கார் பேட்டரியின் வயசை எப்படி கண்டுபிடிக்கணும் தெரியுமா? இந்த ஈஸியான வழி இவ்ளோ நாளா தெரியாம போச்சே!

கார் பேட்டரியின் வயதை எப்படி கண்டுபிடிப்பது? என்பதை இந்த செய்தியில் பார்க்கலாம்.

கார் பேட்டரியின் வயசை எப்படி கண்டுபிடிக்கணும் தெரியுமா? இந்த ஈஸியான வழி இவ்ளோ நாளா தெரியாம போச்சே!

ஒரு காருக்கு பேட்டரி மிகவும் முக்கியம். பேட்டரியின் முக்கியத்துவம் என்ன? என்பது நம் அனைவருக்கும் தெரிந்த ஒரு விஷயம்தான். ஆனால் தங்களது காரின் பேட்டரி எப்போது உற்பத்தி செய்யப்பட்டது? என்பது பலருக்கும் தெரிவதில்லை. அதை தெரிந்து கொண்டு என்ன செய்வது? என நீங்கள் சாதாரணமாக நினைக்கலாம்.

கார் பேட்டரியின் வயசை எப்படி கண்டுபிடிக்கணும் தெரியுமா? இந்த ஈஸியான வழி இவ்ளோ நாளா தெரியாம போச்சே!

ஆனால் உங்களுடைய காரின் பேட்டரி எப்போது உற்பத்தி செய்யப்பட்டது? என்பதை தெரிந்து கொள்வது மிகவும் முக்கியமானது. ஏனெனில் காரின் பேட்டரியை குறிப்பிட்ட கால இடைவெளிகளில் மாற்ற வேண்டும். அதற்கு காரின் பேட்டரி எப்போது உற்பத்தி செய்யப்பட்டது? என்பதை நீங்கள் தெரிந்து வைத்திருப்பது மிகவும் அவசியம்.

கார் பேட்டரியின் வயசை எப்படி கண்டுபிடிக்கணும் தெரியுமா? இந்த ஈஸியான வழி இவ்ளோ நாளா தெரியாம போச்சே!

கார் பேட்டரியின் மீது இந்த தகவல்கள் மறைமுகமாக குறிப்பிடப்பட்டிருக்கும். இதனை நாம் உணர்ந்து கொள்வது அவசியம். ஆனால் இந்த குறியீடுகளை எப்படி புரிந்து கொள்வது? என்பதுதான் பலருக்கும் தெரியவில்லை. எனவே கார் பேட்டரியின் மீது குறிப்பிடப்பட்டுள்ள எண்கள் மற்றும் எழுத்துக்களை வைத்து, பேட்டரியின் வயதை எப்படி கண்டுபிடிப்பது? என்பதை இந்த செய்தியில் பார்க்கலாம்.

கார் பேட்டரியின் வயசை எப்படி கண்டுபிடிக்கணும் தெரியுமா? இந்த ஈஸியான வழி இவ்ளோ நாளா தெரியாம போச்சே!

பொதுவாக உங்கள் கார் பேட்டரியில் 4/18 என்ற குறியீடு வழங்கப்பட்டிருக்கலாம். இதில் முதலில் உள்ள எண் மாதத்தை குறிக்கிறது. அதே சமயம் இரண்டாவதாக உள்ள எண் வருடத்தை குறிக்கிறது. இதன்படி பார்த்தால், 4/18 என்பது 2018ம் ஆண்டு ஏப்ரல் மாதம் உருவாக்கப்பட்ட பேட்டரி ஆகும். மற்றொரு உதாரணத்தையும் இங்கே எடுத்து கொள்வோம்.

கார் பேட்டரியின் வயசை எப்படி கண்டுபிடிக்கணும் தெரியுமா? இந்த ஈஸியான வழி இவ்ளோ நாளா தெரியாம போச்சே!

3/15 என்ற குறியீட்டை தற்போது உதாரணமாக எடுத்து கொள்ளலாம். இதில், 3 என்பது மாதத்தை குறிக்கிறது. அதாவது மார்ச். அதே சமயம் 15 என்பது வருடத்தை குறிக்கிறது. அதாவது 2015. இந்த பேட்டரி 2015ம் ஆண்டு மார்ச் மாதம் உற்பத்தி செய்யப்பட்டது ஆகும். பேட்டரியில் உள்ள ஸ்டிக்கரில் இந்த குறியீட்டை நீங்கள் பார்க்கலாம்.

கார் பேட்டரியின் வயசை எப்படி கண்டுபிடிக்கணும் தெரியுமா? இந்த ஈஸியான வழி இவ்ளோ நாளா தெரியாம போச்சே!

தற்போது நாம் பார்த்தது எண்கள் மட்டுமே. சில பேட்டரிகளில் எண்களுடன், எழுத்துக்களும் அடங்கிய குறியீடு வழங்கப்பட்டிருக்கும். இந்த வகையில் முதல் கேரக்டர் ஒரு எண்ணாக இருக்கும். இது பூஜ்ஜியத்தில் இருந்து 9 வரையிலான ஒரு எண்ணாக இருக்கும். பேட்டரி உற்பத்தி செய்யப்பட்ட ஆண்டின் கடைசி இலக்கத்துடன் இது ஒத்திருக்கும்.

கார் பேட்டரியின் வயசை எப்படி கண்டுபிடிக்கணும் தெரியுமா? இந்த ஈஸியான வழி இவ்ளோ நாளா தெரியாம போச்சே!

உதாரணத்திற்கு 5 என்றால், அந்த பேட்டரி 2015ம் ஆண்டு உற்பத்தி செய்யப்பட்டிருக்கும். அதே சமயம் இரண்டாவது கேரக்டர் ஒரு எழுத்தாக இருக்கும். இது பேட்டரி உற்பத்தி செய்யப்பட்ட மாதத்தை குறிக்கிறது. A முதல் L வரையிலான 12 எழுத்துக்களில் ஏதேனும் ஒரு எழுத்து வழங்கப்பட்டிருக்கலாம். ஆங்கில காலண்டரின்படி மொத்தம் 12 மாதங்கள் என்பது நம் அனைவருக்கும் தெரியும்.

கார் பேட்டரியின் வயசை எப்படி கண்டுபிடிக்கணும் தெரியுமா? இந்த ஈஸியான வழி இவ்ளோ நாளா தெரியாம போச்சே!

இதன்படி இந்த எழுத்துக்கள் ஜனவரி முதல் டிசம்பர் வரையிலான மாதத்தை குறிக்கின்றன. உதாரணத்திற்கு A என்றால் அது ஜனவரி. B என்றால் அது பிப்ரவரி. C என்றால் அது மார்ச். இங்கே 5A என்பதை உதாரணமாக எடுத்து கொள்வோம். அப்படியானால் இந்த பேட்டரி 2015ம் வருடம் ஜனவரி மாதம் உற்பத்தி செய்யப்பட்டது ஆகும்.

கார் பேட்டரியின் வயசை எப்படி கண்டுபிடிக்கணும் தெரியுமா? இந்த ஈஸியான வழி இவ்ளோ நாளா தெரியாம போச்சே!

சில சமயங்களில் 5A என்பதற்கு பதிலாக A5 எனவும் கூட மாற்றி வழங்கப்பட்டிருக்கலாம். ஆனால் இவை இரண்டிற்குமே அர்த்தம் ஒன்றுதான். சரி, மற்றொரு உதாரணத்தை பார்க்கலாம். 4B என்பதை தற்போது உதாரணமாக எடுத்து கொள்ளலாம். இந்த பேட்டரி 2014ம் ஆண்டு பிப்ரவரி மாதம் உற்பத்தி செய்யப்பட்டது ஆகும்.

கார் பேட்டரியின் வயசை எப்படி கண்டுபிடிக்கணும் தெரியுமா? இந்த ஈஸியான வழி இவ்ளோ நாளா தெரியாம போச்சே!

B4 என குறிப்பிடப்பட்டிருந்தாலும் கூட இந்த பேட்டரி 2014ம் ஆண்டு பிப்ரவரி மாதம் உற்பத்தி செய்யப்பட்டதுதான். தற்போது உங்களுக்கு தெளிவாக புரிந்திருக்கும் என நம்புகிறோம். இதன் மூலம் உங்கள் காரின் பேட்டரி எப்போது உற்பத்தி செய்யப்பட்டது? அதன் தற்போதைய வயது என்ன? என்பதை நீங்கள் எளிதாக கண்டுபிடிக்கலாம்.

கார் பேட்டரியின் வயசை எப்படி கண்டுபிடிக்கணும் தெரியுமா? இந்த ஈஸியான வழி இவ்ளோ நாளா தெரியாம போச்சே!

அத்துடன் குறிப்பிட்ட கால இடைவெளிகளில் பேட்டரியை மாற்றியும் கொள்ளலாம். இதன் மூலம் தேவையில்லாத பிரச்னைகளை தவிர்க்க முடியும். ஏனெனில் குறிப்பிட்ட காலத்தை கடந்த பேட்டரியை தொடர்ந்து பயன்படுத்தி கொண்டிருந்தால், உங்கள் பயணத்தின்போது நடுவழியில் நீங்கள் சிரமப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. எனவே முன்னெச்சரிக்கையாக நடந்து கொள்ளுங்கள்.

Note: Images used are for representational purpose only.

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
How to know the age of your car battery
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X