ரயிலில் அபாய சங்கிலியை யார் இழுத்தது என எப்படி கண்டுபிடிப்பார்கள்? இவ்வளவு ஈசியா ஒரு டெக்னிக் இருக்கா?

ரயில்களில் அபாய சங்கிலியை ஒருவர் பிடித்து இழுத்துவிட்டால் இவ்வளவு பெரிய ரயிலில் யார் அந்த அபாய சங்கிலியைப் பிடித்து இழுத்தது எந்த பெட்டியில் இழுக்கப்பட்டது என்பதை எப்படிக் கண்டுபிடிக்கிறார்கள் தெரியுமா? முழு விபரங்களைக் கீழே காணுங்கள்

ரயிலில் அபாய சங்கிலியை யார் பிடித்து இழுத்தது என எப்படிக் கண்டுபிடிப்பார்கள்? இவ்வளவு ஈசியா ஒரு டெக்னிக் இருக்கா?

நாம் எல்லோரும் வாழ்நாளில் ஒரு முறையாவது ரயிலில் பயணம் செய்திருப்போம். ரயில்கள் எல்லாம் பல்வேறு மாற்றங்களைச் செய்து கொண்டே வருகிறது. கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு ஓடிய ரயிலுக்கும் தற்போது ஓடும் ரயிலுக்கும் ஏகப்பட்ட வித்தியாசம் இருக்கிறது. ஆனால் இன்றும் எந்த வித்தியாசமும் இல்லாமல் இயங்குவது அபாய சங்கிலி தான்.

ரயிலில் அபாய சங்கிலியை யார் பிடித்து இழுத்தது என எப்படிக் கண்டுபிடிப்பார்கள்? இவ்வளவு ஈசியா ஒரு டெக்னிக் இருக்கா?

ஆம் ரயிலில் சென்ற அனைவருக்கும் இந்த அபாய சங்கிலி குறித்துத் தெரிந்திருக்கும். ரயில் பயணத்தின் போது ஏதாவது ஆபத்து ஏற்பட்டால் இந்த அபாய சங்கிலியைப் பிடித்து இழுத்ததும் ரயில் நின்று விடும். இதையடுத்து ஆபத்திற்கு உதவியாகக் குறிப்பிட்ட இடத்திற்கு ரயில்வே ஊழியர்கள் சென்று விடுவார்கள்.

ரயிலில் அபாய சங்கிலியை யார் பிடித்து இழுத்தது என எப்படிக் கண்டுபிடிப்பார்கள்? இவ்வளவு ஈசியா ஒரு டெக்னிக் இருக்கா?

இது இந்தியாவில் ரயில் துவங்கிய ஆரம்பக்கட்டத்தில் பல இடங்களில் பயன்படுத்தப்பட்டது. ஆனால் இன்று ரயில்வே சட்டத்தில் போதுமான காரணம் இல்லாமல் அபாய சங்கிலியை ஒருவர் இழுத்தால் அவருக்கு மிகப்பெரிய அளவில் அபராதம் விதிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரயிலில் அபாய சங்கிலியை யார் பிடித்து இழுத்தது என எப்படிக் கண்டுபிடிப்பார்கள்? இவ்வளவு ஈசியா ஒரு டெக்னிக் இருக்கா?

இந்த அபாய சங்கிலி ஆபத்து நேரத்தில் உதவும் விதமாக அமைக்கப்பட்டிருந்தாலும் திருடர்களும் இந்த வாய்ப்பை பயன்படுத்தினர். ரயிலில் ஏறி ரயில் வேகமாகச் சென்று கொண்டிருக்கும் போது கொள்ளயடித்துவிட்டு ரயில் குறிப்பிட்ட பகுதிக்குச் செல்லும் போது ரயிலின் அபாய சங்கிலியைப் பிடித்து இழுத்து ரயில் நின்றதும் தப்பிச் சென்று விடுவர்.

ரயிலில் அபாய சங்கிலியை யார் பிடித்து இழுத்தது என எப்படிக் கண்டுபிடிப்பார்கள்? இவ்வளவு ஈசியா ஒரு டெக்னிக் இருக்கா?

இன்று அதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைவு தான். இந்நிலையில் ரயிலில் ஏகப்பட்ட பெட்டிகள் இருக்கிறது? எல்லா பெட்டிகளிலும் அபாய சங்கிலி இருக்கிறது. ஒருவர் அபாய சங்கிலியை எந்த பெட்டியிலிருந்து இழுத்தார் என்பதை எப்படிக் கண்டுபிடிப்பார்கள் என்ற சந்தேகம் பலருக்கு இருக்கிறது அதை விளக்கவே இந்த பதிவை வழங்கியுள்ளோம்.

ரயிலில் அபாய சங்கிலியை யார் பிடித்து இழுத்தது என எப்படிக் கண்டுபிடிப்பார்கள்? இவ்வளவு ஈசியா ஒரு டெக்னிக் இருக்கா?

எப்படி இதைக் கண்டுபிடிப்பார்கள் எனத் தெரிந்த கொள்ளும் முன்பு இந்த பிரேக்கிங் சிஸ்டம் எப்படி வேலை செய்கிறது என்பதை நாம் தெரிந்து கொள்ள வேண்டும். ரயில்களில் பொதுவாக ஏர்பிரேக்கள் வழங்கப்படும். இது ரயிலில் உள்ள காற்றின் அழுத்தத்தை மையமாகக் கொண்டு செயல்படும். ஏர் அழுத்தம் இருந்தால் ரயில் பிரேக் ரிலீஸ் ஆகும் அழுத்தம் குறைந்துவிட்டால் பிரேக் பிடித்துவிடும். இந்த வகையில் தான் இந்த தொழிற்நுட்பம் இருக்கிறது.

ரயிலில் அபாய சங்கிலியை யார் பிடித்து இழுத்தது என எப்படிக் கண்டுபிடிப்பார்கள்? இவ்வளவு ஈசியா ஒரு டெக்னிக் இருக்கா?

இதில் ஒருவர் அபாய சங்கிலியைப் பிடித்து இழுக்கிறார் என்றால் அது நேரடியாக ரயில் டிரைவருக்கு சிக்னல் அனுப்பும் அதை வைத்து டிரைவர் பிரேக் பிடிப்பார் எனப் பலர் நினைத்துக்கொண்டிருக்கிறார்கள். ஆனால் அது முற்றிலும் தவறு அந்த அபாய சிங்கிலி எல்லாம் இந்த பிரேக் பிரஷர் உடன் இணைக்கப்பட்டிருக்கும். இந்த அபாய சங்கிலியை இழுத்தவுடன் பிரேக் பிரஷர் ரிலீஸ் ஆகிவிடும். இது உடனடியாக பிராக்கைப் பிடித்துவிடும். இது குறித்த தகவலும் ரயில் இன்ஜினிற்கு சென்றுவிடும்.

ரயிலில் அபாய சங்கிலியை யார் பிடித்து இழுத்தது என எப்படிக் கண்டுபிடிப்பார்கள்? இவ்வளவு ஈசியா ஒரு டெக்னிக் இருக்கா?

இதனால் அபாய சங்கிலியைப் பிடித்து இழுப்பதால் ரயில் நிற்பது என்பது 100 சதவீதம் உறுதியான ஒன்று. அப்படி ஒருவர் அபாய சங்கிலியைப் பிடித்து இழுத்தால் எந்த பெட்டியில் அபாய சங்கிலி இழுக்கப்பட்டது என்பதைத் தெளிவாகவும் சுலபமாகவும் தெரிந்து கொள்ளும் ஒரு வழியும் இருக்கிறது. அபாய சங்கிலிகள் எல்லாம் ஏர் பிரஷர் உடன் நேர்ந்து ரயில் பெட்டியை இணைக்கும் பகுதியில் உள்ள வால்வ் உடனும் இணைக்கப்படும்.

ரயிலில் அபாய சங்கிலியை யார் பிடித்து இழுத்தது என எப்படிக் கண்டுபிடிப்பார்கள்? இவ்வளவு ஈசியா ஒரு டெக்னிக் இருக்கா?

இந்த அபாய சங்கிலியை இணைக்கும் போது அந்த வால்வு திரும்பி ரயிலின் எந்த பெட்டியிலிருந்து பார்த்தாலும் தெரியும் படி வெளியில் வந்து நிற்கும் அதைப் பார்த்ததும் அசிஸ்டென்ட் லோகோ பைலட், போலீசார், டிக்கெட் பரிசோதகர்கள் என அனைவரும் அந்த பெட்டிக்குச் செல்ல முடியும். ரயில் பெட்டிகளைப் பொருத்தவரை 3 விதமான பிரேக்கிங் முறை பின்பற்றப்படுகிறது. முதலாவது வேக்கம் பிரேக், இரண்டாவது ஐசிஎஃப் டிசைன் ஏர் பிரேக், மூன்றாவது எல்எச்வி டிசைன் ஏர் பிரேக்

ரயிலில் அபாய சங்கிலியை யார் பிடித்து இழுத்தது என எப்படிக் கண்டுபிடிப்பார்கள்? இவ்வளவு ஈசியா ஒரு டெக்னிக் இருக்கா?

இதில் வேக்கம் பிரேக் மற்றும் ஐசிஎஃப் டிசைன் ஏர் பிரேக்களில் இந்த சிஸ்டம் தான் இருக்கும். ஆனால் எல்எச்வி டிசைன் ஏர் பிரேக்கள் எலெக்ட்ரிக்கலுடன் கனெக்ட் செய்யப்பட்டு அபாய சங்கிலியைப் பிடித்து இழுத்ததும் அந்த பெட்டியில் மட்டும் லைட் எரிவது போல டிசைன் செய்யப்பட்டிருக்கும். அதன் மூலமும் எளிமையாகக் கண்டு பிடித்துவிடலாம். இப்படி தான் ரயிலில் எந்த பெட்டியிலிருந்து அபாய சங்கிலி இழுக்கப்பட்டது என எளிமையாகக் கண்டு பிடிக்கிறார்கள்.

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
How railway police find who pulls the emergency chain in train in few seconds
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X