விமான பயணத்தில் ஏற்படும் காது அடைப்பு/வலி பிரச்சனையை இவ்வளவு ஈசியா சரி பண்ணலாமா?

விமான பயணத்தில் காது அடைப்பு/ வலி ஏற்பட்டால் அதை எப்படிச் சரி செய்வது? இது எதனால் ஏற்படுகிறது? இதனால் என்னென்ன பாதிப்புகள் வரும் முழுமையாகக் காணலாம் வாருங்கள்.

விமான பயணத்தில் ஏற்படும் காது அடைப்பு / வலி பிரச்சனையை இவ்வளவு ஈசியா சரி பண்ணலாமா ?

விமான பயணம் என்பது எல்லோருக்கும் பிடிக்கும். ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு வேகமாக அதுவும் விண்ணில் பறந்து கொண்டே செல்லலாம் என்றால் யாருக்குத் தான் பிடிக்காது. இப்படியான பயணம் பலருக்கு வாழ்நாள் கனவாகக் கூட இருக்கும். இப்படியான பயணம் எல்லோருக்கும் சுகமாக அமைந்துவிடுவதில்லை.

விமான பயணத்தில் ஏற்படும் காது அடைப்பு / வலி பிரச்சனையை இவ்வளவு ஈசியா சரி பண்ணலாமா ?

விமான பயணத்தின் போது விமானம் பறக்கத் துவங்கும் முன்பு சிலருக்குக் காதுகளில் பிரச்சனை ஏற்படும். காது முழுவதுமாக அடைத்தது போன்ற உணர்வு வரும். வெகு சிலருக்குக் காதில் தாங்க முடியாத வலி கூட ஏற்படும். இதற்கு விமானத்தின் இன்ஜினிலிருந்து வெளியாகும் சத்தம் காரணமில்லை. விமானம் பறக்கும் போது காற்றின் அழுத்தம் மாறுபடும் அதனால் ஏற்படும் மாற்றம்தான் இது.

விமான பயணத்தில் ஏற்படும் காது அடைப்பு / வலி பிரச்சனையை இவ்வளவு ஈசியா சரி பண்ணலாமா ?

பொதுவாக ஒரு விமானம் கிளம்பும் முன் அந்த விமானம் பிரஷரைஸ் செய்யப்படும். அப்படிச் செய்யப்படுவதால் விமானம் எவ்வளவு உயரத்தில் பறந்தாலும் அங்கு வெளியில் காற்றின் அழுத்தம் எவ்வளவு மாறுபட்டாலும் உள்ளே இருக்கும் போது பூமியில் இருப்பது போன்று இருக்க வேண்டும் என்பதற்காக இது செய்யப்படுகிறது.

விமான பயணத்தில் ஏற்படும் காது அடைப்பு / வலி பிரச்சனையை இவ்வளவு ஈசியா சரி பண்ணலாமா ?

இது செய்யப்பட்டாலும் விமானம் பறக்கும் போது காதுக்கு வெளியே இருக்கும் காற்றின் அழுத்தத்தில் மாற்றம் ஏற்படும். விமானம் டேக் ஆஃப் ஆகும்போது காற்றில் அழுத்தம் குறையும் விமானம் தரையிறங்கும் போது காற்றில் அழுத்தம் அதிகமாகும்.

விமான பயணத்தில் ஏற்படும் காது அடைப்பு / வலி பிரச்சனையை இவ்வளவு ஈசியா சரி பண்ணலாமா ?

இதை விளக்கமாகச் சொல்ல வேண்டும் என்றால் டேக் ஆஃப் ஆகும் போது காதுக்குள் இருக்கும் காற்று வெளியே இழுக்கப்படும். இதனால் காது அடைத்தது போன்ற உணர்வு ஏற்படும். லேண்ட் ஆகும் போது காதுக்குள் காற்று தள்ளப்படும். இந்த காற்று அழுத்த மாற்றம் காதுக்குள் இருக்கும் யுஸ்டாச்சியன் டியூப்பிற்கு கட்டுப்படுத்த முடியாத அளவிலிருந்தால் காதில் வலி ஏற்படும்.

விமான பயணத்தில் ஏற்படும் காது அடைப்பு / வலி பிரச்சனையை இவ்வளவு ஈசியா சரி பண்ணலாமா ?

சிலருக்குப் பொருத்து கொள்ளும் அளவு அசௌகரியங்கள் மட்டுமே இருக்கும். சிலருக்குத் தாங்க முடியாத வலி இருக்கும். வலி இருந்தால் அறிவியலில் பாரோட்ரோமா என்றும், லேமேன்ஸ் ஏரோபிளேன் இயர் என்றும் அழைப்பார்கள்.

இப்படியாகப் பிரச்சனை ஏற்பட்டால் எப்படிச் சமாளிக்க வேண்டும் எனக் காணலாம்.

விமான பயணத்தில் ஏற்படும் காது அடைப்பு / வலி பிரச்சனையை இவ்வளவு ஈசியா சரி பண்ணலாமா ?

1. இயர் பிளக்

விமான பணத்தின் போது காதின் ஓட்டைகளை மூடி வைக்கும்படி பஞ்சு அல்லது ஏதாவது ஒரு காது அடைப்பானைப் பயன்படுத்தி காதின் ஓட்டைகளை அடைத்து வைத்தால் முதலில் இன்ஜின் சத்தம் மூலம் ஏற்படும் எரிச்சலைக் குறைக்கலாம் இரண்டாவது காற்றில் அழுத்தம் காரணமாக ஏற்படும் வலியும் குறையும். காற்று அடைப்பான் இருப்பதால் காற்று எளிதாக உள்ளே/ வெளியே செல்ல முடியாததால் இது ஒரு சிறந்த தீர்வாக இருக்கும்.

விமான பயணத்தில் ஏற்படும் காது அடைப்பு / வலி பிரச்சனையை இவ்வளவு ஈசியா சரி பண்ணலாமா ?

2. சுவிங்கம்

விமான பயணத்தில் காது அடைத்துக்கொண்டால் அந்த அடைப்பை எடுக்கச் சிறந்த தீர்வு, எச்சில் விழுங்குவது, இப்படியாக எச்சில் விழுங்குவதால் காதில் ஏற்பட்ட அடைப்பு விலகும். அடுத்தாக கொட்டாவி விடுவதும் காதின் அடைப்பை நீக்கும். தொடர்ந்து அடைப்பு ஏற்படாமல் இருக்க சுவிங்கம் அல்லது சாக்லேட் மெல்லத் துவங்கினால் காது அடைப்பு ஏற்படாது.

விமான பயணத்தில் ஏற்படும் காது அடைப்பு / வலி பிரச்சனையை இவ்வளவு ஈசியா சரி பண்ணலாமா ?

3. டாய்அன்பி டெக்னிக்

டாய்அன்பி டெக்னிக்கை பொருத்தவரை விமானம் தரையிறங்கும் போது பலருக்கு உதவும் டெக்னிக். இதைச் செய்ய முதலில் முக்கை மூடிக்கொள்ள வேண்டும். இப்பொழுது கொஞ்சம் தண்ணீர் பருக வேண்டும். அல்லது எச்சில் விழுங்க வேண்டும். தண்ணீரைத் தொண்டையைத் தாண்டி இறக்கும் போது வாய் முடியிருக்க வேண்டும். இப்படி செய்தால் காதில் உள்ள அடைப்பு சரியாகும்.

விமான பயணத்தில் ஏற்படும் காது அடைப்பு / வலி பிரச்சனையை இவ்வளவு ஈசியா சரி பண்ணலாமா ?

4. வால்சல்வா டெக்னிக்

வால்சல்வா என்ற விஷயத்தைப் பொருத்தவரை எச்சில் விழுங்க வேண்டாம். ஆனால் முதலில் நன்றாக மூச்சு இழுத்துக்கொள்ள வேண்டும். பின்னர் மூக்கை உங்கள் கை விரல்களால் அடைத்துக்கொண்டு அந்த மூச்சை வெளியேற்ற முயற்சி செய்ய வேண்டும். அப்படிச் செய்தால் உங்களின் காதுகளில் இருக்கும் அடைப்பு விடுபடும்.

விமான பயணத்தில் ஏற்படும் காது அடைப்பு / வலி பிரச்சனையை இவ்வளவு ஈசியா சரி பண்ணலாமா ?

5. மூக்கடைப்பு

மேலே சொன்ன டெக்னிக் எல்லாம் உங்கள் மூக்கு சரியாக இருந்தால் சுலபமாகச் செய்யலாம். ஏற்கனவே மூக்கடைப்பு ஏற்பட்டிருந்தால் முதலில் விமானம் கிளம்புவதற்கு 30 நிமிடங்களுக்கு முன்பு மூக்கடைப்பு தற்காலிகமாக நீக்கும் ஸ்பிரேவை கொண்டு செல்லுங்கள் அதை பாதுகாப்பு சோதனையைத் தாண்டி எடுத்துச் செல்லும் விதிமுறை பின்பற்றி அதைக் கையிலேயே வைத்துக்கொள்ளுங்கள்

விமான பயணத்தில் ஏற்படும் காது அடைப்பு / வலி பிரச்சனையை இவ்வளவு ஈசியா சரி பண்ணலாமா ?

பறக்கும் போது உங்களுக்கு எப்பொழுது காதில் அடைப்பு ஏற்பட்டு வலி அல்லது அசௌகரியம் ஏற்பட்டாலும் சரி நீங்கள் உடனடியாக வால்சல்வா அல்லது டாய்அன்பி டெக்னிக்கை செய்தால் உடனடியாக தீர்வு கிடைக்கும். எத்தனை முறை வேண்டுமானாலும் செய்யலாம் எந்த தவறும் கிடையாது.

விமான பயணத்தில் ஏற்படும் காது அடைப்பு / வலி பிரச்சனையை இவ்வளவு ஈசியா சரி பண்ணலாமா ?

அதையும் மீறி வலி எடுத்தால் உங்கள் காதுக்குள் லாவண்டர் எண்ணெய் அல்லது யுக்கலிப்டன் எண்ணெய் ஊற்றினால் சற்று வலி குறையும். பொதுவாக விமான பயணங்களில் போது இவ்வாறாகக் காதுகள் அடைத்துக்கொள்வது ஒன்றும் புதிதல்ல இந்த காது அடைப்பு நீங்காமல் விமான பயணம் முடிந்தும் பல மணி நேரம் நீடித்தால் அருகில் உள்ள மருத்துவரை அணுகுவது சிறந்தது. இந்த காது அடைப்பு/ வலி விமான பயணங்களில் போது மட்டுமல்ல மலைப் பகுதியில் பயணிக்கும் போதும் சிலருக்கு ஏற்படும்.

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
How to prevent your ears from clogging while flying in an airplane
Story first published: Tuesday, June 28, 2022, 17:38 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X