நடுக் கடலில் கப்பலை நிறுத்த எப்படி பிரேக் பிடிப்பார்கள் தெரியுமா? இதுக்கு பின்னாடி இவ்வளவு விஷயம் இருக்கா!

கப்பல்களை நடுக்கடலில் திடீரென நிறுத்த வேண்டிய சூழ்நிலை வந்தால் எப்படி சடன் பிரேக் போட்டு கப்பலை நிறுத்துவார்கள் தெரியுமா? இது குறித்த விரிவான தகவல்களைக் காணலாம் வாருங்கள்.

நடுக் கடலில் கப்பலை நிறுத்த எப்படி பிரேக் பிடிப்பார்கள் தெரியுமா . . . இதுக்கு பின்னாடி இவ்வளவு விஷயம் இருக்கா . . .

நாம் கார், பைக் எது ஓட்டினாலும் சாலையில் குறுக்கே யாராவது வந்துவிட்டால், அவர்கள் மீது நம் வாகனம் மோதாமல் இருக்க வாகனத்தை பிரேக் போடுவோம். இதனால் விபத்துக்களைத் தவிர்க்கலாம். இது தரையில் செல்லும் எல்லா வாகனங்களுக்கும் பொருந்தும்,கார், பைக், ஸ்கூட்டர், பஸ், ஏன் ரயிலில் கூட பிரேக் போட்டு ரயிலை நிறுத்தும் வசதி இருக்கிறது. ஆனால் தண்ணீரில் செல்லும் கப்பல்கள் எல்லாம் விபத்தைத் தவிர்க்க எப்படி பிரேக் போடுகிறார்கள் தெரியுமா?

நடுக் கடலில் கப்பலை நிறுத்த எப்படி பிரேக் பிடிப்பார்கள் தெரியுமா . . . இதுக்கு பின்னாடி இவ்வளவு விஷயம் இருக்கா . . .

கப்பல்களை நிறுத்த மிகப்பெரிய தொழிற்நுட்பம் பயன்படுத்தப்படுகிறது. பொதுவாகக் கப்பல்களில் திடீரென அவசரமாக பிரேக் போட வேண்டும் என்றால் போட முடியாது. அதற்காகவே கப்பலை பெரும்பாலும் வேகத்தைக் கட்டுப்பாட்டில் வைத்தே இயக்குவார்கள். கப்பலின் வேகத்தை படிப்படியாகக் குறைத்த நிறுத்த முயற்சி செய்வார்கள். உண்மையில் சொல்லப்போனால் அதைத் தவிரக் கப்பல்களை நிறுத்த வேறு வழியும் இல்லை.

நடுக் கடலில் கப்பலை நிறுத்த எப்படி பிரேக் பிடிப்பார்கள் தெரியுமா . . . இதுக்கு பின்னாடி இவ்வளவு விஷயம் இருக்கா . . .

அப்படி என்றால் கப்பலுக்குக் குறுக்கே திடீரென ஏதாவது வந்துவிட்டால் அதில் மோதுவதைத் தவிர வேறு வழியில்லையா? என்ற கேட்டால், இருக்கிறது. திடீரென கப்பலை நிறுத்த பிரேக் இல்லாமல் வேறு சில வழிமுறைகளைப் பின்பற்றி கப்பலை நிறுத்துகின்றனர். இதைப் பற்றித் தெரிந்து கொள்ளும் முன்பு நாம் முதலில் கப்பலில் இன்ஜினை பற்றி மேலோட்டமாக தெரிந்து கொள்ள வேண்டும்.

நடுக் கடலில் கப்பலை நிறுத்த எப்படி பிரேக் பிடிப்பார்கள் தெரியுமா . . . இதுக்கு பின்னாடி இவ்வளவு விஷயம் இருக்கா . . .

கப்பல்களில் பயன்படுத்தப்படும் இன்ஜினும், கார்களில் பயன்படுத்தப்படும் இன்ஜினும் கிட்டத்தட்ட ஒரே அறிவியல் விதியின்படி தான் இயங்குகிறது. இன்ஜினை சுற்ற வைக்க எரிபொருள் பயன்படுகிறது. இப்படியாக இன்ஜின் சுற்றும் போது அந்த சுழற்சி கார்களில் கிராங் ஸ்ஃபாட் மூலம் கடத்தப்படும். ஆனால் கப்பல் இன்ஜின்களில் கிராங்க் சஃப்ட்டிற்கு பதிலாக புரோபல்லர் இணைக்கப்பட்டிருக்கும்.

நடுக் கடலில் கப்பலை நிறுத்த எப்படி பிரேக் பிடிப்பார்கள் தெரியுமா . . . இதுக்கு பின்னாடி இவ்வளவு விஷயம் இருக்கா . . .

இந்த புரோப்பஸர் என்பது கப்பலுக்குப் பின்னால் கப்பலுக்கு வெளியே தண்ணீருக்கு அடியே இருக்கும்படி காற்றாடி போல அமைக்கப்பட்டிருக்கும். இது சுற்றும் வேகத்தில் தான். கப்பல் ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு நகர்கிறது.

நடுக் கடலில் கப்பலை நிறுத்த எப்படி பிரேக் பிடிப்பார்கள் தெரியுமா . . . இதுக்கு பின்னாடி இவ்வளவு விஷயம் இருக்கா . . .

இந்த புரோபல்லர் எவ்வளவுக்கு எவ்வளவு வேகமாக இயங்குகிறதோ அவ்வளவுக்கு அவ்வளவு கப்பல் ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு நகரம் இப்படியாகக் கப்பல் நிறுத்த வேண்டிய இடம் வரும் போது கப்பல் செல்லும் வேகம், கப்பலை நிறுத்த வேண்டிய இடத்தை கணக்கிட்டுச் சரியாக எந்த இடத்தில் புரோப்பல்லரை நிறுத்தினால் கப்பலைச் சரியாக இடத்தில் நிறுத்தலாம் எனக் கணக்கிட்டு புரோப்பலரை நிறுத்துவார்கள். அதன்பின் கப்பல் அந்த இடத்திலிருந்து நகராமல் இருக்க நங்கூரத்தைக் கடலில் போட்டு விடுவார்கள்.

நடுக் கடலில் கப்பலை நிறுத்த எப்படி பிரேக் பிடிப்பார்கள் தெரியுமா . . . இதுக்கு பின்னாடி இவ்வளவு விஷயம் இருக்கா . . .

சரி இப்பொழுது கப்பல் நடுக் கடலில் சென்று கொண்டிருக்கும் போது திசை மாறி சென்று ஏதாவது தீவு குறுக்கே இருந்தாலோ அல்லது வேறு கப்பல் அல்லது படகு குறுக்கே வந்தாலோ, அல்லது பனிப்பாறைகள் உருவாகியிருந்தாலோ கப்பலை உடனடியாக நிறுத்த வேண்டும் அப்படி என்றால் கப்பலுக்கு பிரேக் என்பது ரொம்ப ரொம்ப அவசியம். அப்படியான சூழ்நிலைகளில் எப்படி நிறுத்துவார்கள் என்றால் அப்பொழுதும் இந்த புரோப்பல்கள் தான் உதவி செய்கின்றனர்.

நடுக் கடலில் கப்பலை நிறுத்த எப்படி பிரேக் பிடிப்பார்கள் தெரியுமா . . . இதுக்கு பின்னாடி இவ்வளவு விஷயம் இருக்கா . . .

பொதுவாக கார் பைக்கை நிறுத்துவது போல கப்பலை பிரேக் போட்டு அந்த இடத்திலேயே எல்லாம் நிறத்திவிடமுடியாது. வேகமாகச் சென்று கொண்டிருக்கும் கப்பலை நிறுத்த வேண்டும் என்றால் அதற்கான புரோசஸ் பெரியது. அந்த புரோசஸ் துவங்கிக் கொஞ்ச தூரம் கப்பல் சென்று தான் நின்றும், அது கப்பல் பயணிக்கும் வேகம் மற்றும் சூழ்நிலைகளைப் பொருத்து அதன் தூரமும் மாறுபடும்.

நடுக் கடலில் கப்பலை நிறுத்த எப்படி பிரேக் பிடிப்பார்கள் தெரியுமா . . . இதுக்கு பின்னாடி இவ்வளவு விஷயம் இருக்கா . . .

உதாரணமாகக் கப்பல் செல்லும் பாதையில் திடீரென பனிப்பாறைகள் இருக்கிறது என வைத்துக்கொள்வோம். அதை சில கி.மீ தொலைவிலேயே கப்பலின் கேப்டன் பார்த்துவிட்டால் கப்பல் தற்போது செல்லும் வேகத்திலேயே சென்றால் கப்பல் பனிப்பாறையில் மோதி விபத்தை ஏற்படுத்திவிடும். இதனால் கப்ப சேதாரமாகும் என்பதை உணருகிறார். உடனடியாக அவர் கப்பலை நிறுத்துவற்கான முயற்சியை எடுக்கிறார்.

நடுக் கடலில் கப்பலை நிறுத்த எப்படி பிரேக் பிடிப்பார்கள் தெரியுமா . . . இதுக்கு பின்னாடி இவ்வளவு விஷயம் இருக்கா . . .

உடனடியாக அவர் இன்ஜின் அறையைத் தொடர்பு கொண்டு கப்பலின் இன்ஜின்களை நிறுத்த உத்தரவிடுவார். அப்படி இன்ஜினை நிறுத்த இன்ஜிற்கும் எரிபொருளுக்குப் பதிலாகக் காற்று செலுத்தப்படும். அப்பொழுது இன்ஜினிற்குள் கம்பஷன் ஏற்படாமல் இன்ஜின் நின்றுவிடும். இதனால் புரோபல்லர் சுற்றுவதும் நின்றுவிடும். இருந்தாலும் கப்பல் வந்து கொண்டிருந்த வேகம் குறையத் தாமதம் ஆகும் கப்பல் பயணித்துக்கொண்டே தான். இருக்கும்.

நடுக் கடலில் கப்பலை நிறுத்த எப்படி பிரேக் பிடிப்பார்கள் தெரியுமா . . . இதுக்கு பின்னாடி இவ்வளவு விஷயம் இருக்கா . . .

இப்பொழுது கேப்டன் கப்பல் இருக்கும் இடத்திற்கும் பனிப்பாறைக்கும் எவ்வளவு தூரம் இருக்கிறது. கப்பல் என்ன வேகத்தில் சென்று கொண்டிருக்கிறது. இப்படிச் சென்றால் பனிப்பாறையில் கப்பல் மோதுமா எனக் கணக்கிடுவார். கப்பல் மோதும் என்கிற பட்சத்தில் அவர் அடுத்தாக கப்பலின் திசையை மாற்றினால் விபத்தைத் தடுக்க முடியுமா எனக் கணக்கிடுவார் அதற்கு நேரம் இல்லை என்றால் அவரது அடுத்த முயற்சி கப்பல் பனிப்பாறையை எட்டுவதை தாமதப்படுத்துவது.

நடுக் கடலில் கப்பலை நிறுத்த எப்படி பிரேக் பிடிப்பார்கள் தெரியுமா . . . இதுக்கு பின்னாடி இவ்வளவு விஷயம் இருக்கா . . .

கப்பலின் திசையை மாற்றும் குழுவினரிடம் அவர் கப்பலின் திசையை வலது மற்றும் இடது புறமாக மாற்றி மாற்றித் திருப்பும்படி உத்தரவிடுவார். நாம் நேராகச் செல்வதை விட வளைந்து வளைந்து செல்வதால் கொஞ்சம் நேரம் எடுக்கும் அல்லவா? அதற்காகத் தான் அப்படியாகச் செய்கிறார்கள். இப்பொழுதாவது பனிப்பாறையை இடிக்காமல் கப்பலை நிறுத்த முடியுமா எனக் கணக்கிடுவார். இப்பொழுதும் நிறுத்த முடியவில்லையா அவரிடம் கடைசி ஆயுதம் தான் கப்பலின் வேகம்.

நடுக் கடலில் கப்பலை நிறுத்த எப்படி பிரேக் பிடிப்பார்கள் தெரியுமா . . . இதுக்கு பின்னாடி இவ்வளவு விஷயம் இருக்கா . . .

கப்பலின் அதிக வேகத்தில் செல்வதால் தான் பனிப்பாறையில் மோதும் ஆபத்து இருக்கிறது, என்பதால் கப்பலின் வேகத்தை முடிந்தளவு குறைக்க முயற்சி செய்வார். இதற்காக அவர் மீண்டும் இன்ஜின் அறையைத் தொடர்பு கொண்டு நிறுத்தப்பட்ட புரோப்பல்லரை, ரிவர்ஸில் இயக்க உத்தரவிடுவார். இப்படியாகக் கப்பலின் இன்ஜினை ரிவர்ஸிலும் இயக்க முடியும். காரை எப்படி ரிவர்ஸில் இயக்குகிறோமா அப்படி தான் இதுவும்.

நடுக் கடலில் கப்பலை நிறுத்த எப்படி பிரேக் பிடிப்பார்கள் தெரியுமா . . . இதுக்கு பின்னாடி இவ்வளவு விஷயம் இருக்கா . . .

இப்படியாக இயக்குவதால் இன்ஜின் அதிகமாக அழுத்தம் ஏற்படும். இதனால் இன்ஜினின் ஆயுள் குறையும் உள்ளிட்ட பல பிரச்சனை இருந்தாலும் தலையான பிரச்சனையான பனிப் பாறையில் கப்பலை மோத விடாமல் தடுக்க இதைத் தவிர

இப்பொழுது அவரிடம் வேறு வழியில்லை. இப்படியாகக் கப்பலின் புரோபல்லரை ரிவர்ஸில் இயக்கும் போது மெல்ல மெல்லக் கப்பலின் வேகம் குறையும். இதனால் பனிப்பாறையில் கப்பல் மோதுவது தவிர்க்கப்பட்டு விடும்.

நடுக் கடலில் கப்பலை நிறுத்த எப்படி பிரேக் பிடிப்பார்கள் தெரியுமா . . . இதுக்கு பின்னாடி இவ்வளவு விஷயம் இருக்கா . . .

பனிப்பாறைகளைப் பொருத்தவரை மிகப்பெரிய பனிப்பாறைகள் இருந்தால்தான் கப்பல் திசை மாற்றப்படும் அல்லது நிறுத்தப்படும். சிறிய பனிப்பாறைகள் வழியிலிருந்தால் கப்பல் அதை மீது மோதி உடைத்தெரிந்துவிட்டு செல்லும். கப்பல்களில் சடன் பிரேக் போடு என்பது மிகவும் சிரமமான காரியம். இந்த பிரேக் போடும் புராசஸை Crash Manoeuvring என அழைப்பார்கள். விபத்தைத் தடுப்பதற்கான நடவடிக்கை என்பது இதன் பொருள்.

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
How ships are stopped in emergency situations using crash manoeuvring
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X