதிக காற்றழுத்தம் கொண்ட பகுதிகளில் பறக்கும்போது ஜன்னல்களின் நான்கு முனைகள் வெளிக்காற்று அழுத்தத்தை தாக்குப் பிடிக்க முடியாத நிலை இருப்பதை விமான தயாரிப்பு துறை நிபுணர்கள் கண்டறிந்தனர். கூர்மையான முனை பகுதிகள் வலு இல்லாத பகுதியாக இருப்பதும் தெரிந்தது.

விமானத்தில் நீங்கள் சுவாசிக்கும் பிராண வாயு எங்கிருந்து வருகிறது தெரியுமா?

இதையடுத்து, ஜன்னல்களில் கூர் முனை இல்லாத வகையில், வட்ட வடிவிலும், கோள வடிவிலும் உருவாக்க முடிவு செய்தனர். அதன் தொடர்ச்சியாகவே, இப்போது வரும் விமானங்கள் அனைத்திலும் வட்டம் அல்லது கோள வடிவிலான ஜன்னல் டிசைன் கொடுக்கப்படுகிறது.

விமானத்தில் நீங்கள் சுவாசிக்கும் பிராண வாயு எங்கிருந்து வருகிறது தெரியுமா?

இதுபோன்று வடிவமைக்கப்படும்போது வலு விழந்த பகுதி இல்லாத நிலை ஏற்படுகிறது. இதனால், வெளிப்புற காற்றழுத்தம் ஜன்னல்களில் அதிக பாதிப்புகளை ஏற்படுத்தாது.

விமானத்தில் நீங்கள் சுவாசிக்கும் பிராண வாயு எங்கிருந்து வருகிறது தெரியுமா?

அதிக காற்றழுத்தத்தை தொடர்ந்து தாக்கு பிடிக்க முடியாத நிலை இருப்பதை உணர்ந்துதான் பெரிய விமானங்கள் 30,000 அடி உயரத்திற்கு மேல் பறக்கின்றன. அங்கு பறக்கும்போது காற்றழுத்தம் குறைவாக இருப்பதே இதற்கு காரணம்.

Picture credit: Wiki Commons

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #offbeat
English summary
How Do Passenger Get Breathable Air (Oxygen) In Airplanes?
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X