கொடி பறக்குதா! ரத்தன் டாடாவிற்கு அன்று நடந்த அவமானம்... ஃபோர்டு நிறுவனத்தை மீண்டும் மீண்டும் பழிவாங்கும் டாடா!

ரத்தன் டாடாவை கடந்த 1999ம் ஆண்டு ஃபோர்டு நிறுவனம் அவமானப்படுத்திய நிலையில், டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தனக்கே உரித்தான ஸ்டைலில் மீண்டும் மீண்டும் அதற்கு பழிவாங்கி வருகிறது.

கொடி பறக்குதா! ரத்தன் டாடாவிற்கு அன்று நடந்த அவமானம்... ஃபோர்டு நிறுவனத்தை மீண்டும் மீண்டும் பழிவாங்கும் டாடா!

இந்தியாவை சேர்ந்த டாடா மோட்டார்ஸ் தற்போது பிரம்மாண்டமான வளர்ச்சியை சந்தித்து வருகிறது. இன்று பத்திரிக்கைகள், தொலைக்காட்சிகள் மற்றும் டிஜிட்டல் மீடியாக்கள் என அனைத்திலும் டாடா மோட்டார்ஸ் நிறுவனம்தான் தலைப்பு செய்தியாக உள்ளது. அமெரிக்காவை சேர்ந்த ஃபோர்டு நிறுவனத்தின் இந்திய தொழிற்சாலையை டாடா மோட்டார்ஸ் நிறுவனம் வாங்கியிருப்பதுதான் இதற்கு காரணம்.

கொடி பறக்குதா! ரத்தன் டாடாவிற்கு அன்று நடந்த அவமானம்... ஃபோர்டு நிறுவனத்தை மீண்டும் மீண்டும் பழிவாங்கும் டாடா!

ஃபோர்டு நிறுவனம் சமீப காலம் வரை இந்தியாவில் கார் விற்பனையில் ஈடுபட்டு வந்தது. ஆனால் இந்திய சந்தையில் ஃபோர்டு நிறுவனத்தால் தாக்குபிடிக்க முடியவில்லை. மிக கடுமையான நஷ்டம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால், இந்தியாவில் கார் விற்பனையை நிறுத்தி கொள்வதாக ஃபோர்டு நிறுவனம் சமீபத்தில் அறிவித்தது.

கொடி பறக்குதா! ரத்தன் டாடாவிற்கு அன்று நடந்த அவமானம்... ஃபோர்டு நிறுவனத்தை மீண்டும் மீண்டும் பழிவாங்கும் டாடா!

இதன் காரணமாக ஃபோர்டு ஊழியர்களின் எதிர்காலம் கேள்விக்குறியானது. ஆனால் இந்தியாவை சேர்ந்த டாடா மோட்டார்ஸ் நிறுவனம் அவர்களுக்கு ஆதரவாக வந்துள்ளது. குஜராத் மாநிலம் சனந்த் பகுதியில் இருக்கும் ஃபோர்டு நிறுவனத்தின் தொழிற்சாலையை தற்போது டாடா மோட்டார்ஸ் நிறுவனம் வாங்கியுள்ளது.

கொடி பறக்குதா! ரத்தன் டாடாவிற்கு அன்று நடந்த அவமானம்... ஃபோர்டு நிறுவனத்தை மீண்டும் மீண்டும் பழிவாங்கும் டாடா!

725.7 கோடி ரூபாய்க்கு இந்த ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. அத்துடன் ஃபோர்டு நிறுவன ஊழியர்களை தக்க வைத்து கொள்வதற்கும் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. எனவே ஃபோர்டு நிறுவன ஊழியர்கள் நிம்மதியடைந்துள்ளனர். இது ஃபோர்டு நிறுவனத்திற்கு, டாடா மோட்டார்ஸ் செய்துள்ள மிகப்பெரிய உதவியாகும்.

கொடி பறக்குதா! ரத்தன் டாடாவிற்கு அன்று நடந்த அவமானம்... ஃபோர்டு நிறுவனத்தை மீண்டும் மீண்டும் பழிவாங்கும் டாடா!

ஆனால் ஃபோர்டு நிறுவனத்திற்கு, டாடா மோட்டார்ஸ் உதவிக்கரம் நீட்டுவது இது முதல் முறையல்ல. கடந்த காலங்களிலும் ஃபோர்டு நிறுவனத்திற்கு, டாடா மோட்டார்ஸ் உதவி செய்துள்ளது. இங்கே குறிப்பிட்டாக வேண்டிய விஷயம் என்னவென்றால், ஃபோர்டு நிறுவனத்தால் அவமானப்படுத்தப்பட்ட பிறகும், டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தொடர்ந்து அவர்களுக்கு உதவி செய்து வருகிறது!

கொடி பறக்குதா! ரத்தன் டாடாவிற்கு அன்று நடந்த அவமானம்... ஃபோர்டு நிறுவனத்தை மீண்டும் மீண்டும் பழிவாங்கும் டாடா!

யார் அவமானப்படுத்தினார்களோ, அவர்கள் முன்னால் வாழ்ந்து காட்டுவதுதான் இருப்பதிலேயே மிகச்சிறந்த பழிவாங்கல் என சொல்வார்கள். அதனை டாடா மோட்டார்ஸ் கச்சிதமாக செய்து வருகிறது. ரத்தன் டாடாவும், டாடா மோட்டார்ஸ் நிறுவனமும், ஃபோர்டு நிறுவனத்தால் எப்படியெல்லாம் அவமானத்திற்கு உள்ளானர்கள்? என்பதை தெரிந்து கொள்ள வேண்டுமென்றால், நாம் வரலாற்றில் பின்னோக்கி பயணிக்க வேண்டும்.

கொடி பறக்குதா! ரத்தன் டாடாவிற்கு அன்று நடந்த அவமானம்... ஃபோர்டு நிறுவனத்தை மீண்டும் மீண்டும் பழிவாங்கும் டாடா!

டாடா மோட்டார்ஸ் நிறுவனம் கடந்த 1998ம் ஆண்டு இண்டிகா (Tata Indica) காரை இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்தது. ஆனால் ஆரம்பத்தில் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் எதிர்பார்த்த அளவு இண்டிகா வரவேற்பை பெறவில்லை. எனவே இண்டிகா கார் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்ட ஒரு ஆண்டுக்குள்ளேயே, அதாவது 1999ம் ஆண்டிலேயே, மிக கடுமையான நெருக்கடி ஏற்பட்டது.

கொடி பறக்குதா! ரத்தன் டாடாவிற்கு அன்று நடந்த அவமானம்... ஃபோர்டு நிறுவனத்தை மீண்டும் மீண்டும் பழிவாங்கும் டாடா!

டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தனது கார் வியாபாரத்தை விற்பனை செய்யும் அளவிற்கு நிலைமை மோசமாக சென்றது. அப்போது டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் கார் வியாபாரத்தை வாங்கி கொள்ள ஃபோர்டு ஆர்வம் காட்டியது. இது தொடர்பாக டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் தலைமை அலுவலகத்திற்கு சென்று ஃபோர்டு அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர்.

கொடி பறக்குதா! ரத்தன் டாடாவிற்கு அன்று நடந்த அவமானம்... ஃபோர்டு நிறுவனத்தை மீண்டும் மீண்டும் பழிவாங்கும் டாடா!

இதன்பின்னர் விரிவான பேச்சுவார்த்தைகளை நடத்துவதற்காக டெட்ராய்டு (Detroit) நகருக்கு, டாடா மோட்டாஸ் நிறுவனத்தின் அதிகாரிகள் அழைக்கப்பட்டனர். இது அமெரிக்காவின் மிச்சிகன் (Michigan) மாகாணத்தில் உள்ள ஒரு நகரமாகும். அங்குதான் ரத்தன் டாடாவும், டாடா மோட்டார்ஸ் அதிகாரிகளும் அவமானப்படுத்தப்பட்டனர்.

கொடி பறக்குதா! ரத்தன் டாடாவிற்கு அன்று நடந்த அவமானம்... ஃபோர்டு நிறுவனத்தை மீண்டும் மீண்டும் பழிவாங்கும் டாடா!

கடந்த 1999ம் ஆண்டு டெட்ராய்டு நகரில் நடந்த ஃபோர்டு அதிகாரிகளுடனான கூட்டத்தில் பேசுவதற்காக, டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் உயர் அதிகாரிகளுடன் ரத்தன் டாடாவும் சென்றிருந்தார். அப்போது விருப்பம் தெரிவித்து அழைத்து விட்டு, ஃபோர்டு நிறுவனத்தின் உயர் அதிகாரிகள் ஏளனமாக பேச தொடங்கினர்.

கொடி பறக்குதா! ரத்தன் டாடாவிற்கு அன்று நடந்த அவமானம்... ஃபோர்டு நிறுவனத்தை மீண்டும் மீண்டும் பழிவாங்கும் டாடா!

''உங்களுக்கெல்லாம் எதுவுமே தெரியாது. எதற்காக கார் விற்பனையை தொடங்கினீர்கள்?'' என கேட்டு ரத்தன் டாடா மற்றும் டாடா மோட்டார்ஸ் உயரதிகாரிகளை, ஃபோர்டு அதிகாரிகள் அவமானப்படுத்தினர். இதனால் ரத்தன் டாடாவும், டாடா மோட்டார்ஸ் உயரதிகாரிகளும் வாடிய முகத்துடன் அங்கிருந்து வந்து விட்டனர். அன்றைய தினம் ரத்தன் டாடா மிகவும் சோகமாக இருந்துள்ளார்.

கொடி பறக்குதா! ரத்தன் டாடாவிற்கு அன்று நடந்த அவமானம்... ஃபோர்டு நிறுவனத்தை மீண்டும் மீண்டும் பழிவாங்கும் டாடா!

டாடா மோட்டார்ஸ் உயர் அதிகாரிகள் இந்த தகவலை உறுதி செய்துள்ளனர். இருந்தாலும் ரத்தன் டாடா தனது நம்பிக்கையை இழக்கவில்லை. இதற்கிடையே வருடங்கள் உருண்டோடின. சுமார் 9 வருடங்களுக்கு பிறகு, அதாவது கடந்த 2008ம் ஆண்டில், டாடா மோட்டார்ஸ் நிறுவனத்திடம் உதவி கேட்டு ஓடோடி வந்து நின்றது ஃபோர்டு!

கொடி பறக்குதா! ரத்தன் டாடாவிற்கு அன்று நடந்த அவமானம்... ஃபோர்டு நிறுவனத்தை மீண்டும் மீண்டும் பழிவாங்கும் டாடா!

ஜாகுவார் மற்றும் லேண்ட் ரோவர் (Jaguar And Land Rover) பிராண்டுகள், ஃபோர்டு நிறுவனத்தின் கை வசம்தான் இருந்தன. ஆனால் 2008ம் ஆண்டு ஏற்பட்ட கடுமையான நிதி நெருக்கடியால், ஜாகுவார் மற்றும் லேண்ட் ரோவர் பிராண்டுகளை விற்பனை செய்ய வேண்டிய கட்டாயத்திற்கு ஃபோர்டு நிறுவனம் தள்ளப்பட்டது.

கொடி பறக்குதா! ரத்தன் டாடாவிற்கு அன்று நடந்த அவமானம்... ஃபோர்டு நிறுவனத்தை மீண்டும் மீண்டும் பழிவாங்கும் டாடா!

அப்போது டாடா மோட்டார்ஸ் நிறுவனம்தான் ஜாகுவார் மற்றும் லேண்ட் ரோவர் பிராண்டுகளை வாங்கியது. கால சக்கரம் எவ்வளவு வேகமாக சுழல்கிறது பார்த்தீர்களா? கடந்த 1999ம் ஆண்டு ஃபோர்டு நிறுவனத்தால் அவமானப்படுத்தப்பட்ட டாடா மோட்டார்ஸ், 9 ஆண்டுகள் கழித்து 2008ம் ஆண்டில், அதே ஃபோர்டு நிறுவனத்தின் ஜாகுவார் மற்றும் லேண்ட் ரோவர் பிராண்டுகளை வாங்கியது.

கொடி பறக்குதா! ரத்தன் டாடாவிற்கு அன்று நடந்த அவமானம்... ஃபோர்டு நிறுவனத்தை மீண்டும் மீண்டும் பழிவாங்கும் டாடா!

''ஜாகுவார் லேண்ட் ரோவரை வாங்குவதன் மூலம் நீங்கள் எங்களுக்கு மிகப்பெரிய உதவியை செய்கிறீர்கள்'' என அப்போது டாடாவிற்கு இருகரம் கூப்பி நன்றி தெரிவித்தது ஃபோர்டு! அந்நேரம் செய்த தவறை ஃபோர்டு உணர்ந்திருக்கும். 14 ஆண்டுகள் கடந்துள்ள நிலையில், குஜராத் மாநிலம் சனந்த் தொழிற்சாலையை வாங்கியதன் மூலம் மீண்டும் ஒரு முறை ஃபோர்டு நிறுவனத்திற்கு உதவியுள்ளது டாடா.

கொடி பறக்குதா! ரத்தன் டாடாவிற்கு அன்று நடந்த அவமானம்... ஃபோர்டு நிறுவனத்தை மீண்டும் மீண்டும் பழிவாங்கும் டாடா!

யாரையும் ஒருபோதும் குறைத்து மதிப்பிட கூடாது என்பதைதான் இந்த நிகழ்வுகள் நமக்கு உணர்த்துகின்றன. ரத்தன் டாடா மற்றும் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் தன்னம்பிக்கை மற்றும் உழைப்பு ஆகியவையும், இந்த நிகழ்வுகளில் இருந்து நாம் அனைவரும் கற்று கொள்ள வேண்டிய முக்கியமான பாடங்கள்தான் என்பதில் துளியும் சந்தேகமில்லை.

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
How india s tata motors saved american auto manufacturer ford twice jaguar land rover sanand plant
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X