இறுதியில் கை கொடுத்த இயற்கை... சூயஸ் கால்வாயில் ராட்சத கப்பல் மீட்கப்பட்டது எப்படி?

சூயஸ் கால்வாயில் உலகின் மிகப்பெரிய கப்பல் சிக்கிய சம்பவம் உலகையே தவித்துப் போக செய்தது. அந்த கப்பல் நகர்ந்தால்தான் உலகமும் நகரும் என்ற நிலைக்கு தள்ளப்பட்ட நிலையில், அந்த கப்பலை இயற்கையின் உதவியுடன் அறிவியலும் சேர்ந்து மீட்க உதவி உள்ளது.

சூயஸ் கால்வாயில் சிக்கிய ராட்சத கப்பல் மீட்கப்பட்டது எப்படி?

கடந்த 23ந் தேதி எவர் கிவன் கப்பல் சூயஸ் கால்வாயில் சென்றபோது விபத்தில் சிக்கியது. கப்பலின் முன்பகுதி மணலும், களிவாகும் நிறைந்த மண் பரப்பு கொண்ட கரையில் மோதி தரை தட்டியது. இதனால், கப்பலை நகர்த்துவதில் மிகப்பெரிய சிக்கல் இருந்து வந்தது. இந்த நிலையில், கப்பலின் முன்பகுதி சிக்கி இருந்த இடத்தை சுற்றிலும் மணல் மற்றும் களிவாகு மண் பொக்லைன் எந்திரங்கள் துணையுடன் அகற்றப்பட்டது. மேலும், 59 அடி ஆழத்திற்கு, சுமார் 30,000 கியூபிக் மீட்டர் அளவுக்கு மணல் அகற்றப்பட்டு, இழுவை படகுகள் உதவியுடன் கப்பல் கொஞ்சம் கொஞ்சமாக நகர்த்தப்பட்டு, கால்வாயின் நடுப்பகுதிக்கு கொண்டு வரப்பட்டது.

சூயஸ் கால்வாயில் சிக்கிய ராட்சத கப்பல் மீட்கப்பட்டது எப்படி?

எகிப்து உள்ளூர் நேரப்படி நேற்று பிற்பகல் 3.05 மணிக்கு கப்பல் மீட்கப்பட்டு கால்வாயின் நடுப்பகுதிக்கு கொண்டு வரப்பட்டது. இதன்பிறகு, சூயஸ் கால்வாயில் உள்ள கிரேட்டர் பிட்டர் ஏரிப் பகுதிக்கு கப்பல் கொண்டு செல்லப்பட்டது. மேலும், மிக மிக மெதுவாக கப்பல் கொண்டு செல்லப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சூயஸ் கால்வாயில் சிக்கிய ராட்சத கப்பல் மீட்கப்பட்டது எப்படி?

உலகமே படபடப்புடன் காத்திருந்த இந்த கப்பல் மீட்புப் பணிகள் மிக தீவிரமாக நடந்த நிலையில், நேற்று சூயஸ் கால்வாயில் கடல் நீரோட்டம் சற்று உயர்ந்து பெரிய அலைகள் எழுந்தன. இதனால், மனித முயற்சிக்கு பக்கபலமாக அமைந்தது. இதனால், அந்த ராட்சத கப்பலை மீட்பதற்கு உதவி புரிந்துள்ளது.

சூயஸ் கால்வாயில் சிக்கிய ராட்சத கப்பல் மீட்கப்பட்டது எப்படி?

அதாவது, மணலை அகற்றி 11 இழுவைப் படகுகள் மற்றும் கடலில் பயன்படுத்தப்படும் 2 அதிசக்திவாய்ந்த இரண்டு இழுவை கப்பல்கள் உதவியுடன் கப்பலை நகர்த்தும் மனிதனின் முயற்சிக்கு கடல் நீரோட்டமும், நீர் மட்டம் அதிகரித்ததும் பேருதவியாக அமைந்தது. பொதுவாக, அமாவசை, பவுணர்மி தினங்களில் கடல் நீர்மட்டம் உயரும். இதனை வற்றுப்பெருக்கு என்று குறிப்பிடுகின்றனர். இந்தநிலையில், நேற்றுமுன்தினம் பவுணர்மி தினத்தன்று கால்யாவில் கடல் நீர்மட்டம் உயர்ந்ததால், கப்பலை மீட்கும் பணிக்கும் பெரும் சாதகமாக அமைந்தது.

சூயஸ் கால்வாயில் சிக்கிய ராட்சத கப்பல் மீட்கப்பட்டது எப்படி?

இதனிடையே, கிட்டத்தட்ட 20,000 கன்டெய்னர்கள் பாரத்துடன் இருக்கும் அந்த 2.24 லட்சம் டன் எடை கொண்ட ராட்சத கன்டெய்னர் கப்பல் மோதிய வேகத்தில் சேதம் ஏற்பட்டு இருக்கும் வாய்ப்பு இருப்பதாக சந்தேகிக்கப்படுகிறது. இதனால், தொடர்ந்து இயக்குவதற்கு கப்பல் போதிய தகுதியுடன் இருக்கிறதா என்பதை சோதிக்க இருக்கின்றனர்.

சூயஸ் கால்வாயில் சிக்கிய ராட்சத கப்பல் மீட்கப்பட்டது எப்படி?

கப்பல் முழுமையான சோதனைக்கு பின்னரே மீண்டும் இயக்கப்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், இந்த கப்பல் மணல் புயலில் சிக்கி கட்டுப்பாட்டை இழுந்ததா அல்லது மனித தவறு காரணமாக, கட்டுப்பாட்டை இழந்ததா என்பது குறித்தும் விசாரணை நடக்க இருக்கிறது.

சூயஸ் கால்வாயில் சிக்கிய ராட்சத கப்பல் மீட்கப்பட்டது எப்படி?

எனவே, கப்பலை இயக்கிய 25 பேர் கொண்ட நலமாக உள்ளதாகவும், கப்பல் மீட்புப் பணிகளில் அனைத்து குழுவினருடன் அவர்கள் ஓய்வில்லாமல் தொடர்ந்து பணியாற்றியதாகவும், மீட்புப் பணியில் ஈடுபட்ட தனியார் நிறுவனம் தெரிவித்துள்ளது.

சூயஸ் கால்வாயில் சிக்கிய ராட்சத கப்பல் மீட்கப்பட்டது எப்படி?

அதேநேரத்தில், கப்பல் விபத்தில் சிக்கியதற்கான காரணம் குறித்து இந்திய குழுவினரிடமும் விசாணை நடத்தப்பட உள்ளது. மேலும், கேப்டன் உள்ளிட்ட கப்பலை இயக்கும் முக்கிய பொறுப்பில் உள்ளவர்கள் விசாரணை நடத்தப்பட உள்ளது. அவர்கள் மீது தவறு இருந்தால் கிரிமினல் நடவடிக்கை பாயவும் வாய்ப்பு இருக்கிறது. அதுவரை அவர்கள் கப்பலை இயக்க அனுமதிக்கப்படமாட்டார்கள் என்பதுடன், விசாரணை முடியும் வரை வீட்டுக் காவலில் வைக்கப்பட உள்ளதாகவும் தகவல்கள் கூறுகின்றன.

சூயஸ் கால்வாயில் சிக்கிய ராட்சத கப்பல் மீட்கப்பட்டது எப்படி?

இதுதொடர்பாக, மத்திய அரசு மற்றும் இந்திய கப்பல் போக்குவரத்து பணியாளர்கள் அமைப்பு ஆகியவை சூயஸ் கால்வாய் எடுக்க இருக்கும் சட்டரீதியான நடவடிக்கைகள் குறித்து கண்காணித்து வருகின்றன. அதேநேரத்தில், கப்பல் பணியாளர்கள் மீது எடுக்கப்பட உள்ள நடவடிக்கைகள் குறித்து கப்பல் உரிமை நிறுவனம் எந்த தகவலையும் தெரிவிக்கவில்லை.

சூயஸ் கால்வாயில் சிக்கிய ராட்சத கப்பல் மீட்கப்பட்டது எப்படி?

எவர் கிவன் கப்பல் சிக்கியதால், 400க்கும் மேற்பட்ட கப்பல்கள் சூயஸ் கால்வாயின் இருபுறமும் காத்து நின்றது தெரிய வந்துள்ளது. இந்த நிலையில், எவர்கிவன் கப்பல் மீட்கப்பட்டுவிட்டதால், சூயஸ் கால்வாயில் போக்குவரத்து மீண்டும் துவங்கப்பட்டுள்ளது. இருபுறமும் உள்ள கப்பல்கள் கால்வாயை கடந்து, கப்பல் போக்குவரத்து இயல்பு நிலைக்கு வருவதற்கு 3 நாட்கள் ஆகும் என்று தகவல்கள் கூறுகின்றன.

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #offbeat
English summary
Suez canal ship traffic has resumed after stuck cargo ship Ever Given is freed with help of tugboats.
Story first published: Tuesday, March 30, 2021, 11:01 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X