0001 மாதிரியான ஃபேன்சி நம்பரை வாங்கணுமா?.. இதோ ஃபேன்சி நம்பர் பிளேட்டை பெறுவதற்கான வழி முறைகள்!

ஃபேன்சி நம்பர் பிளேட்டை பெறுவதற்கான வழிமுறைகளை இந்த பதிவில் வழங்கியிருக்கின்றோம். வாருங்கள் விரிவான பதிவிற்குள் போகலாம்.

0001 மாதிரியான ஃபேன்சி நம்பரை வாங்கணுமா?.. இதோ ஃபேன்சி நம்பர் பிளேட்டை பெறுவதற்கான வழி முறைகள்!

வாகனங்களை வெறும் இடம் விட்டு இடம் மாற பயன்படும் இயந்திரம் என கூறிவிட முடியாது. அவை வாழ்க்கையின் ஓர் முக்கியமான அங்கமாக பார்க்கப்படுகின்றன. எனவேதான் பலர் வாகனம் விஷயத்தில் மிகுந்த அக்கறையுடன் செயல்படுகின்றனர். அதன் நிறத்தை தேர்வு செய்வது தொடங்கி பிற அலங்கார பொருட்களால் அலங்கரிப்பது வரை அனைத்தையும் பார்த்து பார்த்து செய்கின்றனர்.

0001 மாதிரியான ஃபேன்சி நம்பரை வாங்கணுமா?.. இதோ ஃபேன்சி நம்பர் பிளேட்டை பெறுவதற்கான வழி முறைகள்!

ஏனெனில் பலர் தங்களின் பெருமையாக வாகனங்களை கருதுகின்றனர். இதனால், தொகையைப் பார்க்காமல் லட்சங்களையும், கோடிகளையும் வாரி இறைத்து அவற்றை வாங்குகின்றனர். இதேபோல், பேன்சி நம்பரால் வாகனத்தை அலங்கரிப்பதையும் அவர்கள் பெருமையாக கருதுகின்றனர்.

0001 மாதிரியான ஃபேன்சி நம்பரை வாங்கணுமா?.. இதோ ஃபேன்சி நம்பர் பிளேட்டை பெறுவதற்கான வழி முறைகள்!

பேன்சி நம்பர் பிளேட் ஆடம்பர தோற்றத்தை வழங்க உதவும். இது சற்று காஸ்ட்லியானதுதான், இருப்பினும் அதனை விரும்பாதவர்கள் நிச்சயம் இந்த ஊரில் மட்டுமல்ல உலகத்திலேயே இருக்க மாட்டார்கள். ஏனெனில் பேன்சி நம்பர் பிளேட் அந்த வாகனத்தையும், வாகனத்தின் உரிமையாளரையும் ஓர் விஐபி-ஆக பிரதிபலிக்கச் செய்கின்றன.

0001 மாதிரியான ஃபேன்சி நம்பரை வாங்கணுமா?.. இதோ ஃபேன்சி நம்பர் பிளேட்டை பெறுவதற்கான வழி முறைகள்!

இத்தகைய மதிப்பு கொண்ட ஃபேன்சி நம்பரை வாங்குவது எப்படி?, என்ன வழிமுறைகளைக் கடைபிடிக்க வேண்டும்?, என்பது பற்றிய விபரங்களையே இந்த பதிவில் பார்க்க இருக்கின்றோம். வாருங்கள் பதிவிற்குள் போகலாம்.

0001 மாதிரியான ஃபேன்சி நம்பரை வாங்கணுமா?.. இதோ ஃபேன்சி நம்பர் பிளேட்டை பெறுவதற்கான வழி முறைகள்!

ஃபேன்சி நம்பரா!.. அப்படினா என்ன?

ரேண்டமாக வழக்கப்படும் நம்பர் பிளேட்டில் கன்னா பின்னா என எண்கள் வழங்கப்பட்டிருக்கும். இதில் இருந்து சற்று மாறுபட்டு ஃபேன்சி நம்பர் பிளேட் காட்சியளிக்கும். அதாவது, அவை சுலபமான அல்லது ஈசியாக மனதில் பதியக் கூடிய எண்களைக் கொண்டதாக இருக்கும். உதாரணமாக '0001' என்பது போன்ற மிக சுலபமான எண்கள் ஃபேன்சி நம்பர் பிளேட்டில் வழங்கப்படும். இந்த ஃபேன்சி நம்பர்களை பிரத்யேகமாக ஏலத்தின் வாயிலாக மட்டுமே பெற முடியும்.

0001 மாதிரியான ஃபேன்சி நம்பரை வாங்கணுமா?.. இதோ ஃபேன்சி நம்பர் பிளேட்டை பெறுவதற்கான வழி முறைகள்!

அதேவேலையில், தங்களுக்கு தேவையான பதிவெண்களை பிரத்யேகமாக சில செல்வந்தர்கள் கேட்டு பெற்றும் வருகின்றனர். ஆனால், வழக்கமான கட்டணத்தைவிட அதற்கு பல மடங்கு அதிக கட்டணம் வசூலிக்கப்படும். சில நேரங்களில் பதிவெண் பொருத்தப்படும் ஆடம்பர வாகனத்தைவிட பல மடங்கு அதிக விலையைக் கொண்டதாக இவை காட்சியளிக்கும்.

0001 மாதிரியான ஃபேன்சி நம்பரை வாங்கணுமா?.. இதோ ஃபேன்சி நம்பர் பிளேட்டை பெறுவதற்கான வழி முறைகள்!

எவ்வாறு ஃபேன்சி நம்பரை பெறுவது?

ஃபேன்சி நம்பர் விற்பனையை ஆன்லைன் வாயிலாகவே ஆர்டிஓ-க்கள் நடத்தி வருகின்றன. அவற்றை ஏலத்தின் வாயிலாக அவை வழங்கிக் கொண்டிருக்கின்றன. ஆகையால், ஃபேன்சி பதிவெண்ணை பெற ஆர்டிஓ-விற்கு நேரில் செல்ல வேண்டிய அவசியம் இருக்காது.

0001 மாதிரியான ஃபேன்சி நம்பரை வாங்கணுமா?.. இதோ ஃபேன்சி நம்பர் பிளேட்டை பெறுவதற்கான வழி முறைகள்!

சில நேரங்களில் ஏலம் செய்யப்படும் தளம் அனல் பறக்கும் களமாக மாறுகின்றன. ஒற்றை ஃபேன்சி நம்பருக்காக பலர் போட்டியிடுவதனாலேயே சில நேரங்களில் ஏலம் விடும் தளம் அனல் பறக்கும் களமாக மாறிவிடுகின்றன. மிக குறைவான தொகையில் தொடங்கி பல லட்ச ரூபாய் வரை ஏலங்கள் நீடிக்கும். அதேநேரத்தில் சில மிகுந்த ஃபேன்சி எண்களுக்கு ஆரம்ப ஏல தொகையே பல லட்சங்களாக காட்சியளிக்கின்றன.

0001 மாதிரியான ஃபேன்சி நம்பரை வாங்கணுமா?.. இதோ ஃபேன்சி நம்பர் பிளேட்டை பெறுவதற்கான வழி முறைகள்!

ஏலத்தில் பங்குக் கொள்வது எப்படி?

ஃபேன்சி நம்பர் பிளேட்டை வாங்க ஆர்வமுள்ளவர்கள் முதலில் சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகத்தின் அதிகாரப்பூர்வ வலைதள பக்கத்தில் கணக்கைத் தொடங்க வேண்டும். இதன் பின்னரே வரவிருக்கும் ஏலங்களில் நம்மால் பங்கேற்க முடியும். குறிப்பாக, ஏலம் குறித்த அறிவிப்புகள் குறுஞ்செய்தி மற்றும் மின்னஞ்சல்கள் வாயிலாகவே அனுப்பி வைக்கப்படுகின்றன.

0001 மாதிரியான ஃபேன்சி நம்பரை வாங்கணுமா?.. இதோ ஃபேன்சி நம்பர் பிளேட்டை பெறுவதற்கான வழி முறைகள்!

கட்டணம்:

கணக்கைத் தொடங்கிய பின்னர் குறிப்பிட்ட (தேவையான) ஃபேன்சி எண்ணை தேர்வு செய்ய வேண்டும். அதற்கான கணிசமான கட்டண தொகையை செலுத்த வேண்டும். இந்த கட்டண தொகை மாநிலத்திற்கு மாநிலம் மாறுபட்டுக் காணப்படுகின்றது இது திரும்ப பெற முடியாததாக சில நேரங்களில் அமைகின்றது. இதன் பின்னர் ஏலத்தில் பங்குபெற்று நமக்கான ஏலத் தொகையை கேட்கலாம். ஏலம் முடிந்த பிறகு ஏலத்தின் முடிவுகள் அறிவிக்க முடியும்.

0001 மாதிரியான ஃபேன்சி நம்பரை வாங்கணுமா?.. இதோ ஃபேன்சி நம்பர் பிளேட்டை பெறுவதற்கான வழி முறைகள்!

ஒரு வேலை ஏலத்தில் வெற்றி பெற்றிருந்தால் ஏலத்திற்கான பாக்கி தொகையை டிடி வாயிலாக செலுத்த வேண்டும். தேசிய வங்கியினால் பெறப்பட்ட டிடி வாயிலாகவே தொகையைச் செலுத்த வேண்டும். அந்தந்த மாநிலத்தை பொருத்து போக்குவரத்து கழகத்தின் பெயரில் அந்த டிடி பெற்றிருக்க வேண்டும்.

0001 மாதிரியான ஃபேன்சி நம்பரை வாங்கணுமா?.. இதோ ஃபேன்சி நம்பர் பிளேட்டை பெறுவதற்கான வழி முறைகள்!

ஏலம் நடைபெறும் நாட்கள்

ஒவ்வொரு ஏலமும் மூன்று நாட்கள் வரை நடைபெறும். சில ஏலம் ஐந்து நாட்கள் வரைகூட நீளும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. முதல் நாள் காலை 6 மணி தொடங்கி கடைசி நாள் நள்ளிரவு 12 மணி வரை ஏலம் நடைபெறும். ஏலத்தில் வெற்றி பெற்ற பின்னர் சுமார் ஐந்து நாட்களுக்கு உள்ளாகவே பதிவெண் ஒதுக்கீடு செய்யப்படும். இதன் பின்னர் 90 நாட்களுக்குள் குறிப்பிட்ட ஆர்டிஓ-வில் தங்களுக்கு அலாட் செய்யப்பட்டிருக்கும் பதிவெண் பற்றிய தகவல் லெட்டரை வழங்கி வாகனத்தை பதிவு செய்து கொள்ளலாம்.

0001 மாதிரியான ஃபேன்சி நம்பரை வாங்கணுமா?.. இதோ ஃபேன்சி நம்பர் பிளேட்டை பெறுவதற்கான வழி முறைகள்!

ஐந்து வகைகளில் ஃபேன்சி எண்களின் ஏலம் நடக்கின்றது. அவற்றின் விபரம் இதோ:

0001 என தொடங்குவதே முதல் கேட்டகரி பதிவெண் ஆகும். இதன் மதிப்பு ரூ. 5 லட்சம் ஆகும். இரண்டாவது கேட்டகரி 0002 தொடங்கி 0009 வரை ஆகும். இவற்றிற்கு ரூ. 3 லட்சம் வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 0010 தொடங்கி 0099 வரையிலான பதிவெண்கள் மூன்றாவது கேட்டகரியில் அடங்கும். இத்துடன், 0786, 1000, 1111, 7777 மற்றும் 9999 ஆகியவையும் 3ஆவது கேட்டகரியில் அடங்கும். இதன் மதிப்பு ரூ. 2 லட்சம் ஆகும்.

இதற்கு அடுத்ததாக இருக்கும் நான்காவது கேட்டகரிக்கு ரூ. 1 லட்சமும், ஐந்தாவது ரூ. 20 ஆயிரம் என்ற தொகையிலும் ஏலம் ஆரம்பிக்கப்படுகின்றது. இவையே சில நேரங்களில் அதிகப்படியானோர் குவிவதன் காரணத்தினால் பல லட்சங்களாக மாறிவிடுகின்றன.

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
How to get fancy number plate for vehicle
Story first published: Tuesday, May 24, 2022, 14:41 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X